எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 28, 2011

உல்லாசம் பொங்கும் இன்ப/இந்த தீபாவளி

_____________________
எல்லாரும் தீபாவளி கொண்டாடி இருப்பீங்க . இங்கே நாங்க மட்டும் காலை எழுந்து குளித்து தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டோம். சப்தமில்லா தீபாவளி. கோலாகலமில்லா தீபாவளி. இங்கே மீனாக்ஷி கோயிலில் தீபாவளி போன சனிக்கிழமையே அதாவது 22-ஆம் தேதியே கொண்டாடி முடிச்சாச்சு. அன்னிக்கு தீபாவளி பஜார்னு கடைகள் இருந்தன. துணிக்கடை, நகைக்கடைனு தான்! தீபாவளிக்கு வேறென்ன? முதல்முறை யு.எஸ்.வந்தப்போ தீபாவளி பஜாரில் துணிகளின் விலையைப் பார்த்துவிட்டு மயக்கமே போட்டு விழுந்தேன். சாப்பாடும் இருந்தது. மாலை நேரம் சாப்பாட்டுக்கடைகள் தான் இருந்தன. கொசுக்கள் தூக்கிட்டுப் போயிடும்போல தொல்லை தாங்கலை. சாப்பாடுக் கடைகளில் வழக்கமான ரொட்டி, சப்ஜி, தோசை, இட்லி, வடை, சாம்பார் இத்யாதி. அவங்க கொடுக்கிறதை விட நாம வீட்டிலே செய்யறதே இன்னும் நல்லா இருக்கும்னு ஏகோபித்த கருத்தோடு சாப்பாட்டை ஒதுக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டோம். அதோட அங்கே சாப்பிட்டால் ஒவ்வொரு வாய்க்கும் ஒரு ஆயிரம் கொசுக்களும் உள்ளே போகும்போல் பயம்! அமெரிக்கக் கொசு; தமிழிலே திட்டினால் புரியுமா தெரியலை. நாமோ இங்கிலீஷ் இழுவை; தமிழ் தகராறு; ஹிந்தி இம்சை; சைன்ஸ் சங்கடம் ரகத்திலே படிச்சிருக்கோம். அதனால் கொசுவோட அநாவசியமாத் தகராறு வேண்டாம்னு கிளம்பிட்டோம்.

இந்தத் தரம் காலை போகலை. சாயந்திரமாப் போனோம். மீனாக்ஷி சர்வ அலங்காரத்துடன், இருந்தாள். உற்சவ மீனாக்ஷியையும் அலங்கரித்து வைத்திருந்தார்கள். எல்லாம் படம் பிடித்திருக்கேன். இன்னும் வலை ஏற்றலை. பிகாசாவில் போட்டால் எனக்கு வசதி. பையரைக் கேட்டுக்கணும். ஏன்னா கணினியின் செட்டப் மாறிடுது. அதோட இங்கே வயர்லெஸ் என்பதாலோ, அல்லது தொலைபேசி, தொலைக்காட்சி இணைப்பு எல்லாமும் இணைய இணைப்பு என்பதாலோ இணையம் வேகமே இல்லை. அடிக்கடி சொதப்பல். சில சமயம் நகரவே நகராது. அதனால் படத்தைப் போடும்போதும் எந்தக் கமென்டுக்கு நேரே போட நினைக்கிறோமோ அங்கே வராமல் மொத்தமாய் ஒரே இடத்தில் போய் உட்காருது. அவங்க எப்படி வலை ஏத்துவாங்கனு கேட்டுட்டு பிகாசாவிலே போட்டதும் இங்கே கொடுக்கிறேன்.

மீனாக்ஷிக்கு வெள்ளித் தேர் கூட இழுக்கிறதுக்குத் தயாராக இருந்தது. நேரம் ஆகும்போல் இருந்ததால் நாங்க தேரை மட்டும் படம் எடுத்துட்டு(தேர், கூட்டம் எல்லாம் ரங்க்ஸ் எடுத்தார்) வந்துட்டோம். என்ன இருந்தாலும் இந்தியாவில் இல்லையேங்கற நினைப்பு மட்டும் போகலை. இங்கே அவங்க அவங்க அலுவலகம் போயிட்டாங்க. எல்லாக் கொண்டாட்டங்களும் சனி, ஞாயிறுதான். பையர் எங்களுக்காக லீவ் போட்டிருந்தார்.
ஏழாவது அறிவு படத்துக்குப் போனோம். அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. சூர்யா போதிதருமர் கெட்டப்பிலே நல்லா கம்பீரமா இருக்கார். அவரோட யோகாசனப் பயிற்சி நல்லாக் கைகொடுத்திருக்கு அவருக்கு. படமும் அந்த முதல் அரை மணிநேரம் மட்டுமே ரசிக்கும்படியா இருக்கு. மற்றபடி முழம்முழமாப் பூச்சுத்திட்டாங்க. போதிதருமர் குறித்த விஷயங்கள் தவிர மற்றவை எல்லாம் பூச்சுற்றல். பெரிய சரமா எடுத்து நல்லாச் சுத்தி இருக்காங்க. அதிலும் அந்த வில்லன் நடு ரோடில் ட்ராபிக்கை ஜாம் செய்வதும், மக்கள் எல்லாரையும் சகட்டுமேனிக்கு மைன்ட் கன்ட்ரோல் பண்ணி சூர்யாவுக்கு எதிராய்த் திருப்புவதும் ஓவரோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓவர்! மற்றபடி நம்ம கலாசாரம், அறிவு, வித்தைகள்னு நாம எதை எல்லாம் இழந்துட்டு இருக்கோம்னு எடுத்துச் சொல்லி இருப்பதே கதையின் முக்கியக் கரு. அந்த விஷயத்துக்காகவாவது அனைவரும் பார்க்கணும். மற்றபடி எல்லாரும் ஓஹோஹோனு சொல்றாப்போல் எதுவும் இல்லை. காதல் காட்சிகள் குறைவு என்பதோடு கடைசியில் கதாநாயகன், கதாநாயகி கல்யாணம் பண்ணிக்கிறாங்கங்கறப் போல் அபத்தம் எல்லாம் இல்லை. . ஸ்ருதி ஹாசன் தமிழ் உச்சரிப்பு ஹிந்தியில் செய்கிறார் என்பதோடு காமிராவுக்கு ஏற்ற உடலமைப்போ, முகமோ இல்லை. நடிப்பும் சுமார் ரகமே. நேரில் நன்றாய் இருப்பாரோ என்னவோ, காமிராவுக்கு எடுக்கவில்லை. படம் முடிவில் ஸ்ருதி ஹாசன் பாட்டுக்குத் தன் ஆய்வைத் தொடர்கிறார் சூர்யா பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். பிழைச்சோம்.

இ.கொ.வுக்கு நன்னி.


யார் கவனிக்கப் போறாங்கனு நினைச்சால் உடனடியா இரண்டு பேர் இதோனு கொடுத்திருக்கீங்க. எப்படி நன்றி சொல்றது?

அனுப்பி வைக்கிறேன் என்று உடனடியாக ஆறுதல் சொன்ன தோழிக்கும் நன்றி.

9 comments:

  1. பதிவுகளை மெயிலின இ.கொ.வுக்கு நன்னி.

    ReplyDelete
  2. அது என்னங்க இ.கொ.
    நான் உங்க தளத்துக்கு புதுசு அது என்னனு சொல்லிருங்க ப்ளீஸ்...

    ReplyDelete
  3. ஆமா கடைசியா துணி எடுதிங்களா இல்ல விலை கேட்டதோட சரியா...?

    ReplyDelete
  4. சிலது சிலரைக் கண்டால் அடம் பண்ணும். உங்களுக்கு எங்கே போனாலும் கணினி போலிருக்கு.
    மத்தபடி அங்கைய கணினி திறன் எல்லாம் அற்புதம் தான். 'குறையொன்றுமில்லை' என்பது என் அனுபவம்.

    எதையோ சொல்ல வந்து, 'ஏழாம் அறிவு' பற்றினதாச்சு இந்தப் பதிவு.
    உங்களுக்குன்னு அப்பப்ப இப்படி ஏதாவது கிடைச்சிடுது, பாருங்க!

    அடுத்த பதிவுக்கு, 'ஹாலோவின்' வேறே நெருங்கிக்கிட்டிருக்கு.. அக்.31 தேதித் திகில்! அந்த 'டிரிக் ஆர் ட்ரீட்?' சாக்லெட்டெல்லாம் வாங்கி ஸ்டாக் பண்ணியிருப்பீங் களே!

    ReplyDelete
  5. வெள்ளித்தேர்,அம்மன் தர்சனம், ஏழாம் அறிவு எனத் தீபாவளி முடிந்ததா...

    இங்கும் சத்தமில்லாத் தீபாவளிதான். ஒருபட்டாசு சத்தம் கூடக் கேட்கவில்லை.

    ReplyDelete
  6. வாங்க சண்முகம், முதல் வரவுக்கு நன்றி, தாமதமான பதிலுக்கு மன்னிப்புக் கேட்டுக்க்கறேன். இ.கொ. இலவசக் கொத்தனார் பதிவை எல்லாம் படிச்சுத்தான் நான் இணையத்துக்கே வந்தேன். அவர் வெறுத்துப் போய் இப்போ எழுதறதையே நிறுத்திட்டார்னா பாருங்க.

    ReplyDelete
  7. துணி எல்லாம் எடுக்கலைங்க. இங்கே எடுத்துக் கட்டுபடி ஆகாது. விலை எல்லாம் கேட்கவே வேண்டாம். அவங்களே போட்டுடுவாங்க. அதைப் பார்த்து மயங்கி விழறதோட நம்ம வேலை முடிஞ்சது.

    ReplyDelete
  8. நீங்க வேறே ஜீவி சார், அப்படி ஒண்ணும் வயர்லெஸ் வேகம் இல்லை. போனமுறை யு.எஸ். வந்தப்போவே பார்த்தேன். சமயத்தில் அடம் பிடிக்கும். அதுவும் காலை வேளையில் கேட்கவே வேண்டாம். ஹாலோவீன் தினத்துக்கு சாக்லேட் வாங்கி வச்சு, குழந்தைங்க எல்லாம் வந்தாங்க தான். ஆனால் அவங்களை நான் படம் எடுக்கணும்னு தயாராகறதுக்குள்ளே அவங்க என்னைப் படம் பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. நல்ல சந்தர்ப்பம் நழுவ விட்டுட்டேன்.

    ReplyDelete
  9. வாங்க மாதேவி, நன்றிங்க.

    ReplyDelete