எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 06, 2015

ஆட்டோவிலிருந்து இறங்கி இறங்கி, ஏறி, ஏறி! :(

அங்கே ஒரு ஆட்டோ நின்று கொண்டிருக்க ஓட்டுநரைக் காணோம்! சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு கடையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் எங்களைப் பார்த்துட்டு உடனே வந்தார். அவர் தான் அந்த ஆட்டோ ஓட்டுநர். எங்கே போகணும்னு கேட்டுட்டு 60 ரூபாய் கொடுக்கச் சொல்லிக் கேட்டார். ஏற்கெனவே அரை மணி நேரம் காத்திருப்பு! ஆகவே சரினு உடனே ஒத்துக் கொண்டு விட்டோம். வழக்கமான குறுகிய பாலம் வழியே சென்று ஏரிக்கரைச் சாலைக்குத் திரும்புகையில் காவல்துறையினர் ஓடோடி வந்து ஆட்டோவை வழி மறித்துத் திருப்பி விட்டார்கள். ஆனால் சொந்தக் கார் வைத்திருப்பவர்கள், கால் டாக்சி எல்லாம் சென்று கொண்டிருந்தது. வேறே வழியே இல்லாமல் திரும்பி வந்து மூக்கைச் சுற்றிக் கொண்டு வந்து துரைசாமி பாலத்தைப் பிடித்துக் கொண்டு வந்து ஏரிக்கரைச் சாலை போகும் வழியில் சென்று ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.
ஆட்டோ க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்!

அங்கு போய் உணவு உண்டபின்னர் மாலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகத் தம்பியிடம் பேசியபோது வெளியே இருந்து மாம்பலத்துக்குள் சொந்தக்கார் வைத்திருப்பவர்களும், கால் டாக்சியில் பயணம் செய்பவர்களும் தான் வரலாம் என்றும் உள்ளே இருந்து ஒரு ஆட்டோ கூட வெளியே செல்ல முடியாது என்றும் செல்வதாக இருந்தால் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.  இந்தப் போக்குவரத்து மாற்றங்கள் பண்டிகைக்காலங்களில் அனுசரிக்கப்படுகிறது. அநேகமா தீபாவளி முடிஞ்சு பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் பொங்கல் வரையிலும் இதே போல் மாற்றங்கள் இருக்கும்னு நினைக்கிறேன். சரினு ஃபாஸ்ட் ட்ராக்கை அணுகி மாலை நிகழ்ச்சிக்குத் தி.நகர் செல்ல டாக்சி கேட்டால் செல்லவேண்டிய இடம் ரொம்பக் கிட்டே என்பதால் கொஞ்சம் இல்லை நிறைய யோசித்தனர். அப்புறமா அரை மணிக்கு முன்னர் கூப்பிடுங்கனு சொல்லிட்டாங்க. ஓலாவை அணுகினார் தம்பி. அவங்க வர ஒத்துக் கொண்டாங்க.  ஆனால் வண்டி போக்குவரத்தில் மாட்டிக் காத்திருக்கும் நேரமும் பணம் வசூலிக்கப்படும். வேறே வழியே இல்லை. எப்படியானும் போயே ஆகணும்! தம்பி வீட்டுக் கல்யாணம் ஆச்சே! அவங்க சென்னையிலேயே இருந்திருந்தால் நேரே அங்கேயே போய் இறங்கி இருப்போம். அவங்களோடயே நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்துக்குப் போயிடலாம். அவங்க தில்லியிலிருந்து இங்கே வந்திருக்காங்க!  ஆகவே மாம்பலத்தில் இறங்க வேண்டியதாப் போச்சு!

மாலை நிகழ்ச்சிக்கு மூன்றரை மணி போல் தயார் ஆனோம். மூன்றே முக்காலுக்கு வண்டி வந்தது. ஆனால் நாங்கள் போய்ச் சேர அரை மணிக்கும் மேல் ஆகிவிட்டது.  கால் டாக்சிக் கட்டணம் தொண்ணூறு ரூபாய் ஆகிவிட்டது. அந்த வழியிலே பேருந்துகளும் இல்லை; இருந்தாலும் என்னால் ஏறி இறங்குவது கடினம். புறப்படும் இடத்தில் ஏறினால் கடைசியில் போய்ச் சேரும் இடத்தில் இறங்கலாம். நடுவில் எல்லாம் ஏறுவதோ இறங்குவதோ என்னால் முடியாது! :( அங்கே போனதும் அனைத்து உறவினர்களையும் பார்த்துப் பேசிக் களித்து நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரவு வீட்டுக்குத் திரும்பப் பத்தரை மணி ஆகி விட்டது. திரும்புகையில் மைத்துனரே வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பி விட்டார். மறுநாள் ரேவதி நரசிம்மனைச் சந்திக்கச் செல்வதாக ஒரு திட்டம். செவ்வாய்க் கிழமையான அன்று மாலை தான் மருத்துவரையும் சந்திக்கணும். ஆகவே மதியம் இரண்டரை மணி போல் கிளம்பி மருத்துவரின் க்ளினிக் இருக்கும் குடியிருப்பு வளாகத்தின் காவல்காரரிடம் வருகையைப் பதிந்து கொண்டோம். இரண்டாம் எண் கிடைத்தது. அங்கிருந்து மைலாப்பூர் கிளம்பினால் கிளம்பிக் கொண்டே இருந்தோம்.

போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு முன்னே செல்லவே முடியவில்லை. ஆகவே ஆட்டோக்காரரைத் திரும்ப க்ளினிக்கிலேயே விடச் சொல்லிவிட்டு மருத்துவமனையை அடைந்தோம். அங்கிருந்து மருத்துவப் பரிசோதனை முடிந்து கிளம்புகையில் ஆட்டோ பிடிக்க பத்தாவது அவென்யூ அருகே இருக்கும் சிக்னலுக்கு வந்தோம். ஓரிரண்டு ஆட்டோக்காரர்கள் வரமாட்டோம்னு சொல்லச் சிலருக்கு ஏரிக்கரைச் சாலையே தெரியலை என்று விட்டார்கள். மாம்பலமானு கேட்டுட்டு ஒருத்தர் பதிலே சொல்லாமல் போயிட்டார். பின்னர் வந்த ஒருத்தர் ஏற்றிக்கொண்டார்.  கொஞ்ச தூரம் போனதும் இன்னொரு சிக்னல் அருகே திரும்பணும். அல்லது அதற்கு முன்னால் உள்ள தெருவில் திரும்பணும். அப்போது பார்த்து அவர் எப்படிப் போகணும்னு எங்களிடம் கேட்க, நாங்க நீங்க போறபடி போங்கனு சொல்ல, அவரோ எனக்கு வழி தெரியாது. நீங்க சொல்லுவீங்கனு நினைச்சேன். கீழே இறங்கி வேறே ஆட்டோ பிடிங்கனு சொல்லிட்டு இறக்கி விட்டுட்டார். நல்லவேளையாக அழைத்து வந்த தூரத்துக்குக் கட்டணம் வசூலிக்கவில்லை! :)

பின்னர் சற்று நேரம் காத்திருந்ததும் இன்னொரு ஆட்டோ வந்தது! ஏற்றிக் கொண்ட ஆட்டோக்காரருக்கு நாங்க சொன்ன அடையாளங்கள் புரியலை. பின்னர் பப்ளிக் ஹெல்த் சென்டர் தெரியுமானு கேட்டதுக்குத் தெரியும்னு சொன்னார். நல்லவேளையா அதுக்குப் பக்கமாத் தான் நாங்க போக வேண்டிய தம்பி வீடு!  அங்கே போனதும் அடையாளம் காட்டி இறங்கிக் கொண்டோம். மருந்துகளை இங்கேயே வாங்கிக்கலாம்னு பார்த்தால் சில கிடைத்தன. சில கிடைக்கலை. சரினு வீட்டுக்குப் போயிட்டோம். இப்போ அடுத்த பிரச்னை! எழும்பூர் ரயில் நிலையம் செல்ல வண்டி முன்பதிவு செய்யணும். நாங்க இரவு மலைக்கோட்டை விரைவு வண்டியில் முன்பதிவு செய்திருந்தோம். ஆகவே ஃபாஸ்ட் ட்ராக்கில் முன்பதிவு செய்தோம். ஆனால் அது ஓட்டுநருக்குச் சரியாகப் போகாமல், அவர் தொலைபேசி அழைப்புகள் எல்லாம் எங்களுக்கும் வராமல், ரொம்பவே பதற்றம் ஆகி விட்டது. ஆனால் சரியாக ஒன்பது மணிக்கு வந்துவிட்டார். நாங்க ரயில்நிலையம் நுழையும்போதே வண்டி நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. அங்கே இருந்த பாட்டரி கார்காரரிடம் எங்களை எங்கள் பெட்டிக்கு அருகே இறக்கிவிடச் சொல்ல அவரும் சம்மதித்துக் கூட்டிச் சென்று விட்டார். உடனே வண்டியிலும் ஏறிவிட்டோம். ஆனால் எனக்குக் கிடைத்திருந்தது பக்கவாட்டுக் கீழ்ப்படுக்கை இருக்கை. இரண்டு இருக்கைகளையும் சேர்த்துப் போடுகையில் கிடைக்கும் இடைவெளியில் முதுகு பொத்துக் கொண்டு வந்தது.

ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை. நுழையும் இடத்துக்கு அருகே வேறே எங்கள் படுக்கை இருக்கை! வரவங்களும் போறவங்களும் ஒரு வினாடிக்கு ஒரு முறை கதவைத் திறப்பதுமாக இருந்தனர்! அந்த சத்தத்தில் எல்லாம் எனக்குத் தூக்கம் வராது. ஒரு வழியா சத்தம் ஓய்ந்து தூங்க ஆரம்பிக்கையிலே பனிரண்டரை மணி ஆச்சு! திடீர்னு தூக்கிவாரிப் போட்டு முழிப்பு வர மணியைப் பார்த்தேன். மூன்று மணி ஆகி இருந்தது. வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனிலே நின்னுட்டு இருக்க, அரியலூராக இருக்கும்னு நினைப்பில் ரங்க்ஸை எழுப்பினேன். அவரும் அடுத்து லால்குடி தான், அதுக்கப்புறமா ஶ்ரீரங்கம் வந்துடும்னு எழுந்து உட்கார்ந்தார். வண்டி கிளம்பும் வழியாகத் தெரியலை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அங்கேயே நின்ற வண்டி அதன் பின்னர் மனசே இல்லாமல் அங்கிருந்து கிளம்பியது. கிளம்பிய அரை மணி நேரத்தில் ஒரு பெரிய ஸ்டேஷன் வர, என்னடா இது லால்குடி இத்தனை பெரிசு இல்லையேனு நன்றாக உற்றுப் பார்த்தால் கடவுளே! விருத்தாசலம் சந்திப்பு ரயில் நிலையம்! நாலரை மணிக்கு வந்திருக்கு! என்னத்தைச் சொல்ல!

வண்டி அதன் பின்னரும் விரைந்து செல்லவில்லை. அரியலூர் வரையிலும் மெதுவாகவே சென்றது. பின்னர் கல்லக்குடி வரும்போது ஐந்தரை மணி ஆகிவிட்டது. அதுக்குள்ளே தம்பி வீட்டுக்குத் தொலைபேசிப் பார்த்துட்டுக் கைபேசியில் அழைத்தார். நாங்க போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னேன். அதே போல் ஆறரை மணிக்குத் தான் ஶ்ரீரங்கம் வந்தது. நடைமேடையில் ஒரே நெரிசல். பல்லவனில் ஏறக்காத்திருந்த மக்கள் கூட்டம்!  சமாளித்து வெளியே வந்ததும் வாசலில் வந்து நின்ற ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்து இடத்தைச் சொல்லிக் கிளம்ப ஆரம்பிக்கையில் அந்த ஸ்டேஷன் ஆட்டோ ஸ்டான்டின் தலைவர் அங்கே வந்து எங்களை இறங்கி ஸ்டான்ட் ஆட்டோவில் போகச் சொல்ல அலுப்புடனும், சலிப்புடனும் அமர்ந்திருந்த நாங்கள் மறுக்க எங்கள் ஆட்டோ ஓட்டுநருக்கும், அந்தத் தலைவருக்கும் ஒரு சின்ன மோதல் ஏற்பட, அதற்குள்ளாக ஸ்டான்ட் ஆட்டோ ஒட்டுநர் அங்கே ஆட்டோவை எடுத்துவர, எங்களை வற்புறுத்தி இறங்க வைத்தார் அந்த ஸ்டான்ட் ஓட்டுநர் சங்கத் தலைவர். வேறே வழியில்லாமல் இறங்கி அந்த ஆட்டோவில் ஏறினோம். நல்லவேளையா ஜாஸ்தி பணம் கேட்கவில்லை. வழியில் காஃபிக்குப் பால் பாக்கெட் வாங்கிக் கொண்டு ஒரு வழியா வீடு திரும்பினோம். இம்முறை சென்னைப் பயணம் ஆட்டோக்களால் மறக்க முடியாத பயணமாக ஆகிவிட்டது!

23 comments:

 1. மறக்க முடியாத த்ரில் பயணம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சில சமயம் இப்படி ஆகி விடுகிறது! தீபாவளி நேரம்! :)

   Delete
 2. யாம் இரு வினாக்களை எழுப்பலாமோ?
  1. '...உள்ளே இருந்து ஒரு ஆட்டோ கூட வெளியே செல்ல முடியாது என்றும் செல்வதாக இருந்தால் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்றும் கூறினார்...' சைகிள் ரிக்‌ஷா அளெவுடா?
  2. போன ஜென்மத்தில் நீங்கள் ஆட்டோ ஒட்டுனாரக இருந்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. சென்னையிலே சைகிள் ரிக்‌ஷா எங்கே சார் இருக்கு? சென்னை டவுனில் வேணாப் பார்க்க முடியுமோ என்னமோ தெரியலை! இங்கே எல்லாம் கிடையாது!

   ஹிஹிஹி, போன ஜன்மத்தில் யானைனு கேள்வி! :) அதுக்கு முந்தின ஜன்மத்து நினைப்பெல்லாம் இப்போ வருதே! :)

   Delete
 3. டாக்சிகள் வந்த பிறகு, ஆட்டோக்கள் குறைந்து விட்டது போல் தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம் ரயிலிற்கு, விமானத்திற்கு டிக்கெட் வாங்குவது கூட சுலபம் என்றெண்ணுகிறேன். ரயிலைப் பிடிப்பதற்கு, டாக்சிகாரர் வருவதற்குள் டென்ஷன் எக்கச்சக்கமாகி விடுகிறது. போன் செய்து புக் செய்யும் போது சரி அனுப்புகிறோம் என்று சொல்பவர்கள். கடைசி நிமிடத்தில் காலி வாரி விட்டு விடுகிறார்கள். அதனால் ஆட்டோக்களும் இப்பொழுது அதிகமாக கேட்கிறார்கள். என்ன செய்வது?

  ReplyDelete
  Replies
  1. ஆட்டோக்கள் குறையல்லாம் இல்லை! அவங்க மிகக் குறைந்த தூரம்னால் வர யோசிப்பாங்க. குறைந்த பட்சமாக 30 ரூபாய் தான் கிடைக்கும். யாரும் உடனே 50 ரூ 60 ரூனு கொடுக்க மாட்டாங்க! அதான். கால் டாக்சி என்னைப் பொறுத்தவரை ஃபாஸ்ட் ட்ராக் நம்பகமாத் தெரியுது! கிளம்பும்போது விலாசம் புரிஞ்சுக்காமல் ஓட்டுநரால் கொஞ்சம் பதட்டம் அடைந்தாலும் சொன்னால் சொன்னபடி ஒன்பது மணிக்கு வண்டி வந்து விட்டது! :)

   Delete
 4. //போன ஜென்மத்தில் நீங்கள் ஆட்டோ ஒட்டுனாரக இருந்தீர்களா?// நல்ல கேள்வி!

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலே என்ன நல்ல கேள்வி? கெட்ட கேள்வி! :P :P :P

   Delete
 5. //போன ஜென்மத்தில் நீங்கள் ஆட்டோ ஒட்டுனாரக இருந்தீர்களா?//

  அது மட்டுமா? :)))

  ReplyDelete
  Replies
  1. தும்பி, நான் போன ஜன்மத்தில் யானை!

   Delete
 6. We have to use rengarajapuram over bridge to enter west mambalam by auto. Pavam. Romba kashta pattutel neenga.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? பண்டிகைக்குத் துணி எடுக்கவே நான் தி.நகர் பக்கம் தலை வைச்சுப் படுக்க மாட்டேன். இந்த விஷயமெல்லாம் எங்கே தெரியுது! :) நம்ம சாய்ஸ் ஈவ்னிங் பஜாரில் மத்திய அரசால் நடத்தப்படும் ஹான்ட்லூம் ஹவுஸ் தான்! கூட்டமே இருக்காது. ஜாலியா, நிதானமா ஒவ்வொரு மாநிலத்தின் கைத்தறியையும் பார்த்து ரசித்துத் தேர்வு செய்ய முடியும்! இங்கே கோ ஆப்டெக்ஸ்! எல்லா முக்கிய நகரங்களின் கைத்தறியும் கிடைக்கும்! :)

   Delete
 7. பிரச்சனைகள் தொடர்ந்து வந்திருப்பது புரிகிறது. :)) பண்டிகை சமயங்களில் நம்ம ஊர்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே போவதைப் பார்க்கும்போது அலுப்பாக இருக்கிறது....

  Comment போட விடாமல், என்னை சோதிக்கிறது - நான் ரோபோ இல்லை என ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது! உங்கள் பாஷையில் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... [இன்னும் கொஞ்சம் ர்ர்ர்ர் போடணுமோ?]

  ReplyDelete
  Replies
  1. வெங்கட்... ரோபோ கேள்வியெல்லாம் லட்சியம் செய்யாதீர்கள். அது சும்மா உலுஉலுவாங்கட்டிக்குத்தான். நீங்கள் பாட்டுக்கு உங்கள் கமென்ட்டை பப்ளிஷ் கொடுக்கலாம். நான் அப்படித்தான் நிறைய இடங்களில் செய்கிறேன்.

   Delete
  2. ஆமாம், வெங்கட், கூட்டம் பொதுவாவே எனக்கு அலர்ஜி! இம்முறை நல்ல கூட்டத்தில் முன்னும், பின்னும் வண்டிகள், பக்கவாட்டில் வண்டிகள், பாங்க், பாங்க் என்ற ஹார்ன் ஒலிகள்! போதும்டா சாமி! சொர்க்கத்துக்கு எப்போப் போவோம்னு ஆச்சு! :)

   Delete
  3. ஹிஹிஹி, எத்தனை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போட்டாலும் நம்ம க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாதிரி வருமா? அதான் ஏத்துக்கலை! :)

   apart from joking, just ignore the robo or the captcha!

   Delete
  4. ignore பண்ண விட்டாத்தானே.... ஒரே அடம். நீ ரோபோ இல்லைன்னு நிரூபிக்கலைன்னா விடமாட்டேன்ன்னு! சரி ரோபோ இல்லைன்னு க்ளிக் பண்ணா, ஒன்பது [அ] பன்னிரெண்டு படம் வருது - இதில் தின்பண்டங்களை தேர்வு செய்தால் தான் உள்ளே உடுவேன்னு அழிச்சாட்டியம்! இன்னிக்கு காலைல ரொம்ப படுத்தல்! :)

   Delete
 8. இது வரை ஐந்தாறு சென்னை பயண அனுபவத்தில் உபேர் பரவாயில்லை. ஆட்டோவுக்கு ஆகும் அளவே பணம். என் சின்ன மகன் தனியாகஊருக்கு வந்து திரும்பக் காலேஜ் போன போதும் பொறுப்பாக காலேஜ் வளாகத்தில் உள்ளே போய் ஹாஸ்டல் பக்கம் விட்டிருக்கிறார் டிரைவர்!!
  அடுத்த முறை டிரை செய்யுங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. சிலர் சொல்றாங்க உபேர் நல்லா இருக்குனு! போனதில்லை. அடுத்த முறை பார்க்கலாம். ஆலோசனைக்கு நன்றி மிடில்க்ளாஸ் மாதவி!

   Delete
 9. சிறுவயதில் பயணங்கள் இனிமையாய் இருந்தது, இப்போது கஷ்டமாய் இருக்கிறது. சொந்தங்களின் வீடுகள் எல்லாம் ஒவ்வொரு தனி தனி ஊராக இருக்கிறது, பெயர் சென்னை. டாக்ஸிக்கும், ஆட்டோவிற்கும் பதிவு செய்வதும், காத்து இருப்பதும் நல்ல அனுபவமாய் மாறுகிறது நமக்கு. தம்பிமகள் நிச்சியத்திற்கு மாங்காடு போய் விட்டு சென்னை உறவினர்கள் எல்லோரையும் இங்கேயே பார்த்து விட்டோம் அல்லவா ? அடுத்தமுறை வருகிறோம் உங்கள் வீடுகளுக்கு என்று தப்பித்துக் கொண்டோம். அதனால் தான் கோவில்கள் போக முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. நாங்க எல்லா உறவினர் வீடுகளுக்கும் போவதில்லை. எப்போச் சென்னைப் பயணம்னாலும் இரண்டே நாளில் முடிச்சுப்போம். ஜூன் மாதம் தான் அம்பத்தூர் வீட்டில் சுத்தம் செய்யும் வேலை இருந்ததால் பத்து நாட்கள் தங்கும்படி ஆச்சு! அப்போவும் எங்கும் போகலை! தம்பி வீடு, பின்னர் அம்பத்தூரில் அண்ணன் வீடு!

   Delete
 10. ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள்! மழை, தீபாவளி சமயம் திநகர் பக்கம் போயிரக்கூடாது!

  ReplyDelete
  Replies
  1. நாங்க போகவே மாட்டோமே! இம்முறை நிச்சயதார்த்தம் தி.நகரில் என்பதால் கட்டாயமாய்ச் சென்று தானே ஆகணும்! அதுவும் நாங்க முன்னெடுத்துச் செய்யும் கல்யாணம் ஆச்சே! :)

   Delete