எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 25, 2014

பித்ரு வாக்ய பரிபாலனம் செய்ய வேண்டாம்! பித்ரு கடன் செய்யுங்கள்!

இன்றைய நாட்களில் சிராத்தம், திதி போன்றவற்றை நினைவில் கொள்வது கூடச் சரியில்லை; அதனால் என்ன பலன்? என்பது பெரும்பாலோர் கருத்தாக இருந்து வருகிறது.  ஆனால் பகுத்தறிவு வாதிகளில் இருந்து யாராக இருந்தாலும் சரி அவரவர் தலைவர்கள் நினைவு தினத்தை அனுசரிக்க மறப்பதில்லை.  குறைந்த பக்ஷமாகப் பூக்களையானும் தூவி படங்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.  இதை நாத்திகம் பேசும் அனைவருமே செய்கின்றனர்.  இப்போ மட்டும் அவங்களுக்குத் தெரியவா போகிறது?  ஏன் செய்ய வேண்டும்?

உண்மையில் நீத்தார் கடன் என்பது நாம் இருக்கையில் நமக்கு வேண்டுமானால் தொந்திரவு கொடுத்திருக்காது.  ஆனால் அது நமக்குப் பின்னர் தொடரும் சந்ததிகளுக்குக் கட்டாயமாய்ப் பிரச்னைகளை உண்டு பண்ணும்.  ஏனெனில் இது நம்முடைய கடன்.  கடனை அடைக்காமல் நாம் இருந்தால் அது வட்டியோடு சேர்ந்து நம் சந்ததிகளிடம் தானே வசூலிக்க முடியும்? எப்படி என்பதைப் பின்வரும் பத்திகளில் இருந்து படிக்கவும்.  இது திருமதி ஜெயஶ்ரீ சாரநாதன் தமிழ் ஹிந்துவில் எழுதியது.  கீழே சுட்டியும் கொடுத்திருக்கேன் முழுப்பதிவையும் படிக்க.  இங்கே தேவையானதை மட்டும் காப்பி, பேஸ்ட் செய்திருக்கிறேன்.

ஜெயஶ்ரீ சாரநாதனுக்கு நன்றி.

பித்ரு கடன்

உதாரண விளக்கத்தின் மூலம் தெரியும் மற்றொரு முக்கிய விஷயம் பித்ரு காரியம் ஏன் செய்ய வேண்டும் என்பது. ‘பெற்றோர் இறந்தவுடன் அவர்களுக்கு பித்ரு காரியம் செய்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியவா போகிறது? அது அவர்களை அடையப் போகிறதா என்ன? அதற்குப் பதிலாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டால் போதும். இறந்த பிறகு ஸ்ராத்தம் என்று சடங்குகள் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அதனால் நம் பிள்ளைகளையும், பேரன்களையும் பாதிக்கும் என்பதெல்லாம் சும்மா புருடா.’– இதுவே இன்றைக்குப் பரவலான கருத்து.

பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இங்கே கொடுக்கல்-வாங்கல் (give and take) என்னும் இயற்கையின் நியதி வருகிறது. அக்னி ஹோத்திரம் ஹோமத்திலும் இந்தக் கொடுக்கல்-வாங்கல் இருப்பதைக் காணலாம். நல்ல காற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதற்குப் பதிலாக அசுத்தக் காற்றைத் திருப்பித் தருகிறோம். இங்கே இயற்கையின் சமன்பாடு (equilibrium) பாதிப்படைகிறது. திருப்பிக் கொடுத்த காற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால், நமக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கிடைப்பது அசுத்தக் காற்றுதான். அதைத் தவிர்க்க அக்னி ஹோத்திரம் செய்யப்படுகிறது.

அதைப் போல பெற்றோர் நமக்குச் செய்வதால் நாம் பட்ட கடனை, நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெற்றோர் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவரிடமிருந்து ஒன்றைப் பெற்றால் அதைத் திருப்பித் தர வேண்டும். இல்லை என்றால் நாம் கடன் பட்டவர்களாகி விடுவோம். கடன்பட்ட ஒருவனால், மற்றோருவனுக்குக் கடன் அளிக்க முடியாது. உயிருடன் உலவும் காலத்தில் யாரிடம் கடன் பட்டாலும், அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்றால், வேறொரு பிறவியிலாவது அந்தக் கடனை அடைத்து விட முடியும்.

இவையெல்லாம் பிறந்தபிறகு – அதாவது வாழும் காலத்தில் நடப்பது.

ஆனால் பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்?

pithru-karmaதாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா? அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா? இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா? அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்?

அங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.

இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.

உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.

நம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும்? சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும்? கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா? அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா? இல்லையே! இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்.

மேலே கூறப்பட்ட சிசேரியன் குழந்தை உதாரணத்தைப் பாருங்கள். வயிற்றைத் திறந்தும், அது ஜீவிதத்தில் இருக்கிறது. அந்த ஜீவிதம் வளர இடம் தந்தது தாய் வயிறு. ஜீவிதம் பெற்றது அவள் கொப்பூழ் கொடி மூலமாக; அது அவள் இயற்கையிலிருந்து பெற்ற உணவு. இன்றைக்குப் பரிசோதனைக் குழாயில் கருவை உண்டாக்கினாலும், கரு வளர வேண்டியது தாயின் கர்ப்பத்தில். அதற்கு மாற்று என்றுமே வர இயலாது.

பெற்றோர் மூலமாக நாம் பஞ்ச பூதங்களுக்கும் பட்ட கடனை, தீவிர சிந்தனையுடன் (ஸ்ரத்தையுடன்) பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் தருகிறோம்.

பிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா? நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்?

அவன் எதிர்பார்க்க மாட்டான்; எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லலாம். பெற்ற தாயும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் பிள்ளைகளான நமக்குக் கடமை உண்டல்லவா? அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? அதைத்தான் கடவுளுக்கும் நாம் செய்ய வேண்டும். அவனை உயர்த்திப் பேசுவதில், புதிதாக அவனுக்குப் பெருமை வந்து விடுவதில்லை. அப்படிப் பேசுவது நமக்குத் தான் பெருமை- எப்படிப்பட்ட தாயை நான் அடைந்துள்ளேன் என்று பிள்ளைகள் பெருமிதத்துடன் சொல்வதைப் போல…


இது குறித்துப் பரமாசாரியார்கள் சொல்லி இருப்பது கீழே:  தெய்வத்தின் குரல் 3 ஆம் பாகம்.


ஒருத்தர் செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை;இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை;இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது. ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை (Cerberus) சொல்கிறார்கள். ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற இந்த ஒரு வருஷத்தில்தான் அதன் த்ருப்திக்காக மாஸா மாஸம் சில சடங்குகளைச் செய்வது. இம்மாதிரி பரலோக யாத்திரையில் வழிக்குணவு தருவதைக்கூட இதர மதங்களிலும் சொல்லியிருப்பதாகக் கேட்டிருக்கிறேன். என்று Viaticum கிறிஸ்துவர்கள் சொல்வது இதுதான் போலிருக்கிறது. பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கும் நாம் கயை, பதரி போன்ற இடங்களில் பிண்டம் போடுவது போலவே, கிறிஸ்துவர்கள் All-Souls' Day என்று ஒரு நாளில் எல்லா ஆத்மாக்களின் த்ருப்திக்காகவும் வழிபாடு நடத்துகிறார்கள். லோகம் பூராவும் இப்படி ஒரு நம்பிக்கை, அபிப்ராயம் இருக்கிறது என்றால் அது ஸத்யமாகத்தான் இருக்க வேண்டும்.


நன்றி: காமகோடி தளம்

அநாதை ஆசிரமங்களுக்குக் கொடுப்பதோ, அல்லது ஏழைகளின் படிப்பு, கல்யாணங்களுக்கு உதவுவதோ உங்கள் தனிப்பட்ட விருப்பம்.  அதை இங்கே யாரும் தடுக்கவில்லை.   அதையும் செய்யுங்கள்; இதையும் செய்யுங்கள்.  அநாதை ஆசிரமத்திற்குக் கொடுப்பது உங்கள் சொந்தப் புண்ணியம் எனில் பித்ரு காரியம் செய்வது சந்ததிகளுக்குச் சேர்த்து வைக்கும் சொத்து. பித்ரு காரியம் செய்வது வேறு, இது வேறு.  பித்ரு காரியங்களைச் செய்யாமல் இம்மாதிரி செய்வதில் இப்போதைக்கு நாம் கெட்டிக்காரத்தனமாகச் செய்ததாக நினைக்கலாம். எங்கேயோ இருக்கும் போஸ்ட் ஆஃபீஸில் நாம் வேறொருவர் பெயரில் அனுப்பும் அனுப்பும் பணம் குறிப்பிட்ட நபருக்குப் போய்ச் சேருவது போல் நாம் இங்கே நம் பெற்றோருக்குச் செய்யும் திதி, தர்ப்பணங்கள், பிண்டங்கள் அவர்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர்களுக்குக் கட்டாயமாய்ப் போய்ச் சேர்ந்துவிடும்.  நமக்குத் தெரியலை என்பதால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என நினைக்க வேண்டாம். வெளிநாட்டினரில் இருந்து எல்லோருமே நீத்தார் கடனைக் கைக்கொள்வதை வழக்கமாய் வைத்திருக்கின்றனர்.  யூதர்கள் வருடா வருடம் நீத்தோர் தினத்தில் அவர்கள் கல்லறையில் கல் வைப்பதை வழக்கமாய்க் கொண்டிருப்பதாய் எப்போவோ படிச்சிருக்கேன்.  

இன்றைய அவசர உலகில் பலருக்கும் இதை நினைக்க நேரம் இல்லை னு சொல்வாங்க.  ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.  இதிலே சிலருக்கு இருக்கும்போது தாய், தந்தையரைச் சரியாப் பார்த்துக்காதவங்க பித்ரு காரியம் மட்டும் செய்தால் சரியாப் போயிடுமானு கேட்கின்றனர்.  இருக்கும்போது அவர்களை மனக் கஷ்டம் வரவழைத்ததற்கு நமக்கு நாம் இருக்கையிலேயே அதற்கான தண்டனை கிடைத்துவிடும்.  ஆனால் பித்ரு காரியம் என்பது நாம் விட்டுச் செல்லும் கடன்.  தாய், தந்தையரை உயிருடன் இருக்கையில் எப்படி வைச்சிருந்தாலும் அவர்கள் இறந்ததும் முறைப்படி கர்மாக்களைச் செய்வது தான் நம் சந்ததிகளுக்கு நன்மை பயக்கும்.  அதற்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை.  உயிருடன் இருக்கும்போதும் செய்யாமல், செத்தப்புறமும் விரோதம் பாராட்டுவது அழகில்லை. 

நண்பர் ஒருவருடன் ஆன மடலாடலில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலாகவே இதை அளித்திருக்கிறேன். அதோடு ஜிஎம்பி சாரின் பதிவிலும் அவரும் இன்னும் சிலரும் பித்ரு காரியம் என்பது தேவையற்றது என்ற கருத்தைக் கூறி இருந்தார்கள்.  அதன் பேரிலும் இதை எழுதலாம் எனத் தோன்றியதால் எழுதி உள்ளேன்.  வெளிநாட்டு வாழ் மக்கள் இப்படி எதுவும் செய்யறதில்லையேனும் சிலர் கேள்வி. உண்மை அவங்களுக்கு இப்படிக் கிடையாது.  இந்த நாடு தான் கர்ம பூமி. ஞான பூமி.  நாமே வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால் அங்கே எந்த கர்மாவும் செய்யக் கூடாது.  செய்தாலும் அதனால் பலன் இல்லை. இந்தியா வந்து தான் செய்யணும்.   இங்கே மட்டும் தான் அதற்கான பலன்கள் கிட்டும்.  இது தான் கர்மம் செய்து அதன் மூலம் ஞானம் விளையும் பூமி.   இந்தியாவில் மட்டுமே இப்படி எல்லாம் செய்ய வேண்டும்; செய்ய முடியும்.

49 comments:

  1. எல்லா விஷயங்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. ஆனால் அதை விளக்கமாகச் சொல்வதற்கு ஒருவரும் இல்லை. அப்படிச் சொல்வதற்கு இருந்தாலும் கேட்கும் மன நிலை பலருக்கு இல்லை..... எதிர்க்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விட்ட ஒருவரை எந்த அறிவுரையும் பாதிப்பதில்லை! :)

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. இதில் எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. அனாவசியம் என்றே நினைக்கிறேன்.
    உயிருடன் இருக்கும் பொழுது அன்பையும் மதிப்பையும் செலுத்தினாலே போதுமானது என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  3. வாங்க வெங்கட், முன் முடிவு செய்தவர்களைப் பத்தி எதுவும் சொல்ல முடியாது. :)

    ReplyDelete
  4. அப்பாதுரை, இதெல்லாம் அநாவசியமோ, பைத்தியக்காரத் தனமோ இல்லைனு சொல்வதோடு நிறுத்திக்கிறேன். :)

    ஹிஹிஹி, இன்னும் விளக்கமா 2,3 பதிவு போட நினைச்சேன். போடலை. :))))

    ReplyDelete
  5. "வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி...பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி..." என்று ஒரு பாட்டு உண்டு! பித்ரு கர்மா செய்யவில்லை என்றால் உன்னைப் பாதிக்காது, உன் பிள்ளைகளை, சந்ததியை பாதிக்கும் என்பது நல்ல பலனைத் தரும்.

    வெளிநாட்டில் வேலை செய்யாது, நம்ம நாடு வந்துதான் கர்மா செய்யவேண்டும் என்பது எனக்கு செய்தி.

    ReplyDelete
  6. வாங்க ஶ்ரீராம், பலரோட ஜாதகத்திலும் இந்தப் பித்ரு தோஷம் என்பது சொல்லப்படும். அப்படி உள்ளவங்களோட முன்னோர்கள் சரியாப் பித்ரு கடன் செலுத்தவில்லைனு அர்த்தம். :)

    ஹிஹிஹி

    வெளிநாட்டில் வேலை செய்யாது??

    நான் சொன்னது வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அங்கே இம்மாதிரியான கர்மாக்கள் செய்ய முடியாது என்றும், செய்தால் பலனில்லை என்றும் தான். ஒருவேளை சரியாச் சொல்லலையோனு மறுபடி பார்க்கிறேன். :))))) கர்மாக்கள் இங்கே இந்தியாவில் தான் செய்யணும்.

    ReplyDelete
  7. 2007 ஆம் வருஷம் எங்க பொண்ணு பிரசவத்துக்கு நாங்க யு.எஸ். போனப்போ நடுவில் மாமனார் திதி வந்தது. எங்க குடும்பப் புரோகிதரிடம் இது குறித்துக் கேட்டப்போ அங்கே செய்யக் கூடாதுனு சொல்லிட்டார். நாங்க எப்போ இந்தியா வரோமோ அப்போ அதே திதியில் சிராத்தம் செய்யணும்னு சொல்லிட்டார். அது போலவே செய்தோம்.

    இதைத் தவிரவும், ச்ராத்த மந்திரங்களை டேப் எடுத்து வைத்துக் கொண்டு ஒருத்தர் அங்கே 25 வருஷமா ச்ராத்தம் பண்ணி இருக்கார். அவர் பரமாசாரியாரிடம் தரிசனத்துக்கு வந்தப்போ தான் வெளிநாடு போயும் நியம, நிஷ்டையா இருப்பதாகவும், ச்ராத்தம் எல்லாம் செய்வதாகவும் சொல்லவே, ஒவ்வொரு வருஷமும் ச்ராத்தத்துக்கு இந்தியா வரியானு பரமாசாரியார் கேட்டிருக்கார்.

    ReplyDelete
  8. அவர் இல்லை, அங்கேயே ச்ராத்தம் செய்யறேன் அப்படினு சொல்லவே, இந்தியாவுக்கே வரதில்லையானு கேட்டிருக்கார். வருஷத்துக்கு 2 தரம் இந்தியா வருவதாகவும், அது ஒண்ணும் தனக்குப் பிரச்னை இல்லைனும் சொல்லி இருக்கார். அப்போப் பெரியவர் அப்போ ஏன் ச்ராத்தம் சமயம் இந்தியா வரதில்லைனு கேட்கவே மனுஷர் திரு திரு.

    அப்புறமாப் பெரியவா அவரிடம் அங்கே செய்தது எல்லாம் பலனில்லை என்று சொல்லிவிட்டு இங்கே அவர் பெற்றோர் ச்ராத்தம் வரும்போது மீண்டும் 25 வருஷத்துப் பிண்டங்களையும் போடச் சொல்லிச் சொல்லி இருக்கார். (இதை எத்தனை பேர் புரிஞ்சுப்பாங்கனு தெரியலை)

    அது மாதிரியே அவர் செய்திருக்கார். அதன் பின்னர் குடும்பத்தில் பிரச்னை குறைந்தது என்று சொல்லி இருக்காராம். இது பெரியவருடைய பெயரில் உள்ள தளத்தில் வந்தது.

    ReplyDelete
  9. //வெளிநாட்டில் வேலை செய்யாது//

    ஹிஹிஹி... பலனில்லை என்பதைத்தான் அப்படிக் கேட்டு விட்டேன்! ஸ்ராத்தம் செய்யவில்லை என்றால் ஜாதகம் பார்க்கும்போது பித்ரு தோஷம் இருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியுமா?

    பித்ரு தோஷம் என்பது பொதுப்படையாகச் சொல்லப்படுவது என்றும், அதற்கு ஜாதகத்தில் 5ம் வீட்டைப் பார்க்கவேண்டும் என்றும், ஒரு பிராமணன் சந்தியாவந்தனம் செய்யாததிலிருந்து, கோவிலில் அசிங்கம் செய்வது வரை, கொலை செய்வது வரை என்று, பூணூல் போடும்போதும், நாந்தியிலும் செய்வதாக ஒப்புக்கொள்ளும் சத்தியத்தை மீறுவதால் பித்ரு தோஷம் ஏற்படுகிறது என்றும் கேள்விப்பட்டேன்.

    ஸ்ராத்த தோஷம் என்பது ஜாதகத்தில் நான்காம் இடத்தையும் ஐந்தாம் இடத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று கேள்விப்பட்டேன். இரண்டுக்குமே ஆண் வாரிசு இருக்காது, அல்லது வாரிசே இல்லாமலும் போகலாம் என்றும் கேள்விப்பட்டேன்!

    முன்னெல்லாம் ஐந்தாறு குழந்தைகள் இருப்பார்கள் தோஷங்கள் பகிர்ந்தளிக்கப்படும், இப்போதெல்லாம் இரண்டே குழந்தைகள், அல்லது ஒரே குழந்தை என்பதால் பிள்ளைகளைப் பற்றும் பாவம் அதிகமாகிறது என்றும் கேள்விப்பட்டேன்!

    அம்மா.....டி!

    ReplyDelete
  10. அட போங்க அம்மா... நீங்களும் மூட நம்பிக்கையில் மூழ்கி விட்டீர்கள்...

    ReplyDelete


  11. ஒரு ஜாதகத்திலே ஐந்தாம் இடம் பொதுவாக பூர்வ புண்ய ஸ்தானம் எனவும் அதன் அமைப்பு, அதில் உள்ள கிருஹம்,
    லக்னாதிபதிக்கு அந்த அஞ்சாம் கிருஹத்துக்கு அதிபதி நட்பா, பகையா, ந்யூட்ரலா என்று மட்டுமல்லாமல்,

    அஞ்சாம் இடத்திற்கு யாரோட பார்வை இருக்கிறது, பித்ரு காரகன் யாரு ? அவன் எங்கே இருக்கான் அவன் எப்படி
    அஞ்சாம் இடத்திற்கு அதிபதியோட ரிலேஷன்ஷிப் இருக்கு என்பது மட்டுமல்லாமல்,

    அஞ்சாம் இடத்திற்கு சொந்தக்காரனே அஞ்சாம் இடத்தில் உட்கார்ந்துவிட்டால், காரகோ பாவ நாசாய என்னும் விதிப்படி,
    அந்த இடம் எத்தனை உசத்தியா இருந்தாலும் சோபிக்காது போய்விடும் என்ற வசனம் இருப்பதையும் சொல்லி,

    பொதுவா, எந்த ஒரு ஜாதகத்திலும் அஞ்சாம் இடத்திலும், ஒன்பதாவது இடத்திற்கு உடையவர்க்ள் தான் யோக காரகர்கள் ஆக இருப்பதால், அந்த அஞ்சாம் இடத்தின் சொந்தக்காரர் நன்மையைத்தானே செஞ்சாகணும் என்ற விதியையும் லேசா பார்த்து விட்டு,

    இருந்தாலும், இந்த அஞ்சாம் இடம் பொதுவாக தீய கிருஹம் என்று சொல்லப்படுகிற சூரியன், செவ்வாய், சனி, ஆகியவை இருந்துட்டா அல்லது அதோட ஏதேனும் சம்பந்தம் இருக்கக்கூடியவர்களுடன் கிருஹம் ஆக இருந்தால் என்ன பண்ணித் தொலைப்பது என்று சந்தேஹத்தையும் மனசுலே எடுத்துண்டு,

    எப்படிப் பார்த்தாலும், லகனாதிபதியோட பார்வையோ அல்லது குரு பார்வையோ இருந்ததுன்னா, எந்த ஒரு தோஷமும் இருக்காதேய்யும் என்று மடத்து ஜ்யோதிஷாள் சொல்வதையும் கணக்கிலே எடுத்துண்டு,

    இருந்தாலும், அந்த அஞ்சாம் இடம் புத்ர ஸ்தானமும் ஆச்சே, அந்த இடத்துலே குரு பகவான் கால் மேலே காலைப் போட்டுண்டு, கண்ணை மூடிண்டு , இருக்கும்பொது, நமக்கு ஸ்பெஷலா கண்ணைத் திறப்பாரா என்ற ஒரு டௌட் மனசுலே வருவதனாலும்,

    இந்த அஞ்சாம் இடம் மட்டும் பார்க்ககூடாது ஓய் ! ஒன்பதாவது இடமான பித்ரு ஸ்தானம், பித்ரு காரகனான சூர்யன் இவர்கள், அவர்கள் இருக்கக்கூடிய ஸ்தானம் எல்லாவட்றையும் ஸேர்த்துத்தான் பார்க்கணும் அப்படின்னு, மடத்துக்குப்போய் இருக்கும்போது , ஒரு பெரியவர் சொன்னதையும் வச்சுண்டு ,.

    நம்ம ஜாதகத்தை எடுத்து, கொஞ்சம் நடுக்கத்தோட, இந்த அம்பது வருசத்துலே எத்தனை தடவை ச்ரார்த்தம் செஞ்சுருக்கோம், விட்டு இருக்கோம் என்று சரியா ஞாபகம் வராத ஸ்டேஜுலே, பார்க்கும்போது,

    அந்த அஞ்சாம் இடத்திலே மாந்தி அப்படின்னு வேற இன்னொருத்தன் உட்கார்ந்து குடிசை போட்டு இருக்கான், அவன்
    கிளம்ப மாட்டான், அங்கேயே தான் இருப்பான் , இருந்தாலும், கேரளாக்காராளுக்குத் தான் அவனைப் பத்தி அதிகத் தொந்தரவும் பண்ணிக்கணும், நம்ம அத அந்த அளவுக்கு பார்க்கறது கிடையாது என்ற மனசு ஆசுவாசத்துடன்,

    இப்ப என்ன செய்யறது அப்படின்னு யோசிக்கும்பொது,
    கண்ணுக்கெதுத்தாப்போல ஆத்து சாஸ்திரிகள் வர்றார்.
    இதுக்கெல்லாம் மனசை வருத்திக்கலாமா, இதோ பாருங்கோ, எல்லாத்துக்கும் ஒரு வே அவுட் இருக்கு என்று

    சொல்கையில், நானும், பாங்க் பாலன்ஸ் எத்தனை இருக்கு அப்படின்னு மனசுலே நியாபகபடுத்தி பார்க்கும்போது,

    அவரோ,
    அடுத்த ச்ரார்த்த தேதியிலே , அல்லது மாளயம் போதோ, முடியல்லேன்னா எப்ப சௌகர்யம் வரதோ அப்ப,
    ஏழை ப்ராஹ்மணா ஏழு பேருக்கு, ஏழு நாளைக்கு,
    வஸ்த்ரம், பஞ்ச பாத்ரம், கொஞ்சம் தான்யம், தனம் வெத்திலை பாக்கு துளசி வச்சு பார்யாளை தீர்த்தம் போடச்சொல்லி, கொடுத்துடுங்கோ அப்பறம் எல்லா தோஷமும் போய்விடும் என்று சொல்ல,

    அது என்ன ஏழு, ஏழு கணக்கு என்று என்னோட பார்யாள் கேட்க,

    பித்ரு சாபம் ஏழு ஜன்மத்துக்குத் தொடரும். என்று மிரட்ட,

    சரி, அந்த மாதிரி ஏழு ஏழைகளுக்கு எங்கே போறது என கேட்க,

    நீங்க கேட்பேள்னு தெரியும் அப்படின்னு தான் கூட்டிண்டு வந்திருக்கேன். என்று அவர் சொல்லும்போது,

    அந்த ஏழு பேர் வரிசையிலே முதலில் வருவது .... ???? !!!!!!



    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  12. அமர்க்களம் சுப்பு சார்.

    சிரார்த்தம் என்பது வ்யர்த்தம் மட்டுமில்லை அனர்த்தமும் கூட என்று.. நம்ம புராணங்கள் சில ரிக் வேத சுலோகங்கள் வைத்து சுவாரசியமான கட்டுரை ஒன்றை படித்திருக்கிறேன். உங்க பின்னூட்டம் ஒரு படி மேலே போயிடுச்சு.

    ஏழு வயசு பிள்ளை எத்தகைய சிரத்தையுடன் சிரார்த்தம் செய்யும்? எண்பது வயது பிள்ளை எத்தகைய சிரத்தையுடன் சிரார்த்தம் செய்யும்? ஷ்.. ஒரு கதை சொல்கிறேன்.

    ReplyDelete
  13. இதையெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன் ஶ்ரீராம்.

    ReplyDelete
  14. 25 வருஷத்துக்கு சேர்த்து மறுபடியும் பண்ணுனு அவர் சொன்னா இவருக்குமா அறிவில்லை? ஆ! எப்படிப்பட்ட கண்மோடித்தனம்! படிக்கும் போதே வேதனையா இருக்குதே.

    ReplyDelete
  15. நீ சொன்னதைக் கேட்கமாட்டேன், ஆனா உனக்கு சிரார்த்தம் மட்டும் பண்ணிடறேன் - இதை எந்த தந்தையிடம் எந்த மகன் கூற முடியும்?

    ReplyDelete
  16. சுப்புதாத்தா... பிரமாதம். விளக்கமா விளக்கிட்டீங்க... அந்த ஏழு பேர் வரிசையில் முதலில் வருவது யாராம்?

    இந்தக் காலத்தில் எல்லாமே பரிகார வியாபாரமாப் போச்சு!

    அப்பாதுரை... அது சிரார்த்தம் அல்ல, சிராத்தம் (ஸ்ரத்தையுடன் செய்வதால்) என்று கீதா மேடம் முன்னரே ஒரு பதிவில் திருத்தி இருக்கிறார்! //நம்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன்// அதுதான் முதலிலேயே வைத்திருக்கும் ஒரு வரி... உனக்கு ஒன்றும் ஆகாது, உன் பிள்ளைகளுக்கு, உன் சந்ததிக்கு பாவம்' என்ற வலை. அதில் சிக்காத நார்மல் மனுஷா யாரும் இருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்! ஆனானப்பட்ட மஞ்சத்துண்டு பெரியவரே நம்பறார். எவ்வளவோ செய்யறோம்.. பின்னாடி தப்பு நடந்தால் நம்மால்தான் என்று மனசு அடித்துக் கொள்ளுமே என்று பயந்து செய்பவர்களே அதிகம்! நானும் விதிவிலக்கல்ல!

    என்பது வயசுப் பெரியவர் எத்தகைய சிரத்தையுடன் ஸ்ராத்தம் செய்யும்? எள்ளுப் பேரர்கள் எடுத்தவர்களாயிருந்தால் எள்ளோ, எண்ணெயோ விடுவதிலிருந்து விதி விளக்கு உண்டாம்.

    மேலும் கலிகாலத்தில் பகவான் நாமா சொல்வதே பெரிய யாகம் செய்வதற்கு சமம் என்று வேறு சொல்லி சமாதானப்படுத்தி இருக்கிறார்களே..:)))

    ReplyDelete

  17. நம்பிக்கையின் அடிப்படையில் எத்தனையோ செயல்கள் செய்யப் படுகின்றன. சுய சிந்தனையை அடகு வைத்துவிட்டு நம்பிக்கை என்பதைத் தொற்றிக் கொண்டு பலரும் பலதும் செய்கிறார்கள். வம்சவிருத்தியே விபத்தின் விளைவு என்று எண்ணுபவன் நான் என்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்குச் செய்யும் பிரதிபலன் அவர்களது மரணத்தால் அவர்களால் செய்து முடிக்கப் படாத செயல்களை செய்வதே சிறந்த கடன் என்று எண்ணுகிறேன். எதையும் சுயமாய் ஆராயாது இவர் சொன்னார், அவர் சொன்னார் என்பதால் செய்ய என்னால் முடிவதில்லை. இப்படி சுய சிந்தனைக்கே இடமில்லாமல் செயலாற்றுவது நம் எண்ணங்களின் அடிமைத்தனம் என்கிறேன் நான் பிறப்பால் பிராமணன் நான் இருந்தாலும் என்னை வெறுமே அடையாளப் படுத்திக்காட்டும் பூணூல் போட்டுக் கொண்டதே இல்லை. உங்கள் பதிவுக்கு பின்னூட்டங்கள் வந்திருப்பது பலரும் நினைப்பது ஆனால் சொல்லாதது என்று தெரிகிறது என் பதிவில் என் நம்பிக்கையை நான் எழுதினேன். அதற்குப் பதில்போல் இப்பதிவு இருந்ததால் இத்தனையும் எழுதுகிறேன் வேறு நோக்கம் இல்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. Interesting comments

    ReplyDelete
  19. Interesting comments

    ReplyDelete
  20. சுப்பு சார், முதல் வரிசையிலே வருவது யார்?? எனக்கும் தெரிஞ்சுக்க ஆசை! :)

    ReplyDelete
  21. ஶ்ரீராம், தோஷங்கள் பகிர்ந்தளிக்கப்படும்னு சொல்வதுகொஞ்சம் சரியாத் தெரியலை. :( குடும்பத்தில் பலருக்கும் இந்த பித்ரு தோஷத்தின் மூலம் பிரச்னைகள் வரும். அப்படி வந்தவர்களையும், பின்னர் தோஷம் நீக்க தில ஹோமம் செய்தவர்களையும் அறிவேன். சில விபரங்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியலை.

    ReplyDelete
  22. டிடி, இது மூட நம்பிக்கையே அல்ல. என்றேனும் ஒரு நாள் புரிந்து கொள்வீர்கள். :)

    ReplyDelete
  23. சுரேஷ், நன்றிப்பா.

    ReplyDelete
  24. சுப்பு சார், நீங்க ஆதரவு கொடுக்கிறீங்களா எதிர்க்கிறீங்களானு புரியாமல் இருந்தேன். அப்பாதுரை சொல்லி இருப்பதைப் பார்த்தால் ஶ்ரீராமிலிருந்து எல்லோரும் எதிர்க்கிறீர்கள்னு புரிந்தது. நன்றி. :))))

    ReplyDelete
  25. அப்பாதுரை, அவர் பிரச்னைக்குத் தானே பெரியவரிடம் போனார்! பிரச்னை தீர என்ன செய்யணுமோ அதைப் பெரியவர் சொன்னார். அவரும் செய்தார்.

    நம்ம வீட்டிலே அப்பா, அம்மா சொல்வதை நாம் கேட்காமலா இருந்தோம்! கொஞ்சம் வயசு வந்த பின்னர் வேண்டுமானால் கேட்டிருக்க மாட்டோம். ஒரு கட்டுக்குள் அடங்கித் தானே இருந்திருப்போம். பள்ளியில் படிக்கையில் ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்கிறோம். வேலை பார்க்கையில் எஜமானர்கள் சொல்வதைக் கேட்போம். இங்கே ஆன்மிக குரு சொல்வதைக் கேட்டால் என்ன தப்பு? இது கண்மூடித் தனமெல்லாம் இல்லை.

    ReplyDelete
  26. //மேலும் கலிகாலத்தில் பகவான் நாமா சொல்வதே பெரிய யாகம் செய்வதற்கு சமம் என்று வேறு சொல்லி சமாதானப்படுத்தி இருக்கிறார்களே..:)))//

    அப்படினு சொல்லிக் கொண்டு இப்போ எல்லோருமே நித்யகர்மாநுஷ்டானங்களை விட்டுடறாங்கனு ஆன்மிகவாதிகள் வருத்தப்படறாங்களே ஶ்ரீராம். காயத்ரி மந்திரத்துக்கும், அக்னி ஹோத்ரத்துக்கும் எவ்வளவு சக்தினு தெரியும் இல்லையா?

    ReplyDelete
  27. ஜிஎம்பி சார், சுயசிந்தனை இருந்தால் தான் இதை எல்லாம் செய்யமாட்டாங்கனு அர்த்தமா? அப்படி எல்லாம் இல்லை. சுயசிந்தனை மற்ற விஷயங்களில் இருக்கலாம்.உண்மையில் இதனுடைய கான்செப்டையே யாரும் புரிஞ்சுக்காமல் சும்மா மூடத்தனம், பழைய பஞ்சாங்கம், இதெல்லாம் வேஸ்ட் என்னும் முன் முடிவோடு சொல்லுவதால் இதை அதிகம் விளக்கப் போவதில்லை. இதோடு விட்டுடுவேன். :)))

    மற்றபடி உங்கள் பதிவிலேயே எழுத நினைச்சேன். என்ன இருந்தாலும் உங்க பிள்ளை கல்யாணத்தன்னிக்கு உங்கம்மாவோட திதியானு நீங்க ஒரு நிமிஷம் கலங்கித் தானே போனீங்க? திதியாக இருந்தால் என்ன? கல்யாணம் நடந்தே தீரும்னு நினைக்கலை இல்லையா? என்ன இருந்தாலும் அன்று திதியாக இருக்கக் கூடாது என்றே தோன்றி இருக்கும் இல்லையா?

    இந்த உணர்வு தான் இதில் முக்கியம். சுய சிந்தனை எல்லாம் அப்புறம். :))))

    ReplyDelete
  28. எந்த அப்பாவும் பிள்ளையிடம் எனக்குக் கர்மா பண்ணுனு கேட்கப் போவதில்லை. எந்தப் பிள்ளையும் அப்பாவிடம் உனக்கு சிராத்தம் பண்ணிடறேன் என்று சொல்லவும் மாட்டான். இது எல்லாம் தானாக இயல்பாக வர வேண்டிய ஒன்று. ஆங்கிலத்தில் spontaneous சரியா இருக்குமா?

    ReplyDelete
  29. திரு மணி நன்றி.முதல் வரவு???

    ReplyDelete
  30. இப்போது இங்கே நீங்க எல்லோரும் சொல்லி இருக்கிறது கூடப் புதுசு ஒண்ணும் இல்லை. அதுவும் பழைய விஷயமே. உங்களுக்கெல்லாம் முன்னால் ஜாபாலி என்னும் முனிவர் இதைக் குறித்து ராமரோடு வாதிட்டிருக்கிறார். அந்த வரிகள் கீழே கொடுக்கிறேன்.

    //அப்போது அங்கே அயோத்தியில் இருந்து வந்திருந்த பல முனிவர்களில் ஒருவரான ஜாபாலி என்பவர் ராமரைப் பார்த்துக் கூறுகின்றார். ஜாபாலி பேசுவது நாத்திக வாதம். முன் காலத்தில் நாத்திகமே இல்லை, என்றும், வேதங்களில் கூடச் சொல்லப் படவில்லை என்றும் பலரும் நினைக்கலாம். இறைவன் என்ற தத்துவம் ஏற்பட்ட நாளில் இருந்தே நாத்திகம் என்ற தத்துவமும் இருந்தே வருகின்றது. எவ்வாறு இறை ஏற்பு இருக்கின்றதோ, அவ்வாறே இறை மறுப்பும் இருந்தே வந்திருக்கின்றது. இன்று புதியதாய் எதுவும் வரவில்லை. ஜாபாலி ஸ்ரீராமனிடம் சொல்கின்றார்: “ஏ, ராமா, நீ என்ன பாமரத் தனமாய்ப் பேசுகின்றாய்? சிந்திக்கின்றாய்? யார் யாருக்கு உறவு? ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? அனைவருமே தனித்தனியாய்த் தானே பிறக்கின்றார்கள். பயணம் செய்யும் மனிதன் ஒரு நாள் ஒரு ஊரைக் கடப்பது போலவும், இரவு தங்குவது போலவும் உள்ள இந்த வாழ்க்கையில் யார் தந்தை? யார் மகன்? தசரதன் உனக்குத் தந்தை என்பதற்கு அவன் ஒரு கருவி மட்டுமே! நீ கற்பனையாக உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வீணில் வருந்தாதே! நீ இப்போது உன் தந்தைக்குச் செய்த ஈமக் கடன்களினால் என்ன பயன்? உன் தந்தையோ இறந்துவிட்டான். அவனால் எதை உண்ண முடியும்? இந்த உணவை இப்போது நீ இங்கே படைத்தது வெறும் வீணே! பயணம் செய்யும் நமக்குக் கையில் தானே உணவு எடுத்துச் செல்கின்றோம்? அப்படி இருக்க இறந்தவனுக்கு இங்கே உணவு படைத்தால் அது அவனுக்குப் போய்ச் சேருமா என்ன? இவை எல்லாம் தான, தர்மங்களை எதிர்பார்ப்பவர்களால் சாமர்த்தியமாக விதிக்கப் பட்ட வழிமுறைகள். நீ இப்போது ராஜ்யத்தைத் துறப்பது என்பதும் உன் குலத்தில் யாரும் செய்யாத ஒரு காரியம். ராஜ்யத்தை ஏற்று அதனுடன் கூடி வரும் சுகங்களை அனுபவிப்பாயாக!” என்று கூறவே உள்ளார்ந்த கோபத்துடன் ராமர் கூறுகின்றார்.//

    பதிவின் சுட்டி:
    http://sivamgss.blogspot.in/2008/04/21.html

    ReplyDelete
  31. ரெஜிஸ்டர் செய்ய வழியில்லாத அந்தக் காலத்தில் இன்னாருக்கு இன்னார்தான் வாழ்க்கைத் துணை என்பதை ஊருக்குக் காட்டவே திருமணம் என்ற சடங்கு உருவாக்கப்பட்டிருக்கலாம்! (ஏற்கெனவே ஏமாற்றப் பட்டிருந்த பெண் கூட்டத்தில் இருந்தால் மாட்டிக் கொள்ளலாம். இவரை இங்கு பார்த்து விடுபவர்களை அடுத்த முறை ஏமாற்ற முடியாது)

    ஊரில் பெரிய பெரிய கோவில்கள், அருகில் பெரிய திருக்குளத்துடன் கட்டப்பட்டிருக்கக் காரணம் வெள்ள காலங்களில் அல்லது ஆபத்துக் காலங்களில் ஊர் மக்கள் கோவிலில் தஞ்சம் அடையலாம். குளம் ஊருக்கே மழை நீர் சேகரிப்பு. நிலத்தடி நீர் குறையாத பாதுகாப்பு.

    அது போல,

    ReplyDelete
  32. ரெஜிஸ்டர் செய்து வாரிசுரிமை நிலை நாட்டமுடியாத காலத்தில் இன்னாரின் வாரிசு நான்தான், நாங்கள்தான் என்று காட்டவே ஸ்ராத்தங்கள் ஏற்பட்டிருக்கலாம்! அதிலும் ஸ்ராத்தம் செய்பவர்தான் மூத்த வாரிசு என்று ஊர் அறியும். வாரிசுரிமை, சொத்துரிமை போன்றவற்றுக்கு பயன்படும். மூன்று தலைமுறைகளை ஸ்ராத்தத்தில் சொல்வதன் மூலம் பரம்பரை எது என்பதும் மறக்கப் படாமலிருக்க வழிவகை. கர்ண பரம்பரையாக புராணங்கள் சொல்லப்பட்டு வந்தது போல!

    இதுவும் ஒரு எண்ணம்தான்!

    ReplyDelete
  33. ஜாபாலி பத்தி நானும் எழுத இருந்தேன்..கூடவே ராமன் சொன்ன (மடத்தனமான ஆண்வம் கூடிய) பதிலையும் சொல்லியிருக்கலாமே? இந்த மாதிரி ஆசாமிக்கா கோவில் கட்டுறோம்னு ஒருத்தராவது யோசிக்கலாமில்லையா? ;-)

    ReplyDelete
  34. கீதா மேடம் ! நானும் உங்கள் பதிவில் சொல்லியிருப்பதை ஆமோதிக்கிறேன். எனக்கும் இதில் பரிபூரண நம்பிக்கை உண்டு.

    ReplyDelete
  35. மரணத்துக்கு பின் ஆத்மா எங்கு செல்லும், என்ன செய்யும் என்பது பற்றி நமக்கு உறுதியாக சொல்லமுடியாது என்பதால் ஒருவர் இறந்தபின் இந்த மாதிரியான சடங்குகள் செய்வதைவிட உயிரோடிருக்கும்போது அவருக்கு பணிவிடைகள் செய்வதே மேலானது. இந்து இதிகாசம் பகவத் கீதையின் படி உடலை விட்டு உயிர் பிரிந்தால் அத்துடன் ஒரு ஜென்மத்தின் எல்லா பந்தங்களும் அற்றுவிட்டது. ஒவ்வொருவரும் தான் செய்த வினைகளின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். கொஞ்சம் மாத்தி யோசித்ததில் தோன்றியது என்னவென்றால் மனிதனாய் பிறந்த நாம் வாழும்போதே நற்செயல்கள் செய்து, நம் முடிவு நெருங்கிவிட்டது என அறியும் நேரம் நமது பிள்ளைகளுக்கு நம் வாழ்கையில் நாம் கற்ற பாடங்களை, சோதனைகளை வெல்லும் ரகசியங்களை, அவர்களது உலகினை நல்லபடியாக அமைத்து கொள்ளும் தைரியத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். பிள்ளைகள் முழு நம்பிக்கையுடன் இவைகளை ஏற்றுக்கொள்ளும் கணம் நமது ஜீவாத்மா நமது பிள்ளைகளுடன் சங்கமித்து விடுகிறது. நமது சமூகத்தில் நாம் செய்த கர்மங்கள் நம் பிள்ளைகள் மூலம் தொடர்ந்திடும் என்றும் அர்த்தம் செய்து கொள்ளலாம். அந்த தொடரலில்தான் ஒருவன் ஆன்மா அமரத்துவம் பெறுகிறதேயன்றி சொர்க்கத்தில் சென்று நாற்காலியில் அமர்வதால் அல்ல. நமது பிள்ளைகள் அந்த பணிகளை பொறுப்போடு நிறைவேற்றுவதே அவர்கள் செய்திடும் உண்மையான பித்ருக்கடன்.

    ReplyDelete
  36. //சுப்பு சார், நீங்க ஆதரவு கொடுக்கிறீங்களா எதிர்க்கிறீங்களானு புரியாமல் இருந்தேன்//நான் எதிர்க்கவும் இல்லை. அதுக்காக ஓஹோ என்று ஓ போடவும் இல்லை.

    ஆனா, ஒன்னு தெளிவு படுத்தனும்.

    பித்ரு வாக்ய பரிபாலனம் வேற.

    பிதா மாதா சொல்றத கேட்கணும். கேட்கணும் அப்படின்னா காது கொடுத்து கேட்கணும். listening not just hearing. respect what they say, (which they say on the basis of their own perceptions and experiences) and give them the feeling that they have been heard. But what you do, you decide and do. இன்னிக்கு கால கட்டத்திலே இது செஞ்சாலே ஜாஸ்தி.

    பித்ரு கர்மா வேற சமாசாரம்.
    பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் செய்ய விட்டுப்போச்சே, அதுக்கு என்ன பாபம் வந்துடுமோ அப்படிங்கற நினைப்பிலே என்ன பரிஹாரம் செய்யணும் அப்படின்னு ஒரு பயத்துலே ,

    அந்த பயத்தையே காபிடலைஸ் பண்ணிக்கொண்டு இருக்கும் ஒரு சார்ட் ஆப் pseudo ritualistic crony businessmen கிட்டே தன்னை தன மூளையை அடகு வைப்பதையும் சரி அப்படின்னு சொல்ல முடியல்ல.

    ஸ்ரீராம் சொல்றாரே.
    //இந்தக் காலத்தில் எல்லாமே பரிகார வியாபாரமாப் போச்சு!//
    நூத்துக்கு நூறு உண்மை.

    இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
    (to be contd.)


    சுப்பு தாத்தா.

    ReplyDelete

  37. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
    அப்பா புள்ளை ரிலேஷன்ஷிப் பத்தி கீத கோவிந்தத்துலே ஒரு வாக்கியம் வரது.
    புத்ராதபி தனபாஜாம் பீதிஹி.

    அப்பாவுக்கும் புள்ளைக்கும் இருக்கற சொத்துக்களை எப்படி பிரிப்பது என்பது பற்றி தான் அதிகம் நினைப்பு இருக்கற இந்த காலத்துலே த்றேதாயுகத்துலே ஸ்ரீராமன் என்ன செஞ்சார் ? வால்மீகி எழுதியது என்ன எழுதியிருக்கார் என்பதை எல்லாம் படிக்கிற மன நிலையிலே
    இந்த ஜெனரேஷன் இல்லை.

    இன்னொரு விஷயம்.

    மனுஷ்யன் செஞ்சது பாவம் அப்படின்னா, அதுக்கு உண்டான தண்டனையும் அடுத்த ஜன்மத்திலே தான் அனுபவிப்பான் என்று இல்லை. இந்த ஜன்மத்திலே யே தெரிஞ்சுடறது. நீ என் புள்ளையே
    இல்லை என்று சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு உந்தப்படுகிற தோப்பனார்கள் மனசு நொந்து போய் சொல்வதையும் பார்க்கிறோம் இல்லையா.

    அடுத்தாப்போலே, பிள்ளை கார்யம் செய்வானோ மாட்டானோ என்ற பியர் இருப்பது சாஸ்திர சம்மதம் இருக்காப்போலே தோனல்லை .

    என் பிள்ளை எனக்கு கர்மாக்கள் செய்வானா இல்லையா என்பதே ஒரு கோணத்திலே என்னுடைய வினைப்பயன்.

    அவன் நான் இந்த பிளானெட் ஐ வெகேட் பண்ணிட்டு மேலே போனப்பறம் அவன் எனக்கு என்ன செய்யப்போறான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

    நான் உயிரோட இருக்கும்போதே என் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க வில்லையே , அவன் , நான் செத்தப்பறம் கர்மா செஞ்சா என்ன செய்யாட்டி என்ன ? என்று விசனப்படும் தொப்பனார்கள் நிறையா இருக்கா.

    ஸோ , பித்ரு வாக்ய பரிபாலனம் DURING HIS EXISTENCE இஸ் மோர் இம்பார்டன்ட் தான்
    பித்ரு கர்மா ஆப்டர் ஹிஸ் டிபார்சர் என்றும் தெரியறது.

    ஆனா அப்பா சொன்னது எல்லாம் கேட்டுட முடியுமா ? அப்படின்னு ஒரு கேள்வி வர்றது.

    நான் சொன்ன பொண்ணை த்தான் கட்டிக்கணும் அப்படிங்கற சிம்பிள் விஷயம் நான் சொல்லப்போவது இல்லை. அதெல்லாம் நடக்காது அப்படின்னு ரொம்ப தகப்பனார் தாயாருக்கு ஆல்ரெடி புரிஞ்சு போச்சு.

    கீதா அம்மா சொல்ற அந்த யுகங்கள் லே இரண்டு நிகழ்ச்சி நடந்து இருக்கு. யார் செஞ்சது ரைட் யார் தப்பு ?
    subbu thatha.
    (to be continued)

    ReplyDelete
  38. அப்பா சொன்னாரு அப்படின்னு சொல்லனுமா அம்மா, நீ சொன்னா போதாதா அப்படின்னு ராமன் சொன்னதா கம்பர் சொன்னதை பத்தி இல்லை. அது பித்ரு வாக்ய பரிபாலனம். BLIND OBEDIENCE.

    நான் சொல்றது வேற.

    ஒன்னு., அப்பா !! நீ இன்னோத்தன் பொஞ்சாதியை இஸ்துகினு வந்தது ரைட் அப்படின்னு எனக்கு தோணல்ல. இருந்தாலும், நீ எனக்கு தோப்பன் . எனக்கு ராஜா . அப்படின்னு சொல்லி போட்டு சண்டைக்கு போன இந்த்ரஜித்.

    இரண்டாவது, அப்பா உன்னோட பேச்சு, நடவடிக்கை எல்லாமே எனக்கு பிடிக்கல்லை. நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் ரைட் என்று அடம் பிடித்த பிரஹ்லாதன். அப்பா தப்பாவே இருக்கட்டும், அதுக்காக, அவருடைய ஈகோ வையே சாதனமா வேச்சுகிண்டு அவரை போட்டு தள்றது , இந்த காலத்து இன்னி தேதிலே இருக்கிற
    கிரிமினல் ப்ரோசீசர் கோட் பிரஹாரம் குத்தம். நான் பைலபில் அபென்ஸ்.

    மூணாவது பித்ரு வாக்ய பரிபாலன சம்பந்தமா ஒரு நிகழ்ச்சியும் இருக்கு. அப்பா சொன்னார் என்பதற்காக, அம்மாவையே ஒரே போடு போட்டுத் தள்ளி விட்டாரே பரசுராமர்.

    ஸோ , கீதா அம்மா, நீங்க நினைக்கிறது நீங்க நான் நம்பறது எல்லாமே பர்சனல். நம்முடைய நம்பிக்கைகள் அல்லது PERCEPTIONS அடிப்படையிலே அமைந்தது. நம்ம நம்பிக்கையை அடிப்படையா ரூல் புக்கா வச்சுக்கிண்டு , நம்மாத்துக்கு வந்த மருமகள் கிட்டயே ஒரு வார்த்தை சொல்ல முடியாத காலத்துலே இருக்கோம் .

    ஏன்யா குழப்புறீங்க...என்னையா சொல்றீங்க.. அப்படின்னு இரண்டு மூணு பேரு நினைக்கிறது எல்லாமே புரியறது.

    இந்த லோகமே ஒரு BUNDLE OF CONTRADICTIONS.
    AND WE CANNOT BUT BE PART OF IT.

    ஆளை விடுய்யா என்று ஸ்ரீராம் கத்துவது காதில் விழுகிறது.

    ஒதுங்கிக்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  39. //ரெஜிஸ்டர் செய்ய வழியில்லாத அந்தக் காலத்தில் இன்னாருக்கு இன்னார்தான் வாழ்க்கைத் துணை என்பதை ஊருக்குக் காட்டவே திருமணம் என்ற சடங்கு உருவாக்கப்பட்டிருக்கலாம்! //

    ஶ்ரீராம், கல்யாணங்களைப் பதிவு செய்வது என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கூடக் கிடையாது. அதன் பின்னரும் இல்லை. சமீப காலங்களில் தான் கடந்த 20 வருஷங்களில் தான் அது இந்தியாவிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 70% இளைஞர்கள் வெளிநாட்டு வாசம் எனப்போவதால் ஏற்பட்ட கட்டாயம் இது.

    ஹிந்து திருமணச் சட்டப்படி அக்னி சாக்ஷியாக சப்தபதி ஆனாலே திருமணம் ஆனதாகத் தான் அர்த்தம். எங்க திருமணமெல்லாம் பதிவு செய்யப்பட்டதல்ல. அக்னி சாக்ஷியை விட வேறு சாக்ஷி வேண்டுமா என்ன?


    //(ஏற்கெனவே ஏமாற்றப் பட்டிருந்த பெண் கூட்டத்தில் இருந்தால் மாட்டிக் கொள்ளலாம். இவரை இங்கு பார்த்து விடுபவர்களை அடுத்த முறை ஏமாற்ற முடியாது)//

    அதற்காகத் தான் மாப்பிள்ளை அழைப்பு/ஜானவாசம் என்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அப்படியும் ஏமாறுபவர்கள் ஏமாறுவார்கள். ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள். ஏன்? இந்தக்காலத்தில் கூட நான்கைந்து திருமணம் செய்து கொண்ட ஆணோ, பெண்ணோ இருக்கின்றனரே! சட்டத்தின் பிடியில் மாட்டாமல் இன்னும் எத்தனை பேரோ?

    ReplyDelete
  40. ரெஜிஸ்டர் செய்து வாரிசுரிமை நிலை நாட்டமுடியாத காலத்தில் இன்னாரின் வாரிசு நான்தான், நாங்கள்தான் என்று காட்டவே ஸ்ராத்தங்கள் ஏற்பட்டிருக்கலாம்! ////அதிலும் ஸ்ராத்தம் செய்பவர்தான் மூத்த வாரிசு என்று ஊர் அறியும். வாரிசுரிமை, சொத்துரிமை போன்றவற்றுக்கு பயன்படும். மூன்று தலைமுறைகளை ஸ்ராத்தத்தில் சொல்வதன் மூலம் பரம்பரை எது என்பதும் மறக்கப் படாமலிருக்க வழிவகை. கர்ண பரம்பரையாக புராணங்கள் சொல்லப்பட்டு வந்தது போல!////

    கல்யாணங்களிலும் மூன்று தலைமுறைகள் சொல்லப்படும் என்பதைக் கேட்டிருக்கிறீர்களா? ஆகவே நீங்க சொல்லும் காரணம் நிச்சயமாக இல்லை. :(

    ReplyDelete
  41. அப்பாதுரை, ஜாபாலி பத்தி நீங்க சொல்லலையேனு நானும் நினைச்சேன். ராமர் சொன்னதைச் சொல்லத் தான் பதிவின் சுட்டியைக் கொடுத்திருக்கேன். என் நோக்கம் இறைமறுப்போ, அநுஷ்டானங்களைக் கிண்டல் செய்வதோ புதிது அல்ல என்பதைச் சுட்டுவது தான்.

    மற்றபடி உங்களை விடக் கேவலமான பேச்சுக்களை எல்லாம் ராமன் கேட்டிருக்கிறான் என்பதால் நீங்க சொல்வதுக்கெல்லாம் அவனும் அசந்துட மாட்டான்; நானும்! :))))

    ReplyDelete
  42. நன்றி ராஜலக்ஷ்மி! உங்கள் ஆதரவுக்கு நான் மிகக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  43. மாடிப்படி மாது! ஆத்மாவாக ஆகும் முன்னர் சூக்ஷ்ம சரீரம் மறுபிறவி எடுக்கும் முன்னர் அலையாமல் இருக்கத் தான் ப்ரேத சம்ஸ்காரங்களும், மத்த கர்மாக்களும்.

    மற்றபடி ஆன்மா அமரத்துவம் பெறுவது என்பது உடனடியாக நிகழும் ஒன்றல்ல. அதற்கு எத்தனையோ பிறப்பு எடுக்க வேண்டும். அதுக்கும் சொர்க்கம் போவதற்கும் சம்பந்தமே இல்லை. தாய், தந்தை சொர்க்கம் அடைய வேண்டும் என்பதற்காகக் கர்மா செய்யச் சொல்வதும் இல்லை.

    எனக்குப் புரியும்படி சொல்லத் தெரியலைனு நினைக்கிறேன்.:))))

    ReplyDelete
  44. நன்றி ராஜலக்ஷ்மி! உங்கள் ஆதரவுக்கு நான் மிகக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  45. சுப்பு சார், இப்போவும் பித்ருவாக்ய பரிபாலனம்னு பண்ணாட்டியும் அப்பா, அம்மா சொல்லும் நபர்களை அல்லது சுட்டிக்காட்டும் நபர்களைத் திருமணம் செய்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். ஆகவே பித்ரு வாக்ய பரிபாலனம் என்பது கஷ்டமே இல்லை. :))))) இதையே செய்யறவங்களுக்கு அது ரொம்ப சுலபம். :)

    ReplyDelete
  46. நீங்களும், ஶ்ரீராமும் சொல்றாப்போல பணத்தாசை பிடித்த சிலர் இதை வியாபாரமா ஆக்கினதில் இதன் உண்மையான தாத்பரியம் வெளிவராமால் போய் விட்டது. :( இல்லைனு மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  47. //மூணாவது பித்ரு வாக்ய பரிபாலன சம்பந்தமா ஒரு நிகழ்ச்சியும் இருக்கு. அப்பா சொன்னார் என்பதற்காக, அம்மாவையே ஒரே போடு போட்டுத் தள்ளி விட்டாரே பரசுராமர். //

    அதே அப்பாவிடம் தன் அம்மாவின் உயிரைத் திரும்பவும் கேட்டு வாங்கிக் கொண்டார். அப்பா சொன்னார் என்பதற்காகக் கண்மூடித்தனமாக் கேட்கவும் இல்லை. அப்படியே அம்மா போகட்டும்னு விடவும் இல்லை. இல்லையா? :)))))

    //ஸோ , கீதா அம்மா, நீங்க நினைக்கிறது நீங்க நான் நம்பறது எல்லாமே பர்சனல். நம்முடைய நம்பிக்கைகள் அல்லது PERCEPTIONS அடிப்படையிலே அமைந்தது. நம்ம நம்பிக்கையை அடிப்படையா ரூல் புக்கா வச்சுக்கிண்டு , நம்மாத்துக்கு வந்த மருமகள் கிட்டயே ஒரு வார்த்தை சொல்ல முடியாத காலத்துலே இருக்கோம் . //

    நிச்சயமா! இது என் சொந்தக் கருத்துத் தான். இல்லைனு சொல்லலை. ஆனால் இதன் மூலம் எங்கோ ஒருத்தர் யாரோ ஒருத்தர் மாறினால் அது எனக்குப் போதும்.

    நான் எழுதறதுக்கு ஆதரவு வரலைனாலும் கலங்கறதில்லை; எழுதறதை நிறுத்திடறதில்லை. ஏனெனில் பின்னூட்டம் வராத பதிவுகளுக்குத் தான் தனி மடல்களில் நிறையப் பாராட்டுகள் வந்திருக்கு. பார்வையாளர் எண்ணிக்கையும் அப்போத் தான் கூடி இருந்திருக்கிறது. ஆகவே தனிப்பட்ட காரணங்களுக்காக எவரும் பின்னூட்டம் கொடுக்கலைனு புரிஞ்சுப்பேன். வரலையேனு எழுதறதை நிறுத்திட மாட்டேன். கவலையும் பட மாட்டேன். எங்கோ இருக்கும் ஒருத்தருக்கு, இதை நம்பும் ஒருத்தருக்கு நான் எழுதுவது போய்ச் சேர்ந்தால் அதுவே எனக்குப் போதும்.

    யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை; இதன் மூலம் யாரையும் புண்படுத்தவும் நினைக்கவில்லை.

    காலம் மாறி வருவதையும், நம் குழந்தைகளிடமே நாம் நினைத்தபடி நடக்க முடியாது என்பதையும் புரிந்தே வைத்திருக்கிறேன்.

    சுப்பு சார், நீங்க சொல்வது எல்லாமே உண்மை. ஆனால் நான் எழுதியதன் காரணமே மேலே சொன்னது தான். நம்பும் சிலருக்குப் பயன்படட்டும் என்பதே என் குறிக்கோள்.

    ReplyDelete
  48. //நான் எழுதறதுக்கு ஆதரவு வரலைனாலும் கலங்கறதில்லை; எழுதறதை நிறுத்திடறதில்லை.

    அதானே.. கீதாம்மானா சும்மாவா?

    ReplyDelete