நவராத்திரி வருஷத்திற்கு நாலு முறை கொண்டாடப்படுகிறது. இதில் புரட்டாசி மாதம் வருவதையே விமரிசையாகப் பலரும் கொண்டாடுகிறோம். இதை சாரதா நவராத்திரி அல்லது சரத் நவராத்திரி என்று சொல்கிறோம். தமிழ் மாதமான புரட்டாசி ஐப்பசி மாதங்களில் வரும் இதை ஆஸ்வின நவராத்திரி எனவும் சொல்கின்றனர். இந்தியா முழுவதுமே இந்த நவராத்திரி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அடுத்து வசந்த நவராத்திரி என்பது பங்குனி மாதம் ஶ்ரீராமநவமியை ஒட்டிக் கொண்டாடப்படுகிறது. அடுத்து ஆஷாட நவராத்திரி என்பது ஆடி மாதம் கொண்டாடப்படுகிறது. இன்னொரு நவராத்திரி மாசி மாதம் கொண்டாடப்படும் மாக நவராத்திரி ஆகும்.
மேலே சொன்ன இரு நவராத்திரிகளையும் பெரும்பாலும் சக்தி உபாசகர்களே கொண்டாடுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. இது அவ்வளவாகப் பழக்கத்தில் இல்லை. ஆகையால் இவை இரண்டும் "குப்த நவராத்திரி" அதாவது மறைவான நவராத்திரிகள் எனப்படுகின்றன. இவற்றில் வசந்த நவராத்திரி பெரும்பாலும் கோவில்களிலும், ஒரு சில பொது அமைப்புகளாலும் கொண்டாடப்பட்டாலும் சாரதா நவராத்திரியைப் போல் அவ்வளவுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது இல்லை. மழை முடிந்து குளிர் தொடங்கப் போகும் காலத்தில் இவை கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது. ஏனெனில் அழைக்காலமும், கோடை காலமும் தொடங்கும்போது கிருமிகள் பரவி நோய் நொடிகள் அதிகரிக்கும். அதன் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அம்பிகையின் சக்தியை வேண்டிப் பிரார்த்திக்கிறோம். சக்தி இருந்தாலே நம் உடல் இயங்கும். இந்த சக்தி நம் உடலில் மட்டும் இருந்து இயங்கவில்லை. அகில உலகத்தையும் இயக்குகிறது. பல்வேறு அமசங்களில் இயக்குகிறது. நம்முடைய ஆன்மசக்தியை பெருக்கி அதன் மூலம் சிவஸ்திதியை அடைவதே நவராத்திரி வழிபாட்டின் முக்கிய நோக்கம். நம் உடலின் நவ துவாரங்கள் வழியாக சக்தி பரவி நாம் உன்னத நிலையை அடைய உதவுகிறது.
நவராத்திரி ஆரம்பிப்பது புரட்டாசி மாத அமாவாசையான மஹாளய அமாவாசை அன்று. அன்றுதான் படிகள் கட்டிக் கொலு வைக்க வேண்டும் அன்று கொலு வைத்தாலும் மறு நாளான பிரதமையிலிருந்தே பண்டிகை ஆரம்பம் எனக் கொள்வார்கள். ஒன்பது துவாரங்களையும் குறிப்பிடும் விதத்தில் ஒன்பது படிகள் கட்டிக் கொலு வைப்பார்கள். இப்போதெல்லாம் அவ்வளவு வைப்பது இல்லை. என்றாலும் கொலு வைப்பதன் தாத்பரியம் ஆன்மா படிப்படியாகப் பரிணாமம் அடைகிறது என்பதைக் காட்டுவது தான். அதற்காகவே கீழே முதல் படியில் ஒன்றுமில்லாத அஃறிணைப் பொருளில் தொடங்குகிறோம். அதன் பின்னர் ஓரறிவு பெற்ற பொருட்கள் முதல் தொடங்கி ஐந்தாம் படி வரை பறவைகள் விலங்குகள் என ஐந்தறிவு பெற்றவைகளின் பொம்மைகளை வைத்துப் பின்னர் ஆறாவது படியில் ஆறறிவு பெற்ற மனிதர்களின் உருவபொம்மைகள். இதில் ஞானிகள், ஆன்மிகப் பெரியோர்கள் இடம் பெறுவர். இப்போதெல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பொம்மை உருவிலே கிடைக்கின்றனர். அவற்றை வாங்கியும் வைக்கலாம். பின்னர் ஏழாவது படியில் ரிஷிகள், ஆசாரியர்கள் போன்றோரின் உருவங்களும், எட்டாவது படியில் மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், மற்றக் கடவுளரின் பொம்மைகள் ஆகியன வைக்கலாம். ஒன்பதாம் படியில் கலசம் வைத்து அம்பிகையை ஆவாஹனம் செய்து மும்மூர்த்திகளையும் தேவியரோடு வைக்கலாம். பஞ்ச க்ருத்ய பராயணாவான தேவி தான் பிரபஞ்சத்தோற்றத்திற்கே காரணம் என்பதை இது நினைவூட்டுகிறது.
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் துர்கையையும், நடுவில் வரும் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவது மரபு. இங்கே வரும் மஹாலக்ஷ்மி என்பவள் ஆதிலக்ஷ்மி ஆவாள். இவளையும் மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மியையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். :)
படத்துக்கு நன்றி விக்கி பீடியா
நவராத்திரி முதல் நாளன்று கொலுவீற்றிருக்கும் அம்பிகையை துர்கையாக அலங்கரிக்கலாம். அன்று இரண்டு வயதுப் பெண் குழந்தையைக் "குமாரி"யாகப் பாவித்து வழிபட்டுக் குழந்தைக்குப் பிரியமானவற்றைப் பரிசுகளாகக் கொடுக்க வேண்டும். ஒரு சிலர் "சைலபுத்ரீ" என்றும் சொல்வார்கள். பொட்டுக் கோலம் போட்டு, எலுமிச்சை சாதம் செய்து பிரசாதமக நிவேதனம் செய்து குழந்தையைச் சாப்பிடச் செய்து மஞ்சள் வஸ்திரம் கொடுக்கலாம். மஞ்சள் பொடி சேர்த்த வெண்பொங்கலும் சாப்பிடச் செய்யலாம். மாலை பாசிப்பயறைச் சுண்டல் செய்து நிவேதனம் செய்யலாம்.
இது நாளைய தினத்துக்கான வழிபாட்டு முறை! இதைத் தவிர ஒவ்வொரு கிழமைக்கும் ஏற்றவகையிலும் அம்பிகையை ஆவாஹனம் செய்தும் வழிபடுவது உண்டு. இது குறித்தும் ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்.

வருஷத்துக்கு நாலு நவராத்திரியா? ஓ..
ReplyDeleteமுதல் படியில் அஃறிணை பொருள் தொடங்கி, படிப்படியாக வைக்கவேண்டிவைகளின் விவரங்கள் இப்போதுதான் அறிகிறேன்.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். லக்ஷம் தரம் எழுதி இருக்கேன். ஒழுங்காவே படிக்கிறதில்லை! :)
Deleteவிரிவான விளக்கம்! நாலு வகை நவராத்திரிகளில் மாசிமாத மாகநவராத்திரி சாவித்திரி அனுஷ்டித்ததாக எங்கோ படித்த நினைவு. நன்றி!
ReplyDeleteஆமாம், எனக்கும் அரைகுறையாக நினைவு!
Deleteவிளக்கவுரைக்கு நன்றி சோக
ReplyDeleteசாரி சகோ என்று படிக்கவும்
ReplyDeleteஓ, அதனால் என்ன பரவாயில்லை! :)
Deleteநவராத்திரி பற்றி தெரியாத நிறைய விஷயங்கள் (ஸ்ரீராம் போலவே நானும்!) தெரிந்து கொண்டேன். நவராத்திரி நல்வாழ்த்துகள், கீதா!
ReplyDeleteஅப்படியா!!!! நன்றி ரஞ்சனி!
Deleteவணக்கம்
ReplyDeleteசிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
Deleteநவராத்திரி பற்றிய சிறப்பான தகவல்கள்... மீண்டும் படித்து ரசித்தேன்....
ReplyDeleteஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு விஷயம்... இப்போதெல்லாம் பல வீடுகளில் ஒன்பது படி வைப்பது கடினம் என்பதால் மூன்று அல்லது ஐந்தோடு முடித்து விடுகிறார்கள்....
ஆமாம், சின்ன வயசுக்காரங்களே அலுத்துக்கறாங்க! :( என்ன செய்வது! பண்டிகைகள் கொண்டாடுவதில் உள்ள ஆர்வம் வர வரக் குறைந்து கொண்டே வருகிறது! :(
Delete