எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 31, 2015

உங்க வீட்டிலே மதுரையா, சிதம்பரமா? எங்க வீட்டிலே திருச்செங்கோடு! :)

நாமக்கல் ஆஞ்சநேயர் 18 அடி உயரம் என்று சொல்கின்றனர். கையில் ஜபமாலையும் வைச்சிருக்கார். வாளும் வைச்சிருக்கார். அதுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இவர் பல காலமாக இங்கே இருப்பதாகப் பட்டாசாரியார் சொல்கிறார். ஒரு சமயம் மஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணுவின் நரசிம்மாவதாரத்தைப் பார்க்க விரும்பினாளாம். அதற்கு விஷ்ணு பூலோகத்தில் கமலதீர்த்தக்கரையில் தவம் செய்யச் சொல்லி அனுப்பி வைக்கிறார். மஹாலக்ஷ்மியும் அங்கே தவம் செய்கிறாள். அப்போது கண்டகி நதியில் நீராடிய அனுமன் அங்கிருந்து சாளக்ராமம் ஒன்றை வழிபாட்டுக்காக எடுத்து வந்தார். விண்ணில் பறந்து வருகையில் கமலதீர்த்தத்தைக் காண்கிறார். இத்தலத்தில் நீராடலாம் எனக் கீழே இறங்கினவர் கையில் உள்ள சாளக்ராமத்தை எங்கே வைப்பது எனப் பார்க்கிறார். கீழே வெறும் தரையில் வைக்கக் கூடாது என்பதால் சுற்றும், முற்றும் பார்த்தவருக்கு அங்கே மஹாலக்ஷ்மி தவம் செய்து கொண்டு உட்கார்ந்திருக்கும் காட்சி தென்பட்டது. உடனே மஹாலக்ஷ்மியிடம் போய் அவளை வணங்குகிறார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

தவம் கலைந்து பார்த்த லக்ஷ்மி அனுமனைப் பார்க்கிறாள். அனுமனிடம் அவள் இங்கே வந்திருக்கும் காரணம் கேட்க நரசிம்மரைப் பார்க்கும் ஆவலில் வந்ததை லக்ஷ்மியும் சொல்கிறாள். பின்னர் ஆஞ்சநேயர் தான் நீராடி வரும்வரையில் கையில் வைத்திருக்குமாறு சாளக்ராமத்தை லக்ஷ்மியிடம் கொடுக்கிறார். விரைவில் வருமாறு கூறிய லக்ஷ்மி அவர் வர தாமதம் ஆனால் தான் சாளக்ராமத்தைத் தரையில் வைத்துவிடுவேன் என்றும் சொல்கிறாள். நினைத்தபடியே ஆஞ்சநேயர் வரத் தாமதம் ஆக, சாளக்ராமத்தைக் கீழே வைத்துவிடுகிறாள் லக்ஷ்மி. அந்த சாளக்ராமத்தைப் பெயர்த்து எடுக்க ஆஞ்சநேயர் முயன்றபோது அது மாபெரும் மலையாக உருவெடுத்துவிட்டது. அங்கே நரசிம்மரும் தோன்றி மஹாலக்ஷ்மி, ஆஞ்சநேயர் இருவருக்கும் அருள் பாலித்தார். மஹாலக்ஷ்மியை மார்பில் நரசிம்மர் தரித்துக் கொள்ள நரசிம்மரை வணங்கியவாறு அனுமனும் அங்கேயே தங்கிவிட்டார்.

அங்கே தரிசனம் நன்றாகவே செய்து வைத்தார் பட்டாசாரியார். அதன் பின்னர் நாமகிரித் தாயாரையும் போய்ப் பார்த்தோம். நாமகிரித் தாயாரிடம் வேண்டினால் கணக்கு நன்றாக வருமாம். என்ன செய்யறது? ரொம்ப லேட்! பள்ளி இறுதி வகுப்புக்கு முன்னாடியாவது தெரிஞ்சிருக்கலாம். கணக்கிலே 75%மார்க் தான் எடுத்தேன். நூற்றுக்கு நூறு எடுத்திருக்கலாம். கொடுத்து வைக்கலை!  பங்குனி உத்திரத்தன்று இங்கே சேர்த்தி உற்சவம் முன் மண்டபத்தில் ஊஞ்சலில் இருவரையும் அமர்த்தி நடக்கிறது.  திருமணத்தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்கும் இங்கே பிரார்த்தித்துக் கொள்வார்களாம்.

மற்றவை ஏற்கெனவே சொல்லிட்டேன். :) அருமையான குடவரைக் கோயில். மேலே போக முடியலைனு வருத்தம் தான். ஆனால் என்ன செய்வது? போக முடியாது. அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சத்திரத்துக்குச் சென்றோம். ஒரு சினிமா தியேட்டரைக் கல்யாண மண்டபமாக மாற்றி இருக்கிறார்கள். சக்தி கலை அரங்கம் என்னும் அந்தச் சத்திரம் கோயிலில் இருந்து 2, 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நல்ல பசி! அங்கே போனதும் நேரே காலை ஆகாரம் கொடுக்கும் இடத்திற்குச் சென்றோம். இங்கே ஒரு புதுமையாக ப்ரெட் சான்ட்விச்சும் காலை உணவில் பரிமாறினார்கள். ஸ்வீட் என்ற பெயரில் ஒரு வஸ்து! என்னனு கண்டுபிடிக்க முடியலை!  மற்றவை நன்றாகவே இருந்தன. காலையில் பூரிக்குப் பதில் சப்பாத்தி, குருமா/ காலை வேளை மசாலா சேர்த்த உணவு வேண்டாம்னு சொல்லிட்டு இட்லி, கொஞ்சம் பொங்கல் மட்டும் சாப்பிட்டேன். பின்னர் திருமணம் முடிய பத்தரை மணி ஆயிற்று, திருமணம் முடிந்ததும் தம்பதிகளை வாழ்த்திவிட்டு முடிந்த வரை சாப்பிட்டுவிட்டுத் திருச்செங்கோடு போகலாம்னு கிளம்பினோம்.

நம்ம ரங்க்ஸ் நேரே சமையல் ஒப்பந்ததாரரையே சந்தித்துக் கேட்டார். இப்போத் தான் உலையே வைச்சிருக்கோம்னு பதில் வந்தது. எப்படியும் சாப்பாடு போட ஒன்றரை மணி நேரத்துக்குக் குறையாது. தாமதமாக வந்த சிலருக்கு அப்போது கூடக் காலை ஆகாரம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆகவே திருச்செங்கோடு போயிடலாம்னு முடிவு செய்து கொண்டு நாங்கள் மூவரும் கிளம்பினோம்.  நாமக்கல்லில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரம். பல வருடங்களாகப் பார்க்க நினைத்த க்ஷேத்திரம். மலை மேலேயே வண்டிகள் போகும் வண்ணம் பாதை அமைத்திருக்கிறார்களாம். ஆகவே மலை ஏற வேண்டாம்.  என்னை யாரானும் உங்க வீட்டிலே மதுரையா, சிதம்பரமானு கேட்டால் நான் திருச்செங்கோடுனு பதில் சொல்லுவேன். :)

18 comments:

  1. எங்கள் வீட்டில் ஆண்டாண்டு காலமாக தேவகோட்டைதான்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, புரியலை! :)

      Delete
  2. ஸ்வாரஸ்யமான விவரணைகள். வீட்டுல நீங்க எப்படின்னு என்னைப் கேட்டுட்டா... சொல்ல எனக்கென்ன பயமா? சிதம்பரம்... சிதம்பரம்னேன்.. என் சிவகாமி சொல்லிட்டா.... நான் பம்பரம்... பம்பரம்னேன்... யாரு கிட்ட ??

    ReplyDelete
    Replies
    1. அதானே, மோகன் ஜி, தைரியமான ஆள் தான் நீங்க! சொல்லணுமா! :)

      Delete
  3. தலைப்பின் காரணம் அடுத்த பதிவில்தானா? ம்ம்ம்..

    ReplyDelete
    Replies
    1. அடுத்தடுத்த பதிவுகள் வந்தாச்சு! இனிமேலாவது எழுதணும்! :) எங்கே, ஒண்ணு மாத்தி, ஒண்ணு மாத்தி ஏதேதோ பிரச்னைகள்! :)

      Delete
  4. மதுரையா, சிதம்பரமா , திருச்சென்கோடா என்றால் புரியவில்லை.

    மதுரையில் சேர்ந்தேன்.

    சிதம்பரமும் சென்றேன். தற்போழுது
    திரு ஓடு ஒன்று கையில் இல்லாதது தான் . குறை.

    அது கிடக்கட்டும். அந்த மதுரை மீனாக்ஷி கையில் தானே
    அண்டம் எல்லாம் இருக்கிறது.

    திருச்சங்கு ஓடு தான் திருச்செங்கோடு ஆகியிருக்குமோ ??

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. இல்லை செங்கோடு தான் திருச்செங்கோடு ஆகி உள்ளது சு.தா.

      Delete
  5. ஹஹஹ நல்ல பதில் கடைசியில்...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நன்றிங்க!

      Delete
  6. நாமக்கல்லில் நாங்கள் சென்றபோது நல்ல கூட்டம் பட்டாச்சாரியர் உரக்கச் சொன்னாலும் கூட்டத்தின் சப்தத்தில் பலது காதில் விழவில்லை! உங்கள் விளக்கம் அறிந்து மகிழ்ந்தேன். நம்ம வீட்டுல கூட்டாட்சிதான்!

    ReplyDelete
    Replies
    1. பதில் கொடுத்தேன் போகலை! ரொம்ப வேகமாத் தட்டச்சறேனாம்! அதனால் ஏத்துக்க மாட்டேன்னு ப்ளாகர் திட்டிடுச்சு! :)

      Delete
    2. இப்போ பதில்! நாங்க காலையிலேயே போயிட்டதால் கூட்டம் இல்லைனு நினைக்கிறேன். உங்க வீட்டில் கூட்டாட்சியா? வாழ்க! வளர்க! :)

      Delete
  7. இன்னும் எத்தனைஒக் கோவில்கள் விக்கிரகத்தை எடுக்க முடியாமல் கோவிலாகினவோ தெரியவில்லைஎங்கள் வீடு சிதம்பரமாய் இருந்து திருச்செங்கோடாய் மாறி இப்போது மதுரையாய் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஜிஎம்பி சார்! எல்லா வீட்டிலும் அப்படித்தான்னு நினைக்கிறேன். :)

      Delete
  8. கோவில் பற்றிய கதைகள் நன்று. தலைப்பில் கேட்ட கேள்விக்கு பதில் நான் சொல்ல மாட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, வேணாம், வேண்டாம்! புரிஞ்சது! :)

      Delete
  9. நாமக்கல் தரிசனம் செய்த நினைவுகள் வந்து போனது.

    ReplyDelete