இந்த வருஷம் கொஞ்சமாய்த் தான் தீபங்கள்! கீழேஉட்காரமுடியாததாலே ஒரு ப்ளாஸ்டிக் டேபிளில் வைத்து ஏற்றினேன். :(
அதே படம் தான். மறு பார்வைக்கு!
வீட்டு வாசலில் கோலத்தில் வைக்கப்பட்ட விளக்குகள்
ஜன்னலில் நம்ம ரங்க்ஸ் மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சிருக்கார்.
பால்கனியிலும்
நிலா நிலா ஓடி வா!
நம்ம வீட்டில் காக்காய், குருவி எங்கள் ஜாதி என்பதால் அதுக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகள். ஒரு தம்ளரில் தண்ணீர், பக்கத்தில் சாதம், பருப்பு, பாயசம், வடை(இன்னிக்குக் கார்த்திகை என்பதால் வடை, பாயசம்)
சரி, இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். எல்லா அண்ணன்மார்களுக்கும், தம்பிமார்களுக்குமாக வேண்டிப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு கார்த்திகை தீபம் ஏத்தியாச்சு! இந்த ஒளியைப் போலவே அனைவரின் வாழ்விலும் ஒளிவீசிப் பிரகாசிக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இப்போ இந்த அக்கா/தங்கச்சிக்குச் சீர் கொடுங்க! பொன் கொடுப்போர் பொன்னே கொடுப்பீர். வைரங்கள் கொடுப்போர் வைரமே கொடுப்பீர். பட்டுப் புடைவைகள் கொடுப்போர் வஸ்த்ரகலா, பரம்பரா, ரெயின்போ கலர்ஸ், சாமுத்ரிகா போன்றவற்றை மறக்க வேண்டாம்னு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என்னது? டிசைனர் புடைவையா? கிழிஞ்சது போங்க! கைத்தறி தான் கட்டுவேன். அதுவும் பட்டில் நிச்சயமாக் கைத்தறி தான்! பார்த்துக்குங்க! வரிசையா வாங்க அண்ணன்மாரே, தம்பிமாரே!
தீபத் திருநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteவாங்க டிடி, வாழ்த்துகளுக்கு நன்றி! :)
Deleteஆயிரம் கோடி வராகன் அக்காவுக்கு...!
ReplyDeleteதிருக்கார்த்திகை வாழ்த்துகள்.
இன்னும் வந்து சேரலை! :)
Deleteபடங்கள் எல்லாம் அழகோ அழகு. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDelete//எல்லா அண்ணன்மார்களுக்கும், தம்பிமார்களுக்குமாக வேண்டிப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு கார்த்திகை தீபம் ஏத்தியாச்சு! இந்த ஒளியைப் போலவே அனைவரின் வாழ்விலும் ஒளிவீசிப் பிரகாசிக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.//
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.
இதற்குமேல் உள்ளவற்றைப் படிக்க இயலாமல் அசந்து நான் தூங்கிவிட்டேன். :)
வாங்க வைகோ சார், சரியா இந்தப் பதிவுக்கு வந்திருக்கீங்களேனு பார்த்தா! ஹூம், இப்படி ஏமாத்திட்டீங்களே! ஆனாலும் ஏழு மணிக்கேவா தூங்குவீங்க? வாய்ப்பே இல்லை! அதிர்ச்சியில் கண்கள் தானகா மூடிக் கொண்டனவோ? ம்ம்ம்ம்ம்? ஒவ்வொரு வருஷமும் கேட்டுட்டுத் தானே இருக்கேன்! :)
Deleteபொரி உருண்டை ஒரு ராயல் டிஷ் தான். போட்டோ எல்லாம் பிரமாதம். சீர்ன்னு போட்டிருக்கீங்களே... அது மூவசைச் சீரா? வெண்சீரா?
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன தம்பி போங்க நீங்க! ஹைதராபாதில் இருந்துண்டு ஒரு கத்வால், வெங்கடகிரி, போச்சம்பள்ளினு வாங்கி அனுப்பக் கூடாதோ? இப்படியா ஒரு கேள்வி? எனக்குத் தமிழே தெரியாது! அதிலே இது வேறேயா? மூவசைச் சீர்னா, மூணு கலர்லே ப.பு? வெண் சீர்னா? வெ.ப.பு? :)))))))
Delete'அண்ணன்மார்களே, தம்பிமார்களே, எல்லோருக்காகவும் வேண்டிண்டு விளக்கு எத்தி இருக்கேன். இனிமே வரிசையா வந்து சீ(று)ருங்கப்பா. அதெல்லாம் கிடையாதுனு சொல்லக் கூடாது தெரியுமா! கார்த்திகைச் சீர் ரொம்ப முக்கியமாக்கும். சீக்கிரமா வாங்க. பொன் கொடுப்போர் பொன்னே கொடுக்கவும். ப.பு. கொடுப்போர் ப.புவே கொடுக்கவும். நவமணிகள் கொடுப்போர் நவமணிகளாகவே கொடுக்கவும். அவங்க அவங்க வசதிப்படி கொடுங்கப்பா. பொங்கல் சீர் தனி. அது அப்புறமா. இப்போ முதல்லே கார்த்திகைச் சீர்! ம்ம்ம்ம்ம்ம், சீக்கிரம் எடுங்க!'
ReplyDeleteபோன வருடத்துக்கும் இந்த வருடத்துக்க்கும் புடவை ரகங்களோடு ஏறியிருக்கின்றது!
தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! (கொஞ்சம் தாமதமாக!)
ஹிஹிஹி, தேடிப் பிடிச்சீங்களா? இல்லைனா ஸ்டாக்கிலே வைச்சிருக்கீங்களா? இந்த வருஷம் நவமணிகளைச் சேர்க்கலை பாருங்க! அதான் புடைவைகள்! :)
Deleteஉங்கள் பதிவுகளை அவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறேனாக்கும்!! :-))
Deletehaahaahaahaahaa
Deleteஅண்ணா வந்திருக்கேன். என்னுடைய பிட்டர் ஹால்புக்கும் மூட்டு வலி பிரச்சினை தான். அமெரிக்காவிலிருக்கும் நம்ம பையர் ஒரு பாட்டில் "move free tablets" (170 எண்ணம்) வாங்கிக் கொடுத்தார். இப்போது வலி இல்லை. வேண்டுமானால் நீங்களும் வாங்கி சாப்பிடலாம். விவரம்
ReplyDeleteMove Free
Triple strength Glucosamine Chondroitin dietary supplement.
Mfd by
Reckitt Benckiser
Parsipany,NJ 07054-0224
1-800-526-6251
Only problem is this contains shellfish (shrimps, crab, lobster, crayfish)
மருந்து என்ற முறையில் சாப்பிடுவதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.
--
Jayakumar
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நீங்களுமா? எல்லா அண்ணாக்களும் கையை விரிச்சா என்ன பண்ணறது?::) உங்க மாத்திரைகள் பத்தின குறிப்புக்கு நன்றி. அந்த அடைப்புக்குறிக்குள்ளே வந்திருக்கிறது தான் இம்சை பண்ணுது! :)
Deleteசீருடன் கூடிய கவிதை வேண்டுமானால் அனுப்பலாம் ஆனால் என்னைவிட சீர் செய்யமுடிந்தவர்கள் ஏராளம். வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteசரியாப் போச்சு போங்க! நீங்களே இப்படிச் சொன்னா? மத்தவங்க இன்னும் மோசமாக்கும்! :) இது வரைக்கும் ஶ்ரீராம் தான் ஏதோ வராகன் அனுப்பி இருக்கிறதாச் சொல்றார். அதுவும் இன்னும் வந்து சேரலை! :)))))
Deleteகீதா மேடம் , முதலில் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவந்த சீர் எல்லாம் அடுக்கி ஒரு பதிவு போடுவீங்க தானே .
வாழ்த்துக்கள்!
சரியாப் போச்சு போங்க! எங்கே! எல்லோரும் நைசாக் கழட்டிக்கிறாங்களே பார்க்கலை! சுத்தக் கஞ்சூஸ் அண்ணன், தம்பிமாரெல்லாம்! :))))
Deleteசீருடன் தீபம் ஏற்றிய சகோ உங்களுக்கு நன்றி முதலில்!
ReplyDeleteஅருமையான படங்கள்! பொரி உருண்டைகள் கண்ணிற்கு எட்டியது கைக்கும் வாய்க்கும் எட்டவில்லையே...!!
அது சரி தம்ளரில் தண்ணீர்....அதுவே தண்ணீரில் மூழ்கியது போல ஃபோட்டோவில் கிண்ணம் போல காட்சியளிக்கின்றதே..இதுவும் அழகாகத்தான் இருக்கின்றது!
நீங்கவேறே! சீரோட எங்கே ஏத்தினேன்? ஏத்திட்டு சீரச் சொன்னா எல்லோரும் சீறிட்டுப் போயிட்டாங்க! :) பொரி உருண்டைகள் ரொம்பவே நல்லா வந்திருக்கு! ஹிஹிஹி, உங்க பேரைச் சொல்லி நாங்க சாப்பிட்டுடறோம்.
Deleteயாருமே பறவைகளுக்கு வைச்சதைக் கவனிக்கலை. உங்கள் கவனிப்புக்கும், கருத்துக்கும் நன்றி. மழை பெய்து கொண்டிருந்ததால் அப்படித் தெரியுது. இப்போ இரண்டு நாட்களாக சூரியனார் விடுமுறை எடுக்காமல் வரார். :)
தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துகள் சகோ...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteரொம்ப நல்லா எழுதி இருக்கேள். உங்கள் பக்கத்துக்கு இது தான் என்னுடைய முதல் வரவு/
ReplyDelete///பட்டுப் புடைவைகள் கொடுப்போர் வஸ்த்ரகலா, பரம்பரா, ரெயின்போ கலர்ஸ், சாமுத்ரிகா போன்றவற்றை மறக்க வேண்டாம்னு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்//
மாமி நல்லா ஹாஸ்யமாக எழுதி இருக்கேள்
ம்ம்ம்ம்ம், ஶ்ரீநிவாசன் ஜே. முதல் வருகைக்கு நன்றி. ஆரம்பகாலப் பதிவுகள் சிரிப்பாய்ச் சிரிக்கவே எழுதப்பட்டன. பதிவுலகில் கொஞ்சம் கால் ஊன்றியபின்னரே நான் எழுத நினைத்தவைகளைப் பகிர ஆரம்பித்தேன். :) பாராட்டுக்கு நன்றி.
Delete