2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாங்க அம்பத்தூர் வீட்டில் இருந்தப்போ அப்படி ஒண்ணும் பெரிய மழைனு பெய்யலை! ஆனாலும் தெருவில் எனக்கு முழங்கால்/இடுப்பு (?) அளவுத் தண்ணீர் இருந்தது. பல வீடுகளிலும் தண்ணீர் புகுந்தாலும் எல்லோருக்கும் மாடி இருந்ததால் அங்கே போயிட்டாங்க. எங்களுக்கு மாடி இருந்தாலும் மொட்டை மாடி தான். :( கட்டலை! நல்லவேளையாக் கட்டலையேனு இப்போத் தோணுது! :) இந்த வருஷத்திய அதீத மழையில் வீட்டுக்குள்ளே தண்ணீர் புகாமல் இருக்குமா? நாலு நாட்களாக நம்ம ரங்க்ஸுக்கு அதே கவலை! வீட்டில் குடித்தனம் யாரும் இல்லை நல்லவேளையா! வீட்டைப் பார்த்துக்கறவங்களைப் போய்ப் பார்த்துத் தொலைபேசச் சொல்லி இருந்தோம். அவங்களும் கடமை தவறாமல் போய்ப் பார்த்துட்டுப் படங்கள் எடுத்து அனுப்பி இருக்காங்க. நம்ம பங்குக்கு நாமும் சென்னை மழைனு படம் போட வேண்டாமா?
இது ஹால் எனப்படும் கூடம்!
ஹாலில் இருந்து கொல்லைக் கிணற்றடிக்குச் செல்லும் தாழ்வாரம்
மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் பிரதானப் படுக்கை அறை
குளியலறை
நான் ஆட்சி செய்த சமையல் அறை. டைல்ஸ் எல்லாம் இவ்வளவு அழுக்கா இருந்ததில்லை! என்ன செய்யறது! :)
ஆனால் இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்னும் அளவிற்கு ஓரிரு இடங்களில் தண்ணீர்க் கடலாகக் காட்சி அளிக்கிறது. ஆகவே மனசைத் தேத்திக்க வேண்டியது தான். :) இத்தனைக்கும் 2005 ஆம் ஆண்டு பெய்த மழையின் அளவை விட இந்த மழை அளவு மிக மிகக் குறைவு. அதுக்கே இப்படி. ஏனெனில் இந்தத் தண்ணீரெல்லாம் கொரட்டூர் ஏரிக்குப் போகணும். வடிகால் வாய்க்கால் வழக்கம்போல் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுப் பட்டாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே தண்ணீர் எங்கே போகும்! வழி தெரியாமல் திக்குத் திசை தெரியாமல், புரியாமல் தடுமாறித் தத்தளிக்கிறது.
இதற்கான வரவேற்பைப் பொறுத்துப் படங்கள் தொடரும்.
அட ராமா😠
ReplyDeleteவாங்க துளசி, ஒரு வேற்று நபரைப்போல் பார்க்கக் கற்றுக் கொண்டு விட்டேன். என்னளவில் பாதிப்பெல்லாம் இல்லை! :)
Deleteஉள் உள்ளம் வீடு பெற, அரங்கன் குடி கொண்டு இருக்கும் வீடு திருவரங்கம் வந்தாலும்
ReplyDeleteமனம் என்னமோ நம்ம வீடு
அம்பத்தூரில் இருக்கே, அது என்ன ஆச்சோ என்றே தவிக்கிறது.
ஸ்வபாவம் இதுதான்.
நீங்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னையில் உள்ள உங்கள் வீட்டின் குசலோபரி விசாரிக்கும் அதே நேரம், நான் சென்னையில் இருந்து தஞ்சைக்கு செல்லடித்து எப்படிம்மா இருக்கு அங்கே மழை என்று, மழை விசாரிக்கும் தோரணத்தில் வீடு எப்படி இருக்கு என்று விசாரிக்கவும் செய்தேன்.
பரீக்ஷித் மகாராஜா ஆக முடியுமோ நம்ம ?
சுப்பு தாத்தா.
ஜனகர் என்று கூறுவது இன்னும் பொறுத்தமாக இருக்குமோ ?
Deleteமாலி .
absolutely correct.
Deletethere was only fear in the mind of Pareekshith, to rid of which, he ran away and tried to hide himself from the impending danger.
But Janaka was firm in his resolve. What belongs to one will never leave one.
What belongs to one is That Feeling of Oneness with the Omniscience .
Thank U so much for enlightening.
subbu thatha.
வாங்க சு.தா. எனக்கு அடிச்சுக்கலை. மாற்றிக் கொண்டு விட்டேன் மனதை! அதற்குச் சென்னை மேல் இயல்பாக இருந்த வெறுப்பும் உதவி செய்தது. :) மற்றபடி நான் ஜனகரும் இல்லை, பரிக்ஷித்தும் இல்லை. என்றாலும் நீங்கள் இதை இன்னும் விபரமாக உங்கள் பாணியில் எழுதினால் மற்றவர்களும் நன்றாகப் புரிந்து கொள்வார்களே! :)
Deleteமாலி சார், சரியான கருத்து! :)
Deleteஎது வீடு? சரியான கேள்வி.
Deleteசென்னை வெனிஸ் ஆக மாறிவருகிறது! குளங்களில் குடியிருப்புகள் உருவானதால் குடிபுகுந்துவிட்டது நீர்!
ReplyDeleteஆமாம், இருக்கும் ஏரிகளை எல்லாம் தூர்வாராமல் விட்டு விட்டு இப்போத் தண்ணீரை வீணாக்கும் அரசு, அதற்குத் துணைபோகும் மக்கள்! :(
Deleteஇதேபோன்ற நிறைய வீடுகளை இன்றைக்கு கண்டுகளித்தேன்....
ReplyDeleteம்ம்ம்ம், நாங்களும் தொலைக்காட்சியின் உபயத்தில் கண்டு களித்தோம். இன்று ராணுவம் ஹெலிகாப்டர் (தமிழ்லே என்னங்க) மூலம் உணவுப் பொட்டலங்களை வீசி எறிகையில் மொட்டை மாடிகளில் நிற்பவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு நன்றி சொல்லிக் கை அசைக்கையில் கண்ணீரே வந்துவிட்டது! :(
Deleteஐயோ....!
ReplyDeleteமத்த இடங்களைப் பார்த்தீங்கன்னா இது ஒண்ணுமே இல்லை டிடி. நல்லவேளையாக யாரும் குடித்தனம் இல்லாமல் வீடு காலியாக இருக்கு! :)
Deleteவணக்கம்
ReplyDeleteபார்த்தவுடன் வேதனைதான் ... இயற்கை....கோபம் கொண்டால் அழிவு விபரிதம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வேதனை தான் ரூபன்! இல்லைனு சொல்லலை. ஆனால் இயற்கைக்குக் கோபம் எல்லாம் ஒண்ணும் இல்லை. அதன் வழக்கப்படி தான் மழைப் பொழிவு இருந்திருக்கு! தண்ணீரை ஓடவிடாமல் கட்டிடங்களை எழுப்பித் தடுத்ததால் நீர் தேங்கி விட்டது! அதுவும் எங்கெல்லாம் பள்ளமாக இருக்குமோ அங்கே தானே ஓட முடியும்! குறை எல்லாம் நம் மேலே தான்! இயற்கை ஒரு நாளும் வஞ்சிக்காது!
Deleteஜன்னலின் எதிரொளிப்பு டைல்ஸ் புண்ணியமா, உள்ளே தண்ணீர் நிற்கிறதா?
ReplyDeleteரெண்டும், போத்!
Delete2005 ஆம் ஆண்டு இப்போது நாங்கள் இருக்கும் வீட்டிற்கு வந்தோம். ஜூலை மாதத்தில் ஒரு மழை அடித்தது பாருங்கள். வீட்டின் பேஸ்மென்ட் பூரா நீர்! கீழே தான் மின்சார இணைப்புகள் இருக்கும் அறை. சுமார் நான்கு ஐந்து நாட்களுக்கு மின்சாரம் இல்லை. எங்கள் கார், டூவீலர் எல்லாம் மிதக்க ஆரம்பித்துவிட்டன. நீர் வடிந்து எங்கள் வண்டிகளைப் பார்த்தால் கண்ணில் நீர் - இல்லையில்லை ரத்தமே வந்துவிட்டது!
ReplyDeleteவீட்டின் பின்பக்கத்தில் இருக்கும் சாக்கடை அடைத்துக்கொண்டு நீர் தெருவிற்குள் வந்துவிட்டது. ஆங்கிலச் சானல்களிருந்து ஆட்கள் வந்து பார்வையிடும்போது என் கணவர் நிலைமையைச் சொன்னார். எல்லா ஊர்களிலிருந்தும் எங்களுக்கு போன் கால். எல்லோரும் தொலைக்காட்சியில் இவரைப் பார்த்திருக்கிறார்கள். எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
ஒருமுறை 76 அல்லது 77 ஆண்டு என்று நினைவு. அசோக்நகரில் வீட்டிற்குள் மழை நீர் வந்துவிட்டது. வீடுகள் உயரத்தில் இருந்ததால் அதிக சேதம் இல்லை.
மாம்பலம் லேக் வியூ ரோடில் தம்பி இருக்கும் குடியிருப்பின் கீழ் வீடுகளுக்குத் தண்ணீர் வந்து விட்டதாம். நேற்றுத் தொலைபேசியில் சொன்னாங்க! 76, 77 ஆம் வருடமெல்லாம் நாங்க ராஜஸ்தானில் இருந்தோம். :) அதனால் சென்னை நிலைமை தெரியாது!
DeleteQuite painful to see .
ReplyDeleteஎன்ன செய்யலாம் ஜெயஶ்ரீ! அடுத்து என்னனு தான் யோசிக்கணும்!
DeleteReally sad......I'm yet to call and ask the status....
ReplyDeleteம்ம்ம்ம் செய்ங்க!
Deleteவேதனையான விடயம்
ReplyDeleteதீமையிலும் நன்மை மக்கள் அங்கே குடியில்லாமல் இருந்தது தான்! இல்லையா? :)
Deleteவடிகாலல் இல்லாததாலும் ப்ராப்பர் ட்ரெய்னேஜ் இல்லாததாலும் வந்த வினை. அது சரி குளியலறையில் ஸ்விம்மிங்க் பூல் வைத்துக் கட்டியிருக்கின்றீர்களே! ஹஹஹஹ் ரிலாக்ஸ் ப்ளீஸ்.
ReplyDeleteகீதா: சென்னை நாறுது. ஹும் என்ன பண்ணுதோ கவர்ன்மென்டும்...மக்கள் தங்க்ள் பங்கிற்கு எல்லா ஓடைகளையும் குப்பைகளால் நிரப்பிவிடுகின்றார்கள்...கவன்ர்மென்ட் தன் பங்கிற்கு குளங்கள் ஏர்கள் எல்லாம் கட்டிடங்கள் ஹும் என்னத்தச் சொல்ல
அம்பத்தூரில் 2004 ஆம் ஆண்டு மழைநீர் வடிகால்வாய் கட்டினாங்க. ஆனால் ஒரு பகுதியினரின் போராட்டத்தால் எங்க தெருவோடு நின்று விட்டது. அது கொரட்டூர் ஏரி வரை போயிருக்கணும். போக அனுமதிக்கலை! :( மக்களே தடுத்தார்கள். அதோடு இல்லாமல் கட்டினவரை இருந்த கால்வாயையும் செப்டிக் டாங்கைத் திறந்து விட்டு, குளியலறைக் கழிவு நீரைத் திறந்து விட்டு சாக்கடையாக மாற்றி விட்டனர். எங்க வீட்டுக்குப் பக்கத்துக் குடியிருப்பிலே குளம்போல் வருடக் கணக்காக இந்தக் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அம்பத்தூரைச் சென்னைக் கார்ப்பொரேஷனில் சேர்த்த பின்னர் அந்தக் குடியிருப்பு வாசிகளுக்கு அபராதமெல்லாம் விதிக்கப்பட்டதாகக் கேள்விப் பட்டோம். ஆனாலும் அது அப்படியே தான் இருக்கு! :( அவங்க குப்பை கொட்டினால் எங்க தோட்டத்திலே கொட்டுவாங்க, இல்லைனா எங்க வீட்டுக் காம்பவுண்டு சுற்றுச் சுவரை ஒட்டிக் கொட்டுவாங்க! :(
Deleteபொறுப்பில்லாத ஜனங்க!
Deleteஇத்தனைக்குப் பிறகும் மாறுவாங்கனு நினைக்கறீங்க? இப்படியே தான் இருப்பாங்க! மறுபடியும் குப்பை மலை மலையாகக் குவியும்! :( அடுத்த மழை வரை இதை நினைச்சுக் கூடப் பார்க்க மாட்டாங்க! :(
Deleteவரும்முன் காக்கும் திட்டம் இல்லாமல் வந்தபின்னர் நிவாரணம் அது, இது என்று போட்டி போடுகிறார்கள். நீண்டகால திட்டமிடல் வேண்டும் . உங்கள் வீட்டில் நீங்கள் இருந்தால் கஷ்டம் , ஆள் இல்லை இருந்தால் அவர்கள் உங்களிடம் புலம்புவார்கள்.
ReplyDeleteநல்லவேளையா, நாங்களும் அங்கே இல்லை, குடித்தனமும் வைக்கலை! பிழைச்சோம்! :)
Deleteஇதுவரைக்கும் இந்த மாதிரி மழையே சென்னை பார்த்ததில்லைனு சொல்றாங்க?
ReplyDeleteசின்ன வயசுல புயல் மழை பெஞ்சா ஏரி உடைஞ்சு பாம்புக்குட்டிங்க சுழிச்சு கட்டி வரும்.. க்ரிகெட் பேட்டால அடிச்சு விளையாடுவோம். இப்பல்லாம் குப்பை தான் சுழிச்சுக்கிட்டு வரும் போல.
ஜனங்க பாவம்.
2005 ஆம் வருஷம் இதை விட மோசமாகப் பெய்தது! அப்போ எங்க தெருவிலே நம்ம ரங்க்ஸுக்கே முழங்கால் அளவுத் தண்ணீர் இருந்தது என்றாலும் வீட்டுக்குள் சொட்டு நீர் வரவில்லை! பிள்ளைக்குக் கல்யாணம் வேறே வைச்சுட்டு தைரியமாகவே எதிர்கொண்டோம்! :)
Deleteபார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteம்ம்ம்ம் என்னளவில் பாதிப்பு இல்லை. ஓரளவு எதிர்பார்த்ததாலேயோ என்னமோ! ஒரு வழி பிறக்கும். பார்ப்போம்.
Delete2005ல் சென்னையிலிருந்த போது, போட்டில் ஸ்கூலுக்கு (வேலைக்குத் தான்!) போனதெல்லாம் நினைவுக்கு வருது.. இப்ப அதை விட மோசம்னு தெரியறது.. சென்னையில், என் அண்ணாவின் வீடு இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் வெளியே வெள்ளம் சூழ்ந்து, ராணுவ டிரக்கில் குடியிருப்போர் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டாங்க. இப்ப, இன்னமும் நிலைமை சரியாகாததால், அண்ணாவின் குடும்பத்தினர் பெங்களூர் வந்திட்டாங்க ... எப்ப பழையபடி எல்லாம் சரியாகும்னு தெரியலை..
ReplyDeleteஎந்த ஏரியா? உங்க அண்ணா இருப்பது வேளச்சேரி? மடிப்பாக்கம்? 2005 ஆம் வருடம் இதை விட அதிகமான அளவில் மழை தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது! இப்போது அளவும் குறைவு. நாட்கணக்கில் தான் பெய்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தவிக்கிறது! :(
Deleteவீடு பூட்டி இருப்பதும் ஆபத்து! படகுகளில் காப்பாற்ற வருவது போல் வந்து திருட்டு நடக்கிறது. பூட்டை உடைத்துத் திருடிச் செல்கின்றனர்.! கிடைத்தது லாபம் என்னும் எண்ணம் தான். :( இப்போது இங்கே காலை முதல் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த மழை விட்டு விட்டுப் பெய்கிறது, ஒன்றரை மணி நேரம் மின்சாரமும் இல்லை. இப்போத் தான் வந்திருக்கு!
Deleteவிஜயவாடாவில் இப்படி ஒரு முறை வெள்ளம் வந்து ரயில்வே காலனி முழுவதுமே தண்ணீர் நின்றதாக அம்மா சொல்வார்கள். அது தான் நினைவுக்கு வருகிறது. மழை நீர் ஆற்றுக்குச் செல்லும் வடிகால்கள் எல்லாமே அடைத்து விட்டோம். இப்போது தான் அதன் கடும் விளைவு தெரிகிறது. இனிமேலாவது சிந்தித்தால் நல்லது.
ReplyDelete