ஆரக்ஷண்= அமிதாப் நடிப்புப் பரவாயில்லை; படம் வெளிவர இவ்வளவு அமர்க்களப்படுத்தி இருக்கவேண்டாமோ? பெரிசா நினைச்சதிலே கடைசியிலே, கடைசியிலே என்ன கடைசியிலே படம் ஆரம்பத்திலிருந்தே ஒண்ணுமே இல்லை படத்திலே! தீபிகா படுகோனே இந்த சினிமாவை விடவும் சோனி டிஜிடல் காமிரா விளம்பரத்தில் அழகாய்த் தெரிகிறார். அதிலும் அந்தக்கிளியைப் பார்த்து ஆச்சரியத்தோடு சிரிக்கையில் நல்லா இருக்கும்.
நரம் கரம்; பார்க்கணும்னு ஆசைப்பட்டுப் பார்க்க ஆரம்பிச்சேன். ஏதோ வேலையிலே முழுசாப் பார்க்கலை. பார்க்கணும்; பார்க்கலாம்.
ஆழ்வார்= இப்படிப் பேரிலே ஒரு படம் வந்ததே இப்போத் தான் தெரியும். வழக்கமான அஜீத் மசாலா.
பம்மல் கே.சம்பந்தம்= இப்போத்தான் பார்த்தேன். என்னை ஆச்சரியமாப் பார்த்த மருமகளிடம், இன்னும் படையப்பாவும், முதல்வனும் பார்க்கலைனு உண்மையைச் சொல்லிட்டேன். என்னை அதிசயப் பிறவியாகப் பார்த்தாள். சினிமாவே பார்க்கிறதில்லைனு சொன்னால் ஆச்சரியமாப் பார்க்கிறா. அதான் சேர்த்து வைச்சு இங்கே பார்த்தாறதே. அங்கே வேறே பார்க்கணுமா என்ன? நகைச்சுவைக்காட்சிகள்ங்கற பேரிலே அவ்வப்போது நம்மை எரிச்சல் பட வைக்கிறதைப் பாரக்கிறோமே, அதுவே போதாது?
இதயத்திருடன்: இப்படி ஒரு படம் வந்ததும் தெரியாது. ஜெயம் ரவி. கதாநாயகி யாரு? தெரியலை. இதுவும் மசாலா தான்.
அவதார்: இன்னும் முழுசும் பார்க்கலை. பன்டோராவைத் தாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதோட நிறுத்திட்டுப் படுத்தாச்சு. முடிஞ்சா மிச்சத்தை இன்னிக்குப் பார்க்கணும்.
புத்தகம் ஒண்ணும் புதுசாப் படிக்கலை. அதான் கொஞ்சம் வருத்தம் கொண்டு போயிருக்கும் ஒரு சில புத்தகங்களைத் தான் திரும்பப் புரட்டறேன். இன்னும் ஐந்து மாசம் ஓட்டணுமே! ஈஸ்வரா!
நீங்க பார்த்ததில அவதார் படத்துக்குதான் என்னோட ஓட்டு.பிரமாதமாக இருக்கு.நான் ஒரு 4 தடவை பார்த்துட்டேன்,மாமி.
ReplyDeleteஇவ்ளோ லேட்டாவா?
ReplyDeleteவாங்க ராம்வி, இன்னும்முழுசாப் பார்க்கலை அவதார் படத்தை. :)
ReplyDeleteவிச்சு, இதுவே சீக்கிரம். இந்தியாவில் இருந்தால் இதெல்லாம் எப்போவோ தொலைக்காட்சியில் போடறச்சே நினைவு வைத்துக்கொண்டு பார்த்தால் பெரிய விஷயம். :)
ReplyDeleteஎனக்கும் அவதார் பிடித்திருந்தது.
ReplyDelete