எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 29, 2012

என்றென்றும் ஆனந்தமே!


ஈகோவிற்கு இவர் அளிக்கும் விளக்கம் புதுமையானது.அதே சமயம் ஏற்கக் கூடியதாகவும் உள்ளது. ஈகோவிற்கு இந்த குருஜி மூலம் ஆசிரியர் சொல்லும் விளக்கம் Edging God Out.  இது இக்காலப் பகுத்தறிவாளர்களுக்கு ஒரு சாட்டையடி. ஆம், நம்மை வழிநடத்துகிற கடவுளை ஒதுக்கிவிட்டு எல்லாமே நம்மால்தான் என நாம் எண்ணுகிறோம் அல்லவா?அதைத் தான் இங்கே ஈகோ என்கிறார்.பாராட்டுக்களையே எதிர்பார்க்கிற மனத்தையும் மாற்றிக் கொள்ளச் சொல்கிறார். பாராட்டுக்களை மட்டுமே எதிர்பார்க்கிறவங்க இருக்காங்க தானே. அவங்களைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்.இது ஒருவகையான சார்புத் தன்மை என்று சொல்கிறார். நம்முள்ளே இருக்கும் சந்தோஷத்தை வெளிக்கொண்டு வரத் தான் முயலவேண்டுமே தவிர அடுத்தவர்களின் பாராட்டுக்களின் மூலம் அவங்க அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் இருக்கப் பழக வேண்டும். வன்முறையாளர்கள் ஆயுதத்தைக் கீழே போட்டால் ஒழிய அவங்களுக்கு அஹிம்சைன்னா என்னனு புரியாது இல்லையா? அது போல என்கிறார்.அதோடு மட்டுமின்றி நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தைப் புரிஞ்சுக்காமல் நம்முடைய கஷ்டங்களை, பிரச்னைகளைத் தீர்க்க வழி காணாமல் அழுது கொண்டிருக்கும் பெண்கள், தங்கள் குடும்பத்திற்காகத் தியாகம் செய்வதாய்ச் சொல்லும் பெண்கள் ஆகியோர் பரிதாபத்தையும், தங்கள் சார்புத் தன்மையையும் மீண்டும் மீண்டும் பாதுகாப்பா இருக்கணும்னு தான் எதிர்பார்க்கிறாங்களே தவிர, அதிலிருந்து வெளியே வந்து சிந்திக்க மறுக்கின்றனர்.

பெருவாரியான சீரியலில் நடிக்கும் பெண்களும், அதைப் பார்க்கும் பெண்களும் இப்படிச் சார்பு நிலையிலேயே இருப்பதைப் பாதுகாப்பாக உணர்கின்றனர்.மனிதர்களிடையே பழகுவது கூட நமக்கு நம்பிக்கை கொடுப்பவர்களா என்பதைத் தெரிந்து கொண்டு பேசுவதை ஆதரிக்கிறார்.  யாரையுமே நம்பக் கூடாது சொல்வது எப்படி எதிர்மறையான எண்ண வெளிப்பாடோ, அவ்வாறே அனைவரையும் நம்பு எனச் சொல்வதும் ஒருவகையில் எதிர்மறையான எண்ண வெளிப்பாடே ஆகும்.இதற்கு உதாரணமாகச் சொல்வது சீதையின் அக்னிப் ப்ரவேசத்தைத் தான். ராமர் சீதையை அக்னிப் ப்ரவேசம் செய்யச் சொன்னதை ராமர் சீதையின் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றே நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  ஶ்ரீராமரும் அதுக்காக வாங்கிக்காத திட்டு இல்லை. ஆனால் இங்கே கதாசிரியர் குரு மூலமாக அதுக்குக் கொடுக்கும் புதிய விளக்கம், “சீதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்” என்பதை நிரூபிக்க என்கிறார். அப்பாடா, கடைசியில் இந்த விஷயத்தில் என் கருத்துக்கு ஒரு ஆதரவு கிடைச்சிருக்கு டோய்!!! J)

எந்த விஷயத்தையும் தர்க்க ரீதியாகச் சிந்தித்து முடிவெடுக்கணும்.  ஆனால் நம்மை விமரிசிக்கையில் இப்படி தர்க்கரீதியாக நிதானமாய்ச் சிந்திப்போமா?  நிச்சயமா மாட்டோம். சமீபத்திலேயே எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டன. பாராட்டுக்களையே சந்திக்கும் ஒருவரை விமரிசிக்கப் போய்க் கடைசியில் அவங்க தன்னோட குறையைப் புரிஞ்சுக்கலை; இங்கே தனிப்பட்ட குணத்தை/ தவறுகளைப் பொதுவில் விமரிசிக்கிறதைத் தவிர்க்க வேண்டும்.  அதே சமயம் நெருக்கமானவங்களிடம் தனியாக அவர்கள் செய்வது எவ்வகையில் தவறுனு சுட்டிக் காட்டலாம்.  ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.என்னோட மனஸ்தாபம் ஏற்பட்டது தான் மிச்சம். என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சுக்கறதில் தப்பில்லையே! நமக்கு நெருக்கமானவங்களா இருந்தாலும், அவங்க குறை,நிறைகளை விமரிசிக்கணும். ஆனால் அப்படிச் செய்தால் குறிப்பிட்ட நபரை நமக்குப் பிடிக்கலைனே புரிஞ்சு கொள்ளப் படுகிறோம். இதை என் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். சம்பந்தப்பட்டவங்க கொஞ்சமானும் மாத்திக்கணும்னு தான் சொல்றதே. அந்தப் புரிதல் இருக்காது. அதுக்குத் தான் விழிப்புணர்வு இருக்கணும். கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் விழிப்புணர்ச்சி இருந்தால் வாழ்க்கையின் ஓட்டத்தை ஒரு மாதிரியாப் புரிஞ்சு வைச்சுட்டு, நாம் போகவேண்டிய பாதை எதுனு தெரிஞ்சு வைச்சுட்டுச் சரியான பாதையில் சரியான முறையில் கட்டுப்பாடான வழியில் செல்கிறோமானு தெரிஞ்சுக்கலாம். இந்த விழிப்புணர்வை அது இல்லாமல் இருப்பதை மரணத்தோடு ஒப்பிடுகிறார்.

இங்கே மீண்டும் ராமாயணம் வேறே கோணத்தில் பார்க்கப் படுகிறது.  பொன்மானைப் பார்த்து ஆசைப்பட்ட சீதையும், கால் பட்டதும் கல்லும் பெண்ணாக மாறும் அளவுக்கு தெய்வீகமான ராமனும், ராமனின் பலம் தெரிஞ்சும் அவன் தன்னை உதவிக்குக் கூப்பிடுவானா என ராமனின் குரல் கேட்டு ஏமாந்த லக்ஷ்மணனும், அவங்க யாருமே இல்லைனதும், ஏமாற்றிச் சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனும் என இவர்கள் அனைவரையும் ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறார். என்றாலும் இங்கே நம்பி ஏமாந்தது சீதை என்பதை மாற்றமுடியவில்லை.முதலில் பொன்மானைப் பார்த்து ஆசைப்பட்ட சீதை அந்த ஆசையினாலேயே கணவனையும், மைத்துனனையும் அனுப்பிவிட்டுத் தனித்து இருந்து ராவணனால் கவர்ந்து செல்லப் படுகிறாள். இங்கே சீதைக்கு இல்லாத விழிப்புணர்ச்சி சுட்டிக் காட்டப் படுகிறது.




ஹிஹி ஒரு சின்ன டிஸ்கி போட்டுக்கலாம்னு: போக்குவரத்து நிலைமையைப் பார்த்தால் தினசரி 300க்கும் மேலே போகுதே? ஆனால் 3 பின்னூட்டம் முக்கி முக்கி வந்தால் பெரிசு! போக்குவரத்தைப் பத்தி கூகிள் நிஜத்தைச் சொல்லுதா? பொய் சொல்லுதா? :P  தினம் இத்தனை பேர் நம்ம பதிவைப் பார்க்கிறாங்க/படிக்கிறாங்கனு இன்னும் பூரிச்சுப் போக ஆரம்பிக்கலை. :))))))

11 comments:

  1. //அடுத்தவர்களின் பாராட்டுகள் மூலம் அவங்க அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல்..//
    கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே...! :))

    படிக்கிறவர்கள் நிறைய பேர் பின்னூட்டம் போடுவதில்லை. படித்து விட்டு மௌனமாகச் சென்று விடுகின்றனர்! புத்தக மதிப்புரை இன்னும் தொடருமா?

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், பின்னூட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் இத்தனை பதிவுகள் எழுத முடியாது. என்னோட சந்தேகம் கூகிள் ட்ராஃபிக் லைன் காட்டும் கணக்குச் சரியா இருக்குமானு தான். :)))))))

    புத்தக மதிப்புரை போரடிக்க ஆரம்பிச்சுடுமோனு பயந்து தான் எழுதினேன். அநேகமா அடுத்ததிலே முடிச்சுடுவேன். ஒரு குழுமத்திலே இன்னொருத்தர் முடிக்காதீங்கனு சொல்லி இருக்கார். ஹிஹி, மனிதர்கள் பலவிதம். :))))

    ReplyDelete
  3. // எந்த விஷயத்தையும் தர்க்க ரீதியாகச் சிந்தித்து முடிவெடுக்கணும். ஆனால் நம்மை விமரிசிக்கையில் இப்படி தர்க்கரீதியாக நிதானமாய்ச் சிந்திப்போமா? நிச்சயமா மாட்டோம். சமீபத்திலேயே எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டன. பாராட்டுக்களையே சந்திக்கும் ஒருவரை விமரிசிக்கப் போய்க் கடைசியில் அவங்க தன்னோட குறையைப் புரிஞ்சுக்கலை; என்னோட மனஸ்தாபம் ஏற்பட்டது தான் மிச்சம். என்ன சொல்ல வராங்கனு புரிஞ்சுக்கறதில் தப்பில்லையே! நமக்கு நெருக்கமானவங்களா இருந்தாலும், அவங்க குறை,நிறைகளை விமரிசிக்கணும். ஆனால் அப்படிச் செய்தால் குறிப்பிட்ட நபரை நமக்குப் பிடிக்கலைனே புரிஞ்சு கொள்ளப் படுகிறோம். இதை என் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். சம்பந்தப்பட்டவங்க கொஞ்சமானும் மாத்திக்கணும்னு தான் சொல்றதே. அந்தப் புரிதல் இருக்காது. அதுக்குத் தான் விழிப்புணர்வு இருக்கணும். கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் விழிப்புணர்ச்சி இருந்தால் வாழ்க்கையின் ஓட்டத்தை ஒரு மாதிரியாப் புரிஞ்சு வைச்சுட்டு, நாம் போகவேண்டிய பாதை எதுனு தெரிஞ்சு வைச்சுட்டுச் சரியான பாதையில் சரியான முறையில் கட்டுப்பாடான வழியில் செல்கிறோமானு தெரிஞ்சுக்கலாம். இந்த விழிப்புணர்வை அது இல்லாமல் இருப்பதை மரணத்தோடு ஒப்பிடுகிறார். //

    நல்லவற்றை நாலு பேர் மத்தியில பாராட்டநும்
    தவறுகளை பொதுவில சொல்லக் கூடாது. அப்பத்தான் அது சரி. இல்லாட்ட தப்பு

    ReplyDelete
  4. புத்தகத்தை மிகவும் ஆழமாகப் படித்திருக்கிறீர்கள் என்பது தெரிகின்றது. புத்தகக் கருத்துகளுடன், உங்கள் 'எண்ணங்களை'யும் சேர்த்து எழுதியிருக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கின்றது. நன்றி.

    ReplyDelete
  5. வாங்க சுந்தரி ராமகிருஷ்ணன், முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களோட கருத்துச் சரியே. குணத்தை/தவறுகளைப் பொதுவில் விமரிசிப்பது கூடாதுதான். ஆனால் நான் விமரிசித்தது, எழுத்தை. அரைத்த மாவே அரைக்க வேண்டாமேனு சொன்னேன். அவ்வளவு தான் விஷயம். இந்தப் பதிவில் அதைச் சரியாகச் சொல்லி இருக்கணும். எனக்குச் சொல்லத் தெரியவில்லை. புரிதலுக்கு நன்றி. :))))))))

    ReplyDelete
  6. வாங்க கெளதம் சார், அதிகமாய்ப் புத்தகமே படிக்காத என் கணவர் கூட அதன் முன்னுரையைப் படித்துவிட்டுப் புத்தகத்தின் சிறப்பைப் புரிந்து கொண்டு விட்டார். ஆழமாய்ப் படிக்கிறேனோ இல்லையோ, அடிக்கடி படிக்கிறேன். :)))))

    ReplyDelete
  7. //போக்குவரத்தைப் பத்தி கூகிள் நிஜத்தைச் சொல்லுதா? பொய் சொல்லுதா? :P //

    நிஜத்தைத் தான் சொல்றதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, நானே இதுவரை பதினைஞ்சு இருபது தடவைகளுக்கு மேல் வந்து படித்துப் போய் விட்டேன். பொதுவாக மனத்தில் தோன்றியதைப் பின்னூட்டம் போடாமல் போக மாட்டேன். அதுவும், உங்கள் பதிவுக்குன்னா.. போடாமலா இருப்பேன்?.. :)))

    ஏன் எதுவும் எழுத முடியவில்லை? தெரியலை. இவ்வளவுக்கும் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாகத் தெரிகிறது.
    இருந்தும், ஏன் முடியலே! தெரியலை.
    ஆனால், எழுத வேண்டும் என்கிற என்ணம் மட்டும் மனசில் இருக்கிறது.
    பார்க்கலாம்.

    ReplyDelete
  8. அந்த 300 ல நாங்களும் உண்டு; :)

    ரீடர்ல வாசிக்கிறவங்க வேற இருக்கோம். அது ட்ராஃபிக் கணக்குல வராதுனு நினைக்கிறேன்

    ReplyDelete
  9. வாங்க ஜீவி சார், அப்படிப் பார்த்தா நானும் என்னோட பதிவுக்குக் குறைஞ்சது நாலு முறை வரேன். அதையும் சேர்த்துக்கணும் இல்லையா? :))))

    சொல்லுங்க விவாதிக்க வேண்டிய விஷயங்களை மனசில் வைச்சுக்க வேண்டாம். அல்லது ஒரு விமரிசனமா எழுதிடுங்க. வெளுத்துக் கட்டுங்க. :)))) காத்திருக்கேன்.

    ReplyDelete
  10. அட, திருமால்?? என்ன வழி தவறிடுச்சா? 300லே நீங்களுமா? சந்தோஷமே சந்தோஷம். ரீடர்லே வேறே வாசிக்கிறீங்களா? சரி, அப்போ ரசிகர் பெருமக்கள் கைவிடலைனு சொல்லுங்க. ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  11. எண்ணங்களை அசை போட ஆனந்தம் அடிப்படையானதுதான் அழகு.
    விவாதம் இல்லாமல் உறுதியான முடிவு கிடைக்காது.
    நான் படிக்கும்போது கூட இத்தனை யோசிக்கவில்லை. இப்போது
    அந்தப் புத்தகத்தின் அருமை அதிகரிக்கிறது.அருமை கீதா.

    ReplyDelete