எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 27, 2015

சில, பல விளம்பரங்கள்!

எங்க உறவினர் அனுப்பிய ஃபார்வர்ட் மடலில் கீழ்க்கண்ட பழைய விளம்பரங்களைப் பார்த்தேன். எந்தப் பத்திரிகைனு தெரியலை. ஆனாலும் விளம்பரங்கள் சுவையாக இருக்கின்றன. அவர் அனுமதியோடு இந்த விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு!
These Old Indian Ads Were Made When You & I Weren’t Even Born !!!!!!!
 

ADS OF YESTER YEARS------NOTE CAREFULLY RABINDRANATH TAGORE ADVERTISING GODREJ SOAP, & SEE INDIA: LAHORE :
 

1903: Taj Mahal Palace Hotel Inauguration

1903 taj opening

1922: Godrej No 1 soap – Rabindranath Tagore

1922 godrej tagore

1928: Mysore Sandal Soap

1928 mysore sandal

1929: Pears Soap

1929_pears

1930: Mysore Sandal Soap

1930 mysore sandal

1930: Washable Condoms

1930_washable_condoms

1932: The Bombay Armoury

1935: Indian Tourism

1935 India Tourism

bombay armoury 1932 back
 

25 comments:

  1. இவை எல்லாமே அந்தக் காலத்து அட்வர்டைஸ் மென்ட் .
    நான் 2 அல்லது 3 வயது இருக்கும்போது வந்தது போல .

    அது சரி. சுவையாக இருக்கிறது அப்படின்னு சொல்ரீர்களே !

    எப்படி. சோப் நா அது. சாப்பிட்டு பார்த்தால் தானே சுவை தெரியும்.

    ஹி .ஹி ...

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹிஹி, ரசனை தனியா இருக்கே! பார்க்க, ரசிக்கச் சுவையாக இருக்குனு சொன்னேன்! :)

      Delete
  2. மொபைலில் பாதிதான் படிக்க முடிகிறது்.

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளையா இதிலெல்லாம் புத்தி போகலை! :)

      Delete
  3. முதல் படம் உள்ள இடத்தில் நானும் என் மனைவியும் வெகு நேரம் அமர்ந்து மகிழ்ந்திருந்த நாள் நினைவுக்கு வந்தது. அதை நினைத்து இன்றும் நான் மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்.

    அங்கு ஏராளமான, ஆயிரக்கணக்கான புறாக்கள், எப்போதும் தெருவினில் கூடியிருக்கும். நாம் அவற்றின் அருகில் சென்றாலும் அவை பயந்து பறக்காது. நமக்குத்தான் அவற்றின் அழகு அப்படியே சொக்க வைக்கும். அவற்றிற்கு Tourist ஆக வருபவர்கள் அனைவரும் கையில் வைத்துக்கொண்டு தீனி அளிப்பார்கள். பார்க்கவே பரவசமாக இருக்கும்.

    அங்கிருந்து தான் மும்பை எலிஃபெண்டா குகைக்குப் படகில் நாம் ஏறிச் செல்ல வேண்டும்.

    இனிய நினைவலைகளை மீட்டுத்தந்த இந்தப் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! உங்கள் நினைவலைகள் மீண்டும் வந்து உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியமைக்கு வாழ்த்துகள். கருத்துக்கு நன்றி. நான் பலமுறை மும்பை போயிருந்தும் இந்த இடத்துக்கு ஒரே முறை தான் போயிருக்கேன். :( எலிஃபென்டா பார்க்கலை! :(

      Delete
  4. கண்ணைத் திறக்க வைக்கும் விளம்பரங்கள். >}}}}}}}}}}}}}}}}}}}
    தாஜ் விளம்பரம் பிரமாதம். 6 ரூபாய்க்குத் தங்கி இருக்கலாம் ஆஹா.
    பாட்டி பியர்ஸ் சோப் உபயோகிப்பார். என் மாமியார் மும்பையில் இருந்ததால்

    அவர்களுக்கு மிக சௌகர்யம்.மிக மிக அற்புத பகிர்வு. நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி, அந்தக் காலத்தில் ஆறு ரூபாய் பெரிசு இல்லையோ? :) பியர்ஸ் எல்லாம் பணக்காரங்க சோப்னு ரொம்பக் காலம் நினைச்சுட்டு இருந்தேன். முதல் முதலா எனக்கு ஸ்கின் அலர்ஜி வந்தப்போ பியர்ஸ் சோப் வாங்கும்வரை! :)

      Delete
  5. சகோ அருமையான விளம்பரங்கள்! அதுவும் விலையை எல்லாம் பார்க்கும் போது ஹும் என்று பெருமூச்சுதான் விடமுடிகின்றது.!! அந்தக்காலம்!!!

    அப்போவே ரப்பர் ப்ரொட்டெக்கர் ஆச்சரியம்! அது போல இந்தியா டூரிசம் அதுவும் ஆங்கிலேய ஆட்சியின் போது...இங்கு ஒரு புறம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட்டங்கள். அதற்கிடையில் சுற்றுலா விளம்பரம்!! வியப்பு மேலிட்டது!

    ரசித்தோம். பகிர்வுக்கு மிக்க நன்றி! ஓல்ட் இஸ் கோல்ட்! ஆனால் கோல்ட் மட்டும் ஓல்டாவதில்லையே!!!

    ReplyDelete
    Replies
    1. பணத்தோட மதிப்பைக் கணக்கிட்டால் இப்போ விற்பது ஒண்ணும் அதிகமில்லைனு நினைக்கிறேன். :)

      Delete
  6. 1928 -- Mysore Sandal Soap -- என்று தலைப்பிட்டிருக்கும் அந்த விளம்பரம்:

    சந்தன சோப் -- அந்தப் பெண்.

    சோப் உள்ளடங்கிய அட்டைப் பெட்டி -- அந்தப் பெண்ணின் புடவை..

    பாதி வெளித் தெரிந்தும் தெரியாத சோப்பை பெண்ணுக்கு உவமையாக்கிய அர்த்தபூர்வமான விளம்பரம்----

    ரொம்பவும் கவித்வம் நிரம்பியது. விளம்பராதரின் கற்பனை வியக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான கோணம் ஜீவி சார். கருத்துக்கு நன்றி.

      Delete
  7. காணக் கிடைக்காத விளம்பரங்கள் . மிகவும் ரசிஹ்த்டேன். நன்றி மேடம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜலக்ஷ்மி.

      Delete
  8. தாகூர் கூட விளம்பரம் செய்திருக்கிறார்! அட!

    பியர்ஸ் சோப் விளம்பரம்! இப்போ இப்படி விளம்பரம் வந்தால் எப்படி இருக்கும்!

    மொபைலில் வரும்போது சாதாரணப் பதிவுகள் படிக்க முடியும். இந்த விளம்பரங்கள் வலது பக்கம் நகர்ந்து படிக்க முடியாமல் செய்தது. இப்போது கணினியிலிருந்து...

    ReplyDelete
    Replies
    1. மறு வருகைக்கு நன்றி ஶ்ரீராம்.

      Delete
  9. கொடுக்கப்பட்டுள்ள ஓல்ட் இந்தியன் ஆட்ஸ் .காமில் பழைய விளம்பரங்கள் நிறையவே இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜிஎம்பிசார்!

      Delete
  10. உண்மையிலேயே அரிய புகைப்படங்கள்தான் சகோ பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  11. விளம்பரங்கள் ஒரு காலகட்டத்தை நினைவுறுத்தியபடியே நிற்கும்.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நம் காலத்து விளம்பரங்கள் வேறே மாதிரி! :)

      Delete
  12. 1967 இல் மைசூர் சாண்டல் சோப்பின் பாரம்பர்யமான, தனி மேல் அட்டைப்பெட்டி இல்லாமல், மற்ற லக்ஸ், ஹமாம் போன்ற சாதா பேக்கிங்கில், குண்டு ஓவல் ஷேப்பும் இல்லாமல், கொண்டு வந்தார்கள். இதனால் அதன் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. பொதுமக்களில் யாரும் மைசூர் சாண்டல் என நம்பி அதை வாங்க முன் வரவில்லை. மூன்றே மாதத்தில் திரும்பவும் பழையபடி பேங்கிங் செய்ய ஆரம்பித்து இன்றுவரை விற்பனையில் கொடிகட்டிப் பறந்து வருகிறார்கள். இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete