எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 13, 2014

காக்கைக் கூட்டில் குயிலா, கழுகா? ---5

அலுவலகம் சென்ற ரவிக்கு அங்கே வேலையிலே மனம் செல்லவே இல்லை.  மதியம் வரை தவித்துக் கொண்டிருந்தான்.  பின்னர் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வீட்டிற்கு அவசரமாகக் கிளம்பினான். வீடு வந்து சேர்ந்த ரவிக்கு அதன் அமைதியும் நிசப்தமும் கொஞ்சம் சங்கடப் படுத்தியது.  நேரே தன் பையன் படுத்திருந்த இடத்துக்குச் சென்றான்.  அங்கே கட்டிலில் பையன் படுத்திருந்தான்.  நான்கு வயது சுஜா தானே தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள்.  அவளைத் தூக்கி முத்தமிட்டான் ரவி.  தன் நெஞ்சோடு அணைத்த வண்ணம் கட்டிலில் படுத்திருந்த மகன் அருகே அமர்ந்து அவனைத் தொட்டுப் பார்த்தான்.  ஜுரம் குறைந்திருந்தது.  அவன் தொட்டதும் பிள்ளை விழித்துக் கொண்டான்.  அவனிடம் உடல்நிலை குறித்து விசாரித்த ரவி மனம் அமைதி அடைந்தது. பின்னர் அவனை அன்று முழுதும் படுத்து ஓய்வு எடுக்கும்படி சொல்லிவிட்டு, சாந்தி எங்கே எனக் கேட்டான்.

"அம்மா, பாப்பாவுக்கும் ஜுரம் வந்துடும்னு அதைத் தனியாக எடுத்துட்டுப் போய்த் தூங்க வைச்சிருக்காங்க." என்றான் பையன்.  போகட்டும் இந்த மட்டும் அந்தக் குழந்தை பக்கத்தில் இல்லையே என சந்தோஷப்பட்டான் ரவி. அன்று இரவுப் பொழுது உணவருந்தும் நேரம் அமைதியாகக் கழிந்தது.  ரவி தன் சமீபத்திய வழக்கப்படி தனியே படுக்கச் சென்றான்.  எத்தனை நாளைக்கு இப்படித் தனியே படுப்பார்; அதையும் பார்த்துவிடலாம் என சாந்தி மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.  வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அவளும் சின்னக் குழந்தைக்குப் பாலைக் கொடுத்தாள்.  படுக்கை அறையிலிருந்து பையன் கூப்பிடும் சப்தம் கேட்டது.  அங்கே சென்று அவனைக் கவனித்தாள்.  இரவுக்கான மருந்துகளைக் கேட்டான் பையன். கைக்குழந்தையை அங்கேயே படுக்கையில் விட்டுவிட்டு மருந்துகளை எடுத்துக் கொடுத்தாள் சாந்தி. அப்போது தொலைபேசி அழைக்க அப்படியே விட்டு விட்டு அதை எடுக்கச் சென்றாள் சாந்தி. பெரியவன் மாத்திரையைச் சாப்பிடுடா எனச் சின்னவனிடம் சொல்ல, ஏதோ தூண்டி விடப் பட்டவன் போலச் சின்னவன் அவனையே பார்த்தான்.  படுக்கையில் குழந்தை கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அதை சமாதானம் செய்தான் பெரியவன்.  குழந்தை அவனையே பார்த்தது. தன்னையும் அறியாமல் அவன் மருந்து அலமாரியை நோக்கி நடந்தான்.

அவன் முதுகை இரு கண்கள் துளைப்பது போல் இருந்தது.  அது தாங்க முடியாமல் அவன் ஒருஇயந்திர ரீதியாக நடந்து சென்றான்.  அங்கிருந்த ஒரு குறிப்பிட்ட பாட்டிலில் உள்ள மாத்திரைகளைக்கைகளில் கொட்டிக் கொண்டான்.  அவற்றை அப்படியே எடுத்து வந்து தம்பியிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான்.  இனம் தெரியா மயக்கத்தில் ஆழ்ந்திருந்த சின்னவனும் மாத்திரைகளைச் சாப்பிட்டான்.  இருவரும் படுத்தனர்.  சுஜா தனிக்கட்டிலில் படுத்திருக்க அண்ணன், தம்பி இருவரும் ஒரு கட்டிலைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.  நடுவே அந்தக் குழந்தை ஷோபா படுத்திருந்தாள். சற்று நேரத்தில்   சாந்தியும் அங்கே தொலைபேசி அழைப்பை முடித்துக் கொண்டு வந்தாள்.  பிள்ளைகள் இருவரும் படுத்திருப்பது கண்டு திருப்தியுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.  இருவரையும் தூங்கச் சொல்லிவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தைக்குப் போர்த்திவிட்டு விட்டுத் தன் அறைக்குச் சென்றாள்.  இரவுப் பொழுது எவ்விதமான சங்கடங்களும் இல்லாமல் நிம்மதியாகக் கழிவது கண்டு அவளுக்கு மகிழ்ச்சி.  இந்த நேரம் ரவி அருகில் இருந்தால்???? ரவியைச் சென்று பார்த்தாள்.  அவன் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க எழுப்ப மனமில்லாமல் திரும்பிச் சென்றாள்.

அநாவசியமாக ரவியைக் கோவித்தோமே! பாவம் அவர்! சின்னக் குழந்தை இறந்து போனதில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மனம் இன்னமும் ஆறவில்லை.  நமக்கு இந்தக் குழந்தை இருப்பதால் தெரியவில்லை;  அவர் அவன் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். என்ன செய்ய முடியும்? யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சாந்தி. மறுநாள் காலை பெரியவன் ஓடோடி வந்து, தம்பியை எழுப்ப எழுப்ப எழுந்திருக்க மறுக்கிறான் என்று புகார் சொன்னான்.  தூக்கம் வந்தால் தூங்கட்டுமே என்று சாந்தி சொல்ல ரவிக்கு சந்தேகம்.  விளக்கு எரிந்தாலோ,சின்ன சப்தம் கேட்டாலோ முழித்துக் கொள்வானே அவன்!  இப்படித் தூங்க மாட்டானே!  உடம்பு இன்னமும் சரியில்லையோ! சந்தேகத்தோடு ஓடினான்.  சாந்திக்கு இவன் பரபரப்புப் புரியவில்லை என்றாலும் அவளும் கூடப் போனாள்.  சின்னவனைத் தட்டி எழுப்பிய ரவி அவன் கைகளைப் பிடித்துப் பார்த்தான். நெஞ்சில் காதை வைத்துக் கேட்டான்.


சுத்தம்! இதயத் துடிப்பு நின்று போயிருந்தது.  கைகளில் நாடியும் பேசவில்லை. அப்போது, அப்போது????? ரவி சிலையைப் போல் நின்றான்.

11 comments:

  1. குழந்தைகளின் மறைவு கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. how many more wickets (lives)to fall before santhi wakes up.?_

    ReplyDelete
  3. அந்த குழந்தை ஒவ்வொருத்தரையா கொல்லாம விடாது போலிருக்கே! பயங்கரமாயிருக்கு தொடர்!

    ReplyDelete
  4. வாங்க ஶ்ரீராம், கதைப் படிச்சப்போ எனக்கும் பல நாட்கள் மனதில் பாரமாகத் தான் இருந்தது. :(

    ReplyDelete
  5. தெரியலையே டிடி.

    ReplyDelete
  6. ஒண்ணொண்ணா வரும் ஜிஎம்பி சார்.

    ReplyDelete
  7. வாங்க சுரேஷ், மூலத்தில் இன்னும் வர்ணனைகளும், விவரிப்பும். வருஷம் பல ஆனதால் எனக்குக் கொஞ்சம் மறந்து போச்சு. கதைக்கரு மட்டும் நல்ல நினைவில் இருக்கு. :))))

    ReplyDelete
  8. ரொம்பவே கஷ்டமா இருக்கு படிக்க.....

    ReplyDelete
  9. வாங்க வெங்கட், ஆமாம், நானும் இதைப் படிச்சுட்டுப் பல நாட்கள்/மாசங்கள் அவதிப் பட்டேன். :(

    ReplyDelete
  10. பலி வாங்கும் படலம் தான் கதையா?
    குழந்தைகள் அடுத்து அடுத்து இறப்பதை படிக்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.

    ReplyDelete