எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 09, 2012

கிருஷ்ணன் வந்தாச்சு! கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்!

ராமர் புது வீட்டில். விளக்கு வெளிச்சம் அதிகம் என்பதால் பிரதிபலிப்பு அதிகமா இருக்கு.  விளக்கை அணைச்சுட்டும் எடுக்க முடியாது.  அப்படி ஒரு இடம்.

பரம்பரை பரம்பரையா வர கிருஷ்ணர்.  கையிலே வெண்ணெயோடு இருப்பார்.  தவழ்ந்த கிருஷ்ணர்.  இவர் எங்களிடம் 2010- ஆம் ஆண்டு தான் வந்து சேர்ந்தார்.  போன வருஷம் மழையிலே வீட்டுக்குள்ளே தண்ணீர் வந்து அதை எல்லாம் வாரிக் கொட்டிட்டு கோகுலாஷ்டமி கொண்டாடினோம்.  இந்த வருஷம் இங்கே வந்தாச்சு.  அரங்கன் இருக்குமிடம் தேடி வந்திருக்கார் இந்தக் கிருஷ்ணர்.  இங்கே மழையே இல்லை.

அவரே தான் கொஞ்சம் முகம் கிட்டக்க இருக்கும்படி எடுத்தது.  இந்த இரண்டு படங்களும் ரங்க்ஸ் கை வண்ணம்.  நான் தீபாராதனை காட்டிட்டு இருந்ததால் அவர் எடுத்தார்.

போன வருஷம் சொந்த வீட்டிலே கீழே உட்கார்ந்து எடுத்தேன்.  இந்த வருஷம் இங்கே உட்கார முடியாது.  இடம் இல்லை.  நின்ற வண்ணமே எடுத்தது.  முறுக்கு, உப்புச் சீடை, பாயசம், தட்டை, வெல்லச் சீடை, வெண்ணைச் சீடை, கோளோடை, சீப்பி, வடை, பால், தயிர், வெண்ணெய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், அவல், வெல்லம் போன்றவை.

அதேதான், எல்லாமும் சேர்ந்து வராப்போல் எடுக்கப் பார்த்தேன்.  அப்படியும் தயிர்ப் பாத்திரம் வலது ஓரத்தில் மறைந்துள்ளது.  யாருக்கு என்ன வேணுமோ எடுத்துக்குங்க.  இந்த வருஷம் கொஞ்சம் சீக்கிரமாவே வந்துட்டார். நாளைக்கு நிறைய வேலை இருக்கு.  அதனால் இந்த வருஷம் கிருஷ்ணரைச் சீக்கிரமா வரச் சொல்லியாச்சு!28 comments:

 1. //இந்த வருஷம் இங்கே உட்கார முடியாது. இடம் இல்லை.

  தரையெல்லாம் சீடை முறுக்கு பரப்பியிருந்தா இடம் எப்படி இருக்கும்னேன்..

  ReplyDelete
 2. கோளோடை?
  நாளைக்கு என்ன வேலை? ஆடிக் கிருத்திகை?

  ReplyDelete
 3. கீதா ஜன்மாஷ்ட்டமி பட்சணங்களொரு பார்சல் ப்ளீஸ்

  ReplyDelete
 4. பட்சணம் மட்டும் கேட்டுட்டு கிருஷ்ணரின் அழகை சொல்லலைனா கோச்சுப்பர் கிருஷ்ணர் கொள்ளை அழகு

  ReplyDelete
 5. கீதாம்மா,
  நீங்க சொன்ன‍துல, கோளோடை எல்லாம் நான் பார்த்ததே இல்லை.. (அல்லது அது பேர் அது தான்னு தெரியாதா இருக்கும்). எங்களை மாதிரி அடுத்த‍ தலைமுறைக்குப் பிரயோசனமா, ஒவ்வொண்ணா படம் போட்டு பேர் சொன்னா நல்லா இருக்கும்! திருப்பி, திருப்பி, தினம் வரேன்னு நினைக்காதீங்க, சீப்பி செய்யுறது, படம் பார்க்க‍லாம்னு வந்தேன்..

  ReplyDelete
 6. //இந்த இரண்டு படங்களும் ரங்க்ஸ் கை வண்ணம். //

  படங்கள் மட்டும் தானா? படத்தில் இருப்பதும் அவர் கை வண்ணம் தானே? நீங்க எப்போதும் போல தீபாராதனை தானே?(அதவது அடுப்பை பற்ற வைக்கும் முக்யமான செயல்).. :))))

  ReplyDelete
 7. வாங்க அப்பாதுரை, ஹிஹி, இங்கே இடம் சின்னது. அம்பத்தூரில் கூடத்திலேயே ஸ்வாமி அலமாரி, அந்தக் காலத்துத் தஞ்சை ஜில்லா கிராமத்து வீடுகளில் இருப்பது போல. அப்படித் தான் இருக்கணும்னு கட்டினோம். இங்கே சமையலறை போகும் வழியில் ஒரு சின்ன அலமாரி. இந்த மட்டும் ராமரை வைக்க இடம் கிடைச்சதேனு சந்தோஷப் பட்டுட்டு இருக்கோம். :)))))

  ReplyDelete
 8. ஸ்ரீராம், குழந்தைகள் மோதிர வளையம் போல் செய்வோம். பின்னொரு முறை செய்முறை. எல்லாம் அரிசிமாவு, உ.மாவு காம்பினேஷன் தான்.

  ReplyDelete
 9. நாளைக்கு மாமனார் சிராத்தம் என்பதால் பூர்வாங்க வேலைகள் இன்னிக்கு! :))) இன்னும் இரண்டு நாள் நோ இணையம். :))))

  ReplyDelete
 10. வாங்க லக்ஷ்மி, எவ்வளவு வேணாலும் பக்ஷணம் எடுத்துக்கலாம். கிருஷ்ணர் அதுவும் தவழ்ந்த கிருஷ்ணனின் அழகுக்குக் கேட்கணுமா! :)))

  ReplyDelete
 11. பொன்ஸக்கா, நேத்திக்கு இருந்த அவசரத்திலே செய்யும்போது படம் எடுக்கணும்னு மறந்தே போயிட்டேன். சாயந்திரமாத் தான் நினைப்பு வந்தது. எப்போவானும் முறுக்கு அல்லது தட்டை செய்யும்போது கோளோடையும் படம் போட்டுக் காட்டிடறேன். கோளோடைனா என்னனு ஸ்ரீராமுக்கு பதில் சொல்லி இருக்கேன் பாருங்க.

  ReplyDelete
 12. அம்பி, தும்பி, வம்பி, என்ன அதிசயமா இந்தப் பக்கம்?? ஸ்ரீரங்கம் வரச்சே இருக்கு உங்களுக்கு வட்டியும், முதலுமா! வித விதமாப் பண்ணி நாங்களே சாப்பிடுவோம். :P:P:P:P

  ReplyDelete
 13. pona varusham janmashtami ungalukku difficult times nu nyapakam vanthathu . ninaththukkonden.appavum neenga ellam panniirunthel.
  oru thirattuppaal pleaseppa!

  ReplyDelete
 14. ஏர்போர்டில் க்ருஷ்ணா ஸ்வீட்ஸ்லே இரு/முன்னூறு ரூபாய்க்கு கோகுலாஷ்டமி பேக் என்று விளம்பரம் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். ரெடிமேட் பட்சணப் பை கிடைக்குறப்போ இதையெல்லாம் உடம்பை வறுத்தி செஞ்சு (தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தி - ஹிஹி - பத்தாயிரம் மைல் தள்ளியிருக்குறதால ஒரு வசதி) கொண்டாடறது டச்சிங்.

  அடையார் காந்தி நகர் ஏரியாவில் க்ரேண்ட் ஸ்னேக்ஸ் என்று ஒன்று அமைப்பு இருந்தது. கோளோடை அங்கே வாங்கியிருக்கிறேன், ஸ்ரீராம். கஷ்டமான பெயர், சுலபமா உள்ளே போகும். சின்ன வயசில் ரசம் சாதத்துக்கு தொட்டுக்க.. சிப்சாவது கிப்சாவது.. ஹ்ம்ம்ம்.

  ReplyDelete
 15. அமெரிக்காரங்க எல்லாம் வராங்க பட்சண வாசனை அவ்வளவு தூரம் போயிருக்கு.
  கிருஷ்ணருக்கு இல்லாத இடமா கீதா. நீங்கள் வைத்திருக்கும் விருந்துக்கு அவர் உங்கள் கண்ணன் வந்தான் பதிவிலிருந்து ஓடி வந்திருப்பான்.பங்களூரு கோளவடையா அது?
  எங்களுக்கு அடுத்த மாதம் தான் ஆவணி அஷ்டமி:))

  ReplyDelete
 16. கீதா மேடம் நலம்தானே. கிருஷ்ணருக்கு ஜோரான வரவேற்பா இருக்கே.

  இங்கேயும் கிருஷ்ணர் வந்தார். ஆனா கொஞ்சம் சிம்பிள்தான். வெல்ல சீடை, உப்பு சீடை, தேன்குழல் அவ்வளவுதான். எனக்கு எப்பவுமே கிருஷ்ணர் கால் போட பிடிக்கும். அம்மா வீட்லேயும் நான்தான் போடுவேன். இங்கே மர தரையில போட்டது பாக்க ரொம்ப அழகா இருந்துது. நான் போட்டது இல்லையா. :)
  அழிக்க மனசே வராது போல இருக்கு.

  உங்க பதிவுக்கு வருகை தந்து கமெண்ட் போடாத கும்பல்ல நானும் ஒருத்தி. :)

  தொடர்கதையை தொடருங்கள். சுவாரசியமான இடத்துல நின்னுண்டே இருக்கே.

  ReplyDelete
 17. குழந்தை கிருஷ்ணன் கொள்ளை அழகு.

  பிரசாதங்கள் அருமை.

  ReplyDelete
 18. இதே மாதிரி தவழும் கிருஷ்ணர் எங்க வீட்லயும் ஆட்சி பண்றார்.... இந்த முறை இங்க வெறும் காரம் மட்டுமே இனிப்புக்கு அவல் மட்டுமே... இனிப்பு சீடைலாம் பண்ணவே இல்ல

  ReplyDelete
 19. வாங்க ஜெயஶ்ரீ, போன வருஷம் கிருஷ்ணர் ஜயந்தி அன்னிக்குத் தண்ணீர் பெட்ரூம் வரை வந்தது. விநாயகசதுர்த்திக்குள்ளாக வீடு முழுசும் வந்து அங்கே இருந்து கிளம்பியாச்சு! :))))

  ReplyDelete
 20. அப்பாதுரை,

  நிவேதனம் செய்யப் படும் பொருட்கள் சாப்பிடாமல், ருசி ஏதும் பார்க்காமல் செய்து ஸ்வாமிக்குப் படைத்துவிட்டுப் பிரசாதமாக உண்கிறோம் இல்லையா? கிருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கினது அப்படி எல்லாம் இருக்காதே! அதோடு
  //(தானும் கஷ்டப்பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தி - ஹிஹி - பத்தாயிரம் மைல் தள்ளியிருக்குறதால ஒரு வசதி) //

  அடுத்தவங்க யார்? பக்ஷணம்சாப்பிடறவங்க படற கஷ்டமா? சான்ஸே இல்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்கெட்டில் மிஞ்சிப் போனால் நாலு முறுக்கு, ஐந்தாறு சீடைகள் இருக்கலாம். ஒரு ஸ்வீட் கூட வைத்திருக்கலாம். பெரிய அளவில் செய்வதால் அவங்களுக்கு இது லாபம் தரும் வியாபாரம்.

  வீட்டில் செய்வது அந்தரங்க சுத்தியோடு செய்வது இல்லையா? அதையும் சாப்பிட்டு விட்டு வீட்டில் செய்ததையும் சாப்பிட்டால் வித்தியாசம் நிச்சயம் தெரியும். எங்க பையர் மசால் தோசை நாங்க இல்லைனா ஹோட்டலில் வேறு வழியில்லாமல் வாங்கிச் சாப்பிடுவார். நாங்க இருந்தா நான் செய்து தர தோசைதான். இதைச் சாப்பிட்டுட்டு ஹோட்டலிலே சாப்பிடறச்சே எவ்வளவு வித்தியாசம்னு சொல்வார். சிக்கனமும் கூட. கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குக் கொடுக்கும் 250 ரூபாய்க்கு சாமான்கள் வாங்கினால், குறைந்த பக்ஷமாக இருபது நாட்களுக்கு வருகிறாப்போல் பக்ஷணம் செய்து விடலாம். சாமான்களும் மிச்சம் இருக்கும்.

  ReplyDelete
 21. வேளுக்குடி கிருஷ்ணன் சொல்றாப் போல் எல்லாம் ஆரம்பிக்கும் வரைதான் கஷ்டமெல்லாம் தெரியும். ஆரம்பிச்சாச்சுன்னா பழகிப் போயிடும். சிரமம் தெரியாது என்பார். அதுவே தான் இங்கேயும்.

  ReplyDelete
 22. வாங்க வல்லி, பங்களூரு கோளவடை இல்லை அது. தஞ்சை ஜில்லா ஸ்பெஷல், அப்பாதுரை சொல்லி இருக்கார் பாருங்க. :))))) நிறைய வெண்ணெய் போடுவாங்களா, வாயில் போட்டாலே கரையும். அப்பாதுரை சின்ன வயசில் சாப்பிட்டதை இன்னும் நினைவு வைச்சிருக்கார் பாருங்க.

  ReplyDelete
 23. வாங்க மீனாக்ஷி, வரவுக்கும், அபூர்வமான கருத்துக்கும் நன்றி. :))) கிருஷ்ணர் பாதம் போடறது எனக்கும் பிடிக்கும். குட்டியாய்ப் போடுவேன். பிறந்த குழந்தை பாதம் போலவே இருக்கும்.:))))

  தொடர்கதையைத் தொடரத் தான் வேண்டும். ஆனால் சில, பல, சந்தேகங்கள், கருத்து வேறுபாடுகள்............ பார்க்கலாம்.

  ReplyDelete
 24. வாங்க மாதேவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 25. வாங்க எல்கே, நானும் வெ.சீ. கொஞ்சம் போல சாஸ்திரத்துக்குத் தான் செய்தேன். இனிப்புச் செய்யாமல் இருக்கக் கூடாதே என்று. :))))

  ReplyDelete
 26. வாங்க எல்கே, நானும் வெ.சீ. கொஞ்சம் போல சாஸ்திரத்துக்குத் தான் செய்தேன். இனிப்புச் செய்யாமல் இருக்கக் கூடாதே என்று. :))))

  ReplyDelete
 27. கன்னடக் காரங்க சொல்லுவாங்களே கோடுபளே, அதைத்தான் கோளோடைன்னு சொல்றீங்களா? அது எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னா, வெல்லச்சீடை சைசுக்கு படம் போட்டிருக்கீங்க. கோடுபளே போன்று தமிழ்'நாட்டில் நான் பார்த்ததே இல்லை. (கிட்டத்தட்ட சூப்பி, முருக்குக்கு உள்ள மாவுதான். ஆனால் நீளமா உருட்டி இரண்டு முனையையும் வட்டமா, கங்கணம்போல ஆனால் ரொம்ப சிறியதாக சேர்த்துவிட்டு பொரிக்கணும்)

  ReplyDelete
  Replies
  1. இப்போத் தான் பார்க்கிறேன் நெ.த. ரேவதியும் பெங்களூரு கோளவடைனு சொல்றாங்க. அதைப் பார்த்தாத் தான் எனக்குப் புரியும்.இது சின்னதாக மோதிரம் போல் இருக்கும்.

   Delete