அங்கிருந்த வரவேற்பாளரிடம் தங்க அறை தேவை என்றதும், எல்லா விபரங்களையும் கேட்டுக் கொண்டு இப்போ எங்கே தங்கி இருக்கீங்க என்றார்கள். நாங்கள் விபரம் சொன்னதும் சரினு அறை குறித்த தகவல்களை எல்லாம் சொல்லிட்டு, காலை ஆகாரம் அறை வாடகையோடு சேர்ந்தது என்றும் சொல்லிட்டு எத்தனை நாட்கள் வேண்டும் என்றனர். நாங்கள் ஞாயிறு மதியம் 12 மணிக்குக் கிளம்பிடுவோம் என்றதும் ஒத்துக் கொண்டு நல்லவேளையாகக் கீழேயே அறை காலி இருந்ததால் அதை எங்களுக்கு ஒதுக்கினார்கள். மேலே அறை கொடுத்திருந்தால் லிஃப்ட் இல்லை; படிகளில் ஏறணும்! :( பின்னர் முன்பணம் கட்டியதும் அறைச்சாவியைக் கொடுத்ததும், அறையைத் திறந்து பார்த்துவிட்டுச் சாமான்களை எடுத்துக் கொண்டு வருகிறோம் எனச் சொல்லிச் சாவியை மீண்டும் அவர்களிடமே கொடுத்தோம். வெளியே வந்தால் சற்றுத் தொலைவில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அங்கே போய் நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து சாமான்களை எடுத்துக் கொண்டு மீண்டும் இங்கே கொண்டு வந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலில் 200 ரூபாய் கேட்ட அவர் பின்னர் பேரம் பேசியதில் 150 ரூக்கு ஒத்துக் கொண்டார். அதுவும் அதிகம் தான். ஏனெனில் இங்கே வரும்போது 30 ரூபாய் கொடுத்துத் தான் வந்திருக்கோம். 30+30 அறுபது ரூபாய் எனில் கூடப் பதினைந்து ரூபாய் வைத்துக் கொண்டாலும் 75 ரூக்குள் தான் ஆகும். ஆனால் அவங்க ஒத்துக்கலை. 100 ரூ வரை கூடக் கேட்டுட்டோம்.
பின்னர் வேறு வழியின்றி அந்த ஆட்டோவிலே பயணித்தோம். செல்லும் வழியை நாங்கள் தான் சொல்ல வேண்டி இருந்தது. அங்கே போய் மேலே நாங்கள் தங்கி இருந்த அறையிலிருந்து சாமான்களை எடுத்துக் கொண்டோம். விடுதிக்காப்பாளரைத் தேடினோம். கிடைக்கவில்லை. கீழே உள்ள காவலாளிகளைக் கேட்டோம். அவங்களுக்கும் தெரியலை. பின்னர் நாங்கள் கொஞ்சம் உரத்த குரலில் அந்தக் கிழவரை, "பாபா! பாபா!" என்று அழைத்தோம். அவர் வந்து சேர்ந்தார். நாங்கள் இரவு உணவுக்காகக் கூப்பிட்டோம் என்று நினைத்திருக்கிறார். ஏற்கெனவே அவர் கொடுத்த சகிக்க முடியாத ஆறிப்போன காஃபியில் மனம் நொந்து போயிருந்தோம். அதைக் கொடுத்த ஜாடியும் சரி, குடிக்கக் கொடுத்த பீங்கான் கப்புகளும் சரி! கழுவி எத்தனை நாட்கள் ஆயிருந்ததோ! அந்த மனிதரிடம் நாங்கள் அறையைக் காலி செய்யப் போவதைச் சொன்னதும் அவருக்குக் கோபம் வந்தது. ஒரு நாள் வாடகை ஆயிரம் ரூபாயும் காஃபிக்கு 75 ரூபாயும் கொடுத்துட்டுத் தான் போகணும் என்று பிடிவாதம் பிடித்தார். 3 மணிக்கு அந்த அறைக்குள் நுழைந்திருக்கோம். இப்போ மணி ஐந்தரை! மூன்றரைக்கு வெளியே போய் மாற்று அறை பார்க்கக் கிளம்பிட்டோம். மொத்தம் அங்கே இருந்ததே அரை மணியிலிருந்து முக்கால் மணிக்குள் தான்! இதுக்கு ஆயிரம் ரூபாயா என்றால் அந்த ஆள் மசியவில்லை.
பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னர் ஆயிரத்து 75 ரூ தண்டம் அழுதுட்டுக் கீழே வந்து ஆட்டோவில் ஏறி தாரா மஹல் வந்து சேர்ந்தோம். வரவேற்பில் சாவியைப் பெற்றுக் கொண்டு அறைக்குப் போய்க் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். கல்கத்தா நகரம் இன்னும் என்னவெல்லாம் அனுபவங்களைத் தரப் போகிறதோ என்னும் எண்ணம் மனதில் மேலோங்கியது. அறையிலேயே உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள் என்றும் நம் தேவையைச் சொன்னால் போதும் என்றும் ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள். அன்று இருந்த மனோநிலைக்கு எங்கும் செல்ல மனம் இல்லை. ஆகவே ஏழு மணி போல் நாலு இட்லி தேவை என்று சொல்லிவிட்டு அறையிலேயே தங்கி விட்டோம். பின்னர் வரவேற்புக்குச் சென்று மறுநாள் சுற்றிப் பார்க்க வண்டி ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டோம். அவங்களும் ஒரு வண்டியை ஏற்பாடு செய்தாங்க. காலை எட்டு மணிக்கெல்லாம் வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டோம். எங்கள் எதிரிலேயே ஹோட்டல் ஊழியர்களும் காலை எட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள்.
அன்றிரவு நல்லபடியாகக் கழிந்ததும் மறுநாள் காலை ஐந்தரைக்கெல்லாம் எழுந்து கீசர் போட்டுட்டாங்களா என்று சோதித்துவிட்டுக் காஃபி வேணும்னு வரவேற்பில் சொல்லிட்டுக் குளித்து முடித்துத் தயார் ஆனோம். ஏழரைக்கெல்லாம் காலை உணவு தயாராகிடும்னு சொன்னதால் உண்ணும் இடம் எங்கே என்று கேட்டுக் கொண்டு சென்றோம். ப்ரெட் சான்ட்விச், ஜூஸ், ப்ரெட் டோஸ்ட், பட்டர், ஜாம், கெச்சப், இட்லி, பூரி, பொங்கல், சாம்பார், சட்னி, சனா மசாலா போன்றவை இருந்தன. நல்லவேளையாக அசைவம் எதுவும் இல்லை. நான் ஒரு சான்ட்விச்சும் ஒரு இட்லியும், கொஞ்சம் போல் பொங்கலும் எடுத்துக் கொண்டேன். ரங்க்ஸும் பூரி, இட்லி சாப்பிட்டார். காஃபியும் கொடுத்தாங்க. குடித்து முடித்து அறைக்கு வந்து வண்டிக்காகக் காத்திருந்தோம். எட்டரை மணி ஆச்சு வண்டியே வரவில்லை. வரவேற்பில் போய்ச் சொன்னால் அவங்க தொலைபேசிக் கேட்டால் மறுபக்கம் சரியான மறுமொழி இல்லை போலும்! ஏதோ சொல்லிச் சமாளிச்சாங்க. அப்படியே ஒன்பதரை வரை போய்விட்டது. வண்டியே வரவில்லை.
மீண்டும் மீண்டும் தொலைபேசிக் கேட்டதும் ஒருவழியாகப் பத்து மணிக்கு வண்டி வந்தது. வரும்போதே அந்த ஓட்டுநர் தன்னை அடிக்கடி தொலைபேசி அழைத்ததுக்கு ஓட்டல்காரர்களிடம் கோபமாகப் பேசினார். சரிதான்! இன்னிக்குப் பொழுது இப்படியா என நினைத்துக் கொண்டோம். வாய் பேசாமல் வண்டியில் ஏறிக் கொண்டோம். தக்ஷிணேஸ்வர் காளி கோயிலுக்கு முதலில் விடச் சொன்னோம். கோபமாக வண்டியைக் கிளப்பினார் ஓட்டுநர்.
படத்துக்கு நன்றி விக்கிபீடியா!

நேரமே சரியில்லை போலவே! கல்கத்தா காளியோட ஊர்ங்கறதால எல்லோரும் கோபமாவே இருக்காங்களோ...
ReplyDelete//அங்கிருந்த வரவேற்பாளரிடம் தங்க அறை தேவை என்றதும்//
ஆ! தங்கத்தில் அறையா!
:)))))
அப்படியும் சொல்ல முடியலை! பொதுவாக வங்காளிகளுக்கு சுய அபிமானம் அதிகம் என்பது தெரியும். அதுவும் அவங்க மொழின்னா ரொம்பவே அபிமானம்.மத்தபடிப் பொதுவா நல்லவங்களே! நம்மநேரம் சரியில்லை! :)
Deleteஆமாம், ஆமாம், தங்கத்தில் "அறை" :)
Delete
ReplyDeleteகேட்கவே வருத்தமா இருக்கு கீதா. அதுதான் ஊருக்கு வந்து உடல் சரியாக இல்லை.
அது மட்டும் காரணம் இல்லை வல்லி! :)
Deleteஅம்மை போட்டிருந்தமையால் ஒரு மாதமாக வலைப்பக்கம் வரவில்லை! கல்கத்தா பயண அனுபவ பகிர்வுகளுக்கு நன்றி!
ReplyDeleteவாங்க சுரேஷ்! எனக்கும் பல்வேறு காரணங்களால் யாருடைய பதிவையும் போய்ப் படிக்க முடியலை!
Deleteமோசமான அனுபவம் தான்.. ஊர் சுத்தி பார்க்கிற மூடே போய்விடும். ஆனால் என் வங்காளத்து நண்பர்கள் பலர் சென்னை என்றாலே ஏமாத்து ஊர் என்பார்கள்.. அவரவர் அனுபவம் வழியே தான் எதைப் பற்றியும் தீர்மானம் செய்கிறோம்.
ReplyDeleteமோகன் ஜி, தம்பி, சென்னை விஷயத்தில் நீங்க சொல்வது நூத்துக்கு ஆயிரம் சதம் ஆதரிக்கிறேன். கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். :)))) என்றாலும் கல்கத்தாவில் வழி கேட்டாலோ, வேறு ஏதேனும் கேட்டாலோ நின்று, நிதானமாகப் பதில் சொல்கின்றனர். ராஷ்பிஹாரி அவென்யூவின் நடைமேடைக் கடை வியாபாரிகள் அனைவரும் மிக மிக நல்லவர்களாக இருக்கின்றனர். தாராமஹலின் தென்னிந்தியர்கள் அனுசரணையாக இருக்கக் கோமள விலாஸின் தென்னிந்தியர்கள் நேர்மாறாக நடந்து கொண்டனர்! :)))
Deleteசென்னையில் ஆட்டோ ஏமாற்று உண்டுதான் மற்றபடியும் உண்டா??!! வெளியூர் மக்களைக் கேட்டால்தான் தெரியும் போல...உங்கள் அனுப்வங்களைத் தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம்..
ReplyDelete