பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சிறிது தூரத்தில் தான் தொட்டிப் பாலம் இருந்திருக்கிறது. ஆனால் அதை அந்த ஓட்டுநர் எங்களுக்குத் தெரிவிக்கவே இல்லை. திருவட்டாறிலிருந்தும் 3 கிலோ மீட்டருக்குள் தான் இருந்திருக்கிறது. ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து வெளியே வரும்போதே இரண்டு மணிக்கு மேல் ஆனதால் நேரே கன்யாகுமரிக்குக் கூட்டிச் சென்று விட்டார். போகும் வழியிலேயே ஒரு ஓட்டலில் ரங்க்ஸும், ஓட்டுநரும் சாப்பாடு சாப்பிட்டார்கள் . நான் சப்பாத்தியும் லஸ்ஸியும் வாங்கிக் கொண்டேன். பின்னர் கன்யாகுமரிக்கு மூன்றரை மணிக்கே போய்விட்டதால் அங்கே ரயில் நிலையத்தில் போய் எங்கள் வெள்ளிக்கிழமைக்கான பயணச்சீட்டை ரத்து செய்து விட்டு அங்கேயே நாலு மணிக்குக் கோயில் திறக்கும் வரை உட்கார்ந்திருந்தோம். பின்னர் கோயில் திறக்கும் நேரத்துக்கு மெல்ல மெல்ல கடற்கரை அருகே கொண்டு விட்டார் ஒட்டுநர்.
அந்த நீண்ட கடற்கரையில் நடந்து கொண்டே இன்னொரு முனைக்குச் செல்ல முயன்றோம். நடுவில் நிறையக் கடைகள். பலவற்றில் ஏலம், முந்திரி, கிராம்பு, மிளகு போன்ற வாசனைப் பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தனர். ஓட்டுநரைத் துணைக்கு வைத்துக் கொண்டு அவர்களிடம் பெசி வீட்டுக்குக் கொஞ்சம் வாங்கிக் கொண்டோம். பின்னர் கடற்கரை நீளம் அதிகமாக இருந்தபடியால் ஓட்டுநர் எங்களைக் கோயில் வாசலில் இறக்கிவிடுவதாகச் சொல்லி மீண்டும் அழைத்துச் சென்றார். மேலும் அங்கே தான் முக்கடலும் சங்கமிக்கும் முனை உள்ளது. இது கடற்கரையில் நடக்கையில் இருவிதமான கோணங்களில் இருந்து எடுத்த படங்கள்.
அலைகள் ஆர்ப்பரித்திருக்குமே கீதா.. அழகான படங்கள்.
ReplyDeleteஅப்படி ஒண்ணும் ஜாஸ்தியாத் தெரியலை! வங்காளவிரிகுடாப்பக்கம் கொஞ்சம் அலைகள் தென்பட்டன. இந்து மஹாசமுத்திரமும், அரபிக்கடல் பகுதியும் மேல்பார்வைக்கு அமைதியாகக் காட்சி அளித்தது. மூன்றும் ஒவ்வொரு நிறம். நேரில் பார்த்து அனுபவிக்கணும்.
Deleteசுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சென்றிருக்கிறேன். விவேகானந்தர் பாறையும் சென்று வந்தேன்.
ReplyDeleteம்ம்ம்ம்ம் நாங்களும் 89 ஆம் வருடம் போனோம். அப்போ விவேகாநந்தர் பாறையெல்லாம் போனோம்.
Deletehttp://rockthestock.biz/simple-off-grid-system-plans-review/
ReplyDeletehttp://appmobilebotreview.com/simple-off-grid-system-plans-review/
சுட்டிக்கு நன்றி, பார்க்கிறேன்.
Deleteநான் கன்னியாகுமரி போய் வந்து 30 வருடங்களாகி விட்டது எவ்வளவு மாற்றங்களோ....
ReplyDeleteஎனது கட்டுரைப்போட்டி காண வருக சகோ..
உண்மை கில்லர்ஜி, நிறையவே மாற்றங்கள்! :(
Deleteகன்னியாகுமரியின் அழகே தனி. நன்றாக ஊர் சுத்தியுள்ளீர்கள். ஹாஹா... வாழ்த்துக்கள்.
ReplyDeleteபழைய விச்சுவா? இது புதுசா? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete*
ReplyDelete**
ReplyDelete!!
Deleteஇந்த பதிவு படிக்காம எப்படியோ மிஸ் ஆகிட்டுது! இன்னிக்கு பார்த்தாச்சு! நன்றி!
ReplyDeleteஅட எங்க ஊரு! ம்ம்ம் பல வருடங்கள் ஆயிற்று சென்று...இப்போது நீங்கள் பதிந்ததும். செல்லும் ஆசை வந்துவிட்டது...ம்ம்ம்
ReplyDeleteகீதா