எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 17, 2012

பாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் -(nostalgia-2)

 திரு சந்தானம் கொடுத்தவை:

ஒரு சில நான்சன்ஸ் ரைம்ஸ்: 1. கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, குழந்தை ஏன் அழுகிறது. பதில்: காற்று வீசவில்லை. மீண்டும் கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, காற்று ஏன் வீசவில்லை---இப்படி இது தொடரும்

2. சூரியன் தங்கச்சி சுந்தர வள்ளிச்சி நாளக் கல்யாணம், மேளக் கச்சேரி, ஈக்கையான் பிறண்டையான் ஈயக்காப்பு திரண்டையாம்----இப்படி நீண்டு கொண்டே போகும்

3. தா பூ , தாமரை பூ,அடுத்த வீடு அல்லி பூ, எதிர்த்த வீடு எருக்கம் பூ----------

4.காசி கமட்டி இந்துருப்பால்-- பூமாதேவி, சீதாதேவி என்று முடியும்.

பேராசிரியர் நாகராஜன் தங்கிலீஷில் எழுதி அதை நான் தமிழில் தட்டச்சியது கீழே:
ákku pákku vetthalai pákku dámmu dúmmu tasam
tassai thúkki mélé póttál chettiyár víttu nandu
nandai thúkki mélé póttál nága ratna pámbu
pámbai thúkki mélé póttál pañcha varna kili
kiliyai thúkki mélé póttál kirushnanudaya kondai!

ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம்மு டும்மு தசம்
தஸ்ஸை தூக்கி மேலே போட்டால் செட்டியார் வீட்டு நண்டு
நண்டைத் தூக்கி மேலே போட்டால் நாக ரத்ன பாம்பு
பாம்பைத் தூக்கி மேலே போட்டால் பஞ்ச வர்ணக் கிளி
கிளியைத் தூக்கி மேலே போட்டால் கிருஷ்ணனோட கொண்டை.

மீண்டும் சந்தானம் கொடுத்தது:

மாது மாது மன்னவன் தம்பி,
கோது கோது கொழுந்து வெத்தலை,
ஒன்னுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்தான்
டம்மக்கொ டையக்கோ-------

தமிழ்த் தேனியார் கொடுத்தது முற்றுப்பெறவில்லை.

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
குட்டி யானைக்கு கொம்புமுளைச்சுதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்"

இதை முழு வடிவில் கல்யாண குருக்கள் கொடுத்தது:

 யானை யானை
அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
கட்டி கரும்பை முறிக்கும் யானை
வைகை தண்ணியை கலக்கி கலக்கி
குடிக்கும் யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சிதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடி போச்சுதாம்

மீண்டும் பேராசிரியர் நாகராஜன் கொடுத்தது:

A nonsense rhyme On Bahama Mama

                                                           (Mama in Tamil means uncle)

                                                                  By    Raja Mama

                                                  To my little one who is not in India,

                                                 Osama  was definitely  not a mama,

                                                And  Obama was not  a mama to Osama,

                                                Nor was Obama a mama to Bahama,

                                               But in Bahama there was a hotel called  Mama,

                                                  Where the food was eaten by this mama.

கீழே உள்ளவை திருமதி சாரதா சுப்பிரமணியன் கொடுத்தவை.

முறுக்கு திருக்கு லாங்கு சக்கரை
டாம் டூம் டை
அச்சு நக்கர கோக்க நக்கர கை
அச்சுக்குட்டி தாலுக்குட்டி
அரண்மனையாம் பெண்ணரசி
ஸ்ரீரங்க்கத்துக்கு ஒடிப்போ

டூ டூ துப்பாக்கி.போலீஸ்காரன் பெண்டாட்டி
டா டா ட்ப்பி கோதுமை ரொட்டி
தின்னுப்புட்டு போனாண்டி


அம்மா பொண்ணூக்கு கல்யாணம்
அவா அவா வீட்டுல சாப்பாடு
கொட்டுமேள்ம்கோயில்ல
வெத்தலபாக்கு கடையில
சுண்ணாம்பு சுவத்தில


கண்ணாமூச்சி ரே ரே ரே
காட்டிமூச்சி ரே ரே ரே
உனக்கு ஒரு பழம் எனக்கு ஒரு பழம்
கொண்டு ஒடோடி வா

கொக்கரக்கோழி
கோழி முட்டை
வெள்ளைக்காரா
விடுஞ்சு போச்சு

ராஜகோபாலா ஒங்கம்மா தோசை செஞ்சாளா
எங்கம்மா எனக்கு தந்தாளே
ஒங்கம்மா உனக்கு த்ந்தாளோ

திரு இன்னம்பூராரின் பங்களிப்பு.

ஓடற நரியிலே, ஒரு நரி கிழநரி.
கிழநரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்.

இன்னம்பூரான்


"பகலெல்லாம் மழை பெய்து,
சுவரெல்லாம் ஓதம்.
தாயாரை தடி கொண்டு மாட்டு.
அப்பனையையும் பாட்டனையும்
வீட்டை விட்டு துரத்து.
கொண்ட பொண்டாட்டியை குப்பையிலே தள்ளு.
பகலெல்லாம் மழை பெய்து,
சுவரெல்லாம் ஓதம்!
தானெனென்ன! தானென்னா!
இன்னம்பூரான்
~உசாத்துணை: இன்னம்பூர் சிங்கம் அலையஸ் ராஜம் தாத்தா



25 comments:

  1. ரசிக்கவைத்த பாட்டி சொன்ன பாப்பா பாடல்கள் எல்லாமே நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. எதையுமே கேட்டதில்லை.
    தசம் என்றால் என்ன?

    ReplyDelete
  3. வாங்க லக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. வாங்க அப்பாதுரை, எதுவுமேவா கேட்டதில்லை? ஆச்சரியம் தான்!

    தசம்னா பொதுவாப் பத்து என அர்த்தம் ஆனாலும் இங்கே கற்பனை மொழியாகவே எடுத்துக்கணும்.

    அகராதியும் அதையே சொல்லுது! :)))))

    தசம் (p. 474) [ tacam ] {*}. s. ten, பத்து.

    தசகற்பனை, -மொழி, (chr. us in poetry) the decalogue.

    ReplyDelete
  5. குத்தடி குத்தடி ஜைலக்கா
    குனிஞ்சு குத்தடி ஜைலக்கா
    பந்தலிலே பாவக்கா தொங்குதடி டோலாக்கு
    அக்கா வந்தா பாத்துக்கோ பணம் குடுத்தா வாங்கிக்கோ
    சில்லறைய மாதிக்கோ சிலுக்கு பைல போட்டுக்கோ கிலு கிலுன்னு ஆட்டிக்கோ
    இது இந்த வகைல சேந்துக்குமானு தெரியல்ல! எப்பவோ சின்ன வயசுல பாடறது:)நினச்சு பாக்க்கும் போது எல்லாரோட சிரிப்பு சத்தம் காதுல இன்னிக்கும் கேக்கற மாதிரி இருக்கு.திரும்பி பெற முடியாத நாட்கள்:((

    ReplyDelete
  6. எல்லாப் பாட்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வரது.
    சங்கிலி புங்கிலி கதவைத்திற.
    நான் மாட்டேன் வேங்கப்புலின்னு ஒரு பாட்டு வருமே
    பல்லாங்குழிக்கும் ஒரு பாட்டு உண்டு.

    ReplyDelete
  7. ஆணை ஆணை மட்டும் தெரிகிறது! மிச்சமெல்லாம் புதுசு. டூ டூ துப்பாக்கி வேற மாதிரிச் சொல்வோம்! ஓடற கிழ நரி முதுகுல ஒருபிடி நரைமுடி யை மறுபடி மறுபடி வேகமாத் தொடர்ந்து சொல்ல முடியாது! தடுமாறும்.

    ReplyDelete
  8. குத்தடி குத்தடி ஜைலக்கா
    குனிஞ்சு குத்தடி ஜைலக்கா...//

    இதுவும் கேட்டிருக்கேன்!!!

    ReplyDelete
  9. வாங்க ஜெயஸ்ரீ, உங்க பாடலை மரபு விக்கியில் சேர்த்துட்டேன். சுட்டியைத் தரேன்.

    ReplyDelete
  10. வாங்க வல்லி, உங்க பங்குக்கு எடுத்துவிடுங்க நிறையவே.

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், உங்க கிட்டே இருந்தும், கெளதமன் சார் கிட்டே இருந்தும் நிறைய எதிர்பார்த்தேன். யோசிங்க. நன்றி.

    ReplyDelete
  12. யார் தச்ச சட்டை... எங்க தாத்தா தச்ச சட்டை...! - இது ஓடற நரிக்கு ஈக்குவல்!

    கோபாலா ஏன் சார்....
    எங்க போறே
    கடைக்குப் போறேன்
    என்ன வாங்க
    விறகு வாங்க
    ஓடிப் போனா
    ஒளிஞ்சிப் போவேன்..
    யாரைப் போலே
    இந்த பொண்ணை போலே ....

    ReplyDelete
  13. வரகரைக்கறதும்
    வந்து நிக்கறதும்
    வா வா என்கிறதும்
    வரமாட்டேன் போ என்கிறதும்
    சுக்காங்குத்தறதும்
    சோறு கொதிக்கிறதும்..
    .........
    ........

    ReplyDelete
  14. வரகரைக்கறதும்
    வந்து நிக்கறதும்
    வா வா என்கிறதும்
    வரமாட்டேன் போ என்கிறதும்
    சுக்காங்குத்தறதும்
    சோறு கொதிக்கிறதும்..
    .........
    ........

    ReplyDelete
  15. ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது
    ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது
    மூணு குடம் தண்ணி ஊத்தி....
    ..................................
    .......................................!

    ReplyDelete
  16. ஜிங்கிலிபுங்கா...ஜிங்கிலிபுங்கா...ஜிங்கிலிபுங்கா ஓ.....
    ஜிங்கிலிபுங்கா...ஜிங்கிலிபுங்கா...ஜிங்கிலிபுங்கா ஓ.....

    மரத்தில் இருக்கும் கனியைக் கொஞ்சம் பறித்துத் தாங்களேன்...

    மரத்தில் இருக்கும் கனிய நானும் பறிக்க மாட்டேனே... (இந்த இரண்டாவது பதில் வரிகள் மாட்டேன் என்ற பொருளில் வரும்... சரியாக நினைவில்லை. பாட்டு இப்படியே தொடர்ந்து போகும்)

    ReplyDelete
  17. குட்டிக் குட்டிப் பேனே
    குட்டார பேனே
    கோந்தை தலைல ஏன் வந்தே...

    பசிச்சுது வந்தேன்...(இது பேனின் பதிலாம்!)

    ReplyDelete
  18. ஒஸ்தா ஒஸ்தா ஊச்
    ஜாம் பண்டு
    கோசுனு ஒஸ்தாவா
    வேவி இஸ்தாவா....

    இது தெலுங்குப் பாடல்...!!

    ReplyDelete
  19. ஒஸ்தா ஒஸ்தா ஊச்
    ஜாம் பண்டு
    கோசுனு ஒஸ்தாவா
    வேவி இஸ்தாவா....

    இது தெலுங்குப் பாடல்...!!

    ReplyDelete
  20. நானும் அதைத்தான் நெனச்சேன்.. டாம்மு டும்மு தசம்னதும் ஏதாவது அர்த்தம் இருக்குமோனு.. :) just a silly song போல.
    actually, ஆனை ஆனை அழகர் ஆனை நிறையக் கேட்டிருக்கிறேன் - எதுக்குப் பாடுவாங்க நினைவில்லை.. தூளி ஆட்டறப்பவா?

    ReplyDelete
  21. பச்சை கிளியே வா வா வா
    பாலும் சோறும் உண்ண வா
    பச்சை மஞ்சள் பூசவா
    கொஞ்சி விளையாட வா
    பையப் பைய பறந்து வா
    ஆடி பாடி களித்து வா
    கையில் வந்து இருக்க வா
    கனி அருந்த ஓடி வா
    கவலையெல்லாம் நீங்கவே
    களிப்பு வந்து பொங்கவே
    பவள வாய் நீ திறந்து
    பாடுவாயே என் தத்தயே!

    இது ? ஆனை ஆனை இருக்கு ஏற்கனவே:)

    ReplyDelete
  22. வாங்க ஸ்ரீராம், மறு வரவுக்கும் பாடல்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  23. அப்பாதுரை, குழந்தையை முகம் பார்க்க ஆரம்பிச்சதும், தலை நிற்க ஆரம்பிச்சதும் இரண்டு கால்களின் மேலே உட்கார்த்தி வைத்துக்கொண்டு இந்தப் பாட்டைப் பாடித் தான் ஆட்டுவாங்க. சில குழந்தைங்க காலை பூமியில் ஒரு உந்து உந்திக்கொண்டு எம்பிக் குதிக்கும் பாருங்க! அழகோ அழகு! :)))))

    ReplyDelete
  24. ஜெயஸ்ரீ, இந்தப் பாடல் இதிலே வருமா தெரியலை. இன்னொண்ணும் இருக்கு, சாய்ஞ்சாடம்மா சாய்ஞ்சாடு, சந்தனக்கிளியே சாய்ஞ்சாடு, கோல விளக்கே சாய்ஞ்சாடு னு வரும் முழுப்பாட்டும் நினைப்பில் இல்லை.

    ReplyDelete
  25. http://tinyurl.com/6mjtwax

    Jeyasri,
    Sriram,

    this link for your perusal. Thank You.

    ReplyDelete