இன்றைய தினத்துக்கான தேவி மஹாகௌரி ஆவாள். ஒரு சிலர் நாரசிம்ஹி எனவும் அழைப்பார்கள். ஒன்பது வயதுப் பெண் குழந்தையை இன்றைய தினம் "துர்கை"யாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றைய தினம் அம்பாளைக் கருணாமூர்த்தியாக அலங்கரிப்பார்கள். ரக்தபீஜ வதம் ஆனபிறகு சாந்த சொரூபியாக வீற்றிருக்கும் கோலத்தில் அபய ஹஸ்தம் காட்டிய வண்ணம் கரும்பு வில், மலர் அம்பு ஏந்திய வண்ணம் அம்பிகையை அலங்கரித்து வழிபடுதல் நன்மை பயக்கும். ரிஷபத்தின் மீது அமர்ந்த நிலையிலும் அம்பிகையை அலங்கரித்து மஹாகௌரியாக வழிபடலாம்.
இன்னும் சிலர் மஹாகௌரியான அம்பிகையை அன்னபூரணியாகப் பாவித்துக் கொண்டு அன்னபூரணியாகவும் அலங்கரிப்பார்கள். இன்றைய தினத்துக்கான கோலம் காசுகளால் பத்மம் வரையப்பட வேண்டும் அர்ச்சனைக்கு விபூதிப்பச்சை உகந்தது எனினும் இன்றும் வெண்தாமரை மலர்களும், முல்லை மலர்களும் அம்பிகையை அலங்கரிக்கப் பயன்படுத்தலாம். வெள்ளையும் பச்சையும் கலந்த வண்ணத்தில் ஆடை,, ஆபரணங்களைக் குழந்தைக்குக் கொடுக்கலாம். இன்றைய தினம் அரிசி, தேங்காய் சேர்த்த நெய்ப்பாயசம் நிவேதனத்துக்கு உரியது
படங்களுக்கு நன்றி விக்கி பீடியா
நெய்ப் பாயசம் செய்முறை:
அரைக்கிண்ணம் பச்சை அரிசி களைந்து ஊற வைக்கவும். ஒரு மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காயை மிக்சி ஜாரில் போட்டு இரண்டு,மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியையும் மிக்சியில் போட்டுக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். மூன்றாம் தேங்காய்ப் பாலில் அரைத்த அரிசி விழுதைப் போட்டு வேக வைக்கவும். ஒரு கிண்ணம் தூள் செய்த வெல்லப் பொடியை அரிசி நன்கு குழைய வெந்ததும் சேர்க்கவும். இரண்டாம் தேங்காய்ப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். பின் பாயசம் கரண்டியால் எடுக்கும் அளவு தோசை மாவு பதத்துக்கு கெட்டிப் பட்டதும் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு நிமிஷம் கொதிக்க வைத்துக் கீழே இறக்கவும். நெய்யில் முந்திரி, திராக்ஷை வறுத்து தேங்காய்ப் பால் எடுத்தது போக இருக்கும் தேங்காய்ச் சக்கையையும் நெய்யிலேயே வறுத்துப் பாயசத்தில் சேர்க்கவும்.
இன்றைய தினமே ஒவ்வொருவர் கொண்டைக்கடலைச் சுண்டல் செய்கின்றனர். அதற்கு பதிலாக நான் வேர்க்கடலைச் சுண்டல் செய்திருக்கேன். :)
வேர்க்கடலை கால் கிலோவைக் களைந்து கல்லரித்து முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு பின் மறு நாள் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். நன்கு குழைய வெந்தபின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், பெருங்காயப் பொடி தாளித்துக் கொண்டு வெந்த கடலையைச் சேர்த்துக் கிளறிப் பின்னர் தேவையானால் சாம்பார்ப் பொடியைச் சேர்க்கவும். அல்லது மி.வத்தல் இரண்டும் கொஞ்சம் கொத்துமல்லி விதையும் சேர்த்து எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொண்டு அந்தப் பொடியையும் தூவலாம். பின்னர் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். சிலருக்குப் பல்லுப்பல்லாகக் கீறிப் போட்டால் பிடிக்கும். அப்படியும் போடலாம்.
மி, வ? கொஞ்சம் காரம் ... பரவால்ல....
ReplyDeleteஹிஹிஹி, நேத்திக்குக் கொஞ்சம் நிறையப் போட்டிருந்தேன். இரண்டு வீடுகளுக்குச் செல்லும்போது கையில் எடுத்துப் போய்க் கொடுத்தேன். ஆகவே அதற்குத் தகுந்தாற்போல் மி.வ. கூடப் போட்டேன். மற்றபடி சுண்டலில் காரம் எல்லாம் இல்லை. :)
Deleteஇன்றைய சுண்டலும் சுவையானதே... நன்றி
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteநெய்ப்பாயாசம் நல்லா இருக்கும் போலேருக்கே.. கொஞ்சம் குடுங்க.. திகட்டற அளவு ஸ்வீட் போடலை இல்லை?
ReplyDeleteவேர்க்கடலை சுண்டல்...? ரெண்டு போதும்.
வேர்க்கடலைச் சுண்டல் பிடிக்காதா? நெய்ப்பாயசத்துக்கே வெல்லம் சேர்ப்பதில் தான் சுவையே இருக்கு! :) இதிலேயே வாழைப்பழங்களை நறுக்கிச் சேர்க்கலாம். இலை அடை பண்ணிச் சேர்க்கலாம். முழுக்க முழுக்க கேரளா பாணி! (அப்படினு நினைக்கிறேன்.) எங்க அம்மா விஷுவன்னிக்கு இந்தப் பாயசம் தான் செய்வாங்க!
Deleteவேர்க்கடலை சுண்டல்... -- எனக்கு பிடித்த சுண்டல் வகை! :) ஒரு கை கூடவே எடுத்துக் கொண்டேன்! நன்றி.
ReplyDeleteநல்லவேளை! சீக்கிரமா வந்தீங்களே! நேத்திக்கு ஒரு சி.பையர் முதலில் கொடுத்ததைச் சாப்பிட்டுட்டு மறுபடி கேட்டிருக்கார். நான் வீட்டில் இல்லை. நம்ம ரங்க்ஸ் சுண்டல் கொஞ்சமா இருக்கேனு கொஞ்சம் போலக் கொடுத்து அனுப்பிட்டார். அப்புறமா ஒரு கைப்பிடிச் சுண்டல் மீதி! :)
Deleteவே. சு. அங்கே... நானோ இங்கே.. என்ன வாழ்க்கைடா சாமி?
ReplyDeleteஹாஹாஹாஹா!
Delete