நேற்றைய கடலைப்பருப்புச் சுண்டல் அமோகமா போணி ஆகி இருக்கு! :) அதோட நம்ம பதிவும் தான். கருத்து இல்லைனா என்ன? பார்வையாளர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு வந்திருக்காங்க! க.ப.சுண்டல்னா பிடிக்கும் போல! இன்னிக்கு நோ சுண்டல்! என்னனு சஸ்பென்ஸ்!
சுண்டல் பத்தி அதிகமா எழுதறீங்கனு நம்ம "தளிர் சுரேஷ்" சொல்றார். நவராத்திரிப் பதிவெல்லாம் போடும் எண்ணம் இருக்கலை! திடீர்னு நினைச்சுட்டுப் போடறேன் இதிலே பூஜாவிதிகள், மற்றும் நவ துர்கைகள் பத்தி, சரஸ்வதி பத்தி எல்லாம் ஏற்கெனவே எழுதியாச்சு! "யா தேவி சர்வ பூதேஷு" ஸ்லோகமும் பொருளுடன் போட்டிருக்கேன். ஆகவே இம்முறைச் சும்மாப் பூஜை வழிமுறைகளைச் சுருக்கமாக் கொடுக்கலாம்னு கொடுக்கிறேன். அவ்வளவு தான்.
நவராத்திரி ஆறாம் நாளான நாளைய தினத்துக்கான தேவி காத்யாயனி ஆவாள். துர்கையைத் தான் காத்யாயனி என வழிபடுவதாகச் சொல்வதுண்டு. சிம்ஹவாஹினியான துர்காதேவி தான் காத்யாயனியாக வழிபடப் படுவதாகவும், தமிழ்நாட்டில் காத்யாயனி வழிபாடு மேலைச் சாளுக்கியத்திலிருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது. மேலைச் சாளுக்கியருக்கு அரச வம்சத்துக் குலதெய்வமாய் இருந்த காத்யாயனி தேவியை அவர்களை வெற்றி கொண்ட சோழ நாட்டுச் சேனாபதி ஒருவன் சோழ நாட்டில் காத்யாயனிக்குக் கோயில் எழுப்பியதாகச் சொல்கின்றனர். கேரளாந்தகச் சோழ சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த ஊர் இன்றைய நாட்களில் அம்மன்குடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அம்மன் குடி ஶ்ரீ துர்கை. இந்த் ஊர் என் புக்ககம் ஆன கருவிலிக்குப் பக்கமாக இருக்கிறது.
இன்றைய தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் "சண்டிகா" என்னும் திருநாமத்துடன் வழிபடுவார்கள். நேற்றும் சண்டிகா அல்லது காளிகா என்னும் திருநாமம். இன்றும் இவை இரண்டில் ஒன்றைச் சொல்லி வழிபடுவது மரபு. அம்பிகையை சர்ப்பராஜ சிம்மாசனத்தில் சண்டிகா தேவியாக அலங்கரித்து வழிபடலாம். பருப்பு வகைகளால் தேவியின் திருநாமத்தைக் கோலமாக வரைய வேண்டும்.
திருமணம் ஆகாத பெண்களும் சரி, ஆன பெண்களும் சரி
காத்யாயனி மஹாமாயே மஹாயோகின் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குரு தே நம: என்னும் ஸ்லோகத்தைத் தினமும் சொல்லிக் கொண்டிருப்பது சுகமான இல்வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. தும்பை இலை, பூக்கள் இன்றைய தினம் விசேஷமானவை! வெண் தாமரைப் பூக்களாலும் அர்ச்சிக்கலாம். வெண்ணிறப் பட்டு வஸ்திரங்களைக் குழந்தைக்குக் கொடுக்கலாம். வெண்மையும் சிவப்பும் கலந்த நிறமும் ஏற்கப் படக்கூடிய ஒன்றே. வெண்ணிறத்தில் கல்கண்டுச் சாதம் செய்து குழந்தையைச் சாப்பிட வைக்கலாம்.
ஒரு கிண்ணம் அரிசி, ஒரு கரண்டி பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொண்டு, பாலில் குழைய வேக விடவும். அரை லிட்டர் பாலாவது தேவைப்படும். நன்கு குழைந்த பின்னர் கட்டிக் கல்கண்டை வெந்த சாதக்கலவையில் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கல்கண்டு நன்கு கெட்டிப்பட்டுப் பாகு, சாதக்கலவை எல்லாம் சேர்ந்து வந்ததும், ஏலப் பொடி சேர்த்து முந்திரி, கிஸ்மிஸ் போன்றவைகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம்.
நவராத்திரி சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை அல்லது எள்ளுப் பொடி செய்வதுண்டு. வெண்ணிற எள் அல்லது கரு நிற எள்ளை வாங்கி சுத்தம் செய்து கல்லரித்துக் கொள்ளவும். பின்னர் வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்கவும். பின்னர் வெல்லத்தைத் தூள் செய்து எள்ளோடு கலந்து மிக்சியிலோ அம்மியிலோ பொடி செய்யவும். ஏலப்பொடி சேர்த்து அப்படியே உருண்டையாக உருட்டலாம். எள்ளைப் பொடி செய்யாமல் முத்து உருண்டை நவராத்திரிக்கு உருட்டக் கூடாது!
ஆனால் நம்ம வீட்டிலே இன்று அப்பம். அப்பம் செய்முறை தான் எல்லோருக்கும் தெரியுமே! அதனால் சொல்லலை! :) அப்பம் படம் மட்டும் போடறேன், பண்ணினதுக்கு அப்புறமா! நேற்று இங்கே குடியிருப்பு வளாகத்தின் பெண் குழந்தைகள், ராதை, கிருஷ்ணன், கோபியர் வேஷம் போட்டுக் கொண்டு வந்தார்கள். படம் எடுத்திருக்கேன். பெற்றோரின் அனுமதி கிடைத்தால் பகிர்வேன்.

படிச்சுட்டேன்.
ReplyDeleteநோ அப்பம்! அதுக்குள்ளே நாலு பேர் + பண்ணிட்டாங்க. பார்வையாளர் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அப்பம் பிடிச்சவங்க நிறையப் பேர் இருக்காங்களோ!
Deleteஎனக்கு, எனக்கு!
ReplyDeleteகிடையாது போங்க! உங்களுக்குச் சர்க்கரை இருக்கே! :)
Deleteவாாா! ஒண்ணும் வேணாம் போங்க!
Delete_
பெற்றோரின் அனுமதி பெற்று குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடவும்
ReplyDeleteகேட்டுப் பார்க்கிறேன் கில்லர்ஜி! :)
Deleteசுண்டல் பற்றி நீங்கள் அதிகம் எழுதுவதாகத் தெரியவில்லை.
ReplyDeleteபார்க்கப்போனால் இன்னமும் எழுதவேண்டும் என்றே தோன்றுகிறது.
please write, what day what sundal ? and why? that is significance .related to the Goddesses who are worshipped on various days.
particularly why kadalai paruppu sundal on vijaya dhasami day?
subbu thatha
www.subbuthathacomments.blogspot.com
ம்ம்ம்ம்ம் சு.தா. முன்னர் எழுதின நினைவு இருக்கு. அல்லது வேர்ட் டாகுமென்டில் இருக்கோ? தெரியலை, பார்க்கணும். :) பாராட்டுகளுக்கு நன்றி.
Deleteஆமாம் படம் பிடித்தால் மட்டும் போதாது. அதை வெளியிட ஒப்புதலும் தேவை.
ReplyDeleteபெற்றோர் அனைவரும் ரொம்பவே வேலை மும்முரம். யாரையும் பார்க்கக் கூட முடியலை! பார்ப்போம்! அனுமதிச்சால் போடுவேன். :)
Deleteஅட! குட்டீஸ்! முடிஞ்சா அனுமதி கிடைத்தால் போடுங்கள் குட்டீஸ் என்றைக்குமே அழகுதான்!
ReplyDeleteஆமாம், நேற்றும் அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அப்போப்பார்த்து நிறையப் பேர் இருந்ததால் உடன் படம் எடுக்கலை! :)
Delete