கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கும் மேலே ஆச்சு யோகாசனப் பயிற்சி செய்து. போன வாரம் ஆரம்பிச்சேன். கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு. :( ஹிஹிஹி, இன்னிக்குக் காலம்பர சவாசனத்திலே இருந்தப்போ அவ்வளவா ஆழமாப் பண்ணமுடியலை. நம்ம வழக்கம் போல் ஏதேதோ சிந்தனைகள். தலையை அப்படியும், இப்படியுமாப் புரட்டி இருக்கேன் போல என்னையும் அறியாம. சரி, தண்டத்துக்கு சவாசனம்னு இருப்பானேன்னு எழுந்தால், ஹிஹிஹிஹிஹி, கூடவே யோகாசனப் பாயும் வருது. என்னடா, இது இவ்வளவு வெயிட் முதுகு மேலேனு பார்த்தால் அந்தக் காலத்திலே ராஜா வேஷம் போடறச்சே முதுகிலே இரண்டு தோள்பட்டையையும் இணைச்சுக் கட்டித் தொங்க விட்டிருப்பாங்களே, அப்படிப் பாய் கூடவே வருது.
இந்த மாதிரி வரச்சே நானே எடுத்துடுவேன். ஆனா இன்னிக்கு எக்கச்சக்கமா மாட்டிட்டு எடுக்கவே முடியலை. வேறே வழியே இல்லைனு ரங்க்ஸைத் துணைக்குக் கூப்பிட்டால் கத்திரிக்கோலும் கையுமா வந்தார். அப்புறம் என்ன ஆச்சு? நாளை காண்க!
இந்த மாதிரி வரச்சே நானே எடுத்துடுவேன். ஆனா இன்னிக்கு எக்கச்சக்கமா மாட்டிட்டு எடுக்கவே முடியலை. வேறே வழியே இல்லைனு ரங்க்ஸைத் துணைக்குக் கூப்பிட்டால் கத்திரிக்கோலும் கையுமா வந்தார். அப்புறம் என்ன ஆச்சு? நாளை காண்க!
முதல்ல இணையம் வந்ததுக்கு ஒரு வாழ்த்து. அதென்ன இணையம் வண்துத்துன்னு சொல்ல வேண்டாமோ:)
ReplyDeleteகர்ல்னா பாய் கூட வராட்டி எப்டி?
ReplyDeleteபல கேள்விகளுக்கு உங்க கிட்டயிருந்து பதில்ஸ் டியூ...! இணையத்தில் ப்ளாக் படிக்குமாசனம் ஆரம்பிச்சாச்சா...!
ReplyDeleteவாங்க வல்லி, அடிக்கடி தொலைபேசி என் தனிமையைப் போக்கியதுக்கு உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும். இணையம் வந்தாச்சு; தொலைபேசி எடுக்கலை. :)))) கத்தி போச்சு வாலு வந்தது டும், டும், டும்! கதைதான்!
ReplyDeleteஅப்பாதுரையோரியல் டச்!! நல்லா இருக்கே இதுவும்! :))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், ஒண்ணொண்ணாப் படிச்சுட்டு பதில் கொடுக்கிறேன். நிறைய பெண்டிங்! :)))))
ReplyDeleteஅப்பறமா என்ன மாமி ஆச்சு? பாயை எடுத்தீங்களா இல்லையா? எப்படி எடுத்தீங்க? சஸ்பென்ஸ்ல விட்டுடீங்க?
ReplyDeleteLooks like "paai" got "attached" to you...;) appuram enna aachu'nu sollaliye maami
ReplyDeleteமுதுகுல பசை ஏதாவது ஒட்டிக்கிட்டு இருக்கும். இல்லனா... ரொம்ப வெயிட்டா யாராவது படுத்தா பாய் ஒட்டிக்கும்...இல்லையா?ம்ம்ம் ஓகே! நீங்களே சொல்லிடுங்க.
ReplyDelete