எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 26, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா --- 10

ரவிக்குக் கவலையாகத் தான் இருந்தது.  என்றாலும் வந்தாச்சு!  இனி என்ன செய்ய முடியும்?  அழகான மாலை நேரம்! சூரிய அஸ்தமனமும், சந்திர உதயமும் பார்க்கக் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தான் இருந்தது.  ஆனால் அனுபவிக்க முடியவில்லை.  மனதில் வெறுமை! பயம்!  சந்தேகம்! எல்லாமும் சூழ்ந்து இருக்கக் கவலையுடன் வீட்டுக்கு வந்தான்.  சாந்தியிடம் கூடப்பேசாமல் தன் அறைக்குச் சென்று படுத்தான்.  இது திட்டமிட்டே நடக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது.  ஆனால் சாந்தி புரிந்து கொள்ள வேண்டுமே!  இப்போவானும் அந்தக் குழந்தையை வெளியேற்றுவாளா?

அலுவலகத்தில் இருந்து வந்த கணவன் உள்ளே வராதது கண்டு சாந்தி அறைக்கு வந்தாள். வரும்போது அந்தக் குழந்தையும் அவள் கைகளில்! வரும்போதே அது சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தது.  ரவிக்கு அது தன்னைக் கேலி செய்கிறது என்றே தோன்றியது.  அதே போல் அவனைப் பார்த்து அது கைகளைக் கொட்டிச் சிரித்தது. தன்னை மீறிய கோபத்தில் ஷோபாவை அடிக்கக் கையை ஓங்கினான் ரவி.  சாந்தி அவன் கையைப் பிடித்துத் தள்ளி விட்டாள். "எப்படிச் சிரிக்கிறது, பார்! என்னைக் கேலி செய்கிறது!" என்றான் ரவி ஆத்திரத்துடன்.

"ஆமாம், அதுக்கு இப்போவே எல்லாம் தெரியும்!" என பழித்துக் காட்டிய சாந்தி, "சரி, உடம்பை வரவழைச்சுண்டாச்சு.  ஓய்வு எடுங்க.  குழந்தைகளை இங்கே வராமல் பார்த்துக்கறேன்."  என்றபடி உள்ளே சென்றுவிட்டாள்.  தனிமையில் விடப்பட்ட ரவிக்கு ஒரே கலக்கமாக இருந்தது.  இறந்து போன தன் இரு குழந்தைகளின் நினைவு அதிகமாக வந்தது.  இருக்கும் இரு குழந்தைகளையாவது காக்க வேண்டுமே என்ற தவிப்பும் கூடியது.  தான் தன் குழந்தைகள் அருகே செல்ல முடியாத இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவங்களுக்கு ஏதேனும் ஆகாமல் இருக்கணுமே என்ற கவலையும் சேர்ந்து கொள்ளத் தூக்கமும் வராமல் நோயின் கடுமையால் வலியும் தாங்காமல் தவித்தான்.   தூங்கியவனுக்கு ஏதேதோ கனவுகள்! அந்தக் குழந்தை தன் பையனைத் தண்ணீரில் போட்டு அமுக்குவது போலவும், பையன் மூச்சுக்குத் திணறுவது போலவும் கனவு கண்டான்.

விழித்தவனுக்குக் கனவா, நனவா என்றே தெரியாமல் குழப்பமாக இருந்தது.  சுற்றும் முற்றும் பார்த்தான்.  அறையின் ஜன்னல் வழியாக சூரியன் தன் கதிர்களை நீட்டி இருந்தான்.  அவன் பெண் வீறிட்டுக் கத்தும் குரல் கேட்டது. கண்ணைக் கூசும் வெளிச்சத்தைக் கைகளால் மறைத்தவாறே அவசரமாக எழுந்தான்.  பெண் கத்திய திக்கை நோக்கி ஓடினான்.  ஓடுகையில் குளியலறையில் இருந்து அந்தக் குழந்தை தவழ்ந்து வருவது போல் அவனுக்குத் தோன்றியது.  சட்டென அந்தக் குழந்தை எந்தப் பக்கமாய்ப் போகிறது எனப் பார்க்க வேண்டித் திரும்பினான்.  தேடியவன் கண்களில் எதுவும் படவில்லை.  எங்கானும் ஒளிந்து கொண்டிருக்கிறதோ? யோசித்தவண்ணம் தன் பெண் இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

குளியலறை வாயிலில் அவள் நின்றிருக்க ஒற்றை விரலால் தொட்டியைச் சுட்டிக் காட்டினாள்.  குழந்தை அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது என்பது புரிந்தது.   அவளால் பேச முடியவில்லை.  அவன் மூத்த பையனுக்குக் குளியல் தொட்டியில் அமிழ்ந்து கிடப்பதில் சுகம், ஆனந்தம்.  அன்றும் அதுபோலவே தொட்டியில் அமிழ்ந்திருக்கிறான். அப்படி அமிழ்ந்தவன் தலைகீழாகத் தொட்டியில் தள்ளப்பட்டு முழுக அடிக்கப்பட்டிருக்கிறான். அவசரம் அவசரமாகப் பிள்ளையை வெளியே எடுத்துத் தலைகீழாகவும் தட்டாமாலையாகவும் சுற்றினான். தண்ணீர் குடித்திருந்தால் வெளியே எடுத்துப் பிள்ளைக்கு உயிர் கொடுக்க மிகவும் விரும்பினான்.  ஆனால்????? அவனால் முடியவில்லை.  பிள்ளையின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஓவெனக் கத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் முயன்றான். அப்போது அவன் கண்களில் பட்டது அந்தச் சிவப்பு நாடா.


13 comments:

  1. ஒன் மோர் வில்லன்?

    ReplyDelete
  2. அப்படீங்கறீங்க?????????

    ReplyDelete

  3. ஹிஹிஹிஹி....ஆமாங்கறேன்.....







    இல்லைங்கறீங்க.....?

    ReplyDelete
  4. பார்ப்போமே! இப்போ சமையல் பண்ணணும்! :)

    ReplyDelete
  5. அச்சச்சோ........ அடுத்து.....?

    ReplyDelete
  6. சிவப்பு ரிப்பன் - இது யார் சதி.... தொடர்கிறேன்...

    ReplyDelete
  7. வாங்க டிடி, என்னைப் பொறுத்தவரை முடிவு தான் தாங்க முடியாமல் இருந்தது. :(

    ReplyDelete
  8. வாங்க வெங்கட், யார் சதினு பார்க்கலாம்.

    ReplyDelete
  9. தட்டாமாலைனா?

    ரோலர் கோஸ்டர் போறாப்புல இருக்குங்க படிக்க.. பத்து திக்.

    ReplyDelete
  10. அப்பாதுரை, நல்வரவு. இணைய உலகில் இருப்பது குறித்தும் சந்தோஷம். :))) தட்டாமாலை என்றால் இருவரு ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு சுற்றி ஆடுவது. மெல்ல ஆரம்பிக்கும், பின்னர் வேகமெடுக்கும். ஒரு சிலருக்குத் தலையும் சுற்ற ஆரம்பிக்கும். இதிலே பிள்ளையைத் தலைகீழாய்ப் பிடித்துச் சுற்றுகிறான்.

    ReplyDelete

  11. உடம்புக்கு முடியாத ரவி அலுவலகத்திலிருந்து திரும்பினான்,,,(?)கடைசியில் ஒரு கொக்கி.?

    ReplyDelete
  12. வாங்க ஜிஎம்பி சார்,

    அலுவலகத்தில் இருக்கையில் தான் உடல் நலம் கெட்டுப் போகிறது. அங்கிருந்து மருத்துவரைப் பார்க்கப் போகிறான். ஆனால் சாந்திக்கு இது தெரியாது. ஆகையால் அலுவலகத்திலிருந்து வந்தான் என்று மட்டுமே குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  13. ரவியின் கனவு நனவாகி விட்டதா?

    கதை பயங்கரமாய் போகிறது. குழந்தைகளின் தொடர் மரணம் வருந்த வைக்கிறது.

    ReplyDelete