எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 08, 2015

வரகு அரிசியில் தேன்குழல் சாப்பிட வாங்க!

தீபாவளி வந்தாச்சா? இங்கே இப்போத் தான் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பிச்சிருக்கு!  நடுவில் கொஞ்சம் வேலை இருந்ததாலும், உடல் நலம் சரியில்லாமல் போவதாலும் எழுத முடியலை. அதோடு அடிக்கடி வலைப்பக்கம் திறக்க மறுத்து அடம் பிடிக்குது!  . இந்த தீபாவளிக்குக் கைத்தறிச் சேலை வாங்கியாச்சு! நெசவாளர் படத்தோடு கூடிய சேலைகள்! அந்த நெசவாளர்களுக்குப் பாராட்டுகள், நன்றி. சென்னையில் இருக்கிறச்சே மத்திய அரசால் நடத்தப்படும் ஹான்ட்லூம் ஹவுஸ், ரத்தன் பஜாருக்குத் தான் போவேன். இங்கே வந்ததில் இருந்து செட்டிநாடு பருத்திப் புடைவைகள் வாங்கினேன். இந்த வருஷம் தான் மறுபடி கைத்தறிக்குப் போகும் எண்ணம் வந்தது. சென்னையில் இருக்கும் கடையில் எல்லா மாநிலக் கைத்தறிகளும் கிடைக்கும். அநேகமாகக் கல்கத்தாப் பருத்திச் சேலைக்கே ஓட்டுகள் விழும். இந்த வருஷம் கோவை! நம்ம ரங்க்ஸ் வழக்கம் போல் கதருக்கே ஓட்டைப் போட்டார்.

அடுத்து பக்ஷணங்கள்! என்னத்தைப் பண்ணறது போங்க! அதான் உடம்பிலே சர்க்கரை ஆலையை வைச்சிருக்காரே ரங்க்ஸ்! ரொம்பவே மண்டையை உடைச்சுண்டு கடைசியில் பாசிப்பருப்பு+கடலைப்பருப்பு வறுத்து மிஷினில் மாவாகத் திரிச்சு அதிலே உருண்டை பிடிக்கலாம்னு முடிவு பண்ணி மாவைத் தயார் செய்தேன். அப்புறமா காரம்? முன்னெல்லாம் முள்ளுத் தேன்குழல், ஓமப்பொடி, ரிப்பன் பக்கோடா, மிக்சர்னு விதம் விதமாப் பண்ணிட்டு இருந்தேன். இப்போ பண்ணும் ஒரு தேன்குழலையே தீர்க்கணும்னு கவலையா இருக்கு. அதோடு இப்போத் தான் சிறுதானியங்கள் சாப்பிடறோமே! ஆகவே அதிலே தான் தேன்குழல் பண்ணணும்னு முடிவு செய்தோம். சில சிறு தானியங்கள் தீர்ந்து போனதை வாங்கி வைச்சிருந்தேன். அதிலே இருந்து அரைக் கிலோ வரகை எடுத்து வறுத்தேன். 100 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் கடலைப்பருப்பையும் வறுத்து அதோடு சேர்த்தேன். மிஷினில் கொடுத்து மாவு திரிச்சாச்சு. இன்னிக்கு முதலில் உருண்டையைப் பிடிச்சேன். உருண்டை படம் அப்புறமா! ஹிஹிஹி, எடுக்கலை.  இப்போத் தேன்குழல் படம் மட்டும் போடப் போறேன்

இதோ தேன்குழலுக்குப் பிசைந்த மாவு. மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்துக்கணும். எட்டுக் குழிக்கரண்டி மாவோடு ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், பெருங்காயம் அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டுச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையணும். முதல் ஈட்டில் ஒரு டீஸ்பூன் உப்புப் போட்டது எங்களுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியாத் தெரிஞ்சதாலே அடுத்த ஈட்டில் முக்கால் டீ ஸ்பூன் தான் உப்புச் சேர்த்தேன். அது சரியா இருக்கு. ஆகவே உப்பு அதிகமாய்த் தெரிந்தால் நீர் விட்டுப் பிசையும் முன்னர் இன்னும் கொஞ்சம் மாவைச் சேர்க்கலாம். தீபாவளி பக்ஷணம் செய்யறதிலே இது ஒரு சௌகரியம். அது என்னமோ தெரியலை! பக்ஷணத்தைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு உம்மாச்சிக்குக் காட்டலாம். உம்மாச்சி கோவிச்சுக்கறதில்லை.  கீழே பிசைந்த மாவு பாத்திரத்தில்.அடுத்து அடுப்பில் வேகும் தேன்குழல்கள்சத்தியமாய்ச் சொல்றேன். இது வரகு அரிசியில் செய்த தேன்குழல் தான். ஏனெனில் நம்ம ரங்க்ஸுக்கே ஆச்சரியம்! இப்படி வெள்ளையா வருதேன்னு! :)

16 comments:

 1. ஹூம் இதையெல்லாம் அபுதாபியிலருந்து போட்டோவை மட்டும் பார்த்துக்கிற வேண்டியதுதான்
  இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா கில்லர்ஜி! அங்கே சிறுதானியங்கள் எல்லாம் கிடைக்குமா? :) கிடைச்சாலும் மாவு அரைக்க மெஷின் இருக்கா? :)

   Delete
 2. தீபாவளியின் சுவாரஸ்யங்கள் குறைந்து கொண்டே வருவதற்கு வயசாவது மட்டும் காரணமில்லை என்று நினைக்கிறேன். இங்கும் பட்சணங்கள் தயாராகின்றன. வரகு எல்லாம் இல்லை. எப்போதும் போல. என் கைக்கும் சில பட்சணக் கடமைகள் உண்டு! மழை காரணமாக சுகவீனங்கள் இங்கும். கரண்ட் படுத்தல் மழைத் தூறல் போட்டாலே வந்து விடும்!

  இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. என்னைப் பொறுத்தவரையில் தீபாவளி அன்று வீட்டிலேயே கூட்டம் கூடும்! அத்தகைய நாட்களைப் பார்த்துட்டு இங்கே யாருமே வராமல்!!!!!!!!!!! சென்னையிலாவது எதிர் வீட்டு மாமி வருவாங்க. இங்கே அந்தக் கொடுக்கல், வாங்கலும் கிடையாது. நாம் எடுத்துட்டுப் போனாலும் அவங்களுக்குப் பிடிக்குமானு தெரியறதில்லை!

   Delete
  2. உங்க பக்ஷணக் கடமை எல்லாம் முடிஞ்சு வீட்டிலும் எல்லோருக்கும் உடம்பு சரியாகி தீபாவளியும் கொண்டாடி முடிச்சிருப்பீங்க! இங்கெல்லாம் ஒரு வாரம் கொண்டாடறாங்க! :) அதிலே இனாம் வாங்கும் ஆட்கள் வேறே! காஸ் சிலிண்டர் போடுபவரிலிருந்து, பால்காரர், குடியிருப்பின் வேலையாட்கள், இஸ்திரி செய்பவர்கள், பேப்பர்காரங்கனு படை எடுக்கிறாங்க! :)

   Delete
 3. பார்க்கும் போதே சாப்பிடனும் போலருக்கே

  ReplyDelete
  Replies
  1. இப்போத் தான் ரிப்பன் பக்கோடா சாப்பிட்டேன். நல்லாவே இருக்கு! :)

   Delete
 4. வரகு அரிசி தேன்குழல் பார்க்கவே அழகா இருக்கு! சுவைக்கவும் சிறப்பா இருக்கும்னு நம்பறேன்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சுரேஷ், தெரியாதவங்க கிட்டேக் கொடுத்தால் அரிசியில் செய்ததுனே நினைப்பாங்க. :)

   Delete
 5. எண்ணெயிலிருந்து எடுத்தவுடனே சாப்பிடணும்போல தோன்றியது. அப்புறமா ஒருநாள் வரேன் சாப்பிட அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மா, உடல் நலத்தையும் கவனிச்சுக்குங்க! மெதுவா வாங்க!

   Delete
 6. இப்போதெல்லாம் பலகாரங்கள் செய்வது குறைந்து விட்டது. எல்லாம் இந்த உறவினர்களின் வருகையால் அதுவும் பெர்மனென்டாக டேரா போட்டு உட்கார்ன்டு விடுகின்றார்களே. (எலாம் சுகர், பிபி.இன்ன பிற) உறவினர்களுக்குப் பிடிக்கலைனா என்ன செய்ய? வாந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் பிறந்தவர்கள் நாமாச்சே.

  வரகு அரிசி தட்டை செய்யலாம்முறுக்கும்..வரகு, தினை சாமை கலந்தும்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வரகு அரிசித் தட்டை பின்னர் ஒருநாள் தான் செய்து பார்க்கணும். நான் புழுங்கலரிசியை ஊற வைச்சு அரைச்சுத் தான் பண்ணுவேன். இனி வரகு அரிசியிலும் செய்து பார்க்கணும். தீபாவளிக்கு வீட்டில் எண்ணெய் காயணும் என்றொரு சம்பிரதாயம். அதனால் இப்போதெல்லாம் மிகக் குறைந்த அளவுக்குச் செய்வதோடு சரி!

   Delete
 7. வரகு அரிசி தேன்குழல். பார்க்க நல்லாதான் இருக்கு. சாப்பிட்டு பார்த்தா தான் எப்படி இருக்குன்னு சொல்ல முடியும்..... தில்லிக்குக் கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்!

  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அனுப்பறேன். சாப்பிட நல்லாவே இருக்கு! உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   Delete
 8. நானும் பார்க்கிறேன்..... நான் பயணத்தில் இருக்கும்போதுதான் நல்ல நல்ல தீனிப்பதிவுகள் போடறீங்க நீங்க எல்லாம்! அதான் மிஸ் பண்ணும்படி ஆகிருது!

  இப்பெல்லாம் வீட்டில் ரொம்பப் பலகாரங்கள் நொறுக்ஸ் எல்லாம்செய்யறதில்லை. தம்பியிடம் இடம் கேட்டுச் சொல்லுங்க. அடுத்த பயணத்தில் வாங்கி வாயில் போட்டுக்கறேன்:-)

  ReplyDelete