எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 26, 2012

அப்பாதுரைக்காக இலுப்பச்சட்டி தோசை! :))))

அப்பாதுரைக்காக இலுப்பச் சட்டி தோசை.  இது இட்லி மாவிலே நல்லா இருக்கும்.  ஆனால் நான் இட்லிக்கு, தோசைக்குனு எல்லாம் தனியா அரைப்பதில்லை.  சின்ன மொட்டைச் சட்டி.  எங்க குடும்பத்திலே பரம்பரையா எல்லாருக்கும் சீர் வரிசையிலே இந்தச் சட்டி கட்டாயம் கொடுப்பாங்க.  எல்லாருக்கும் இந்த தோசை ரொம்பப் பிடிக்கும்.  தொட்டுக்க மிளகாய்ப்பொடிதான் இதுக்கு நல்லா இருக்கும்.  அப்பாதுரை வாங்க,  இந்தியா வந்தப்போ இங்கே வந்திருந்தா கிடைச்சிருக்கும்.  வராம ஏமாத்திட்டீங்க!  கீழே வார்த்து எடுத்த தோசைகள்.  மேலே பொன் முறுகலா உள்ளே ஸ்பாஞ்ச் மாதிரி ஓட்டை ஓட்டையா நல்லா வரும் இது.

யாருக்கெல்லாம் வேணுமோ சாப்பிடுங்க.

37 comments:

 1. ரொம்ப நாளாச்சு இந்த பேரை கேட்டே.. எங்கம்மா செய்வாங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். நினைவூட்டியதுக்கு நன்னி. :))

  ReplyDelete
 2. ஆப்ப தோசை...? மிளகாய்ப் பொடியா? ஏன், காரமா வெங்காய சட்னி கூட நல்லா இருக்கும்... அது சரி, நான் ஏன் பறக்கறேன்.. இது அப்பாதுரைக்கு இல்லை? வாங்க அப்பாஜி.. வந்து எடுத்துக்குங்க!

  ReplyDelete
 3. இட்லிக்கு தோசைக்கு தனியா அரைக்காம? தோசை மாவிலே இட்லி, and vice versa, சரியா வருமோ? வரும்னா இது சுளுவா இருக்கும் போலிருக்கே? find of the century?

  ReplyDelete
 4. லஷ்மி அவர்களோட ப்லாக்ல இதுக்கு ஒரு ரெசிபி பார்த்துப் பண்ணினேன்.
  இலுப்பசட்டிக்கு பதிலா நான்ஸ்டிக் குழிச்சட்டிலே சின்ன சின்னதா இட்லி சைசுலே தோசை வார்த்து பசங்க கிட்டே ஹிட்டாச்சு.
  தோசையா கொடுத்தா இந்டியன் புட் அப்டி இப்டினு டூ மச் புலம்பிங், சின்னதா இட்லி மாதிரி கொடுத்தா நோ கேள்வி கேக்கிங்... தோசை சட்னி மூக் சுளிப், இட்லி சட்னினா நைஸ் டிப் டேடி. என்னத்தைச் சொல்ல..:)

  ReplyDelete
 5. அடுத்த ட்ரிப்ல ஒரு கை பாத்துடுவோம். ரொம்ப தேங்க்ஸ்.

  ReplyDelete
 6. தலைப்புப் பார்த்தவுடம் அவருக்கு மட்டும்தானான்னு கேட்க நினைத்தேன். கடைசி லைன் பார்த்ததால நீங்க தப்பிச்சீங்க! :)

  படம் எல்லாம் காமிச்சுட்டீங்க! அடுத்த தடவை வீட்டுக்கு வந்தா தாங்க!

  ReplyDelete
 7. இலுபச்சட்டி தோசை பிரமாதம். பாக்கும்போதே எடுத்து சாப்பிடனும் போல இருக்கே. பக்கத்துல அம்மா இல்லையே வாத்து குடுக்க. என்ன பண்றது! :)))

  சாப்பிடலாம் வாங்க பகுதி இருக்கும்போது இந்த எண்ணங்கள் பகுதியிலே இதை போட்டிருக்கீங்களே! இது என்ன அப்பாதுரைக்காக ஸ்பெஷல்ல்ல்ல்ல்ல்லா?

  ReplyDelete
 8. எல்லாமே எனக்குதான்!

  ReplyDelete
 9. ம... எள்ளு பொடியோட நல்லெண்ணெய் கலந்து மேலே தடவி புளிக்காத 1 ஸ்பூன் தயிரோட இந்தப்பக்கம் ஒன்னு அனுப்புங்கப்பா! இப்பத்தான் வேலையிலிருந்து வந்தேன்.வேலை மும்மூரத்தில் காலம்பரத்திலேந்து ஒன்னும் சாப்பிடலை. இப்ப பசிக்கறது பாத்தவுடன். ராத்திரி சமைச்சு சாப்பிட இன்னும் கொஞ்சநேரம் தானேன்னு இருந்தேன்.

  ReplyDelete
 10. வாங்க லக்ஷ்மி, எழுதும்போதும், சரி, பண்ணும் போதும் சரி உங்களைத் தான் நினைச்சேன். நேத்திப் பதிவர் மாநாட்டுக்கு வந்திருந்தீங்க போல! சென்னையிலே இருந்திருந்தா ஒரு வேளை சந்திச்சிருப்போம். :)))))

  ReplyDelete
 11. வாங்க ஸ்ரீராம், ஆப்ப தோசை இன்னும் மெலிசு. அதோட சட்டி தனி. காது உண்டு அதுக்கு. அதுவும் இருக்கு. மாவைச் சட்டியிலே விட்டுட்டுத் துணியாலே ரெண்டு காதையும் பிடிச்சு ஒரு சுழற்றுச் சுழற்றணும். இப்போல்லாம் சட்டியோட வெயிட் தூக்க முடியறதில்லை. :))))) அதனால் அந்தச் சட்டியில் காய்கள் வதக்கல், பொரித்தல் போன்றவை மட்டுமே.

  ReplyDelete
 12. வெங்காயச் சட்னி நல்லாத் தான் இருக்கும். எனக்குப் பிடிச்ச காம்பினேஷனும் அதுவே. ஆனால் மிளகாய்ப் பொடி அதுவும் ஜெயஸ்ரீ சொல்லி இருக்காப்போல் எள்ளுப் போட்ட மி.பொ. இன்னும் நல்லா இருக்கும். :)))))

  அப்பாதுரைக்கு மட்டும் இல்லை, கடைசி வரியைப் படிக்கலையா? நல்ல வேளையா வெங்கட் படிச்சிருக்கார். அவருக்கு வருத்தம் இல்லை. :)))) நீங்க நேரிலே வாங்க, ஆப்ப தோசையும் முயல்கிறேன். இது நிச்சயம். ஆப்ப தோசைக்கு ஒரே ஒரு தடங்கல் சட்டியோட கனம் தான்! தூக்க முடியறதில்லை. :))))

  ReplyDelete
 13. வெள்ளை வெளேர் ஆப்ப தோசையில் கிண்ணம் போலிருக்கும் பாகத்தில் நடுவில் சிவப்புக் கலர் தேங்காய்ச் சட்னியோடு சாப்பிடணும். :)))))

  ReplyDelete
 14. வாங்க அப்பாதுரை,

  என்னைப் பொறுத்தவரைக்கும் இட்லிக்குனோ, தோசைக்குன்னோ அரைக்கிறதில்லை. அரிசியை ரொம்பவே கொரகொரனும் அரைக்காமல், ரொம்ப நைசாவும் இல்லாமல் அரைச்சு ! இட்லினு நினைச்சா இட்லி; இல்லைனாதோசை. ரெண்டுமே நல்லாவே வரும்.:))))

  ReplyDelete
 15. நான் ஸ்டிக் குழிச்சட்டியிலே என்ன இருந்தாலும் இரும்பிலே பண்ணறாப்போல் இருக்காது. கொஞ்சமாவது டிரையாகத் தான் இருக்கும். அப்பக்காரையிலே செய்தால் குழி அப்பம். அவ்வளவு தான். அப்பக்காரையும் இரும்பிலே தான் வைச்சிருக்கேன். :))))) வாங்க அடுத்த ட்ரிப்பிலே; பார்க்கலாம். :P :P :P

  ReplyDelete
 16. வாங்க வெங்கட், நீங்களாவது கடைசி வரியைப் படிச்சீங்களே! ஸ்ரீராம் பாருங்க, வருத்தப் பட்டுட்டு இருக்கார். :))))))

  ReplyDelete
 17. find of the century?//

  @அப்பாதுரை, இப்போத் தான் இதைக் கவனிச்சேன். இல்லை; அநேகமாய்த் தென் மாவட்டங்கள் எல்லாத்திலேயும் இம்மாதிரி காம்பினேஷன் தான். ஆப்பத்துக்கு மட்டும் தனியா அரைப்பாங்க. :)))))

  ReplyDelete
 18. வாங்க மீனாக்ஷி, சாப்பிடறதுக்கு நீங்களும் வரது இன்னிக்குத் தான் தெரியும். :)))) நெரூரிலே சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனையிலே கண்ணுக்குத் தெரியாமக் கலந்துப்பாராம். அது போல நீங்களும் கண்ணுக்குத் தெரியாம வருவீங்க போல! :))))

  சாப்பிடலாம் வாங்கலே போடத் தான் நினைச்சேன். ஆனால் அங்கே கொஞ்சமாத் தானே போணி! இங்கே பெரிய அளவில் போணி ஆகுதே! அதான்! :)))))))

  ReplyDelete
 19. அப்பாதுரை, எல்லாமே எடுத்துண்டா, அப்புறம் மத்தவங்க வருத்தப் படுவாங்க. எல்லாருமே சமத்தாப் பிரிச்சுக்குங்க. :))))))

  ReplyDelete
 20. வாங்க ஜெயஸ்ரீ, மி.பொ. போட்டுண்டால் நானும் தயிர் நிறைய எடுத்துப்பேன். இல்லைனா ஒத்துக்கறதில்லை! :)))) எப்போவானும் தான் மி.பொ. ஆனால் கட்டாயமாய்த் தயிரோடு தான். நீங்களும் சாப்பிட்டிருப்பீங்கனு நினைக்கிறேன். :)))))

  ReplyDelete
 21. ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒரு கைப்பிடி து.பருப்பு, உ.பருப்பு, அரைக்கைப்பிடி வைந்தியம். களைந்து எடுத்து மோர்லே ஊற வைத்து, உப்பு, பெருங்காயம், சிகப்பு மிளகா, தேங்காய், இஞ்சி துண்டு போட்டு அரைத்து எடுத்து அதில் சீரகம் ஒரு ஸ்பூன் போட்டு கலக்கி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து இலுப்புச் சட்டியில் போட்டு வார்த்து எடுக்க வேண்டியது தான்.

  அந்த ஸ்பான்ஜ் மெது மெதுதான் இதான் ஸ்பெஷாலிட்டி.

  கீதாம்மா, ரெஸிபிலே ஏதாவது தப்பு இருந்தா, திருத்திடுங்க.

  ReplyDelete
 22. ஜீவி சார், பல நாட்கள் கழிச்சு வருகைக்கு முதலில் நன்றி. :)))

  நீங்க சொல்வது இன்ஸ்டன்ட் தோசை. அதிலே இயற்கையான புளிப்பு இருக்காதே! மோர் சேர்ப்பதால் ஏற்படும் புளிப்புத் தான். அதோடு இதுக்குத் தேங்காய், மிளகாய், இஞ்சி, சீரகம் வேண்டாம். இட்லி மாவோ, தோசை மாவோ மிஞ்சினால் இப்படி வார்த்துச் சாப்பிடறதுண்டு. அதிகம் மதுரை, திருநெல்வேலிக்காரங்க வீடுகளிலே தான் இந்தப் பழக்கம் இருக்கும். :)))))) தஞ்சாவூர்க்காரங்க இத்தனை சின்னச் சட்டியில் என்னமா வார்க்கிறதும்பாங்க! :)))) ஹிஹிஹி, எங்க வீட்டு விமரிசனம் இது தான். இப்போவும் சின்னச் சட்டியில் நான் தோசை வார்த்தால் அவங்களுக்கெல்லாம் சிரிப்பா வரும். :)))))

  ReplyDelete
 23. ஜீவி சாரோட ரெசிபியும் நல்லாயிருக்கு - ஆனா அரைக்கணுமே? பக்கத்துல அம்மா இருந்தா அரைச்சு வார்த்து... (என்னா கனவுப்பா சில பேருக்கு!).

  //இரும்பிலே பண்ணறாப்போல் இருக்காது.
  இலுப்பச்சட்டியில செஞ்சா சட்டியோட ஒட்டி எடுக்க முடியாம சுரண்டி சுரண்டி செம கடுப்பேத்துதுங்க சனியன்.. அதான் நான்ஸ்டிக்.

  ReplyDelete
 24. வாங்க அப்பாதுரை, இலுப்பச் சட்டி தோசை இழுக்குது போல! இரும்புச் சட்டியிலும் சரி தோசைக்கல்லிலும் சரி, தோசை வார்க்கும்முன்னர் கல்லை நன்கு காய விட வேண்டும். அப்புறமாக்கொஞ்சம் போல் நல்லெண்ணெய் விட்டு தோசைக்கல் முழுதும் நன்கு தடவிட்டு தோசை வார்க்க ஆரம்பித்தால் சீக்கிரமும் ஆகும். தோசையே நான் வெந்துட்டேன்னு நாலாபக்கமும் தூக்கிக் கொண்டு என்னை எடுத்துத் தட்டில் போடுனு சொல்லும். இரும்புச் சட்டியிலும் அப்படியே! :))))

  ReplyDelete
 25. ஊத்தப்பம் மாதிரி இருக்கே?

  இலுப்பச்சட்டியில் எடுக்க வரதுக்கு என் அம்மாகிட்ட இருந்து கத்துக்கிட்ட டிப்ஸ் -

  கீதாம்மா சொன்ன மாதிரி எண்ணெய் தடவின பிறகு, பெரிய வெங்காயத்தை அரைவட்டமா நறுக்கி கல்லில் தடவிட்டு தோசை வார்க்கலாம். வெங்காயம் வேண்டான்னா, இலேசா எண்ணெய் விட்டு சூடான பிறகு, கொஞ்சம் உளுந்து போட்டு சிவக்க வறுத்துட்டு தோசை வார்த்தா சுலபமா எடுக்க வரும் :)

  ReplyDelete
 26. மன்னிக்கணும்! உங்க 'சாப்பிடலாம் வாங்க' பகுதியிலிருந்து நிறைய சமைச்சு பாக்கணும்னு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். இப்பதான் சமீபமா கத்தரிக்காய் கொத்ஸு பண்ணினேன். நல்லா வந்துது. ஆனா கத்தரிகாயை சுடும்போது விரலையும் சுட்டுண்டேன். :(
  உங்களோட ரெசிபி எல்லாம் முக்கால்வாசி அப்படியே எங்க அம்மா பண்றா மாதிரியே இருக்கு. ஆனா எங்க அம்மாவுக்கு எதுக்குமே சரியா அளவு சொல்ல தெரியாது. எதை கேட்டாலும் கண் திட்டமா போடுவேம்மா, எனக்கு சரியா சொல்ல தெரியலையே. இருந்தாலும் எனக்காக சிலதெல்லாம் பண்ணும்போது எழுதி வெச்சு சொல்லுவா. அதனால்தான் உங்களோடத அப்படியே follow பண்ணி பண்ணனும்னு இருக்கேன்.

  எனக்காக 'அடை' ரெசிபி ப்ளீஸ். இது ஏற்கெனெவே எழுதி இருந்தா நான் தேடி எடுத்துக்கறேன். ஏன்னா 'சாப்பிடலாம் வாங்க' முதலேந்து இன்னும் நான் படிக்கல.

  நன்றி!

  ReplyDelete
 27. வாங்க கவிநயா, ஊத்தப்பம் வேறே; இது வேறே. அநேகமாச் சாப்பிட்டுப் பார்த்தால் தான் புரியும்னு நினைக்கிறேன். மற்றபடி இரும்புச் சட்டியோ, இரும்பு தோசைக்கல்லோ நன்கு காய்ந்ததும் எண்ணெய் தடவிட்டு தோசை வார்க்க ஆரம்பிச்சால், அப்புறமா அடுப்பைத் தணித்துக் கொண்டாலும் சீக்கிரமே ஆகிவிடும் என்பது என் அனுபவமும் தான். :)))) உங்க வரவுக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றிம்மா. :))))

  ReplyDelete
 28. வாங்க மீனாக்ஷி, மறு வரவுக்கும், சாப்பிட வரதைக் குறித்த செய்திக்கும் நன்றி. கூடிய வரை அங்கே பாரம்பரிய சமையல்கள் அனைத்தையும் கொடுக்க எண்ணம். இதிலே அடை எழுதலைனு ஒரு நினைப்பு. சரி பார்த்துட்டு எழுதி இருந்தா சுட்டியும், இல்லைனா எழுதியும் செய்துடறேன். ஓகேயா? :)))))

  ReplyDelete
 29. அப்பாஜி!

  மிக்ஸி இருக்குமே?.. அரைச்சிக்கலாமே?

  நான் சொன்னது வட ஆற்காடு பக்க மெனு.. வெந்தயம் அந்த மெதுமெதுவைக் கொடுக்கிறது.
  இஞ்சி, சீரகம் இவற்றினாலான நற்பயன்கள் தாங்கள் அறிந்ததே.

  உங்கள் ஊர் கடைகளிலோ அத்தனையும் கிடைக்கிறது. பின்?..

  ReplyDelete
 30. ஜீவி சார், வெறும் புழுங்கல் அரிசியும், வெந்தயமும் மட்டும் போட்டும் தோசை செய்யலாம். வெந்தய தோசை எனப் பெயர் . அதுக்கு மாவு புளிக்கணும். புளிச்ச மாவை இந்த மாதிரிச் சின்னச் சட்டியிலோ அல்லது குழி ஆப்பச் சட்டியிலோ, அல்லது தாளிக்கும் இரும்புக் கரண்டியிலோ ஊற்றிச் சாப்பிடலாம். மேலே மொறு மொறு உள்ளே லேயர் லேயரா வரும். இது ஒரு டேஸ்ட்! :))) உங்க மெதடும் ஒருநாள் முயன்று பார்த்துட்டுச் சொல்றேன்.

  ReplyDelete
 31. Enga paatti vellaiappamnu onnu deepavalikku pannuva. Muthal naal araichcha arisila, ulundhai koda koda nun araichchu kalanthu inji pachai mulakay kariveppilai udaiththa munthiri paruppu kalanthu ennaiyil poriththu deepavalikku breakfast:) ennaala onrukku mela saappida muddyathu. Ana nalla irukkum

  ReplyDelete
 32. மறு வரவுக்கு நன்றி ஜெயஸ்ரீ, வெள்ளையப்பம் இப்போவும் எங்க வீட்டிலே அடிக்கடி பண்ணுவேன். தீபாவளிக்கு என்னோட மன்னி இப்போவும் பண்ணுவா, என்றாலும் என்னோட அம்மா பண்ணறாப்போல் இருக்காது தான்! :)))) சுடச் சுட வெள்ளையப்பமும், உக்காரையும் தான் தீபாவளியன்னிக்குக் காலம்பர காலை உணவாக இருக்கும். மத்த பக்ஷணங்கள் எல்லாம் மத்தியானமா! :))))) ரசம் சாதத்துக்கு மிக்சர் தொட்டுக்கப்போட்டுக்கப் பிடிக்கும். :)))

  ReplyDelete
 33. வெந்தய தோசைக்கு வெறும் புழுங்கல் அரிசி வெந்தயம் மட்டும் போறுமா? ஒரு அழாக்கு புழுங்கல் அரிசிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் போறுமா? இதையும் கொஞ்சம் சொல்லிடுங்களேன், ப்ளீஸ்! :) வெந்தய தோசையை நல்லணெய்லதான் வார்க்கனும்னு மட்டும் தெரியும். ரெசிபி ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்றாங்க. ஆனா எனக்கு என்னிக்குமே நம்ப traditional method -ல பண்றதுதான் ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 34. மீனாக்ஷி, மூடறதுக்கு இருந்தேன், உங்க பின்னூட்டத்தைப் பார்த்தேன், உடனே பதில் கொடுக்க வந்தேன். ஆழாக்கு புழுங்கலரிசின்னா ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், தனியா ஊற வைங்க. களைஞ்சே ஊற வைங்க. வெந்தயம் ஊறிய மஞ்சள் நீரோடு முதலிலே வெந்தயத்தைப் போட்டுக் கொஞ்சம் அரைச்சுட்டு அப்புறமா ஊறிய அரிசியைப் போட்டு அரைக்கவும். நைசா அரைச்சாலும் நல்லா இருக்கும். கொஞ்சம் கொர கொரனும் இருக்கலாம். ரொம்பக் கொர கொரப்பு இருக்கக் கூடாது. இன்னிக்கு வெந்தய தோசை தான் இலுப்பச் சட்டியிலே! :)))) அப்புறமாக் கத்தரிக்காய் சுடறதைப் பத்திச் சொல்ல நினைச்சு மறந்து போச்ச். நீங்க காஸிலே தானே சுடறீங்க? கத்தரிக்காய் மேல் எண்ணெய் தடவிட்டு நீளக் கைப்பிடி உள்ள கத்தியைக் கத்தரிக்காயின் நடுவே செருகிட்டு அப்படியே காஸ் மேலே வைங்க. அல்லது க்ரில்லிங் இருந்தால் கைப்பிடியைச் சுடாமல் பார்த்து வைக்கணும். இம்முறையில் கத்தரிக்காய் உள்ளே நல்லா வெந்துக்கும்.

  ReplyDelete
 35. //தோசையே நான் வெந்துட்டேன்னு நாலாபக்கமும் தூக்கிக் கொண்டு என்னை எடுத்துத் தட்டில் போடுனு சொல்லும்

  ஆ! கல்லோட கல்லா ஒட்டிக்கிட்டு நிக்கும் மாவைத்தான் பாத்திருக்கேன்.

  கவிநயா டிப்ஸ் புதுசு. நன்றி. ட்ரை பண்ணுறேன். தோசைக்கல்லுக்கும் நான்ஸ்டிக்குக்கும் ருசி வித்தியாசம் நிச்சயமா இருக்கு. ஆனா ஸ்கிலட்ல வார்த்து வார்த்து தூக்கி எறிஞ்சு (பசி நேரத்துல அதுவும்) கடுப்பாறதுக்கு பதிலா நான்ஸ்டிக் மேல்னு ஒரு செடில்மென்ட்.

  ஜீவி சார்.. மிக்சியைக் கூட - அந்த ஒரு பட்டனை அழுத்தக்கூட - அம்மா செஞ்சா நல்லாருக்குமேனு, நான் இல்லே, சில பேர் சொல்வாங்கனு சொல்ல வந்தேன்..

  ReplyDelete
 36. கத்தரிக்காய் டிப்பு டாப்பு.

  ReplyDelete
 37. Me too! Mixture with rasam saatham ...yum yum

  ReplyDelete