எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 23, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் தொடரும், பொறுங்க!

ஏற்கெனவே துர்க்குணி; இப்போ கர்ப்பிணி; கேட்கணுமானு சொல்வாங்க.  அது போல சும்மாவே உடம்பு சரியாயில்லைனு எழுத முடியலை;  அது முடிஞ்சு இப்போக் கடுமையான மின் வெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.  சும்மாச் சொல்லக் கூடாது.  காலம்பர நாலு மணிக்குச் சரியா எழுப்பிடுவாங்க.  அப்புறமா அப்போ ஏதேனும் மிக்சி போட்டுடப் போறோமேனு ஜாக்கிரதையா ஆறு மணி வரைக்கும் நோ மின்சாரம்.  அதுக்கப்புறமா மின்சாரம் வந்துட்டுத் திரும்பப் போறதுக்குள்ளே அரையல், கரையல், துவையல்னு எல்லாத்தையும் முடிச்சுக்கணும்.  ஒன்பது மணி வரை இருக்கும்னு பேரு;  ஆனா அவங்க இஷ்டம்!  எட்டரைக்கே கூட நிறுத்துவாங்க.  திரும்பப் பனிரண்டு மணிக்கு வரணும்னு பேர்.  சில நாட்கள் ஒரேயடியா மூணு மணிக்குக் கூட வரும்.  சில நாட்கள் பனிரண்டுக்கு வந்துட்டு உடனே போகாமல் ஒன்றரை மணிக்கும் போகும்.

நேத்திக்கு மத்தியானம் மூணு மணிக்குப் போன மின்சாரம் ஆறு மணிக்கு வந்துட்டுச் சரியா ஆறரைக்குப் போய் எட்டுக்கு வந்துட்டுத் திரும்ப ஒன்பதுக்குப் போய்ப் பதினொன்றுக்கு வந்துத் திரும்ப பனிரண்டுக்குப் போய் அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, கை வலிக்குது.

மொத்தமாய் ஆறு மணி நேரம் கொடுக்கிறாங்க.  கிடைக்கும் மின்சாரத்தில் லாப்டாப் சார்ஜிங், யுபிஎஸ் சார்ஜிங், இன்வெர்டர் சார்ஜிங் எல்லாமுமே கஷ்டமா இருக்கு! :((((((((((

எப்போ சரியாகும்!  இங்கே இப்படினா சென்னையிலே மின்சாரம் இருக்குனு பேரே தவிர குறைந்த அழுத்தம்னு சொல்றாங்க அங்கிருந்து வந்த மக்கள்.  எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் நிறையப் பேருக்கு வீணாய்ப் போயிட்டு இருக்காம். என்னவோ போங்க!

புலம்பிட்டேன். மாரியம்மன் தான் காப்பாத்தணும்.:)))))))

13 comments:

 1. உங்க எம்எல்ஏ வுக்கு கம்ப்லெய்ண்ட் கொடுங்க!

  ReplyDelete
 2. காற்று வீசாத காரணத்தினால் காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை!
  மழை இல்லாததால்........
  ஆக மின்சாரம் இல்லை இல்லை இல்லை... எங்களுக்குப் பரவாயில்லை.கொஞ்சம் தேவலாம்!

  ReplyDelete
 3. வாங்க வா.தி. உங்க தலைமேலே ஒரு போராட்டம் நடத்தலாம்னு எண்ணம். எப்பூடி வசதி? :)))

  ReplyDelete
 4. வாங்க ஸ்ரீராம், கொடுத்து வைச்சிருக்கீங்க/ :)))))

  ReplyDelete
 5. நம் சொந்த flat -ல் நாலைந்து நாட்கள் " நிம்மதியாக " இருந்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் , பல்லவனில்
  போக வர டிக்கெட்டும் வாங்கிவிட்டேன் ! நீங்கள் எழுதியிருப்பதைப்பார்த்தால் இந்த ' ஆசை நிவ்ருத்தி ' தேவை
  தானா என்ற பயம் தொற்றிக்கொண்டு விட்டது !ஏற்கெனவே மாதங்கிக்கு வேறு நான் ஊருக்கு போவதில் இஷ்டமில்லை ( ? )
  மாலி .

  ReplyDelete
 6. வாங்க மாலி, முதல் வருகைக்கு நன்றி. மாதங்கியும் வராங்களா? வந்தால் கட்டாயமா எங்க குடியிருப்புக்கும் வருகை தாருங்கள். :)))) உங்க அதிர்ஷ்டத்தினால் எங்களுக்கும் மின் வெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுக் குறையலாமே!

  ReplyDelete
 7. சமீபத்தில் நானும் அனுபவித்ததால் கஷ்டம் உணர முடிந்தது. சீக்கிரமே சரியாகும் என நம்புவோம்! வேறென்ன செய்ய... :(

  ReplyDelete
 8. அட‌ப் பாவ‌மே...!

  ReplyDelete
 9. எங்கவீட்டுக்கு நிவாரணம் வந்துகொண்டு இருக்கு. எரிந்து போன பில்லர் ஜங்ஷன் பொட்டியைச் சேர் செய்து புதுசா சிமெண்டுல செய்துகொண்டிருக்கிறர்கள்.அப்படியும் எப்ப மின்சரம் போகும்னு சொல்லாத மாதிரி பயந்து பயந்து ஜீவிக்கிறோம்.வெளியே காத்து பிச்சிண்டு போனாலும் உட்கார முடியவில்லை.பந்தல் போட அனுமதி இல்லை.உங்கள் பிரச்சினையை மாரிஅம்மனே மாரி பொழிந்து நீக்கட்டும்.

  ReplyDelete
 10. நேற்று என் அக்கா பேஸ் புக் ல ஷேர் பண்ணி இருந்தா செல்வா வின் வலை உலா என்கிற பேஜ் லேந்து. வேடிக்கையா இருந்தது.
  விக்கிபீடியா - "எனக்கு தான் எல்லாம் தெரியுமே "
  பேஸ் புக் - "எனக்கு தான் எல்லாரையும் தெரியமே "
  கூகிள் - " என்கிட்டதான் எல்லாமே இருக்கு "
  இன்டர்நெட் :- நான் இல்லைன்னா நீங்க எல்லாம் அம்பேல் தெரியுமா? "
  எலெக்ட்ரிசிட்டி :- "" எங்கடா ...ங்.. அங்க சத்தம்>>>? அடி போட்டேன்னாவா......

  நம்ப பங்குக்கு இதையும் சேத்துப்போம் -
  கோல் இந்தியா - " நானாவது செய்யறதாவது " !!
  அரசியல்வாதி - விட்டுருவோமில்ல... கறந்துறமாட்டோம்??
  மின்சார திருட்டு கும்பல் " கோவிந்தோ கோவிந்து !!
  ஆக மொத்தம் பாவப்பட்ட மக்களுக்கு " அழுகலும் புழுங்கலும் ஆண்டாளுக்கு !!! :((((((((((((((((

  ReplyDelete
 11. What would you call a power failure?
  (Answer) A current event.!!!!

  Thanks to George'S Energy jokes .

  ReplyDelete
 12. இங்கேயும் தினமும் 3 மணிநேரம் பவர்கட். காலைல் 6 மணிக்கு கரண்ட் போயிடும். அதுக்குள்ள நீங்க சொன்ன அதே அரைத்தல் கரைத்தல் முடிச்சாதான் பசங்களுக்கு டப்பா கட்ட முடியும். :(

  கரண்ட் கட் நேரம் பத்தி நாழிதழில் கொடுத்திருந்த தலைப்பு.

  "NO POWER" TIMINGS. :))

  ReplyDelete