- பெண்கள் எப்படி அவர்களே தங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முடியும்? அவர்களுக்கு கல்வி மறுத்து வந்த காலகட்டத்தில்?///
கல்வி
பெண்களுக்கு மறுக்கப்பட்டது அந்நிய ஆதிக்கத்தின் விளைவு. இதனால் பல பெண்கள் மதம்
மாற முற்பட்டதோடு வேறு பல விளைவுகளும் உண்டாயின. இதை அனைவருமே அறிந்திருக்கிறோம்.
பல பெண்களும் மானபங்கப்படுத்தப்பட்டதோடு அல்லாமல், அந்நியமதத்தினரைத் திருமணம் செய்து
கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆங்கிலப் படிப்பைப் படித்த பெண்களும் அவ்வாறே
மதம் மாறத் தலைப்பட்டார்கள். ஆகவே பெண்களை
அடக்கி ஒடுக்கும் முறை கட்டாயமாய் ஏற்பட்டது. இது ஒரு சாபக்கேடுதான் என்றாலும் பெண்களே
கலாசாரத்தின் ஆணிவேர் என்பதால் வேரைக் கெல்லி எறிய முடியாது என்பதால் வேருக்கு நீர்
வார்ப்பதாக நினைத்துக்கொண்டு பூச்சி மருந்தை அள்ளித் தெளித்தனர். இது பல விபரீத விளைவுகளுக்குக் காரணமாகவும் ஆயிற்று.
2.
2. பெண்ணின் தனித்தன்மை என்றால் என்ன? பூஜா-பாட் கர்னா?
பெண் பெண்ணாக இருத்தலை
உணர்வதே அவள் தனித்தன்மை என்பது என் தனிப்பட்ட கருத்து. பூஜா-பாட் கர்னா எல்லாம் அவரவர்
சொந்த விருப்பம். ஆனால் தான் பெண் என்பதை உணர்ந்து
கொண்டு, ஆணோடு போட்டியிடுவது என்பதைத் தவிர்த்து ஒரு பெண்ணாகவே வாழ்க்கையில் ஜெயித்துத்
தான் எப்படிப்பட்டவள் என்பதை உலகுக்கு உணர வைக்க வேண்டும். அதோடு புலி வேஷம் போட்டுக்கொண்ட பூனையாக இருக்காமல் பெண் என்பதை முழு மனதோடு அங்கீகரித்துக்கொண்டு அதில் மகிழ்ச்சியும், திருப்தியும் காண வேண்டும். இந்த நாவலில் வரும் காக்கை போல் தன் வேஷத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது. நம் இயல்புப்படி இருப்பதே தன்னிறைவு அளிக்கும். அதோடு தன் குடும்பம், தன் உறவுகள்
என அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் போக்கும் தேவை; ஆனால் இன்றைய அவசர உலகில் இதுக்கெல்லாம் யாருக்கும்
நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை. உறவைத்
துச்சமாகவே கருதும் மனப்போக்கு இன்றைய சூழ்நிலையில்.
- பெண்ணாய் பிறந்தது பெருமை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், ஆண்கள் மட்டும் தான் உணர்வு பூர்வமான முடிவு எடுக்கலாமா?
ஆண்கள் யாரும் உணர்வு பூர்வமாக முடிவு எடுப்பதில்லை. அவர்கள் உலகே வேறு. ஆணுக்குக் குடும்பம் மட்டும் உலகம் இல்லை. ஆண் பல துறைகளிலும் சிறந்து விளங்கும் நண்பர்களைப் பெற்றால் அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்வான். (இது பொதுவான கருத்தே, இதில் மாறுபட்டிருக்கும் ஆண்களும் உண்டு. அதனால் அடிக்க வராதீங்க யாரும்) ஆனால் பெண்ணோ ஒரு சிநேகிதனோ, சிநேகிதியோ ஆத்மார்த்தமாய்ப் பழகினால் கடைசி வரை மாறவே மாட்டாள். பெண்ணுக்கோ முதலில் குடும்பமே அவள் உலகம்,
இன்றளவும். அதன் பின்னரே மற்றவர்களைப் பார்க்கிறாள். ஆண்களின் சிந்தனைகளே அறிவுபூர்வமானவை. உணர்வு பூர்வமான பெண்களின் சிந்தனைகளை அவர்கள் கேலி
செய்வதையும் இன்றும் காணமுடியும். இதைப் பெண்களுக்கு இறைவன் அளித்ததொரு பரிசு அல்லது உணர்வைப் பூரணமாய்ப் புரிந்துகொள்ளும் முன்னெச்சரிக்கை எனச் சொல்லலாமோ? ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு காலில் இதை உணர்வறிவு எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த உணர்வறிவு பெண்ணுக்கு மட்டுமே உண்டு. இந்த உணர்வறிவால் பெண்கள் புரிந்து கொள்ளும், பல விஷயங்கள்! ஆனால் கடைசியில் அவை உண்மையாக இருப்பதில் ஆண்கள்
திகைத்துப் போனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். இது மட்டுமில்லை; உணர்வு பூர்வமான எந்த வெளிப்பாட்டையும்
ஆண்கள் காட்டிக்கொள்வதில்லை; ஒரு சிலரைத் தவிர. :D
- அந்த ஹூஸ்டன் விவகாரம், உங்களில் யாருக்கு, முழு உண்மை தெரியும்? எனக்கு அந்த மாதிரி ஒரு லாஸ் ஏஞ்செலஸ் விவகாரம் தெரியும். தன் குழந்தைகளை நதியில் முழுகடைத்த இந்திய அப்பாவி பெண்ணின் புருஷன் படுபாவி. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னால், கணவனை தலைகாணியால் அமுக்கி கொலை செய்தாள், ஒரு அந்தணக்கிழவி, திருமங்கலத்தில். அவளும் தான் அவனுடைய கொடுமையில் 50 வருடம் வெந்தவள்.
ஹூஸ்டன்
விபரங்கள் நீங்க இங்கே குறிப்பிட்டதுக்குப் பின்னரே நான் படித்தேன். இந்த முறை ஏற்கக் கூடியதே அல்ல. அந்த ஒரு கண நேர உணர்வை அடக்கி ஆளவேண்டும் என்பதே
என் கருத்து. அந்தப் பெண்ணுக்கு விடுதலை பெற
வேறு வழியே இல்லாமல் இருந்திருக்குமா?? அதோடு எண்ணெய் தேய்த்துவிடுவதாய்க் கூறிவிட்டுப்
பெட்ரோலை ஊற்றி இருக்கிறார். பெட்ரோலின் வாசம் தெரியாமல் போயிருக்குமா கணவனுக்கு? கொஞ்சம் குழப்பமாய்த் தான் இருக்கிறது. இதில் உண்மை என்னவென்று தெரியாமல் முன் கூட்டிய
கருத்துக்களைப் பதிவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. :( தலைகாணியால் கணவனை அமுக்கிக் கொல்ல ஐம்பது வருடம் காத்திருந்தவளுக்குக்
கடைசியில் என்ன கிடைத்தது? :(
எப்போதோ விலகி இருக்கலாமே! விலகி என்றால் தனியாக
வந்து என்று அர்த்தம் இல்லை; வீட்டிலேயே, ஒரே வீட்டிலேயே ஒதுக்கி வைத்தல். இம்முறையில் கொஞ்சம் பயிற்சி பெற வேண்டும். மன திடமும்
தேவை.எனக்குத் தெரிந்து ஒரு பெண்மணி கணவனின் கொடுமை தாங்க முடியாமல் ஒரே வீட்டிலேயே தனியாக வாழ ஆரம்பித்தாள். இது ஏன்? வெளியே வந்திருக்கலாமே எனத் தோன்றினாலும், கணவனுக்கு மறைமுகமாய் அவள் கொடுத்த தண்டனை இது.
- இன்று விருந்தாவன் விதவைகளின் பிரச்னைகளை அலச ஒரு ஏழு மெம்பர் கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. அந்தக் கொடுமையை நீங்கள் யாராவது பார்த்தது உண்டா? எனக்கு தெரியும், ஓரளவு. விதவைகளின் சொத்தை பிடுங்கி, வீட்டை விட்டு துரத்தி, பிச்சை எடுக்க வைத்து, அத்தையும் பிடுங்கும் பார்ப்பன அட்டூழியம் நூறு வருடங்களுக்கு மேல் நடக்கிறது. கணிசமான அளவு பார்ப்பனக்கழுதைகள். மற்ற கழுதைகளும் உண்டு.
விருந்தாவன்
விதவைகளை நேரில் பார்த்து மனம் நொந்து அவர்களுக்குப் பணம் கொடுக்கக் கேட்டபோது முடியாது; அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புங்க என்று வாதாடி! அவர்களோடு சண்டை போட்டு! என்னத்தைச் சொல்வது? பெரும்பாலும் வங்காள விதவைகளே அதிகம். இதற்கு ஒரு முடிவு இப்போதாவது உச்சநீதி மன்றத்தின்
மூலம் வந்தால் நன்மையே. ஆனால் இனி இப்படி அடைத்து
வைத்துக் கொடுமைப் படுத்த முடியாது. சமூகம்
இதன் தீமையை நன்கு உணர்ந்திருக்கிறது.
மனைவி அமைவதெல்லாம்
ReplyDeleteகணவன் அமைவதெல்லாம் தான் நினைவுக்கு வருகிறது. பிரச்சினையை அணுக மானிடர்களுக்கு வேறு வேறு யோசனைகள்,அணுகுமுறைகள் சந்தர்ப்பங்களை அனுசரித்து மாறுகிறது.
யாருடைய வாழ்வையும் யாரும் பறித்துவிடமுடியாது.
பறித்தால் அதற்கேற்ற தண்டனையை அவள், அவள் நினைத்தவிதத்தில் முடிப்பாள். பொறுமை அதிகமாக இருப்பதால் வரும் வினைதான் சங்கடங்கள்.
பின்னூட்டமே இன்னோரு கதையாகிவிடும் அபாயம் நிறுத்திக் கொள்ளுகிறேன்.
இன்னம்பூரார் இந்தக் கருத்துகளை எங்கே சொல்லியிருக்கிறார்? அவர் பதிவிலா? ஆனால் பதில்கள் மிக யோசித்து அழகாக எழுதப் பட்டுள்ளன. கடைசி பாரா கருத்துகளை வைத்து ஒரு நாவலே எழுதலாம். தலையணையால் அமுக்கிக் கொல்வதை விட ஒதுக்கி வைத்து, ஒதுங்கி வாழும் உணர்வுக் கொலை சரியான தண்டனை.
ReplyDeleteகேள்வி பதிலில் சாட்டையடி.
ReplyDeleteசூப்பர் விமரிசனப் பதிவு. ஒரு பண்டோரா பெட்டியைத் திறந்துவிட்டீர்களோ என்றும் தோன்றுகிறது.
ReplyDeleteவாங்க வல்லி, முதல் வருகைக்கு நன்றி. உங்கள் அனுபவங்களில் பகிர முடிந்ததைப் பகிர்ந்து கொள்ளலாம். :)))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், இது குழுமங்களில் இன்னம்புரார் கேட்ட கேள்வி. அவருக்கென தனி வலைப்பதிவெல்லாம் இல்லை. பல குழுமங்களில் ரொம்பவே சுறுசுறுப்பாகப் பங்கெடுத்துக்கொள்ளும் எண்பது வயது இளைஞர். :)))))) சொல் மட்டுமில்லாமல் செயலும், செயலாற்றல்லும், செய்து முடிக்கும் திறனும் இயல்பாகக் கைவந்திருக்கும் மனிதர். எழுத்தோ லா.ச.ரா.வையும் எஸ்.வி.வியையும் நினைவூட்டும்.
ReplyDeleteவாங்க விச்சு, உங்க கருத்தைச் சொல்ல வேண்டாமோ? :))))
ReplyDeleteவாங்க கெளதம் சார், ரொம்ப நன்றி, பண்டோரா பெட்டிங்கறீங்க?? ம்ம்ம்ம்ம்??? பார்க்கலாம், எனக்கென்னமோ யாருமே வரமாட்டாங்கனு தோணுது. :))))))
ReplyDeleteஅப்பாதுரை said...
ReplyDeleteஅந்நிய ஆதிக்கம்னு எதைச் சொல்றீங்க? ஆங்கிலேயருக்கு முன்னால முகலாயர் உண்டே? பெண்களை உயர்வாக இந்து மதம் கூடச் சொல்லவில்லை
ஆக மொத்தம் பெண்களோட மதிப்பு எல்லாமே பூட்ட கேஸ் - என்ன பண்றது சொல்லுங்க :)
@அப்பாதுரை, பின்னூட்டத்தை மாத்திப் போட்டிருக்கீங்க பரவாயில்லை. அந்நிய ஆதிக்கம் என்பது முகலாயரையும் குறித்தே சொல்லப்பட்டது. அதோடு இந்து மதம்னு நீங்க சொல்லும் நம் சநாதன தர்மம் பெண்களை உயர்வாகச் சொல்லவில்லை என்பது சரியில்லை. இது ரொம்பப் பெரிசா வரக்கூடிய ஒரு பதிவாகிடும் என்பதால் பின்னர் குறிப்புக்களோடு எழுத வேண்டும். பெண்களோட மதிப்பைப் பெண்களே தான் குறைச்சுக்கிறாங்க. அவங்களே பூட்ட கேஸாக்கிறாங்க. என்ன பண்ண முடியும்?? :)))))))
கதை நிகழும் காலம் அன்னிய ஆதிக்க காலமா?.. குறிப்பாக வருடம் சொல்ல முடியுமா?.. புத்தகத்தைப் படித்தவர்களுக்குத் தான் நீங்கள் சொல்ல வருவது புரியும் போலிருக்கு. அல்லது கதைச்சுருக்கம் (இரண்டு பாராக்களிலாவது) கொடுத்துவிட்டு
ReplyDeleteஆரம்பித்திருக்கலாம், இல்லையா?
வாங்க ஜீவி சார், கதை நிகழும் காலம் இந்த 21-ஆம் நூற்றாண்டில் நவநாகரிக மங்கை மாயாவின் காலம்.கதைச் சுருக்கம் கொடுத்திருக்கணும் தான். அதெல்லாம் தோன்றவில்லை. கடைசியில் எல்லா விபரங்களும் கொடுக்கலாம் என்றிருந்தேன். மன்னிக்கவும்.
ReplyDelete