எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 07, 2016

திருச்சி, ஶ்ரீரங்கத்தில் பதிவர்கள் மாநாடு!

திருவாளர்கள்,
ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி,
வை.கோபாலகிருஷ்ணன்,
தி.தமிழ் இளங்கோ,
ரிஷபன்,(மனைவியுடன்)
வெங்கட் நாகராஜ்,
ஆதி வெங்கட்,
ரோஷிணி,
ருக்மிணி சேஷசாயி,
கோபால்
துளசி கோபால்

ஆகியோருடன் ஆன எங்கள் சந்திப்பு இப்போது ஏழு மணிக்கு முடிந்தது , ஏற்கெனவே துளசியும், திரு கோபாலும், ஶ்ரீரங்கம் வரப்போவதாகவும், கட்டாயம் வீட்டுக்கு வருவேன் எனவும் சொல்லி இருந்தார்கள்.  சரி, அவங்க மட்டும் தான் வருவாங்க போலனு நினைச்சிருந்தா, தலைநகரிலிருந்து இங்கே வந்திருக்கும்/வந்திருந்த திரு வெங்கட் அவங்க எல்லோரையும் பார்க்க விரும்புவதாகவும் ஒரு குறிப்பிட்ட இடம் சொல்லிட்டா அங்கே எல்லோரும் கூடிப் பார்க்கலாம்னும் சொன்னார். நமக்கு நம்ம இடம் எப்போவுமே சொர்க்கமே! ஆகவே சொர்க்கத்திலே சந்திக்கலாம், ஏற்பாடு செய்யுங்கனு வெங்கட் கிட்டே சொல்லிட்டேன்

அப்புறமா வரவங்களை எந்தச் சாப்பாடு கொடுத்து பயமுறுத்தறதுனு ஒவ்வொண்ணா யோசிச்சுத் தட்டிக் கழிச்சுட்டே வந்தோம். நான் திடீர்னு சேவை பண்ணறேன்னு சொல்ல, ரங்க்ஸும் அரை மனதாக ஆமோதித்தார். மாலை நாலு மணிக்குச் சந்திப்பு. ஆறு அல்லது ஆறரை வரை இருக்கும் அந்த நேரம் சேவை சாதித்தால் சரியா இருக்குமானு அவர் எண்ணம். ஆனால் திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே வீட்டில் டிஃபன் செய்யும் யோசனை கைவிடப்பட்டது. வெங்கட்டும் அவர் மனைவி ஆதி வெங்கட்டும் ரொம்பவே இழுத்து விட்டுக்காதீங்கனு வேறே சொன்னாங்க. ஆகவே ஸ்வீட் மட்டும் கடையிலே வாங்கலாம்னு நினைச்சு அல்வா, ஜிலேபி, சோன் பப்டி, லட்டுனு ஒவ்வொரு ஸ்வீட்டா யோசிச்சுக் கடைசியிலே நானே கேசரி பண்ணிடறேன். கீழே உள்ள வணிக வளாகக் கடையில் சுடச் சுட போண்டா போட்டு வாங்கிடலாம்னு முடிவாச்சு. இது போதும்னு முடிவும் பண்ணிட்டோம். காஃபி வீட்டிலே நல்ல காஃபி பவுடராகக் காலை போய் வாங்கிட்டு வந்தார்.

காஃபி மேக்கரில் டிகாக்‌ஷனும் போட்டு வைச்சாச்சு. முதலில் வெங்கட், ஆதி, ரோஷ்ணி, ருக்மிணீ சேஷ சாயி ஆகியோர் வந்தனர். பின்னர் ரிஷபன், மனைவியோடு வர, அவரைத் தொடர்ந்து ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, வைகோ ஆகியோரும் வந்தனர். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். அதுக்கப்புறமாத் துளசியும், கோபாலும் அருகிலுள்ள ஹயக்ரீவாவிலே இருந்து வந்து சேர்ந்தாங்க. திருதமிழ் இளங்கோ அவர்கள் வரக் கொஞ்சம் நேரம் ஆனது. அது வரைக்கும் போண்டோவும் வரலை. வெங்கட்டுக்கும் ரிஷபனுக்கும் கவலை வர போண்டோ என்ன ஆச்சுனு கீழே போய்ப் பார்க்க நம்மவர் சுடச் சுட போண்டோவை எடுத்துக் கொண்டு சட்னி துணையோடு வந்து சேர்ந்தார்.

கொஞ்ச நேரம் கைக்கும் வாய்க்கும், சண்டை முடிஞ்சதும் எல்லோரும் காஃபி குடிச்சாங்க. அதுக்கப்புறமா ரிஷபன் சிலரை வாரிவிட அவரை மத்தவங்க வாரி விடனு கச்சேரி களை கட்டியது. அது போக ஆங்காங்கே பக்கத்தில் இருந்தவங்க அவங்க பக்கத்தில் இருந்தவங்களோட கிசுகிசுத்துக் கொண்டனர். திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் அவங்களே கைகளால் தயார் செய்த க்ரிஸ்டல் மணி மாலைகளை எங்கள் அனைவருக்கும் அவரவர் கட்டி இருந்த புடைவைக்கு ஏற்பத் தேர்வு செய்து கொடுத்தார்கள். எனக்கும் ஒன்று கிடைத்தது. மாலை படமும், போண்டோ, கேசரி படமும் நாளை யார் கிட்டேயாவது வாங்கிப் போடறேன். துளசி போண்டோ, கேசரியை முதலில் படம் எடுத்துட்டுத் தான் அப்புறமாச் சாப்பிட்டாங்க. ஆகையால் விரிவான படங்களை அங்கே பார்க்கலாம்.

எனக்கு உடம்பு இன்னும் பூரண குணம் அடையாததாலும் காமிரா சரியில்லை என்பதாலும் நான் படங்கள் எடுக்க முடியவில்லை. நம்ம ரங்க்ஸ் சொன்னாப்போல் நாலு மணியிலிருந்து ஏழு மணி வரை நேரம் போனது தெரியவில்லை. வந்தவங்க, வரவங்க எல்லோரையும் மாடிக்குக் கூட்டிச் செல்லும் வழக்கம் உள்ள ரங்க்ஸ் இப்போவும் ஆர்வத்துடன் அனைவரையும் மாடிக்குக் கட்டி இழுத்துச் சென்றார். அதெல்லாம் அவர் கிட்டே இருந்து மாடியைப் பார்க்காமல் யாரும் தப்பிக்க முடியாது. மாடியைப் பார்த்ததும் கீழே வருகையில் பாதிப்பேரைக் காணோம். என்னடா ஆச்சுன்னு பார்த்தா அவங்க எதிர்ப்பக்கமாப் போயிருக்காங்க போல! அப்புறமா மீண்டும் கச்சேரி ஆரம்பிக்க இன்று தான் எங்களை எல்லாம் பார்க்கும் ரிஷபன் மனைவி நெடுநாள் பழகியவங்க போல எல்லாத்திலேயும் கலந்துண்டாங்க. அதுக்கப்புறமா ஆறரை மணிக்கு விடை பெற்றுக்க ஆரம்பிச்சாங்க. ஏழு மணிக்கெல்லாம் வீடு வெறிச்!

68 comments:

  1. சுடச்சுட போண்டா போலவே சுடச்சுட இந்தப்பதிவுமா? :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், படங்கள் இல்லாப் பதிவு, :( உங்க படங்களிலே சிலவற்றை அனுப்பினால் அவற்றை இதில் போட முயற்சிக்கிறேன். நன்றி.

      Delete
    2. ஏராளமான படங்களை (சுமார்: 34) தாராளமாக அனுப்பி வைத்துள்ளேன்.

      அனுப்பிய நேரம்: நள்ளிரவு 12.05

      நான் இப்போதைக்கு ஏதும் புதிய பதிவுகள் தரப்போவதாக இல்லை. அதனால் எந்தப்படத்தை வேண்டுமானாலும் ஆசை ஆசையாக நீங்கள் தாராளமாக உங்கள் பதிவினில் உபயோகித்துக்கொள்ளலாம்.

      அன்புடன் VGK

      Delete
    3. வந்திருக்கு படங்கள் எல்லாம். ஆனால் போண்டோ, கேசரி, பர்ஃபி இல்லாப் படங்கள்! :)

      Delete
    4. Geetha Sambasivam 08 February, 2016

      //வந்திருக்கு படங்கள் எல்லாம். ஆனால் போண்டோ, கேசரி, பர்ஃபி இல்லாப் படங்கள்! :)//

      பசியோ, ருசியோ, பேச்சு சுவாரஸ்யமோ .... அவற்றை ஏனோ நான் டேஸ்ட் பார்ப்பதற்கு முன்பு என்னால் படம் எடுக்க எனக்குத் தோன்றவில்லை.

      ஒருவேளை மிச்சம் மீதாரி நிறைய டேபிளில் திறந்து வைத்திருந்தாலாவது, கை அலம்பிய பிறகாவது அவற்றை நான் போட்டோ பிடித்திருப்பேன். :)

      Delete
  2. நான் துளசியிடம் கேட்டு இருந்தேன் நீங்க எப்படி இருக்கிறீர்கள் என்று .ஆல் இஸ் வெல்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு ஹோட்டலில் வைஃபை கிடைக்காததால் பிறகு தான் படம் வரும்னு நினைக்கிறேன். அருமையான சந்திப்பு. அனைவரும் வர முடிந்ததுக்கு மிக மகிழ்ச்சி மா.

    சீக்கிரம் குணமடைய ஸ்ரீரங்கனே அருள் புரியட்டும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, மருத்துவர் குணமாக நாளாகும் என்று சொல்லிட்டார்! இம்முறை கொஞ்சம் கடுமையாகத் தாக்கி உள்ளது! :) மற்றபடி அன்றாட வேலைகளை செய்து கொள்கிறேன். பிரச்னை ஏதும் இல்லை. ஓய்வு அதிகம் தேவைப்படுகிறது. அரை மணி நேரம் வேலை செய்தால் ஒரு மணி நேரம் ஓய்வு! :(

      Delete
  3. தட்டில் மூன்று ஸ்வீட் அல்லவா அதில் இருந்தன.

    ஒன்று நீங்கள் செய்த கேசரி, ஒன்று நான் கொண்டு வந்திருந்த தேங்காய் பர்பி, இன்னொன்று சோன்பப்டி.

    அந்த மிகச் சிறிய, கலர் பேப்பர் சுற்றிய ஃபாரின் சாக்லேட் போல இருந்த சோன்பப்டியை நான் அங்கு சாப்பிடாமல் என் வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டேன். இங்குதான் சுவைத்தோம்.

    அது மிகவும் ஜோராக டேஸ்டாக இருந்தது. :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நீங்கள் கொண்டு வந்த தேங்காய் பர்ஃபியை மறந்துட்டேன், துளசி கொடுத்தப் புதுமாதிரியான ஸ்வீட்டையும் விட்டுட்டேன், படங்கள் வரட்டும். போட்டே காட்டிடலாம். :)

      Delete
  4. இன்றைய சந்திப்பு உண்மையிலேயே மிக மகிழ்ச்சியாக இருந்தது.

    பெரும்பாலும் நாங்கள் அனைவரும் 4 மணிக்கு முன்பே தங்கள் இல்லத்தில் கூடி விட்டோம். திரு. தமிழ் இளங்கோ அவர்களும் 4.15 க்குள் வந்து சேர்ந்துவிட்டார்.

    மறக்க முடியாத இனிமையான சந்திப்பு + நகைச்சுவை மிகுந்த உரையாடல்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மூன்று மணி நேரம் போனது தெரியலை. தமிழ் இளங்கோ அவர்களும் போக்குவரத்து மாற்றத்தால் சீக்கிரம் வர முடியலை! நல்லவேளையா இன்று சந்திப்பை வைச்சுக்கலை! இன்னிக்குத் தெருவிலே தலை காட்டவே முடியாமல் கூட்டம் நெருக்கித் தள்ளுதுனு என் கணவர் சொன்னார். :)

      Delete
  5. தங்களின் + மாமாவின் உள்ளமும், இல்லமும் பளிச்சென்று அழகாக இருந்தன.

    எல்லா அறைகளையும், பூஜை அறையையும், மொட்டை மாடி உள்பட அனைத்து இடங்களையும் மாமா அவர்கள் ஆசையாக, அழகாகச் சுற்றிக்காட்டி மகிழ்வித்தார்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      Delete
  6. Replies
    1. ம்ம்ம்ம் வேறே ஒண்ணும் சொல்லலையே! :)

      Delete
  7. அனைவரும் கூடி மகிழ்ந்து மனம் விட்டுப்பேசிட இடமளித்து, தங்களின் உடல்நலம் சரியில்லாத போதும், ஏதோ தங்களால் இயன்ற அளவுக்கு அன்பான உபசரிப்புகள் செய்துகொடுத்துள்ள தங்களுக்கு அனைவர் சார்பிலும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார்! ரொம்பப் பேசினால் மூச்சு வாங்குவதோடு இருமலும் அதிகம் ஆகிறது என்பதாலேயே நான் ஜாஸ்தி பேசவில்லை! :)

      Delete
  8. வாவ்! செம சந்திப்பு, கச்சேரி போல...படம் பார்க்கலாம்னு நினைத்தால்...பரவாயில்லை கிடைத்ததும் போடுங்கள். எல்லோரும் இருக்கும் போது கலகலப்பு போனால் என்னவோ போல் வெறிச்சென்று ஆகிவிடும். இப்போது உங்கள் நலம் எப்படி உள்ளது சகோ?

    நாளை வெங்கட்ஜி இங்கு சென்னை வருகின்றார் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார். பார்ப்போம்...எங்கு என்று தெரியவில்லை...நாளை இங்கு மதியம் அவர் வந்ததும் சொல்லுகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார். சூடான பதிவர் சந்திப்பு நிகழ்வுப் பதிவு.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன்/கீதா, வைகோ அனுப்பி இருக்கும் ஓரிரு படங்களைப் போட முயல்கிறேன். அதில் போண்டோ, கேசரி, பர்ஃபி படங்கள் இல்லை! :) உங்களைப் பார்க்கப் போவதாக வெங்கட்டும் சொன்னார்.

      Delete
  9. வாவ்! செம சந்திப்பு, கச்சேரி போல...படம் பார்க்கலாம்னு நினைத்தால்...பரவாயில்லை கிடைத்ததும் போடுங்கள். எல்லோரும் இருக்கும் போது கலகலப்பு போனால் என்னவோ போல் வெறிச்சென்று ஆகிவிடும். இப்போது உங்கள் நலம் எப்படி உள்ளது சகோ?

    கீதா

    நாளை வெங்கட்ஜி இங்கு சென்னை வருகின்றார் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார். பார்ப்போம்...எங்கு என்று தெரியவில்லை...நாளை இங்கு மதியம் அவர் வந்ததும் சொல்லுகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார். சூடான பதிவர் சந்திப்பு நிகழ்வுப் பதிவு.....

    ReplyDelete
    Replies
    1. நாமும் சந்திக்கும் நாள்வெகு தூரத்தில் இல்லை என நினைக்கிறேன்.

      Delete
  10. ஆஹா.... இத்தனை வேகமா! முகப்புத்தகத்தில் பார்த்ததால் வந்தேன். இல்லை என்றால் நாளை மறுநாள் தான் பார்த்திருப்பேன்......

    இனியதோர் சந்திப்பு. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருக்கலாம் என்றாலும் மற்ற வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் புறப்பட வேண்டிய கட்டாயம்.... அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி......

    ReplyDelete
    Replies
    1. இதே கொஞ்சம் தாமதம் தான். ஏழரைக்குத் தான் போட்டேன்! போடலாமா வேண்டாமானு யோசனை!

      Delete
  11. Great, so, all the bloggers escaped from grrrr mami's idly...

    may be its only spl for me

    take care of your health Manu....my pranams to mama...

    ReplyDelete
    Replies
    1. ஹூம், மௌலி, க.தெ.க.வா? அதான் எங்க வீட்டு இட்லியைப் பழிக்கிறீங்க! எங்க வீட்டு இட்லியைக் கூடச் செய்து தந்திருக்கலாம் தான்! ஆனா முடியலை! :(

      Delete
  12. ஏற்கனவே எங்களுக்குள் கொஞ்சமும் பரிச்சயமே இல்லாவிட்டாலும், உள்ளே வந்ததும் என்னை முதன் முதலாக சந்தித்த திருமதி. துளஸி கோபால் அவர்கள் ‘வை. கோபாலகிருஷ்ணன்’ என என்னை அடையாளம் கண்டு மிகச்சரியாகச் சொன்னதும், திருச்சி மலைக்கோட்டை மலையைச்சுற்றியுள்ள 12 பிள்ளையார்கள் பற்றியும் அதுவும் குறிப்பாக அந்த ஏழாவது பிள்ளையாரான ‘ஏழைப்பிள்ளையார்’ பற்றி நான் என் பதிவினில் என்றைக்கோ எழுதியுள்ளதை நினைவுபடுத்தி, தன் கணவரிடம் மகிழ்ச்சியுடன் சொன்னதும், என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தின.

    அதன் இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html

    அதில் திருமதி. துளஸி கோபால் அவர்கள் 29.08.2011 அன்று கொடுத்துள்ள பின்னூட்டம்:

    -=-=-=-=-

    துளசி கோபால் August 29, 2011 at 6:54 AM
    அடடா......ஏழாம் பிள்ளையாரை இப்படி ஏழையாக்கிட்டாங்களே நம்ம மக்கள்ஸ்!

    படங்கள் அருமை. திருச்சி வர நேர்ந்தால் இவரைக் கண்டுக்கிடணும். ஒரு நேர்ச்சை வைச்சுக்கறேனே!

    புள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    -=-=-=-=-

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம், ஞாபக சக்தி இருப்பதால் தானே துளசி கோபால் டீச்சராக இருக்காங்க! :)

      Delete
  13. முத்து முத்து ஆக மூன்று பாயிண்ட்ஸ்.

    1. நான் இல்லாதது குறையா, யாருக்கம் படலியா?படலியா??படலியா???படலியா????/படலியா?படலியா??????.,.,.,.
    2.பேசாம அரிசி உப்புமா கிளறி இருக்கலாம்.ஆகி வந்திருக்கும்.
    3. உடல் நிலையை இரண்டு தடவை சொல்லி விட்டீர்கள். சுபாஷிணியும் எழுதியிருந்தாள். கவலையாக இருக்கு. பதிலவும்.

    ReplyDelete
    Replies
    1. "இ" சார், நீங்க தான் வரதே இல்லையே! :) ஶ்ரீரங்கம் வாங்க சார் முதல்லே. உடல்நிலை போன வாரம் மோசமாத் தான் இருந்தது. இப்போப் பரவாயில்லைனாலும் ஓய்வு அதிகம் தேவைப்படுகிறது. மற்றபடி கவலைப்படும்படி ஏதும் இல்லை. :)

      Delete
    2. உங்களையும் அரிசி உப்புமாவையும் மறப்பேனா?

      Delete
  14. நாங்கள் வந்தபோது உங்கள்வீட்டில் சாப்பிட்ட சூடான வடையும் மொட்டை மாடிக் காட்சிகளும் நினைவுக்கு வந்தது இனிமையான சந்திப்புகள் எப்பவும் மகிழ்ச்சிதரும் கோபு சார் தேங்காய் பர்ஃபியை நினைவுபடுத்தியது ரசிக்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், அதே இடத்தில் தான் போண்டோக்களும் வாங்கினோம். :)

      Delete
  15. திருச்சியின் ஸ்ரீரங்கமும், ஸ்ரீரங்கத்துத் திருச்சியும் மகிழ்ந்து மனம் விட்டுப் பேசியதை விவரிக்க சென்னை அலாதி சந்தோஷத்துடன் வாசித்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவி சார், உண்மையிலேயே நல்லதொரு சந்திப்பு

      Delete
  16. சுவாரஸ்யமான சந்திப்பாக இருந்திருக்கும் என்று தெரிகிறது. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சுவாரசியமான சந்திப்புத் தான்.

      Delete
  17. சுடச்சுட ரவாகேசரி, போண்டா இரண்டோடு, சூடான காபி கொடுத்த கையோடு , சுடச்சுட ஒரு பதிவு. மேடத்திற்கு நன்றி! ( நாங்கள் குடியிருக்கும் K.K.நகர் பகுதியிலிருந்து, நான் ஸ்ரீரங்கம் வருவதற்குள், தை அமாவாசையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. எனவே எனது வருகையில் கொஞ்சம் தாமதம். மன்னிக்கவும்)

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒண்ணும் அதிக தாமதம் ஆகலை! சரியாகத் தான் வந்தீர்கள். இன்னிக்குப் போக்குவரத்து இன்னமும் மோசம்! :)

      Delete
  18. எல்லோரையும் சந்தித்தது மனதுக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது மாமி. நேரம் போனதே தெரியவில்லை. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் உபசரித்த விதம் நெகிழவைத்தது.

    ReplyDelete
    Replies
    1. இணையம் தொடர்ந்து கிடைத்து நீங்கள் மீண்டும் பதிவுகள் எழுதப் பிரார்த்தனைகள். உண்மையிலே அன்று அனைவரின் பேச்சையும் என் கணவரும் மிகவும் ரசித்தார். அவருக்கும் ரொம்பப் பிடித்த சந்திப்பாக அமைந்து விட்டது.

      Delete
  19. அடடா ! வந்திருந்தா தீர்த்தவாரிக்கு வந்த அத்தனை சாமியையும் ஒரு சேர தர்சனம் பண்ணியிருக்கலாமேன்னு ஏக்கம் வந்துடுச்சே!

    உடம்பை கவனமா பார்த்துக்குங்க அக்கா! நான் அங்கே வரும் போது என்னல்லாம் சாப்பிடுவேன்னு மெனுவை முன்னமே அனுப்புகிறேன். கன்பியூஷனே இருக்காதுக்கா!

    ReplyDelete
    Replies
    1. வாங்க புது மாப்பிள்ளை, அக்காவுக்கு ஒரு தகவல் கூடச் சொல்லலை! தாலி முடிய வந்திருப்பேனில்ல! ஹூம், ஒரு வஸ்த்ரகலா மிஸ்ஸிங்! :)))) நீங்க லிஸ்ட் அனுப்புங்க, அதிலே இல்லாததாப் பார்த்துப் பண்ணி வைச்சுடுவோம்!

      Delete
  20. Replies
    1. முதல் வருகை? வரவுக்கும் ரசித்தமைக்கும் நன்றிங்க!

      Delete
  21. முதன் முதலாக உங்கள் பதிவைக் காண்கிறேன். தமிழ் இளங்கோ அவர்களின் பதிவு மூலமாகத் தொடர்கிறேன். அருமையான சந்திப்பு எனத் தோன்றுகிறது. மொட்டைமாடிப் படங்கள் ப்ரமாதம். வெங்கட் தமிழ்நாட்டில் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகத் தெரிகிறது!
    அடிக்கடி இப்படி குட்டி சந்திப்புகள் பதிவர்கள்/நண்பர்களிடையே நிகழ்ந்தால் நன்றாகத்தான் இருக்கிறது. என்னதான் ப்ளாகில் வரிந்துகட்டிக்கொண்டு எழுதினாலும், நேரடிச் சந்திப்பின் சுவாரஸ்யங்கள் தனி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஏகாந்தன், முதல் வரவுக்கு நன்றி. முடிந்தால் தொடர்ந்து வாருங்கள். அர்த்தமுள்ள பதிவுகள் எனச் சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு எழுதுவேன். இங்கே திருச்சி/ஶ்ரீரங்கம் வந்ததில் இருந்து அநேகமாய்ச் சந்திப்புகள் நடந்து வருகின்றன. :)

      Delete
    2. இனி அவ்வப்போது வந்து பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
      நீங்கள் நல்லதொரு `host` என்று புரிந்துகொள்கிறேன். திடீர் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து அசத்திவிடுகிறீர்கள். புதுக்கோட்டைப் பதிவர் விழாவின்போது உங்களைச் சந்தித்ததுபற்றி நண்பர் GMB, நான் அவரைச் சந்தித்தபோது சொன்னார்.

      Delete
    3. நன்றி ஏகாந்தன். பாராட்டுக்கும் வந்தனம்.

      Delete
  22. Achacho...pazikkalai Mami, sorry, wrote that just for fun....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹாஹஆஹஆஹாஹாஹாஹாஹாஹா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மண்டை காயட்டும்! :P :P :P

      Delete

  23. மகிழ்வான சந்திப்பு.............

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், மகிழ்வான சந்திப்புத் தான்! :)

      Delete
  24. போண்டா, ரவா கேசரி சாப்பிட வேண்டும்.
    அது சரி.
    பிப்ரவரி மாதம் மஹா மகம் அன்னிக்கு 22.2.16 அன்று, சாஸ்த்ரா பலகலைக் கழக சார்பில், அரசு ஆதரவுடன் , அன்ன தானம் வாழை இலை போட்டு செய்யப்படும் என்ற செய்தி துகளக்கில் படித்தேன்.
    தஞ்சையில் சுமார் 25 வருடங்கள் இருந்திருந்தாலும் மஹா மகத்தன்று அந்தக் குளத்தில் குளித்தது இல்லை. இந்த தடவை முடியுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
    நீங்கள் அந்த புனித ஸ்தலத்தில் மஹா மகத்தன்று ஸ்நானம் செய்து இருக்கிறீர்களா?
    ரங்கஸ் தலை முழுகி குளிப்பாரா? இல்லை அங்கும் சொம்பில் நீர் எடுத்து தலையில் விட்டுக்கொள்வாரா ? நான் காவிரியில் செய்வது போல !!
    வெங்கட் நாகராஜ் அவர்கள் சென்னை வந்தால் சந்திக்கவேண்டும்.


    சுப்பு தாத்தா.


    ReplyDelete
    Replies
    1. வெங்கட் சென்னை வந்துட்டுத் திரும்ப தில்லி போயாச்சு! மஹாமஹம் கூட்டத்தில் எல்லாம் நான் போய் மாட்டிக்க மாட்டேன். நம்ம ரங்க்ஸ் கங்கையிலேயே நீச்சல் அடிச்சவர்! சொம்பில் நீர் எடுத்துத் தலையில் விட்டுக்கொள்ளும் ரகம் நான் தான்! என் மாமியார் கூடப் பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் முழுகி நீந்திக் குளித்தார். நான் மட்டும் மேட்டில் நின்று கொண்டு சொம்பால் தலையில் நீர் விட்டுக் கொண்டேன். சும்மாவே மூச்சு விடக் கஷ்டம்! இதிலே நீரிலே மூக்கைப் பிடித்துக் கொண்டு முழுகினேன் என்றால் மேலே வருவது நானாக இருக்காது! :)))))) அப்புறமா அவர் படிச்சதெல்லாம் கும்பகோணம் பாணாதுரை பள்ளியும் விஷ்ணுபுரம் ஜார்ஜ் ஹைஸ்கூலும் தானே! மாமாங்கமெல்லாம் பார்த்திருப்பதோடு அதில் குளிச்சும் இருப்பார்! :) மடத்துத் தெருவில் தானே இருந்திருக்கார் அவங்க அத்தை விட்டில்!

      Delete
  25. மேடம் அவர்களுக்கு வணக்கம்! நானும் ஸ்ரீரங்கத்தில் உங்கள் அபார்ட்மெண்ட்டில் நடைபெற்ற இந்த வலைப்பதிவர் சந்திப்பினைப் பற்றி எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும்போது, படித்துப் பார்த்து கருத்துரை தரவும்.

    ReplyDelete
    Replies
    1. கட்டாயமாய் வருகிறேன் ஐயா!

      Delete
    2. கட்டாயமாய் வருகிறேன் ஐயா!

      Delete
  26. இந்த பக்கத்துக்கு நான் புது வரவு. பதிவர் சந்திப்பு சூப்பரா நடந்திருக்கு. அதவும் ஸ்வீட் காரம் காபியுடன். அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி, இருவரா ஒருவரா? முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  27. ஹா ஹா ஒருவரேதான் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. //ஸ்ரத்தா, ஸபுரி...10 February, 2016
      ஹா ஹா ஒருவரேதான் மேடம்.//

      அன்புள்ள கீதா மாமி, பாருங்கோ,

      ஸ்ரத்தையா வந்து பதில் கொடுத்துள்ளார் ...
      இந்த ஸ்ரத்தா, ஸபுரி என்ற தோழரோ தோழியோ. :)

      மிகவும் நல்லவர். தினமும் என் பழைய பதிவுகளில் ஏதாவது ஒன்றை, மிகவும் ரஸித்துப்படித்துவிட்டு மிக நீண்ட பின்னூட்டம் கொடுத்து வருகிறார். நானும் பதில் அளித்து வருகிறேன்.

      என் அன்புக்குரிய மஞ்சுவை நினைவு படுத்தி வருகிறார் ....
      நீ....ண்....ட பின்னூட்டங்கள் அளிப்பதில். :)

      Delete
    2. கோபால் சார் என்னைப்ற்றி கீதா மேடம் கிட்ட நல்ல படியாக அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்...

      Delete
    3. //ஸ்ரத்தா, ஸபுரி... 16 February, 2016
      கோபால் சார் என்னைப்ற்றி கீதா மேடம் கிட்ட நல்ல படியாக அறிமுகம் செய்ததற்கு நன்றிகள்...//

      :) மிக்க மகிழ்ச்சி.

      திருமதி. மஞ்சுபாஷிணி என்று ஒரு பதிவர் உள்ளார். இப்போது கொஞ்சம் உடல்நலக்குறைவு காரணமாக ஏனோ புதிய பதிவுகளும் தராமல், பிறர் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களும் தராமல் வலையுலகிலிருந்து ஒதுங்கியுள்ளார். அவர் எனக்குக் கொடுத்துள்ள பழைய பின்னூட்டங்களை முடிந்தால் என் ஒவ்வொரு பதிவிலும் படித்துப்பாருங்கோ. எவ்வளவு ஒரு ஈடுபாட்டுடன் கூடிய வாசகி என்பது உங்களுக்கே நன்கு தெரியவரும்.

      அவரின் வலைத்தளம்: கதம்ப உணர்வுகள் http://manjusampath.blogspot.in/

      Delete
  28. மேடம் அவர்களுக்கு வணக்கம்.உடல்நலக் குறைவாக இருந்தபோதும், விருந்தினர் மீது நீங்களும் உங்கள் வீட்டுக்காரரும் காட்டிய அன்பு மிக்க விருந்தோம்பலுக்கு நன்றி.

    சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் எனக்கு கடுமையான மூச்சுத் திணறல் இருந்தது. மழைக்காலம், பனிக்காலம் வந்தால் ரொம்பவும் கஷ்டம். ஆஸ்துமாவின் அறிகுறி என்றார்கள். ஒரு டாக்டர் யோகா செய்யுங்கள் என்றார். அடிக்கடி டாக்டர்களை மாற்றியதுதான் மிச்சம். ஒரு தடவை ஒவ்வாமை (allergy) என்ற நூலினைப் படித்தேன். எனக்கு என்ன அலர்ஜி என்று (எனது மீசைக்கு மட்டும் டை போடும் வழக்கம்) நானே கண்டறிந்து கண்டறிந்து அந்த வழக்கத்தை நிறுத்தி விட்டேன். இப்போது மூச்சுத்திணறல் இல்லை. இதுபற்றி ஒரு பதிவு கூட எழுதி இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா. மீள் வரவுக்கு நன்றி. எனக்குச் சிறு வயதில் இருந்தே ஆஸ்த்மா இருந்திருக்கிறது. ஆனால் அது தெரியாமல் போய்விட்டது. பின்னர் சில நாட்கள் வட மாநிலங்களில் இருந்தபோது அதிகம் தொந்திரவில்லை. ஆகையால் ஆஸ்த்மா என்று கண்டு பிடிக்கப்பட்டபோது எனக்கு நாற்பது வயது ஆகிவிட்டது! :) நானும் யோகா எல்லாம் செய்து கொண்டு தான் இருந்தேன். இப்போவும் செய்யணும்னு தான் நினைக்கிறேன். ஆனால் உடலில் பல பிரச்னைகள்! எனக்குக் குறிப்பிட்ட பொருள் அலர்ஜி எனச் சொல்ல முடியாது! ஏனெனில் ப்ராங்கோ நிமோனியா வந்து குறைந்தது பத்துநாட்களாவது ஒரு வழி பண்ணிட்டுப் பின்னர் மூச்சுத் திணறல் ஆரம்பிக்கும். அதோடு அலர்ஜி, சைனஸ் தொந்திரவுகள் வேறே! ஆகவே எதுக்குனு மருத்துவம் பார்க்கிறது? அதான் ஊர் மாறினோம். இங்கே தொந்திரவு இல்லை தான். ஆனால் கடந்த சில மாதங்களாக அதிகமான பயணம் கல்கத்தா, மும்பை போன்ற இடங்களின் காற்றில் இருக்கும் அதீத மாசு ஆகியவற்றால் பாதிப்பும் அதிகம் ஆகிவிட்டது. இப்போது குறைந்து வருகிறது. தங்கள் அன்பான விசாரிப்புக்கும் கனிவான அக்கறைக்கும் மனம் நெகிழ்ந்து விட்டது. மிக்க நன்றி. ஒரு காலத்தில் ஆக்ஸிஜன் வைக்கலைனா மூச்சு விட முடியாமல் இருந்தேன். இப்போது நெபுலைசரோடு நின்னிருக்கேனு சந்தோஷமே!

      Delete
    2. //பின்னர் சில நாட்கள் வட மாநிலங்களில் இருந்தபோது// "பின்னர் சில வருடங்கள் வட மாநிலங்களில் இருந்தபோது" என்று படிக்கவும். தப்பாக வந்திருக்கிறது. :)

      Delete
  29. வழக்கம்போல உங்கள் பாணி நகைச்சுவையுடன் அழகான சந்திப்பின் பதிவு. உங்கள் வீட்டு மொட்டைமாடி பதிவுலகில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. பாராட்டுகள் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீத மஞ்சரி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னை விட எங்க வீட்டு மொட்டை மாடி தான் பிரபலமா இருக்கு! :))

      Delete