இங்கே
எல்லாமே இயந்திரத்தனமாய் நடந்து வந்தது. சாந்திக்கும் அதிர்ச்சி தான். கணவன் இப்படி எல்லாம் பேசுவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதுக்கெடுத்தாலும் இந்தக் குழந்தையைக் குற்றம் சாட்டுகிறானே என மனம் வேதனைப்பட்டாள். அவனுக்கு ஸ்டெரிலைசேஷன் யாரானும் பண்ணி இருப்பார்களோ என்றும் சந்தேகப்பட்டாள். தன்னை பயமுறுத்த வேண்டி ஏன் அவன் இப்படிச் செய்திருக்கக் கூடாது? கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சைக் குறைத்தாள் சாந்தி. ரவிக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை. சாந்தியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். குயில் குஞ்சுகள் இப்படித் தான் மற்றப் பறவைக்குஞ்சுகளைத் தள்ளிவிட்டுக் கொல்லும் என்பதைப் படமாக எடுத்து வைத்திருந்ததைத் தன் ஒரே பெணுக்குப் போட்டுக் காட்டுவதுபோல் சாந்தி இருக்கும் நேரம் பார்த்துப் போட்டுக் காட்டினான். வர வர சாந்தி அவனுக்கு உணவு பரிமாறக் கூட வருவதில்லை.
சாந்திக்கோ இனி தங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்காது என்பதால் இருக்கும் இந்த இரு குழந்தைகளையாவது நன்கு கவனிக்க வேண்டும் என்று இருந்தாள். எக்காரணத்தாலோ அவனுக்கு இந்தக் குழந்தையைப் பிடிக்கவில்லை. இது என்ன செய்தது? தன் கணவனுக்கு ஏதேனும் மனநோய் வந்துவிட்டதோ என்று கூட சந்தேகித்தாள். மிஞ்சி இருக்கும் ஒரே பெண் குழந்தையைப் பாதுகாப்பது தங்கள் கடமை என்பதையும் உணர்ந்திருந்தாள். காலம் எதற்கும் காத்திருக்காமல் ஓட்டமாய் ஓடியது. அன்று இனம் தெரியாத மன வேதனையில் ஆழ்ந்திருந்த ரவி தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான். வெளியே தோட்டத்தில் கட்டி இருந்த ஊஞ்சலில் குழந்தைகள் இருவரும் விளையாடும் சந்தோஷக் கூச்சல் கேட்டது. சற்று நேரம் வரை அது மனதில் பதியாமல் ஏதேதோ யோசித்த ரவி, சட்டென்று நினவு வந்தவனாய் அறை ஜன்னலில் இருந்து தோட்டத்திற்குள் பார்த்தான்.
அவன் அருமைப் பெண் சுஜா! ஒரு தேவதையைப் போல வெண்ணிற கவுன் ஒன்றை அணிந்து கொண்டு ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். வேகமான ஆட்டத்தில் வந்த காற்றில் தலைமயிர் பறந்து கொண்டிருந்தது. மாறிமாறி இருகைகளையும் ஊஞ்சல் சங்கிலியில் பதித்துப் பிடித்த வண்ணம் ஆடினாள் சுஜா. ரவிக்குப் பார்க்கையில் சாந்தி கூடக் குழந்தையாய் இருக்கையில் இப்படித் தான் இருந்திருப்பாள் எனத் தோன்றியது. தன்னையும் அறியாமல் இதைசாந்தியிடம் சொல்ல வேண்டும் என எண்ணிப் புன்னகைத்துக்கொண்ட ரவி ஊஞ்சல் இன்னும் வேகமாய் ஆட்டப்படுவதைக் கண்டான். யாரோ ஆட்டுகின்றனரே. சாந்தியோ? இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லை! கடவுளே! அந்தக் குட்டிப் பிசாசு ஆட்டுகின்றதே! வேகமாக வெளியே பாய்ந்தான் ரவி.
இப்போது சுஜாவுக்கே பயம் வந்து அலற ஆரம்பித்திருந்தாள். ரவி இன்னும் வேகமாய் ஓடினான். ஆனால்...... அதற்குள்....அதற்குள்,,,,,, அந்தக் குட்டிப் பிசாசு ஊஞ்சல் பலகையை அப்படியே மேலே தூக்கி வீச, சுஜா வேகமாய்த் தூக்கி வீசப்பட்டு தூரத்தில் போய் விழுந்தாள். நல்லவேளையாக ரவி அவளை அப்படியே ஓடிப் போய்த் தன் கைகளில் பிடித்துவிட்டான். அடிபடவில்லை என்றாலும் சுஜாவின் பயம் குறையவில்லை. பயத்தில் ஜுரமே வந்துவிட்டது அவளுக்கு. அந்தப் பிசாசுக் குழந்தை அங்கேயே நின்ற வண்ணம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வையில் இருந்த வெறுப்பும் கோபமும் அவனை உறைய வைத்தது. சுஜாவைத் தோளில் போட்டுக் கொண்டு சமாதானம் செய்து கொண்டே தன்னறைக்குச் சென்றான் அவன். சுஜாவை எவ்வாறேனும் காப்பாற்றியே ஆகவேண்டும். எப்படி? தன்னுடனேயே வைத்துக்கொள்ளலாம் அவளை.
ஆனால் தாயிடம் போகாதேனு சொல்ல முடியாதே! மேலும் சாந்தி தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லையே தவிர அவனுக்கு சாந்தியைப் புரிந்திருந்தது. ஆகவே சாந்தியிடம் சுஜா செல்வதைத் தடுக்கவில்லை அவன். சாந்திக்கு எதிரே அது சுஜாவை எதுவும் செய்ய முடியாது என்பதையும் புரிந்து வைத்திருந்தான். எனினும் அது தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் உணர்ந்திருந்தான். சாந்தி அவனோடு பேசாமல் அவனிடம் வராமல் அவனுக்கு உணவு பரிமாறாமல் யாரோ மூன்றாம் நபர் போல் நடப்பதையே அவனால் தாங்க முடியவில்லை. இந்தப் பத்துவருஷ வாழ்க்கையில் அப்படியா வாழ்ந்தனர்? ஓரிரவில் அனைத்தும் மாறி விட்டதே! குழந்தை வந்தால் சந்தோஷம் வருவதற்கு பதிலாக இங்கே பிரிவினை அல்லவோ வந்திருக்கிறது!
அடுத்த பதிவில் முடியும்.

திகில் ஊட்டுகிறது கதை! குழந்தை பிழைத்ததா?
ReplyDeleteசாந்திக்கு உண்மை தெரிந்து விடுமா? இன்னும் ஒரு பதிவுதானே... பார்க்கலாம்!
ReplyDeleteதிக்..திக்..னு இருக்கு!.. அடுத்த பகுதி எப்போ?!!
ReplyDelete
ReplyDeleteமுடிவை ஆவலுடன் எதிர்நோக்கி...
தொய்வேயில்லாமல் போகுது.
ReplyDeleteவாங்க சுரேஷ், நன்றி.
ReplyDeleteபார்ப்போம் ஶ்ரீராம்!
ReplyDeleteஅநேகமா இன்னிக்குப் போட்டுடுவேன் பார்வதி.
ReplyDeleteமுடிஞ்சுடும் ஜிஎம்பிசார்.
ReplyDeleteநன்றி அப்பாதுரை, உங்களை விடவா?
ReplyDeleteஅடுத்த பதிவில் முடியும்.....
ReplyDeleteவிரைவில் திகில் முடியும் என்பதில் மகிழ்ச்சி.....