எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 10, 2015

பதிவர் விழாவுக்கு வாழ்த்துகள்!

நாளை நடக்கப் போகும் பதிவர் விழாவில் கலந்து கொள்ள முடியாது. உடல்நலமும் சரியில்லை. அதோடு வேறு வேலைகளும் இருக்கின்றன. இந்தப் பதிவர் விழாவில் கலந்து கொள்ளுவதற்காகத் திரு ஜி.எம்.பி. என அனைவராலும் அழைக்கப்படும் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை பெண்களூரில் இருந்து திருச்சி வந்து சேர்ந்திருக்கிறார். சமயபுரம் மாரியம்மன் கோயில் போய்விட்டுப் பின்னர் ரங்கநாதரையும் தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து எனக்குத் தொலைபேசினார் அவரது இரண்டாவது மகன். நானும் உடனே அவர்களை வரச் சொல்லிவிட்டு எதிர்பார்த்துக் காத்திருந்தேன். காலை ஆகாரத்துக்கே வரச் சொல்லி இருந்தேன். ஆனால் அது முடியாது என உடனே பதில் அனுப்பி விட்டார். ஆகவே கடையில் வாங்கி மணையில் வைத்தோம்.

சிறிது நேரமே இருந்தனர். திரும்பவும் லாட்ஜுக்குச் சென்று சாப்பிட்டு மாலை நண்பர்கள் திரு ரிஷபன், திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, திரு வைகோ ஆகியோருடன் சந்திப்பு இருப்பதால் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். நாளை புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்புக்குச் சென்று பின்னர் அங்கிருந்தே நேரே பெண்களூர் செல்கின்றனர். தந்தையை கவனமாகப் பார்த்துக் கொண்டு அக்கறையுடன் மகன்கள் இருவரும் செல்லவேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது பார்க்க ரொம்பவே சந்தோஷமாகவும், மனதுக்கு நிறைவாகவும் இருந்தது.  தான் வரைந்த படங்களை திரு ஜிஎம்பி அவர்கள் கைபேசியில் படமாக எடுக்கப்பட்டிருப்பதைக் காட்டினார்.  முன் போல் உடல்நிலை இல்லை என்பதையும், படங்கள் வரைய முடியவில்லை என்றும் வருத்தப்பட்டார். இந்த வயசுக்கு அவர் சொல்வது பொருத்தமாக இருக்கிறது. ஆனால் என்னால் எல்லாம் இது கூட முடியலையே என நினைத்தால் இன்னமும் வருத்தமாக இருக்கிறது. இதெல்லாம் செய்தால் தூசி, தும்பு வரும் என்பதாலும் அலர்ஜி அதிகமாகும் என்பதாலும் என்னைக் கற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

காஃபி டிகாக்‌ஷன் எல்லாம் போட்டு வைத்திருந்தேன். ஆனால் காஃபி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. லஸ்ஸி கொடுக்கலாமான்னதுக்கும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. சரி, அவங்களும் வயசானவங்க தானே! அப்படி எல்லாம் சாப்பிட முடியாது! என மனசைத் தேத்திக் கொண்டேன். கடைசியிலே நம்ம ரங்க்ஸ் விருப்பப்படி (வரும் எல்லோரையும் போய்ப் பார்க்கச் சொல்லுவார்) மொட்டை மாடியைப் பார்த்துட்டுக் கிளம்பிட்டாங்க. அவங்க கிளம்பின கொஞ்ச நேரத்திலே ருக்மிணி சேஷசாயி அம்மா கூப்பிட்டுப் புதுக்கோட்டை போகலாம் வரியான்னாங்க! ரஞ்சனி வராங்களாம். நான் எங்கேயும் போகலை! ரஞ்சனி வந்தால் அழைச்சுட்டு வாங்கனு சொல்லிட்டேன். அவங்க பாவம் துணைக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறாங்க. இதைப் படிக்கும் திருச்சி வாழ் பதிவர்கள் யாரும் புதுக்கோட்டைக்குப் போனால் ருக்மிணி அம்மாவையும் அழைத்துச் செல்லுங்கள்.

பதிவர் விழாவில் நாளை பரிசு பெறப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.  ஆரம்ப காலத்தில் ஒரு சின்ன சந்திப்பாக சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. பின்னர் மெல்ல மெல்லச் சென்னையிலேயே மண்டபம் எடுத்துப் பதிவர் விழாவாக நடத்தினார்கள். அதன் பின்னர் இப்போது தான் முறையாகத் திட்டம் போட்டு ஒவ்வொரு வருஷம் ஒவ்வொரு ஊரில் என முடிவு செய்து போன வருஷம் மதுரையிலும், இந்த வருஷம் புதுக்கோட்டையிலும் நடத்தினார்கள்; நடத்துகிறார்கள் அடுத்த வருஷம் திருச்சியில் நடந்தால் பார்க்கலாம்.

இந்தப் பதிவர் விழாவுக்காக உழைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும். அதிவேக சுறுசுறுப்பையும், திறமையையும் காட்டி உழைக்கின்றனர்.
வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா

வாழ்த்துகள், பாராட்டுகள்!

14 comments:

  1. உங்கள் மனசு பேசுவதை வரிகளாய்ப் படித்தேன். ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறீர்கள். சில விஷயங்களில் அதைத் தாண்டி வர வேண்டும். வர மனத்தளவில் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார், எதைச் சொல்றீங்கனு புரியலை! வரையக் கத்துக்கிறதைப் பத்தியா? அப்படி எனில், என் உடல்நிலையில் நான் கவனம் செலுத்தியே ஆகணும்! கடுமையான நுரையீரல் பாதிப்பிலிருந்து கடந்த நாலைந்து வருடங்களாகத் தான் சிரமமின்றி வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஆகவே வீட்டில் உள்ளவர்களுக்கும் கஷ்டம் கொடுக்காமல், எனக்கும் சிரமம் இல்லாமல் இருக்க வேண்டியே தஞ்சாவூர்ச் சித்திரக்கலை கற்கும் ஆசையை விட்டுவிட்டேன். இங்கே எங்க குடியிருப்பு வளாகத்துக்குப் பக்கத்திலேயே சொல்லித் தராங்க! :) மற்றபடி அவ்வப்போது அந்த ஆசை வந்துட்டுப் போறதை மறுக்கவோ, மறைக்கவோ முடியலை! :) குழந்தைங்க எங்கேயோ இருக்காங்க! அங்கே வந்துடுங்க, பச்சை அட்டை வாங்கித் தரோம்னு தான் சொல்றாங்க. நாங்க தான் பிடிவாதமா இங்கே இருக்கோம். ஆகவே இருவரில் ஒருவருக்கு உடல்நலமில்லை என்றாலும் பிரச்னையே! பார்த்துக்க ஆள் வேணுமே! ஆகவே முன்னெப்போதையும் விட இப்போது தான் உடல் நலத்தில் அதிக கவனம் வைக்கிறோம். :)

      Delete
    2. எனது 'மனம் உயிர் உடல்' தொடரில் எதைத் தாண்டி வரவேண்டும் என்று சமயம் வாய்க்கும் பொழுது குறிப்பால் உணர்த்துகிறேன். புரியலை'ன்னு இப்போ சொல்றது அப்போ புரியலாம். நன்றி.

      Delete
  2. ஓ... ஜி எம் பி ஸார் வந்து சென்றாரா? உற்சாக இளைஞர்.

    வீட்டு விசேஷத்தின் காரணமாக என்னாலும் பதிவர் சந்திப்புக்குச் செல்லமுடியவில்லை. விழா சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வருவீங்களோனு எதிர்பார்த்தேன். ஜிஎம்பி சார் உற்சாகமாக இருந்தாலும் வீட்டினர் கவலைப்படுகின்றனர். அதுவும் அவர் ஒரு முறை கோயிலில் மயக்கமுற்று விழுந்ததில் இருந்து தனியாக விடப் பயப்படுகின்றனர். நியாயம் தானே!

      Delete
  3. தங்களின் பங்களிப்புக்கு நன்றி சகோ எனது புதுக்கோட்டை பதிவை காண அழைக்கிறேன்,,,,,

    ReplyDelete
    Replies
    1. கட்டாயமா வரேன் கில்லர்ஜி! எல்லோரும் போட்டுக் கொண்டு இருந்ததால் கடைசியில் போடலாம்னு இன்னிக்குச் சரியான வாய்ப்பாகவும் அமையவே பகிர்ந்தேன்.

      Delete
  4. ஆஹா இன்றைக்கே திருச்சியில் ஒரு சந்திப்பா.... மகிழ்ச்சி....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சின்ன சந்திப்பு! எல்லோரையும் கூப்பிடும் எண்ணம் இருந்தது. என் உடல்நிலை காரணமாக இழுத்துப் போட்டுக்க வேண்டாம், சரியாக உபசரிக்க முடியாது என்று விட்டு விட்டோம். :(

      Delete
  5. திருச்சியில் Hotel Breeze இல் தங்கியிருந்த மூத்த வலைப்பதிவர் அய்யா G.M.B அவர்களைச் சந்திக்க சென்றவர்களில் நானும் ஒருவன். (மற்றவர்கள் V.G.K , ரிஷபன் மற்றும் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ) நான் இவர்களுக்கு முன்பே போய் காத்திருந்தேன்.

    வந்தவுடனேயே நீங்கள் எழுதிய இந்த பதிவைப்பற்றி V.G.K சுவாரஸ்யமாக சொன்னார். அவர் சொன்னது போலவே சுவாரஸ்யமாகவே எழுதி இருக்கிறீர்கள். பெங்களூருவை நீங்கள் பெண்களூர் என்று மாற்றியது சரிதான். ஏனெனில் பெங்களூருவில் ஐ.டி துறையில் பெண்கள் அதிகம் (குறிப்பாக தமிழ்ப் பெண்கள்)

    எங்களுக்கு முன்னர் ஆசிரியர் ஜோசப் விஜூ (ஊமைக் கனவுகள்) வந்து பார்த்ததாக ஜீ.எம்.பி அவர்கள் சொன்னார்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வரலாம் எனத் திரு ஜிஎம்பி அவர்கள் கூறினார். மற்றபடி அனைவரையும் எங்கள் இல்லத்திற்கே அழைக்கலாம் என்னும் எண்ணம் இருந்தது. அது முடியவில்லை. வந்து கருத்திட்டமைக்கு நன்றி.ரஞ்சனி நாராயணன் அவர்கள் சகோதரியின் உடல்நலக்குறைவால் அவர்களும் புதுக்கோட்டை விழாவில் கலந்து கொள்ள இயலாது எனத் திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் கூறி இருக்கிறார்கள். அவர்கள் உடல் நலத்திற்கும் பிரார்த்தனைகள். விழாவில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

      Delete
  6. பதிவர் அரங்கம் வரும்போது
    அரங்கனையும் காணவேண்டும்
    ஆசை தீர அவனது சன்னதியில்
    ஆறேழு பிரபந்தங்கள் பாடவேண்டும்

    என்று உள்ளம் நிறைய

    ஆசை இருந்தாலும்

    உடல் என்னை
    சும்மா கிட என்று

    விட்டது .

    விழா வெற்றி பெற
    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. என்னாலும் போகமுடியவில்லை. உடல்நலம் ஒரு காரணம். :)

      Delete
  7. மாலை சந்திப்பின் போது நம் சந்திப்பு பற்றி நீங்கள் பதிவிட்டு விட்டதாக கோபு சார் கூறினார் அசாத்திய சுறு சுறுப்பு பாராட்டுக்கள்

    ReplyDelete