Friday, April 24, 2009
நல்ல கடுங்கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு. எல்லாருமே வெயிலில் வெந்து கொண்டிருக்கோம். இன்னும் வெயில் அதிகமாய்த் தெரியும் அக்னி நக்ஷத்திரம் என்னும் நாட்கள் வேறே வரப் போகின்றது. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அவை என அறிவியல் கூறுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் எதையும் மெய்ஞானத்தோடு சேர்த்தே பார்க்கிறவர்கள் ஆகையால் அவங்க சொல்லும் காரணத்தை இங்கே பார்ப்போமா? இந்தக் கதை தெரிஞ்சவங்க நான் திரும்பச் சொல்றதுக்கு மன்னிச்சுக்குங்க.
அக்னி பகவானுக்கு ஒரே பசி. எத்தனையோ ஆஹுதிகள், எத்தனையோ உணவுகள், விதவிதமான உணவுகள் கிடைக்கிறது. ஆனாலும் பசி அடங்கலை. தவியாய்த் தவிச்சான். என்ன கிடைச்சாலும் உடனே சாப்பிட்டுப் பார்த்தாலும் பசி அடங்கவே இல்லை அவனுக்கு. இந்தப் பசி அவனுக்கு எப்படி ஏற்பட்டதுன்னா அதிகம் சாப்பிட்டதாலே தான். என்ன? ஆச்சரியமா இருக்கா? சுவேதகி என்ற மன்னன் ஒருவன் தொடர்ந்து பனிரண்டு வருஷங்கள் யாகம் செய்தான். யாகத் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. யாகத்தில் விடப் பட்ட நெய்யை அக்னி தொடர்ந்து ஏற்றுக் கொண்டான். அதைத் தொடர்ந்து சாப்பிட்டதிலே அவனுக்கு வயிற்றில் நோய் ஏற்பட அதன் காரணமாய் எதைச் சாப்பிட்டாலும் பசி போகலை என்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. பிரம்மாவைச் சரணடைந்தான். அவனோட கோரப் பசிக்கு உணவு காண்டவ வனம் தான் என்று பிரம்மா சொல்கின்றார்.
காண்டவ வனம் எங்கே இருக்கு? அக்னி தேடுகின்றான். ஆஹா, அதோ காண்டவ வனம், யமுனைக்கரையிலே! ஆவலுடன் சென்றான் அக்னி, அந்த வனத்தைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தான். ஆனால் என்ன இது? இந்திரனுக்குப் பொறாமையா? அல்லது தெரியாமல் செய்கின்றானா? அக்னி வனத்தை விழுங்க முயல, இந்திரன் மழையாக வர்ஷிக்க, அக்னி முடிவில் தோற்றே போனான். காட்டை அக்னி நெருங்கினாலே மழை கொட்டியது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்தான் அக்னி. அப்போது, ஆற்றங்கரைக்கு அர்ஜுனனோடு பேசிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டான் அக்னி. ஸ்ரீகிருஷ்ணர் தான் நம்மைக் காக்க வல்லவர் என்ற எண்ணம் அவன் மனதில் உண்டாகியது. உடனே ஒரு வயோதிகர் உருவெடுத்துக் கொண்டு, தள்ளாடித் தள்ளாடி நடந்து அவர்கள் இருவர் முன்னும் சென்று நின்றான் அக்னி.
ஸ்ரீகிருஷ்ணர் வந்திருப்பது அக்னியே என்பதைப் புரிந்து கொள்கின்றார். எனினும் என்ன வேண்டும் எனக் கேட்க, மிகுந்த பசியோடு இருப்பதாயும் உணவு வேண்டும் எனவும் அக்னி சொல்ல, “அக்னியே, உன்னைப் புரிந்து கொண்டேன், உன் பசி அடங்க உணவு கிடைக்கும்” என உறுதி அளிக்கின்றார் ஸ்ரீகிருஷ்ணர். இந்திரன் வந்து தான் காண்டவ வனத்தை நெருங்க விடாமல் செய்வதை அக்னி சொல்கின்றான். ஸ்ரீகிருஷ்ணர் அக்னியிடம், “உனக்கு 21 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதற்குள்ளாக நீ வனத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும். இந்திரன் பெரு மழையாகக்கொட்டினாலும் உன்னை நெருங்க மாட்டான். நீ அதற்குள்ளாக உன் வேலையை முடித்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லிவிட்டுப் பார்த்தனைப் பார்க்கின்றார். காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள். ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு? இதோ தக்க சமயத்தில் அக்னி உதவிக்கு வந்துவிட்டானே.
அர்ஜுனனை ஸ்ரீகிருஷ்ணர் பார்த்ததுக்கு வேறே அர்த்தமும் உண்டு. அர்ஜுனன் அம்பு மழை பெய்து கூடாரங்கள் போட்டு இந்திரனால் பொழியப் படும் பெரும் மழையைத் தடுத்துவிடுவான் அல்லவா? அதே போல அர்ஜுனன் அஸ்திரங்களை எய்து வானத்தை நோக்கிச் செலுத்தினான். ஆயிரமாயிரம் அம்புகள் அர்ஜுனனால் ஏவப் பட்டன. அனைத்தும் ஆகாயத்தில் இணைந்து ஒரு சரக் கூடமாக நின்று காண்டவ வனத்தை மழையில் இருந்து காத்தது. அக்னியும் உள்ளே நுழைந்தான். அங்கே உள்ள அனைத்தையும் அள்ளி விழுங்க ஆரம்பித்தான். இந்திரனோ அதைத் தடுக்க ரொம்ப ரொம்ப பலமா மழையைப் பொழிய வைக்க முயல, ஒரு துளி கூட அங்கே விழாதபடிக்கு சரக்கூடம் தடுத்து நின்றது.
முதல் எழு நாட்கள் அக்னி மெல்ல மெல்ல உணவை விழுங்க ஆரம்பித்தான். அப்போது வெப்பம் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஏழு நாட்கள் கொஞ்சம் அதிகமாயும், வேகமாயும் காட்டை விழுங்க ஆரம்பிக்க வெப்பம் கடுமையானது. கடைசி எழு நாட்கள், படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது காடும், அக்னியின் வேகமும். வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்தது.
இந்த இருபத்தி ஒரு நாட்களையே அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் சொல்லுகின்றோம். சென்னை மக்களால் கத்திரி வெயில் என்றழைக்கப் படும் இவற்றின் முதல் ஏழு நாட்கள் வெப்பம் படிப்படியாக அதிகரித்து நடு ஏழு நாட்கள் வெப்பம் உச்ச கட்டத்தை அடைந்து கடைசி ஏழு நாட்களில் வெப்பம் படிப்படியாகக் குறைவதையும் உணரலாம்.
நாளையிலிருந்து அக்னி நக்ஷத்திரம் ஆரம்பிக்கப் போவதால் இன்று அதைக் குறித்துப் பார்க்க வேண்டி 2009--ஆம் ஆண்டு போட்ட பதிவின் மீள் பதிவு.
ஒரு மரம் விடாமல் காட்டை அழித்து நாட்டை உருவாக்குவதும் நம் முன்னோர்கள் சொன்ன வழி தானா..
ReplyDeleteஅப்பாதுரை, ஆதி மனிதனில் இருந்து இதைத் தான் செய்து வந்திருக்கின்றனர். இப்போதும் செய்கின்றனர். இனி எப்போதும் செய்வார்கள். மனிதனுக்கு எப்போவுமே தன்னுடைய நலம் தான் முதலில்! :)))))
ReplyDeleteஅறியாத கதை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவிஜய் டீவி மஹாபாரதத்தில்காண்டவ வனத்தில் இருந்த நாகங்களை அழிக்க காட்டை அர்ச்சுனன் அக்னி அஸ்திரம் எய்து அழித்ததாக அல்லவா காட்டினார்கள் என்று நினைத்தேன்
ReplyDeleteஇந்திரபிரஸ்தம் உருவாவதற்கு, அக்னி நட்சத்திரம் தான் காரணமா? சுவாரஸ்யமான கதை.
ReplyDeleteஅறிவியலில் சொல்வது எல்லாமே நம் முன்னோர்கள் சொன்னது தான்.
அருமையான் விளக்கம்.இது வரை கேட்டதில்லை. இந்திரனின் மகன் தானே அர்ஜுனன். அவனிடமே மழை பெய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். நமக்குக் கதை கிடைத்திருக்காது. அதோடு மழையின் கடமையில் இடையூறும் வரக்கூடாது. ஒரே கல்லில் நான்கு மாங்காய்கள்.
ReplyDeleteஅறியாத கதை.
ReplyDeleteசுவாரஸ்யமான கதையை அறிந்தேன் அம்மா... நன்றி...
ReplyDeleteகாரணம் இல்லாமல் காரியம் இல்லை அல்லவா?
ReplyDeleteஅக்னிக்கு பசியைஉண்டாக்கி காட்டை அழிக்க செய்து அருச்சுனன் அம்பு கூடாரம் வில்வித்தையின் திறமையை காட்டி எத்தனை விஷ்யங்கள்!
ஸீசனுக்குக்கேற்ற பதிவு.நானும் இன்று கத்திரி வெயிலைப்பற்றி இன்று பதிவிட்டுள்ளேன்.
ReplyDeleteகாட்டை அழிப்பதை அப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்ட்டொம்! :(
ReplyDeleteஅக்னி நக்ஷத்திரம் பற்றி தெரியாத தகவல்கள் உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன்.
நன்றி தளிர் சுரேஷ்.
ReplyDeleteவிஜய் டீவி மஹாபாரதமோ, சன் தொலைக்காட்சியின் மஹாபாரதமோ பார்ப்பதில்லை ஐயா. நானே எழுதி வருவதால் அதன் தாக்கம் வந்துவிடுமோனு ஒரு எண்ணம். :))) ஆனால் நான் செய்வது மொழி பெயர்ப்புத் தான். சில இடங்களில் மட்டும் எனக்குத் தெரிந்த உபகதைகளைக் கையாளுகிறேன்.
ReplyDeleteவாங்க ராஜலக்ஷ்மி, இது ஒருசெவிவழிக்கதை தான் ஜிஎம்பி சார் சொன்னாப்போலவும் நடந்திருக்க வாய்ப்புண்டு. எதுக்கும் மூல மஹாபாரதத்தையும் பார்க்கணும். :)
ReplyDeleteவாங்க வல்லி, மழையை வேண்டாம்னு சொல்ல முடியாதே! கருத்துக்கு நன்றிம்மா.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், பலருக்கும் தெரியாத ஒன்று தான். :)
ReplyDeleteவாங்க டிடி, நன்றி ,வேலையில் பிசி போல. அவ்வப்போது காணாமல் போறீங்க! :) அல்லது மின்சாரம் பிரச்னையோ!
ReplyDeleteவாங்க கோமதி, ஆமாம், எல்லாப் புராண, இதிகாசங்களிலும் காரணத்தோடு கூடிய காரியம் தான் சொல்லப்பட்டிருக்கிறது. வரவுக்கு நன்றிங்க.
ReplyDeleteவாங்க ஸாதிகா, உங்க பதிவையும் படிக்கிறேன்.
ReplyDeleteவாங்க வெங்கட், இயற்கையை அழிப்பதில் மனிதனை மிஞ்ச முடியுமா? :))))
ReplyDelete