இன்னிக்கு ஆடிப் பெருக்கு. காவிரியில் தண்ணீரே இல்லை. தற்காலத்து மனித மனங்களைப் போலவே காவிரியும் வறண்டு கிடக்கிறாள். காவிரி வறண்டு இருப்பதும் மனிதர்களாலே தான். இன்று நம்பெருமாள் இங்கே காவிரிக்கு வந்து தன் தங்கையான காவிரிக்குச் சீர் அளிக்கப் போகிறார். பெருமாள் வரும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேற்றில் இருந்து எல்லா வீடுகளிலும் வாழைமரங்கள் கட்டித், தோரணங்கள் தொங்க விட்டு அவரவர் வீட்டுக் கல்யாணம் போலப் பெருமாளை வரவேற்கக் காத்திருப்பது அந்த நாட்களில் (ஹிஹி, ரொம்பல்லாம் அந்தக் காலம் இல்லை) மீனாக்ஷி கல்யாணத்திற்கு சீர் வரிசை ஊர்வலம் வரச்சே வீடுகளில் இப்படி வரவேற்ற நினைவு வருது.
இப்படிக் கொஞ்சமானும் பழமை மாறாமல் கடைப்பிடிக்கப் படுவது கொஞ்சமானும் ஆறுதலைத் தருகிறது. ராத்திரியெல்லாம் ஊரே தூங்கவில்லை. ஒரே வேட்டுச் சத்தமும், பாட்டுச் சத்தமும் தான். ரங்கநாதர் காவிரிக்கு வந்து யானை மேலிருந்து காவிரிக்குச் சீர் கொடுக்கப் போறதைப் பார்க்கக் கூட்டமும் அதிகமாய் வந்திருக்கிறது. எவ்வளவு தூரம் போகமுடியும்னு தெரியலை. இயன்றால் படங்கள் கிடைக்கும்; கூட்டம் அதிகம் இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். பின்னர் திரும்பிக் கோயிலுக்குள் செல்லும் முன்னர் வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு பின்னர் செல்வாராம். அது என்ன ஐதீகம் எனத் தெரியவில்லை. கேட்டுட்டுச் சொல்றேன். இப்போதைக்கு வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?
ஒரு முறை பார்த்திருக்கிறேன்.. இனிய நினைவுகள்...
ReplyDeleteஇந்த விஷயங்கள் எல்லாம் உங்க பதிவின் மூலமாகத்தான் தெரிஞ்சுக்க முடியுது
ReplyDeleteவாங்க வெங்கட், வரவுக்கும் நினைவுக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, இப்போத் தான் ஸ்வாமியைப் பார்க்கப் போனேன். திரை போட்டு விட்டார்கள். இனி மதியம் மூன்று மணிக்கு மேல் தான். கூட்டத்தை மட்டும் படம் எடுத்து வந்தேன்.
ReplyDeleteநதிகள் இருகரை தொட்டு சுழித்து ஓடினால்தான் அழகு. அகண்ட காவேரி வறண்ட காவேரியாய் இருப்பது பாலைவனத்தைப் பார்க்கும் வெறுமை. ஓஹோ என்று வாழ்ந்த மனுஷி ஓய்ந்துபோய் ஓரமாக உர்கார்ந்திருப்பதைப் பார்ப்பது வேதனை,
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், நேத்திக்கு ஸ்வாமி அம்மா மண்டபம் வந்து சேர ஒரு மணி ஆயிடுச்சு. எதிர்பாராத தடங்கல். கூட்டம் வேறே. ஒரு சில படங்கள் எடுத்திருக்கேன். அதைப் பகிர்ந்து கொள்கிறேன். காவிரியைப் பார்த்தாலே கண்ணீர் தான் வருது! :(((
ReplyDelete