வீட்டு வாசலில் செப்டிக் டாங்க் அருகே வீட்டின் சுவர். சமீபத்தில் தான் வெள்ளை அடித்தோம். :(
நம்ம ராமர் குடியிருந்த அலமாரி! வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது! :(
கூடத்தில் இருந்தும், சமையலறையிலிருந்தும் கொல்லைப்பக்கம் வரும் தாழ்வாரம்
கொல்லை வெராந்தாவில் தண்ணீர்க் கசிவு சுவரில்
தாழ்வாரத்தில் துணி உலர்த்தும் கொடிக்கு அருகே சுவரில் கசிவு!
இன்னொரு கோணத்தில் கசிவு!
கொல்லை வராந்தாவின் ஒரு பகுதி!
இன்னொரு படுக்கை அறையும் அதை ஒட்டிய சாப்பிடும் கூடமும் நீரில் மூழ்கி இருக்கும் காட்சி!
அடக்கடவுளே!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம். மறுபடி ஆவடி, அம்பத்தூரில் மழைனு தொலைக்காட்சியிலே கூவறாங்க! :)
Deleteரொம்ப தாழ்வான பகுதியோ? வீட்டை வாடகைக்கு விடலியா?
ReplyDeleteவாங்க சுரேஷ்! தாழ்வான பகுதி தான் எனினும் மேலும் தாழ்வான பகுதி இன்னும் கிழக்கே கொரட்டூர் ஏரி வரை செல்கிறது. இந்த நீரெல்லாம் அங்கே செல்லவேண்டியது. செல்லும் வழியெல்லாம் வீடுகள்! :)
Deleteமே வரை ஒரு போர்ஷனிலும், செப்டெம்பர் வரை இன்னொரு போர்ஷனிலும் குடித்தனம் இருந்தனர். இப்போது காலியாக இருக்கு! :)
Deleteநீங்க அம்பத்தூர் லே இருந்தது இரண்டாவது ப்ளோர் இல்லயோ ?
ReplyDeleteஅங்கயா இந்தனை வாடர் ?
சரிதான். அம்பத்தூர் லே ஆவின் பால் பிளான்ட் ஏ சர்வமும் முழுகி போயிடுத்து அப்படின்னு மாதவரத்திலேந்து பால் வரத்து காலைலே 8.30 மணிக்கு.
கோவர்தனத்திலே மழை கொட்டு கொட்டு அப்படின்னு கொட்டினபோது தான் கிருஷ்ணன் கோவர்த்தன கிரிதாரியா குடை புடிச்சு அந்த நகர கோப கோபியர்களை எல்லாமே காப்பாத்தினாராம்.
இப்ப அது மாதிரி ஒரு மலையை மெட்ராஸ் மேலெ நிறுத்தி வச்சு காப்பாத்தினாத்தான் உண்டு.
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ஹரே .
சுப்பு தாத்தா
வாங்க சு.தா. அம்பத்தூர் வீடு தனி வீடு! எங்க வீட்டைச் சுற்றிலும் இருபக்கமும், எதிரேயும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மத்தியில் எங்க வீடு தனியாக மாட்டிக் கொண்டு நாங்க வெளியே வரதே கஷ்டமாக இருக்கவே தான் அங்கே இருந்து கிளம்பினோம். ஆவின்பால் ப்ளான்ட் மீண்டும் வேலை செய்வதாக நேற்றைய தினசரியில் பார்த்தேன்.
Deleteஇந்த நிலைக்கு முதல் காரணம் அரசாங்கம் இரண்டாவது காரணம் அரசை தேர்ந்தெடுத்த மக்கள்
ReplyDeleteமுழுக்க முழுக்க மக்கள் தான் காரணம் கில்லர்ஜி! ஏரிக்குத் தண்ணீர் செல்லும் வடிகால் வாய்க்காலை எல்லாம் ஆக்கிரமித்தது நம்மைப் போன்ற மக்கள் தானே! அதைக் கண்டுகொள்ளாமல் விட்டது அரசாங்கம். இப்போது செயலற்றுத் தவிக்கின்றனர் அனைவரும்!
Deleteபோன பத்து பதினைந்து வருசத்திலே எங்களுக்கு
Deleteடி.வி. கொடுத்தாங்க. மிக்சி, கிரைண்டர், பான் கொடுத்தாங்க.
காஸ் ஸ்டவ் கொடுத்தாங்க.
எல்லாமே பிச்சுகிச்சு போயிடுச்சே..
அந்தக் காசுலே நல்ல நீர் வழி, நல்ல தண்ணீர்,
நல்ல ரோடு, நல்ல சுகாதார வசதி ஏற்படுத்தி
கொடுக்கலையே...
.
இதெல்லாம் கொடுங்க ஐயா, எங்களுக்கு இலவசமா எதுவும் வேண்டாம், நீ செய்யவேண்டியது எதுவோ அதைச் செய்யு அய்யா
என்று மக்கள் ஆகிய நாம் சொல்ல மறந்துவிட்டோம்
அரசியல் வாதிகளைச் சொல்லி குத்தமில்லை
நம்ம எதை எதிர்பார்க்கிறோம் அப்படின்னு அவங்க நல்லாவே
தெரிஞ்சு வச்சு இருக்காக.
சுப்பு தாத்தா.
வணக்கம்
ReplyDeleteபடங்களை பார்த்போது கவலைதான்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர்பதிவுக்கு வாழ்த்துகள் ரூபன். உங்கள் பதிவில் வந்து பார்க்கிறேன் விரைவில். கவலைப்பட்டு என்ன செய்வது சொல்லுங்கள்! மேலே என்ன செய்யலாம் என யோசிப்பது தான் இப்போதைய வழி! :)
Deleteசிரமம் தான்...
ReplyDeleteகஷ்டம் தான். இப்போது இருக்கும் அரசாங்கம் மட்டுமல்ல, தொடர்ந்து இருந்த பல அரசாங்கங்களும், மக்களும் என அனைவருக்கும் பங்குண்டு.
ReplyDeleteம்ம்ம் என்ன சொல்ல? நாம் செய்த தவறுகளுக்கு நல்ல பாடம்...எந்த அரசாங்கம் வந்தாலும் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டிருக்கின்றார்களே தவிர மக்களை நினைத்து எந்த நல்லதும் செய்வதில்லை. மக்களும் அறிவிலிகள்.
ReplyDelete