வழக்கமா வந்து பின்னூட்டம் போடறவங்களைக் கூட நாலைந்து நாளாக் காணோம். எல்லாரும் ஒரே சமயம் பிசி போல! பொதுவாப் பின்னூட்டங்களை எதிர்பார்க்காமலேயே எழுதப் பழகினாலும் பார்த்த மனிதர்களைக் காணோம்னா கொஞ்சம் கவலை வருது உண்மை தான்..அதோட நானும் நாலைந்து நாட்களாக் கொஞ்சம் பிசி, நண்பர் வருகைனு இருந்துட்டேன். வேறே யாரும் இல்லை. எல்கே தான். சென்னையிலே பயமுறுத்திட்டிருந்தார்; இங்கே நிஜம்மாவே வந்து பயமுறுத்திட்டுப் போயிட்டார். :)))
ஶ்ரீராம் அனுப்பிய "தூறல்கள்" புத்தகம் படித்து முடித்து விட்டேன். அருமையான நினைவஞ்சலி என்பதோடு மனைவிக்காக உருகும் கணவர்களும் உண்டு என்பதையும் சொல்கிறது. மனைவியின் பெயரைத் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டு பாஹே, ஹேபா என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கும் அவரைப் போல் எல்லாரும் இருந்தால் கணவன், மனைவி சண்டையே வராது. "நான்" என்பது குறித்த விளக்கம் அருமை. மெளனம் பற்றிய விளக்கமும் பிடித்த ஒன்றாக அமைந்தது. உண்மையில் மெளனத்தை விடச் சிறந்த மொழி இல்லை என்பதே என் கருத்தும்.
நல்ல தரமான அட்டை, தரமான பேப்பர். முன்னட்டையில் பாஹே அவர்களின் பேரச் செல்வங்கள் ஆனந்தமயமான தூறல்களை வானவில் பின்னணியில் ரசிக்கின்றனர். முதல் மழை முகத்தில் விழுவதை ரசித்திருக்கிறீர்களா? அந்த முதல் மழை உடலுக்கும் குளுமை தரும் என்பார்கள். கோடையில் திடீர் மழை பெய்கையில் வெளியே நின்ற வண்ணம் முகத்தில் மழைத் தூறல்கள் விழும்போது ஆஹா! அட்டையைப் பார்த்ததுமே அந்த உணர்வு வந்தது. பின்னட்டையில் வாழ்க்கைப் பயணத்தில் முதுமை அடைந்து தற்போது தனிமையும் வந்து தன்னந்தனியாகப் பயணிக்கும் முதியவர். அவருடைய தனிமை அவரை எவ்வளவு வாட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
"போய்விட்ட வாழ்க்கை திரும்பக் கிடைத்தால்
எல்லோருமே வேறுவிதமாகத் தான் செயல்படுவார்கள்." இது எவ்வளவு சத்தியமான ஒன்று. நானும் பலமுறை நினைத்திருக்கிறேன், கடந்த காலம் திரும்பக் கிடைத்தால் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ளலாமே என. அருமையானதொரு புத்தகத்தைப் பரிசாக அளித்த ஶ்ரீராமுக்கும், அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.
இன்று லார்ட் மவுன்ட்பேட்டன் திரைப்படம் பார்த்தேன்.படேல் ஆகஸ்ட் 15 நாள் நன்றாக இல்லை எனவும், அன்றைய தினம் சுதந்திரம் கிடைத்தால் இந்தியாவுக்கு மோசமான எதிர்காலம் எனவும் ஜோசியர்களால் கணிக்கப் பட்டிருப்பதைக் கூறவும், நேரு அதை ஆகஸ்ட் பதினான்கு நள்ளிரவு 12 மணி என மாற்றுகிறார். படேல் ஏன் மறுக்கவில்லை? இந்தியா கையை விட்டுப் போனால் போதும்னு பிரிட்டிஷ் காரங்க அவசரம் அவசரமாக் கொடுத்துட்டாங்க போல! பாகப்பிரிவினைக் காட்சியைக் காட்டுவாங்கனு நம்ம ரங்க்ஸ் சொன்னதால் உட்கார்ந்தேன்.அதைக் காட்டவில்லை; அது வேறே படம் போல! இதிலே இரவு பனிரண்டு மணி வரை தலைவர்கள் அனைவரும் காத்திருந்து பனிரண்டு அடித்ததும், (சரியாக) நிர்வாக மாற்றம் செய்து கொள்வதோடும், யூனியன் ஜாக் கொடி கீழிறங்கி தேசியக் கொடி ஏறுவதும் காட்டியதோடு படம் முடிகிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாகப் படத்தில் எதுவும் இல்லை. கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

தூறல்கள் பற்றிய வரிகளுக்கு நன்றி!.நன்றி!!...நன்றி!!!
ReplyDeleteஎன்ன நல்ல நேரம் பார்த்தாலும் நிம்மதி இல்லை போலும் நம் நாட்டுக்கு! ரொம்ப முன்னாலேயே "நள்ளிரவில் பெற்றோம் விடியவே இல்லை என்று சுதந்திரம் பற்றி பாடி விட்டுப் போய் விட்டார்கள்.
ReplyDeleteபடத்தில் மவுண்ட்பேட்டன் மனைவி பற்றி ஒன்றும் இல்லையா....! :))
ReplyDeleteபோன வாரம் ஒரு சஷ்டியப்த பூர்த்தி மற்றும் ஒரு சதாபிஷேக பிசி! அதனால் இணையப் பக்கம் வர முடியவில்லை!
ReplyDeleteஇங்க்லிஷ் படமா இந்தியா? கேள்விப்பட்டதில்லையே? கொஞ்சம் விவரம் கொடுங்க.
ReplyDeleteதூறல்கள் அருமையான புத்தகம். அனுபவிச்சு எழுதியதை அனுபவிச்சுப் படிக்க முடியுற சில புத்தகங்கள்ல ஒண்ணு.
சில நேரம் பின்னூட்டம் காணலேனு பதிவருக்குக் கவலை; சில நேரம் பதிவரைக் காணலேனு பின்னூட்டக்காரருக்குக் கவலை.. என்ன செய்யுறது போங்க!
கடந்த காலம் திரும்பக் கிடைத்தால் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ளலாமே என. //
ReplyDeleteஅருமையான திரும்பத்திரும்ப படிக்கவைக்கும் பயனுள்ள புத்தகம்..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
வாங்க ஶ்ரீராம். நல்ல புத்தகம். திரும்பத் திரும்ப சிலவற்றைப் படிக்கிறேன். நன்றி.
ReplyDeleteஆமாம், இந்த நேரம் சரியில்லை என்பதைக் குறித்து ஏற்கெனவே Freedom at Midnight புத்தகத்திலும் படித்திருக்கிறேன். எல்லாம் நேருவால் வந்ததுனு தோணும். :))))
ReplyDeleteகாந்தி மவுன்ட்பேட்டனைச் சந்திக்கும் அன்று மெளன விரதம். :P
ம்ம்ம், நேருவுக்கும், எட்வினாவுக்கும் உள்ள நெருக்கத்தை ஒரே ஒரு காட்சியின் மூலம் விளக்குகின்றனர். :))))))
ReplyDeleteசதாபிஷேஹம், சஷ்டியப்தபூர்த்திக்குத் தான் திருக்கடையூர்ப் பிரயாணமா! எல்லாம் நல்ல படி முடிந்திருக்கும் என நம்புகிறேன். தம்பதிகளுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.
அப்பாதுரை, ஆங்கிலப் படம் தான். ஏற்கெனவே தொலைக்காட்சியில் சீரியலாக வந்ததாய்ப் படித்த நினைவு. ஆனால் இது படம் தான். ஒரே மணி நேரம் தான். நான் பார்க்க நினைச்சது வேறே படம். அந்தப் பிரிவினைக் காட்சிகள் இந்தப் படத்திலே தான் வருதுனு நினைச்சுட்டோம். :( இதிலே லேசாத் தொட்டுக் காட்டறாங்க.
ReplyDeleteசில நேரம் பின்னூட்டம் காணலேனு பதிவருக்குக் கவலை; சில நேரம் பதிவரைக் காணலேனு பின்னூட்டக்காரருக்குக் கவலை.. என்ன செய்யுறது போங்க!//
ReplyDeleteபின்னூட்டம் வராமல் இருப்பதெல்லாம் பழகிப் போச்சு. இப்போக் கொஞ்ச நாட்களா தினம் வரவங்க கூடக் காணோமேனதும் கொஞ்சம் யோசனை! :))))))
வாங்க ராஜராஜேஸ்வரி, நீங்களும் படிச்சீங்களா? பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.
ReplyDelete'தூறல்கள்' பற்றி தகவல்களுக்கு நன்றி. ஞாபகமாக ஸ்ரீராமிடம் வாங்கிப் படிக்க வேண்டும். முன்பே அவரிடம்
ReplyDelete'பாஹே' பற்றிக் கேட்டேன். நீங்களாவது ஒரு வரி குறிப்பு கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
அந்த 'ஆனந்தத்தைத் தவறவிட வேண்டாம்' அத்தனை பகுதியும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. பார்வை தெரிந்த பின் பார்த்ததைப் பற்றிச் சொல்லலாம் என்றிருந்தேன். அதற்குள்ளேயே திடுதிப்பென்று முடித்து விட்டீர்கள், போலிருக்கு.
ReplyDeleteஅதனால் தான் வந்தும், பின்னூட்ட த்தில் தலைகாட்டவில்லை!
புத்தகம் கிடைச்சா படிச்சுப் பார்த்திருவோம். பெரியவங்க நீங்க சொல்லி நாங்க கேட்காமலா போயிருவோம்.
ReplyDeleteகடந்த காலம் திரும்பக் கிடைத்தால் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ளலாமே என. //
ReplyDeleteஉண்மை தான் மாமி
வாழ்கையில் ஒரு rewind button இருந்தால் நல்லாத் தான் இருக்கும். முன்னாடி பண்ணின தப்பைத் திருத்திக்கவோ, இல்லை பண்ணாமலோ இருக்க முடியுமே.
என்ன பண்றது - கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம் மாதிரி தான் நமக்கு ஏற்படற இந்த ஞானோதயமும்.
Avengers 3 d kannaadi poattundu poai paaththuttu vimarsanam seyyavaendaama?:)
ReplyDeleteவாங்க ஜீவி சார், தூறலில் கட்டாயமாய் நனைய வேண்டும். குளிர்ச்சியைத் தரும். :)))))
ReplyDeleteஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால் இன்னும் முடிக்கலை ஜீவி சார், :))) மன்னிச்சுக்குங்க. தொடரும் போடாமல் விட்டதுக்கு.
ReplyDeleteஅது முழுவதும் பெண்களைத் தாங்கள் யார், என்ன, எப்படி இருக்கணும், எதை ஒதுக்கணும், எதை ஒதுக்கக் கூடாது, கடந்த காலத்தை நினைத்துப் புழுங்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகணும் என்பதையே சொல்கிறது.
வேடிக்கை என்னன்னா இதையும் ஒரு ஆண் மூலமே தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. இதைப் பற்றிக் கூடிய சீக்கிரமாய்ப் பகிர்ந்துக்கறேன். அநேகமாய் அடுத்த பதிவில் முடிக்கணும்னு நினைக்கிறேன். பார்க்கலாம். :))))))
விச்சு, கட்டாயமாய்ப் படிங்க. கல்யாணம் ஆகிடுச்சா? அப்படின்னா மனைவியையும் படிக்கச் சொல்லுங்க. :))))
ReplyDeleteஸ்ரீநி, உண்மை தான். பலமுறை நானும் செய்த தப்பைத் திருத்த முடிஞ்சால்னு நினைச்சிருக்கேன்.
ReplyDeleteஅவெஞ்சர்ஸ் பார்க்கலை ஜெயஸ்ரீ, ஆனால் 3D கண்ணாடிபோட்டுண்டு நிறையப் படங்கள் பார்த்தாச்சு! :))))))
ReplyDelete