சின்ன வயசிலே இருந்து புரட்டாசி சனிக்கிழமை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். இந்த மாசம் பெருமாளுக்கு உகந்தது என்பதாலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்க உறவினர் ஒவ்வொருத்தர் வீட்டிலும் பெரிய அளவில் வெங்கடாசலபதி சமாராதனை நடைபெறும் என்பதாலும் தான். அதோடு இன்னும் சிறப்பாக என்னோட பெரியப்பாவின் வக்கீல் சங்கத்து நண்பர்கள் அனைவரும் நடத்தும் பஜனையும் கூட. பஜனை முடியும் போது கடைசியில் குத்துவிளக்கை நடுவில் ஏற்றி வைத்துவிட்டுப்பெரியப்பாவும் அவரின் வக்கீல் நண்பர்களுமாக அதைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த வயசில் அதன் தாத்பரியம் புரியாவிட்டாலும் குடுமி அவிழ்ந்து ஆட, கழுத்தில் போட்டிருக்கும் மாலைகளும் அவங்க ஆட்டத்திற்கு ஏற்ப ஆட ஒவ்வொருத்தரும் ஆடுவதைப் பார்க்கையில் நான், என் அண்ணா, தம்பி, பெரியப்பா பெண் ஒருத்தி நாலுபேருமே அப்போ குழந்தைகள்; நாங்க எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்போம். அந்தப் பெரியப்பா பெண் இப்போ இல்லை.
கல்யாணமாகி வந்ததும் புகுந்த வீட்டிலும் வெங்கடாசலபதி சமாராதனைப் பழக்கம் உண்டுனு சொல்லவும் சந்தோஷமாய் இருந்தாலும் நாளாவட்டத்தில் அது வீட்டு மட்டும் செய்யற ஒண்ணா மாறிபோச்சு. அப்போவானும் வீட்டில் குறைந்தது பத்துப் பேர்கள் இருந்தோம். இப்போ நாங்க இருவர் மட்டுமே. அதிலும் இந்த வருஷம் தான் சிறப்பான வருஷம் ஆச்சே. பெருமாள் எங்க பரம்பரையில் பூஜித்து வந்தவர் வீட்டுக்கு வந்து பத்து மாசங்கள் ஆகின்றன. அவருக்கும் பிள்ளையாரைப் போலவே இங்கே இதுதான் முதல் பண்டிகை. கிருஷ்ணருக்கும் இதான் முதல் பிறந்தநாள். அதைத் தான் ஒருமாதிரியா சொந்த வீட்டிலேயே கொண்டாடினோம். கிருஷ்ணரைத் தான் அன்னிக்குப் படம் எடுக்க முடியலை. இன்னிக்குப்பெருமாளையும், கிருஷ்ணரையும் சேர்த்து வைச்சு எடுத்திருக்கேன். கீழே பெருமாளுக்குச் செய்த பிரசாதங்கள் மஹா நிவேதனம், சர்க்கரைப் பொங்கல், எள் சாதம், வடை, வெற்றிலை, பாக்கு, பழம். எப்படியோ புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடியாச்சு. முன்னெல்லாம் காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சா மதியம் பனிரண்டு மணி வரையிலும் கோவிந்தா கூப்பிட்டுக்கொண்டு அரிசிக்கு வருவார்கள். வாசலில் ஒரு சின்ன வாளியில் அரிசியை நிரப்பி ஒரு கிண்ணத்தையும் வைத்துக் கொண்டால் வரவங்களுக்குப் போட்டு முடிக்கவும் மணி பனிரண்டு ஆகவும் சரியா இருக்கும். பெரிய பெரிய மனிதர்கள் கூட வந்து பிக்ஷை வாங்கிப் போவாங்க. இப்படி பிக்ஷை எடுத்து வாங்கிய அரிசியில் அன்னதானம் பண்ணுவதைச் சிறப்பாகச் சொல்லி இருப்பதோடு நம் ஆணவமும் கலையும் என்பார்கள். ஆனால் பிக்ஷை எடுப்பதையும் கேலி செய்யறவங்க இருக்காங்க. என் அண்ணாவுக்கு பிக்ஷை எடுத்தே திருப்பதியில் பூணூல் போட்டாங்க. அப்படி ஒரு வேண்டுதல் அந்தக் காலத்திலே. ஒரு சிலர் கல்யாணத்திற்கும் திருமாங்கல்யம் செய்ய மட்டும் அம்மாதிரி வேண்டுதல் செய்வதுண்டு. இதெல்லாம் செய்வதன் காரணமே, நாமெல்லாருமே அவன் போட்ட பிச்சை என்ற நினைப்பு மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே.
பெருமாளும் பிச்சை எடுத்திருக்கிறார் வாமனன் ஆக. ஈசனும் பிக்ஷாண்டவராக வந்து பிச்சை எடுத்திருக்கிறார். நாமெல்லாம் எம்மாத்திரம்!
பெருமாளும் பிச்சை எடுத்திருக்கிறார் வாமனன் ஆக. ஈசனும் பிக்ஷாண்டவராக வந்து பிச்சை எடுத்திருக்கிறார். நாமெல்லாம் எம்மாத்திரம்!
ReplyDeleteபுரட்டாசி மாத சிறப்புப் பகிர்வு சிலிர்க்க வைத்தது. நன்றி. பாராட்டுக்கள்.
கோவிந்தா....கோவிந்தா!!!!
ReplyDeleteஅருமையான பதிவு.
சனிக்கிழமை சொம்பைத் தூக்கிப்போய் கோவிந்தா போட்டு உறவினர்கள், அக்கம்பக்கம் உள்ளவர்கள் வீடுகளில் பிக்ஷை வாங்கி வருவோம். என் அக்கா பொண் (அஞ்சு வயசு அப்போ!) இப்படி எடுக்கக் கூச்சப்பட்டுக்கிட்டு நம்ம வீட்டுலேயே வந்து எடுப்பாள். இன்னும் கொஞ்சம் கோவிந்தாப் போடவச்சுட்டு சொம்பு நிறைய அரிசி போடுவேன்.
ஆமாம்.... அது என்ன எப்பப்பார்த்தாலும் சாமி கூடவே மைக்ரோவேவ். ஆறிப்போனா அவரே சுடவச்சுச் சாப்பிட்டுக்கட்டுமுன்னா:-))))
பெருமாள் ரொம்ப அழகா இருக்கார்ப்பா.
வீட்டில் நடக்கும விஷேமான தினங்களில் புரட்டாசி சனிக்கிழமையும் ஒன்று...
ReplyDeleteதங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி...
இரண்டாவது படம் கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கிறது.
ReplyDeleteகடவுளுக்குப் படையலா? இல்லை எலெக்ட்ரானிக் ஓவனுக்கா ?
புரட்டாதி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்ற தகவலுக்கு நன்றி. இப்போதுதான் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஇங்கு சனி கிரகதோசம் இருப்பவர்கள் புரட்டாதி சனிக்கிழமைகளில் விரதமிருப்பார்கள்.
கார்த்தால மாவிளக்கு ஏத்திட்டு அதுக்குள்ள பதிவு போட்டுடீங்களா?
ReplyDeleteநல்ல நினைவுகள் மாமி.பகிர்வுக்கு நன்றி.
வெங்கட் ரமணா கோவிந்தா!
ReplyDeleteகோவிந்த லச்சா(க்ஷா) கோவிந்தா!
எனது இல்லத்தில் கடைசி சனிதான் இந்த வருஷ சமாராதனை....பித்ரு பக்ஷமும், நவராத்ரியும் இருப்பதால்.
வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.
ReplyDeleteவாங்க துளசி, கோவிந்தன் உங்களையும் இங்கேவர வைச்சதுக்கு நன்றி.
ReplyDeleteமைக்ரோவேவ் சமையலறையில் வைக்க முடியலை. வேறே இடம் மாத்தி வைக்கணும்; என்னமோ எதுக்கும் முடியாம, நேரம் இல்லைனு எல்லாம் சொல்ல முடியாது; 5 நிமிட வேலை, அது செய்யாமப் போயிட்டு இருக்கு! ஒண்ணும் சொல்லிக்க முடியலை.
வாங்க கவிதை வீதி செளந்தர், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க காவ்யா, வாழ்க்கையே நகைச்சுவையாத் தான் இருந்தது எனக்கு. மைக்ரோவேவ் அவனுக்குப் படையல் இல்லை; சுவாமிக்குத் தான்; எடுக்கணும் அவனை அங்கிருந்து.
ReplyDeleteமாதேவி, ஒவ்வொரு சனியுமே விரதத்திற்கு உகந்த நாளே; ஆஞ்சநேயர், சனிபகவான், பெருமாள் ஆகியோருக்கு சனிக்கிழமை விரதம் உகந்தது. நன்றிங்க உங்க வரவுக்கு.
ReplyDeleteஇங்கே தமிழ்நாட்டில் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட புரட்டாசி மாதமும், ஐயப்பனுக்கு மாலை போடும் விரத நாட்களிலும் கட்டாயமாய்த் தவிர்ப்பார்கள்; அந்த நாட்களில் அசைவ வியாபாரிகள் விற்பனை குறைகிறது என்கிறார்கள் என்பதைப் பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளாய்ப் போடும் என்றால் பாருங்களேன்!
ராம்வி, எங்க பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் புரட்டாசி சனி மாவிளக்குப் போடுவது இல்லை. ஆடி வெள்ளி, தை வெள்ளி மற்றும் விசேஷங்களில் தான். இது சும்ம்மா சின்னதாய் ஒரு பூஜை.
ReplyDeleteவாங்க மெளலி, மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteஆமாம், நீங்க சொல்றது சரியே; பித்ரு பக்ஷம் என்பதால் நாங்களும் பண்ணத்தான் மாட்டோம். சென்ற வருஷம் மாசம் ஆரம்பிச்சதுமே முதல் சனிக்கிழமை மஹாலயம் இல்லாமல் வந்தது. இந்த வருஷம் யு.எஸ். பயணம் என்பதால் கடைசி சனி முடியாது. அதனால் எங்க வீட்டு குருவைக் கேட்டுட்டு நேத்தே பண்ணிட்டோம். அடுத்த வாரம் நவராத்திரி! அப்போ நிச்சயம் முடியாது.
நல்ல கொசுவத்தி தலைவி ;-))
ReplyDelete\\முன்னெல்லாம் காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சா மதியம் பனிரண்டு மணி வரையிலும் கோவிந்தா கூப்பிட்டுக்கொண்டு அரிசிக்கு வருவார்கள்.\\
சின்ன வயசுல (8வது படிக்கும் வரை) எனக்கும் முதல் சனிக்கிழமை பாட்டி வேட்டி கட்டி, நமாம் போட்டு கையில் பாத்திரத்தில் அரிசி போட்டு வீடு வீடாக போயிட்டு பிக்ஷை எடுத்துட்டு வரசொல்லுவாங்க..ம்ம்ம்...;-))
மாமி
ReplyDeleteநீங்க us வரேளா? ஈஸ்ட் கோஸ்ட் வர பிளான் இருக்கிறதா?
வாங்க கோபி, அபூர்வமா, அதிசயமாத் தான் பார்க்க முடியுது; எங்க சொந்த வீட்டிலே இருந்தப்போ ஏதேனும் ஓரிருவராவது வருவாங்க; இந்த வருஷம் ஒரு ஈ, காக்கை கூட வரலை! நமக்கு தானம் கொடுத்துப் பழகிட்டுக் கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு. :(
ReplyDeleteஸ்ரீநி, தனி மடல் போடறேன். உங்க ஐடியை ஒரு தரம் மறுபடி அனுப்புங்க. எக்கச்சக்கமா ஸ்ரீநிவாசன்! :D
ReplyDeleteமைக்ரோ ஓவனுக்கு எல்லா நைவேத்யமும் பண்ணியாச்சு போலருக்கே!! :)
ReplyDelete"அம்பத்தூர் தலை(வலி)வி அமெரிக்கா வருகை!"னு ஈஸ்ட் கோஸ்ட்ல போஸ்டர் ஒட்ட போறார் நம்ப கோபாலன் அண்ணா!! :)
மாமி
ReplyDeleteஈமெயில் அனுப்பி விட்டேன்.
தக்குடு
போஸ்டர் எல்லாம் old fashion. ரெண்டு F 16 fighter jet அனுப்பிச்சு மாமியோட flight கு royal escort ஓட land பண்ண வைக்கிறது தான் புது fashion .
சிறு வயதில் திருமண் போட்ட செம்பு எடுத்து வீடு வீடாக சென்று கோவிந்தா கோவிந்தா என்றி பிச்சை பெற்ற நினைவையும், எங்கள் ஊர் பஜனை கோவில் உஞ்ச விருத்தி பஜனையிலும் கலந்து கொண்டது நினைவிற்கு கொண்டு வந்தி விட்டீர்கள். நன்றி கீதாம்மா. நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க கைலாஷி ஐயா, நல்வரவு. முடிந்த போது வந்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDelete