எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 09, 2015

தீபாவளி மருந்து கிளறினால் பக்ஷண வேலை முடிஞ்சது! :)

இன்னிக்கு அதே வரகு அரிசி மாவில் கொஞ்சம் மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து வெண்ணெய் போட்டுப் பிசைந்து ரிப்பன் பக்கோடா செய்தேன். ரொம்பக் கொஞ்சம் போல்! ரிப்பன் பக்கோடா செய்தே பல வருடங்கள் ஆகின்றன. அப்புறமா வேறே ஸ்வீட் எல்லாம் பண்ணலை! மருந்து கிளறினேன் தீபாவளி மருந்து கிளறத் தேவையான சாமான்கள் கீழே கொடுத்துள்ளேன். இதில் ஓமம் சேர்த்தால் அவ்வளவாக நன்றாக இருக்காது. அதோடு எல்லா சாமான்களும் சம அளவில் இருக்கணும். இவை எல்லாம் விலை அதிகம் என்பதால் நாட்டு மருந்து சாமான் கடையில் குறைந்த பட்சமாகப் பத்து ரூபாய்க்குக் கேட்டால் கொடுப்பார்கள் வாங்கிக் கொள்ளவும். ஓரளவுக்கு எல்லா சாமான்களையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். கண் திட்டமாகவே எடுத்துக்கலாம். வெயில் இருந்தால் கொஞ்சம் காய வைச்சுக்கலாம். இல்லை எனில் சுத்தம் செய்துவிட்டு வெறும் வாணலியில் (இரும்பு வாணலி நல்லது) வறுத்து ஆற வைத்து மிக்சி ஜாரில் பொடித்துக் கொள்ளவும்.

வறுத்துப் பொடிக்க வேண்டிய சாமான்கள்.

சுக்கு
மிளகு,
ஜீரகம்,
சோம்பு,
கசகசா,
கிராம்பு,
ஏலக்காய்,
கருஞ்சீரகம்
இலவங்கப்பட்டை,
சித்தரத்தை,
திப்பிலி,
தேசாவரம் அல்லது கண்டந்திப்பிலிக்குச்சிகள்
ஜாதிபத்திரி

இது எல்லாத்தையும் நல்லாக் காய வைச்சுச் சம அளவு எடுத்துக்கவும். வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்ததை மிக்சியில் போட்டு நன்றாய்ப் பொடியாக்கவும். அநேகமாய் நைசாகவே வரும். அப்படிக்கொஞ்சம் கொர கொரனு இருந்தாலும் பரவாயில்லை. பொடியைத் தனியாய் வைத்துக்கொள்ளவும்

இனி பச்சையாய் அரைக்க
இஞ்சி 50 கிராம்
கொத்துமல்லி விதை 100 கிராம்
இவற்றை நன்கு நீர் விட்டு அரைத்து, வடிகட்டிச் சாறு எடுத்துக்கொள்ளவும். மூன்று நான்கு முறை அரைத்துச் சாறை எடுக்கலாம்.

கருப்பட்டி பிடித்தால் கருப்பட்டி அல்லது வெல்லம். தூளாக்கியது ஒரு கிண்ணம் அல்லது 100 கிராம். கிளறுவதற்குத் தேவையாக ஒரு கரண்டி அல்லது ஐம்பது கிராம் நல்லெண்ணெய், ஐம்பது கிராம் நெய். சுத்தமான தேன் ஒரு கரண்டி.

நல்ல இரும்புச் சட்டியில்(நான் - ஸ்டிக் எல்லாம் சரிப்படாது. இரும்பின் சத்து மருந்தில் சேரணும்) இஞ்சி, கொத்துமல்லிச் சாறை விட்டுக் கொதிக்க விடவும். நன்கு தள தளவெனக் கொதிக்கும்போது தூளாக்கிய கருப்பட்டியைப் போடவும். கருப்பட்டி கரைந்து வாசனை போனதும், பொடி பண்ணி வைத்த மருந்துக் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். விடாமல் கிளறவும். நடுவில் கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறிக் கொண்டு இருக்கவும். கையில் ஒட்டாமல் உருட்டும் பதம் வந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். ஆறியதும் தேனைச் சேர்த்து, ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு சின்ன ஸ்பூனால் ஒரு உருண்டை சாப்பிட்டாலே போதுமானது.

10 comments:

  1. இங்கு நாடா முறுக்கு, முள்ளு முறுக்கு, மாலாடு மட்டும். தீபாவளி மருந்து ரெடியாகிக் கொண்டு இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட எங்க வீட்டு பக்ஷண மெனுதான் உங்க வீட்டிலேயும்! :) நான் பாசிப்பருப்பு+கடலைப்பருப்பு வறுத்து அரைத்து உருண்டை பிடித்தேன். இதுவும் ஒரு வகையில் மாலாடு தான்!:)

      Delete
  2. இங்கும் தீபாவளி வந்தவிட்டது. கூடவே அடை மழையும்!
    சென்னையிலிருந்து தீபாவளி மருந்துப் பொடி வாங்கி அனுப்பச் சொல்லி, வந்தும் விட்டது. நாளைக்காலையில் எழுந்து கிளற வேண்டியதுதான். ஓமப்பொடியும், குலாப்ஜாமூன், சாக்லேட்டும் தீபாவளி பட்சணங்கள்.
    உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி! இங்கேயும் மழையோடு தான் தீபாவளி! மருந்தெல்லாம் திடீர் தயாரிப்பை வாங்கிச் செய்யறதில்லை! எக்கச்சக்க விலை. ஒரு தரம் பத்து ரூபாய்க்குச் சாமான்கள் வாங்கி மருந்துப் பொடியைத் தயார் செய்து கொண்டால் மூன்று தீபாவளிக்கு வந்துவிடும். அதற்கும் மேலேயே வரலாம். மருந்து செய்யும் அளவைப்பொறுத்து! நம்பகத் தன்மையும் அதிகம். எங்க வீட்டில் எல்லாம் சிறுதானிய பக்ஷணங்கள்.

      Delete
  3. சித்தரத்தை,
    திப்பிலி,
    தேசாவரம் அல்லது கண்டந்திப்பிலிக்குச்சிகள்
    ஜாதிபத்திரி இதெல்லாம் இங்கே கிடைக்காதுப்பா. நாங்க தீபாவளி மருந்து சாப்பிட்டே பலவருசங்களாச்சு :-(

    உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்!

    ReplyDelete
    Replies
    1. சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருஞ்சீரகம், இதெல்லாம் கிடைக்கும் இல்லையா? இது போதுமே! கிடைத்ததை வைத்துச் செய்ய வேண்டியது தான். அம்பேரிக்காவில் அப்படித் தான் செய்தேன்! ஆனால் தீபாவளி சமயம் என்பதாலும் உடல் நலத்துக்குத் தேவை என்பதாலும் திப்பிலி, சித்தரத்தை, கண்டந்திப்பிலி வாங்கிச் சென்று விட்டோம்.

      Delete
  4. தீபாவளி லேகியத்திற்கு நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் நன்றி.

      Delete
  5. தீபாவளி வருகிறது என்றாலே முதலில் கேட்பது தீபாவளி மருந்து தான்! :)))

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க மருந்து பக்ஷணம் எல்லாமும் கிடைக்கும். :)

      Delete