ஆயிற்று. எல்லாம் முடிந்து விட்டது. ரவி எவ்வளவோ கவனமாக இருந்தும் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. நேற்று தோட்டத்தில் அமர்ந்திருந்தான் ரவி குழந்தைகள் விளையாடும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தன் அருமை மகளை அழைத்து வந்துவிடுவோமா என நினைத்தான். ஆனால் சாந்தியின் மேற்பார்வையில் விளையாடினார்கள் எனில்? பின்னர் சாந்தி அவனைத் தவறாய்ப் புரிந்து கொள்வாள். ஆனால் குரல்கள் தேய்ந்தும், பின்னர் திடீரென வெளிப்பட்டும் மாறி மாறிக் கேட்டன. ரவியால் புரிந்து கொள்ள முடியவில்லை. எங்கே போய் விளையாடுகிறார்கள்? ஒரு கணம் கூர்ந்து கவனித்தான். ஓ, கண்ணாமூச்சியா? இதுவும் அவன் அருமை மகளுக்குப் பிடித்த விளையாட்டு தான். அந்தப் பிசாசு தான் ஒளிந்து கொண்டிருக்கிறது போல. அவன் மகள் அவளைத் தேடிச் செல்கின்றாள். அது வரையிலும் நல்லது தான். ஆனால் எங்கே ஒளிந்திருக்கிறது? குரல் வந்த திசையை மீண்டும் கவனித்துக் கேட்டபோது அவன் வேலை செய்யும் ஸ்டுடியோவில் பழைய சாமான்கள் போட்டு வைக்கும் பரண் ஒன்று உண்டு. அங்கிருந்து தான் வருகிறது குரல்கள்.
ஆனால் எப்படி ஏறினார்கள்? சற்று நேரத்திலேயே புரிந்தது அவனுக்கு. குழந்தைகள் படுக்கும் அறை ஃப்ரெஞ்ச் வின்டோ எனப்படும் மாதிரியில் படிகள் வைத்துக் கட்டப்பட்டது. அந்த்ப் படிகளில் இறங்கிக் குழந்தைகள் இங்கே வந்து ஏறி இருக்கின்றனர். அது அந்தப் பிசாசு முதலில் ஏறிப் போய் இருக்கு போல. இப்போ அவன் மகள் ஏறிப் போகிறாள். ஐயோ இது என்ன? ஜன்னல் கதவை யார் சாத்துவது? அப்புறமாக் குழந்தைக்கு மூச்சு விடக் கூட முடியாதே! திணறலில் பயந்து போய்க் கீழே விழுந்து விடப் போகிறாளே! பயத்தில் மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது ரவிக்கு. வேகமாய் வீட்டுக்குள்ளே ஓடினான். போகிற அவசரத்திலும் அந்தப் பிசாசின் உண்மையான சொரூபத்தைக் காட்டியாக வேண்டும் எனத் தன் காமிராவை அவசரமாக எடுத்துக் கோண்டான்.
மேலே நிமிர்ந்து பார்த்தான். பரணின் நுனியில் அந்தக் குட்டிப் பிசாசின் முகம் தெரிந்தது. அவனைப் பார்த்ததோ இல்லையோ சட்டென முகம் மறைந்தது. பின்னர் ஒரே கணம் அவன் மகள் அருமை மகள் சுஜாவின் முகம் பீதியில் உறைந்த முகம் தென்பட்டது. சுஜா! என்று கத்தினான் ரவி. ஆஹா, இப்போப் பார்த்து சாந்தி என்ன செய்கிறாள். அவள் வந்தால்தான் இந்தப் பிசாசைக் கூப்பிட முடியும். வேகமாய் ஜன்னலில் ஏறிப் பரணின் நுனியில் இருந்த பிடிமானத்தைப் பிடித்துக் கொண்டு மேலே தாவி ஏறப் பார்த்தான் ரவி. அதற்குள்ளாக அங்கே ஜன்னல் கதவு திறக்கப்பட்டிருந்தது. அந்தக் குட்டிப் பிசாசு மிகப்பலமாகவும் வேகமாயும் சுஜாவை ஜன்னல் பக்கம் வெளியே தள்ளியது. விடு, என்னை விட்டு விடு என்று அலறிய சுஜாவின் குரல் மெல்ல மெல்லத் தேய்ந்து மறைந்தே போனது. பரணில் ஏறிய ரவி அந்தப் பிசாசின் மேல் பாய்ந்தான். அதுவோ ஒரு வெற்றிப் புன்னகையுடன் அவனைப் பார்த்துவிட்டு அந்தப் படிகளில் இறங்கித் தங்கள் அறைக்குள் ஓட்டமாய் ஓடி விட்டது.
ரவி கீழே பார்த்தான் தள்ளப்பட்ட சுஜா கட்டிடத்தின் கீழே ரத்தம் பெருகி ஓடக் கிடந்தாள். மீண்டும் வெளியே ஓடி வந்தான் ரவி. அப்போது தான் சாந்தியும் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். ரவி ஓடுவதைப் பார்த்துவிட்டு அவளும் என்னவோ ஏதோ என ஓடி வந்தாள்.
முடிந்துவிட்டது. ரவிக்கு அவன் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் ஆகிவிட்டது. அவன் வாழ்க்கையின் ஒரே பற்றுக்கோடாய் இருந்த சுஜாவும் போய்விட்டாள். இனி அந்தச் சாத்தானின் சாம்ராஜ்யம் தான். அதில் அவனுக்கு இடம் உண்டா? சாந்தி துணைக்கு வருவாளா? விரைவில் அதற்கு முடிவும் தெரிந்து விட்டது அவனுக்கு. எல்லாம் முடிந்த மறுநாள் காலையில் சாந்தி அவனிடம் ஒரு பேப்பரைத் தூக்கிப் போட்டாள். அது என்னவெனப் பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் மேலும் தூக்கி வாரிப் போட்டது. விவாகரத்து நோட்டீஸ். அவன் கையெழுத்துக்காகக் கொடுத்திருந்தாள். மனப்பூர்வமாக இருவரும் மனம் ஒப்பிப் பிரிவதாக அதில் எழுதி இருந்தது. சாந்தியை நிமிர்ந்து பார்த்தான்.
"ரவி, என் மனமும் வேதனையில் தான் ஆழ்ந்திருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு வேதனைப் பட்டே இம்முடிவை எடுத்திருக்கிறேன். இப்போது இருக்கும் இந்த ஒன்றாவது எனக்கு மிஞ்சட்டும். நீங்கள் வேறு கல்யாணம் செய்து கொள்வதைக் குறித்து எனக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இல்லை. ஆனால் அவளுக்குக் குழந்தைகள் இருந்தால் அவற்றையாவது ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு வாழ்ந்த இந்தப் பத்து வருஷங்களின் இனிமையான நினைவுகளிலேயே நான் என் வாழ்நாளைக் கழித்துவிடுவேன். எனக்கு இவளை வளர்த்து ஆளாக்குவதே இப்போது முக்கியம். மறு விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை. உங்கள் வசதிக்காகவே விவாகரத்துக் கோரியுள்ளேன்." சொல்லிவிட்டு சாந்தி உடனே அங்கிருந்து அகன்றாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் தனக்கும் குழந்தைக்கும் வேண்டியவற்றை இரு சிறிய பைகளில் அடைத்துக்கொண்டு, தன்னுடைய கல்வித் தகுதிகள் மற்றும் தன் தனிக்கணக்கில் இருந்த பணம் மட்டும் எடுத்துக் கொண்டு தான் கிளம்புவதாகவும், தன்னை எங்கிருக்கிறாள் எனத் தேட வேண்டாம் எனவும், தான் ஒரு வேலை பார்த்துக் கொள்ளப் போவதாகவும் சொல்லிவிட்டு அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கினாள் சாந்தி.
அடிப் பாவி பிரியும்படியாகவா வாழ்ந்தோம்! உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷத்தையும், ஒவ்வொரு விநாடியையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேனே! என்னை மறக்க உன்னால் முடியுமா? உன்னை மறக்க என்னால் தான் முடியுமா?
உன்னை முதல் முதல் பார்த்தபோது என்ன உடை அணிந்திருந்தாய் என்பதை இப்போது கேட்டால் கூடச் சொல்லுவேனே! எப்படியடி என்னை நீ பிரிந்து வாழ்வாய்! அரற்றினான் ரவி. இப்போதாவது இந்தப் பிசாசைத் தூக்கிப் போட்டுவிட்டு வா, நாம் இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தைகளாக இருப்போம் ஊர்க்குழந்தைகளுக்கெல்லாம் நம்மால் ஆனதைச் செய்வோம், என்று வாதாடினான். ஆனால் சாந்தியின் காதுகள் அடைத்துவிட்டன போலும். ஆனாலும் வண்டி ஏறும் முன்னர் அவனருகே வந்து அவர்கள் தனிமையில் இருக்கையில் அவனை அழைக்கும் செல்லப்பெயரான "ப்ரின்ஸ் சார்மிங்" என அழைத்தாள். ரவி உடைந்தே போனான். அப்படியே அவளைக் கட்டி அணைக்கப் போனவனைத் தடுத்தாள் அவள். அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். "அன்பு! மாசற்ற அன்பு! நான் அதைத் தான் உனக்குக் கொடுத்தேன், என் அருமை ப்ரின்ஸ் சார்மிங். பதிலுக்கு நீ எனக்குக் கொடுத்ததோ? நான்கு அருமையான உயிர்கள்! உயிரை உறிஞ்சும் வேதாளமாக ஆகிவிட்டாய் நீ! என் வழி வேறு. உன் வழி வேறு. இந்த வீட்டில் நீயே இனி வசித்துக் கொள். நான் போகிறேன்."
ஒரு கையில் பையையும் இன்னொரு கையில் அந்தக் குழந்தையையும் எடுத்துக் கொண்டு சாந்தி நடந்தாள். "அம்மா" வென்று அழைத்துக் கொண்டு அந்தக் குழந்தை அவள் தோளில் முகம் புதைத்தவண்ணம் அவனைப் பார்த்துச் சிரித்தது. வெற்றிச் சிரிப்பாகவே தெரிந்தது அவனுக்கு.
என்றேனும் ஓர் நாள் சாந்திக்கு உண்மை புரியும். அவள் வருவாள்; அவளால் என்னை மறக்க இயலாது. காத்திருப்பேன். இப்படிச் சொன்ன ரவி விவாகரத்துப் பேப்பரை சுக்குச்சுக்காகக் கிழித்துப் போட்டான்.
சாந்திக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
***************************************************************************************
பல வருஷங்களுக்கும் முன்பு படித்த கதை இது. நாவல் என்றே சொல்லலாம். கதைக் கருவை மாற்றவில்லை. சம்பவங்கள் முன்பின்னாக இருந்திருக்கலாம். கதையின் பெயரோ, எழுதிய ஆசிரியரோ நினைவில் இல்லை. நான்காவது குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறப்பதும், அவனுடைய ஒரே பெண் லூசி(?)யை அந்தப் பிசாசுக் குழந்தை அவன் கண்ணெதிரே கொல்லுவதையும் படித்த நினைவு இருக்கிறது. மற்றவை முன்பின்னாக இருக்கலாம். ஒரிஜினல் படிச்சவங்களும் சரி, இனி தேடிப் பிடிச்சுப் படிக்கப் போறவங்களும் சரி, என்னை மன்னிக்கணும். என்னை மிகவும் பாதித்த மூன்று கதைகளில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு தமிழில் நீல.பத்மநாபனின் தலைமுறைகளும், ஆங்கிலத்தில் A Stone for Danny Fisher நாவலும். இந்தக் கதை ரொம்பவே ஆழமாய் மனசில் பதிந்துள்ளது.
பிகாபூ
இந்தச் சுட்டியில் இந்தக் கதையை ஓரளவுக்குச் சுருக்கமாக பத்து அல்லது பனிரண்டு பதிவுகளில் 2009 ஆம் ஆண்டே கொடுத்திருந்தேன். அதைப் படித்தவர்களும் இருக்கலாம். நினைவூட்டலுக்காகக் கொடுத்துள்ளேன். அப்போதும் சரி இப்போதும் சரி கதையை நினைவில் இருந்தே கொடுக்க முயன்றிருக்கிறேன். ஆரம்பமும் சரி, முடிவும் சரி இது தான் என்பது நன்றாக நினைவில் இருக்கிறது. நடுவில் வரும் சம்பவங்களிலும் பேச்சுகளிலும் முன்பின்னாக மாற்றம் இருக்கலாம். பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஏற்பட்ட தவறாக இதை எடுத்துக் கொண்டு பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். :)))))

படித்து முடித்தேன்.
ReplyDeleteஎதுவோ ஒன்று மிஸ்ஸிங். என்னவென்று சொல்லத்தெரியவில்லை.
விவாகரத்து... எதிர்பாராத முடிவு.
நன்றி இமா. காரணம் தெரியாத கொலைகள் தான் மனதை உறுத்தும். எனக்கும் அது தான் உறுத்தியது. அந்தக் குழந்தை யார், எதற்காக அங்கே வளர்கிறது என்பதை எல்லாம் என்னாலும் ஊகிக்க முடியவில்லை. மூலக் கதையிலும் இந்தக் காரணங்கள் எவையும் இல்லை என்றே நம்புகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு இதைக் கொடுக்க முயன்றிருக்கிறேன். பார்ப்போம், மீண்டும் காரணத்தைக் கண்டு பிடித்து எழுத முடிகிறதா என யோசிப்போம். மிக்க நன்றி.
ReplyDeleteமூலக் கதையில் தம்பதிகள் பிரிந்து தான் செல்வார்கள். அதை மாற்றவில்லை என்பதை நிச்சயமாகச் சொல்லுவேன். இவன் அவளுக்காகக் காத்திருப்பது தான் நானாகச் சேர்த்த ஒன்று.
ReplyDelete
ReplyDeleteஎதற்கும் ஒரு cause இருக்க வேண்டும் எந்தக் ‘காசின் ‘ எஃபெக்டோ அந்தக் குழந்தையின் வருகை. எனக்கும் ஏதோ குறைவதாகவே பட்டது. நினைவில் வைத்தே கதையைக் கொண்டு சென்றது பாராட்டுக்குரியது.
enna kathaikalil ithu?onrnm puriyavillailk
ReplyDeleteஅம்மா! இந்தக் கதையின் இரண்டாம் பாகத்தை தாங்களே, தங்கள் மனோதர்மப்படி எழுதலாம் என்பது என் தாழ்மையான விருப்பம்!.. இந்த முடிவு, முடிவு போல் தோன்றவில்லை!.. அந்தக் குழந்தையின் விருப்பம் தான் என்ன?!.. அதை மையமாகக் கொண்டு தாங்கள் எழுதினால் மிக அற்புதமானதொரு கதையாக அது வரும் என்பது என் நம்பிக்கை!.
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், மூலக் கதையில் காரணம் சொல்லப்பட்டதாக எனக்கு நினைவில் இல்லை. ஏனெனில் காரணம் இருந்திருந்தால் அது மிக முக்கியமான ஒன்றல்லவா? மறக்க வாய்ப்பில்லை.
ReplyDeleteமணி அவர்கள் திடீரெனமுடிவுப் பகுதியை மட்டும் படித்தால் எப்படிப் புரியும்? :)))
ReplyDeleteபார்வதி, இந்தக் கதைக்கு 2ஆம் பாகம் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போவோ பதினைந்து, இருபது வருடங்கள் முன்னால் படிச்சது. கதைக்கரு நினைவில் இருந்ததால் இவ்வளவாவது எழுதினேன். கொடுத்திருக்கும் சுட்டிகளிலும் பாருங்கள். அங்கேயும் இப்படித் தான் முடிச்சிருப்பேன். இது தான் முடிவு. :))))
ReplyDeleteகுழந்தைகள் அனைத்தையும் இழந்த பிறகு மனைவியும் புரிந்து கொள்ளாது விவாகரத்து பெற்றார் எனும் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....
ReplyDeleteஅக்குழந்தையின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பதை கதையின் முடிவு வரைச் சொல்லவில்லையே....
அட போங்க அம்மா...
ReplyDeleteசப்...
வாங்க... பயன் பெறுக... http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html
ReplyDeleteமறுபடி படித்தாலும் விறுவிறுப்பாகவே இருக்கிறது. ஒரிஜினல் கதைப் பெயரை அப்பவும் சொல்லலே நீங்க.
ReplyDeleteவாங்க வெங்கட், குழந்தையின் நோக்கம் தான் மட்டுமே அந்தத் தாயின் அன்பைப் பூரணமாகப் பெறுவது தான். அது தான் கதையின் மூலக்கருவாகவும் சொல்லப்பட்டிருந்தது. வேறு சொன்னதாக நினைவில் இல்லை. :)
ReplyDeleteஹாஹா டிடி, வேறே காரணம் சொல்லலையே?
ReplyDeleteஉங்க பதிவுக்கு அப்புறமா வரேன். இன்னிக்கு 9 மணி நேர மின்வெட்டு. மாலை பார்க்கணும். :)
அப்பாதுரை, கதை எழுதியவர் பெயரோ, கதைப்பெயரோ நினைவில் இருந்தால் எப்படியானும் நான் எழுதினது எல்லாம் சரியானு பார்த்திருக்க மாட்டேனா? அதான் நினைவில் இல்லை.:(
ReplyDeleteI will read again and again and respond

ReplyDeleteகாரணமில்லாமல் அந்த பேய்க்குழந்தை ஏன் மற்ற குழந்தைகளை கொல்லுகிறது! அதை சொல்லவில்லையே! முடிவு இனிக்கவில்லை!
ReplyDeleteமணி, படிங்க. நல்வரவு. :)
ReplyDeleteசுரேஷ், சில கதைகள் நாம் ஊகிக்கும்படியான முடிவைக் கொண்டிருக்கும். இந்தக் கதை இப்படித் தான் முடிந்தது என்பதை மட்டும் நிச்சயமாய்ச் சொல்லுவேன். காரணம் ஏதும் சொல்லப்படவில்லை. அமாநுஷ்யக் காரணம் தான். அமாநுஷ்ய நிகழ்வுகள் தான் காரணம். நான் புரிந்து கொண்டது அப்படித் தான். :))))
ReplyDeleteஎங்கேனும், யாரேனும் ஒருத்தர் மூலத்தைப் படித்திருக்க மாட்டார்களா? அவங்க வந்து சொல்லும் வரை காத்திருக்கணும். அல்லது இந்தப் புத்தகத்தைத் தேடணும். அந்தக் கதாநாயகனின் பெண்ணின் பெயர் லூசி என்பதற்கு மேல் வேறெதுவும் நினைவிலும் இல்லை. :)
ReplyDeleteமுடிவில்லாத முடிவு. ஒரு நிறைவு இல்லாத முடிவு. (இதோடு இன்னும் ஏதோ இரண்டு மூன்று வரிகள் சேர்த்து முதலிலேயே பின்னூட்டம் இட்டிருந்தேன். என்ன ஆச்சு என்றே தெரியவில்லை) இப்படி புரிந்து கொள்ளாத மனைவியும்யும் இருப்பாளா! :)))
ReplyDeleteஒரு இனம் தெரியா அமாநுஷ்ய சக்தியால் ஒற்றுமையும், சந்தோஷமும் கொண்டிருந்த ஒரு குடும்பம் உருக்குலைவது தான் கதையே! அப்படித் தான் நான் புரிந்து கொண்டேன். :))) விவாகரத்து என மூலக்கதையில் இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் மனைவி பிரிந்து சென்றுவிடுவாள். இங்கே விவாகரத்து என்பது என்னுடைய சொந்தச் சேர்க்கை.
ReplyDeleteதான் வாழக் குயில் மற்றப் பறவைக் குஞ்சுகளை எப்படி அழித்தொழிக்கிறதோ, அப்படியே இந்தப் பெண் குழந்தையும் தான் வாழ வேண்டி, தான் மட்டுமே தனியாக வாழ வேண்டி மற்றக் குழந்தைகளை அழித்தொழிக்கிறாள்.
ReplyDelete