எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 09, 2012

ஆனந்தத்தைத் தவறவிட வேண்டாம்!

கடந்த இரு மாதங்களாகவே இணையத்துக்குச் சரியாக வரமுடியலை.  அதுக்காகச் சும்மாவா இருக்க முடியும். தேவன் புத்தகங்கள் ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஶ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு எல்லாத்தையும் பத்து லக்ஷமாவது முறையாகப் படிச்சுக் கிழிச்சேன்.  ஹிஹிஹி, நிஜம்மாவே புத்தகங்கள் எல்லாமும் நாளாகிட்டதாலே பேப்பர், பேப்பரா வந்துட்டு இருக்கு. மங்கள நூலகம் இருக்கிறச்சே வாங்கின புத்தகங்கள். ஒரு மாதிரிப் பக்கங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு படிக்கும் டெக்னிக் நமக்குக் கைவந்த கலை. அப்போத் தான் ரேவதி அனுப்பி வைச்ச (ஹிஹிஹி, எங்கள் ப்ளாக், நேரே வந்து தரலை இல்லை; அதனாலே நீங்க கொடுத்ததாய்ச் சொல்ல மாட்டேனே) ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் புத்தகம் கிடைச்சது.

புத்தகம் பெண்ணுரிமை குறித்தது. நாமோ பெண்ணுரிமைக்கு எதிரி.  நமக்கு இந்தப் புத்தகமானு கொஞ்சம் ஆச்சரியத்தோடேயே படிக்க ஆரம்பிச்சேன்.  என்ன ஆச்சரியம்! நான் நினைக்கிறதை, சொல்லிக் கொண்டு இருப்பதை அப்படியே சொல்லி இருக்காங்க. பெண்கள் அவங்களோட பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் அந்தத் தீர்வு அறிவு சார்ந்ததாக, சமூகம் ஏற்கக் கூடிய ஒன்றாக இருத்தல் வேண்டும். அதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.  அதையே தான் இவங்களும் சொல்லி இருக்காங்க ஒரு கதை மூலம்.


பெண்ணைக் குறித்து முதலில் செய்திருக்கும் வர்ணனை அபாரம்.  கடைசியில் குறிப்பிட்டிருக்கும் சிறப்பான முத்திரை வசனமும் பிரமாதம்.  அது தான் தன் உன்னதம், தன் மதிப்பு இவற்றை மறக்கும் தன்மை, பெண்ணின் படைப்பில் சேர்க்கப் பட்டிருப்பது. இதைக் கொடுத்து இறைவி தன் படைப்புகளுக்குள்ளேயான ஏற்றத் தாழ்வைச் சரிக்கட்டுவதாகச் சொல்லப் பட்டிருந்தாலும், பெண் உண்மையிலேயே உன்னதமானவள். தன் மதிப்புள்ளவள்.தன்னைக் குறித்த மதிப்பை அதே சமயம் அறியாதவள் தான்.  உணர்வுகளுக்கு ஆட்படுபவள். சமீபத்தில் கூட ஒரு சிநேகிதி எழுதிய ஒரு சிறுகதையின் முடிவில் கணவனால் கொடுமைக்கு உட்படுத்தப் பட்ட வீட்டு வேலை செய்யும் பெண், கடைசியில் அவனைக் கொன்றுவிடுவதாகச் சொல்லப் பட்டிருந்தது. எனக்கு அந்த முடிவு பிடிக்கவில்லை.

அப்படி உணர்வு பூர்வமான முடிவை எந்தப் பெண்ணும் எடுக்கக் கூடாது.  சிந்திக்க வேண்டும். சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். ஆரம்பத்தில் கடினமே போல் தோன்றினாலும், பின்னர் தானாகக் கை வந்துவிடும். பெண் விடுதலை என்பது ஆண்களோடு சரிசமமாகப் போட்டிபோடுவதில் இல்லை. நிச்சயமாய் இல்லை. பெண்ணின் தனித்தன்மையை இழக்காமல் பெண்ணாக இருந்து கொண்டே நாம் கட்டப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதே. என்னைப் பொறுத்தவரையில் பெண்ணாய்ப் பிறந்திருப்பதில் பெருமையே!


தொடரலாம்! .

18 comments:

  1. நல்ல புத்தகங்கள் தரும் படிப்பு அனுபவமே தனிதான்.

    ReplyDelete
  2. கனெக்ஷன் கிடைச்சாச்சா:)யானை , கோபுர தரிசனம் அழகா இருக்கு. ஸ்ரீ ரங்கத்தின் பாசுரம் சொல்லும் கிளிகளின் ஃபோட்டோவும் போடவும்:)
    துப்பறியும் சாம்பு புக் எங்க கிடைக்கும்? போன ரெண்டு தடவை வந்தப்போ தேடினோம் கிடைக்கவில்லை

    ReplyDelete
  3. //ரேவதி அனுப்பி வைச்ச ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் புத்தகம் கிடைச்சது//

    நல்ல விமர்சனம். அடுத்த பாகத்துக்குக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. //துப்பறியும் சாம்பு புத்தகம் எங்கே கிடைக்கும்//

    மைலாப்பூர் அல்லையன்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும். சமயங்களில் இந்த பதிப்பகத்தின் புத்தகங்கள் கிரி ட்ரேடிங் ஏஜென்சியில் கிடைக்கும்.

    ReplyDelete
  5. வாங்க லக்ஷ்மி, நல்ல புத்தகம். கட்டாயமாய் எல்லாரும் படிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  6. ஏடிஎம், படிங்க நிச்சயமாய். கிழக்குப் பதிப்பகம் வெளியீடு. விலாசம் கடைசியிலே தரேன். :))))

    ReplyDelete
  7. வாங்க ஜெயஸ்ரீ, கனெக்ஷன் கிடைச்சாச்சு. துப்பறியும் சாம்பு ஸ்ரீராம் சொல்லி இருக்காப்போல அலயன்ஸ் பதிப்பகத்திலே இப்போ வெளியிடறாங்க. கிரி டிரேடிங் ஏஜென்சி, ஹிகின்பாதம்ஸ் போன்றவற்றில் கிடைக்கலாம். கிரி டிரேடிங்கில் நிச்சயம் இருக்கும். பொன்னியின் செல்வன் ஆங்கில மொழிபெயர்ப்பு அங்கே தான் வாங்கினோம்.

    ReplyDelete
  8. வாங்க ஸ்ரீராம், கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. Girivalm la leith umma:( rendu thadavai try panniyaachchu. Mail panni kaekkaraen. Ippo vanthirukkumo? Ivarroda favorite!

    ReplyDelete
  10. ஒரு நல்ல விமர்சனம் .

    //பெண்கள் அவங்களோட பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. //

    எனக்கும் இந்தக்கருத்தில் உடன்பாடு இருக்கு மாமி.

    ReplyDelete
  11. பெண்ணுரிமைக்கு எதிரியா? என்ன இப்படி ஷாக் குடுக்கறீங்க?
    (ஓஹோ.. அப்படிச் சொல்றீங்களா? புரியுது புரியுது.. சர்வாதிகாரக் கும்பலுக்குத் தான் எல்லாம் இருக்கே... இதுல தனியா உரிமை வேறே எதுக்குன்றீங்களா?)

    ReplyDelete
  12. பெண்ணுரிமைக்கு எதிரியா? என்ன இப்படி ஷாக் குடுக்கறீங்க?
    (ஓஹோ.. அப்படிச் சொல்றீங்களா? புரியுது புரியுது.. சர்வாதிகாரக் கும்பலுக்குத் தான் எல்லாம் இருக்கே... இதுல தனியா உரிமை வேறே எதுக்குன்றீங்களா?)

    ReplyDelete
  13. ஜெயஸ்ரீ, மெயில் பண்ணிக் கேட்டுப் பாருங்க. துப்பறியும் சாம்பு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்! :((((

    ReplyDelete
  14. வாங்க ராம்வி, இந்தக் கால இளம்பெண்ணான நீங்கள் என் கருத்தோடு ஒத்துப் போவது எனக்கு மாபெரும் பலம். நன்றிம்மா.

    ReplyDelete
  15. அப்பாதுரை, பெண்ணுரிமை வாதிங்கல்லாம் என்னைப் பிற்போக்குவாதினு தான் சொல்றாங்க. தமிழ் ஹிந்துவிலே பாருங்க. ஒரு பெண் என்னை இந்தக் காலத்து இளம்பெண்களைப் பார்த்து நான் பொறாமைப் படுவதாய்ச் சொன்னதோடு நீ ஏன் கிராமத்துக்குப் போய் வசிக்கக் கூடாதுனும் கேட்டார்! சரினு ஸ்ரீரங்கம் வந்துட்டேன்! :))))))))))))

    ReplyDelete
  16. ஸ்ரீரங்கம் கிராமம்ன்றது எல்லாருக்கும் தெரியுமா? எதுக்கும் தனிப்பதிவா பெரிய எழுத்துல போட்டுறுங்க :)

    ReplyDelete
  17. புத்தகத்தின் பெயர் என்ன?..

    //அதையே தான் இவங்களும் சொல்லி இருக்காங்க ஒரு கதை மூலம்.//

    இவங்கன்னா எவங்க?.. அல்லது புத்தகத்தின் ஆசிரியர் யார்?..

    ReplyDelete