எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 02, 2017

எங்களுக்கு தினம் தினம் "திங்க"ற கிழமை!

இந்தப் படங்கள் எடுத்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் உட்கார்ந்து போட நேரம் வாய்க்கலை! என்ன பிசியா? அதெல்லாம் இல்லை!  வெட்டி வேலை தான்! ஒரு சில புத்தகங்கள் படித்தேன்! மதிய நேரம் கணினியில் உட்காரவில்லை! ஐபாடில் சில புத்தகங்கள் படிக்க முடிந்தது! என்றாலும் இன்னும் படிக்க நிறையக் காத்திருக்கின்றன.  சரி, லேட்டானது ஆயாச்சு! நாளைக்கு ஶ்ரீராம் "திங்க"கிழமை பதிவு போடறதுக்குள்ளே போட்டுடலாம்னு இன்னிக்குப் போட்டுட்டேன். அந்த அளவுக்குக் கூட்டம் என்னமோ வரப் போறதில்லை என்றாலும் ஒரு திருப்தி! ஶ்ரீராமுக்கு முன்னாடியே நாம போட்டாச்சுனு! :)

புதன்கிழமை சப்பாத்தி செய்கையில் அதுக்குத் தொட்டுக்கக் கத்திரிக்காய் ஸ்டஃப் கறி செய்தேன். குஜராத்தி டைப்பாம்! அம்பேரிக்கா போயிருக்கிறச்சே மகள் செய்திருந்தாள்! அதிலிருந்து நம்ம ரங்க்ஸுக்கு இது விருப்ப உணவாகி விட்டது. மகள் கொஞ்சம் காரம் அதிகம் போட்டிருந்தாள். நான் அவ்வளவு காரம் போடவில்லை! என்றாலும் இந்தியா வந்தப்புறமா இரண்டாம் முறையாக இதைச் செய்கிறேன். முதல் முறை செய்யறச்சே படம் எடுத்துப் போடும்படியான சூழ்நிலையில் இல்லை! இந்த முறை நிதானமாகப் படம் எடுத்துப் போட்டிருக்கேன். முதலில் தேவையான பொருட்களைப் பார்ப்போம்.

நான்கு பேருக்கான அளவு! கத்திரிக்காய்ப் பிரியர் எனில் முக்கால் கிலோ வேண்டும். எல்லாக் கத்திரிக்காயும் ஒரே சீராக ஒரே அளவில் இருந்தால் நல்லது. ரொம்பச் சின்னதாயும் வேண்டாம்!

நான் எங்க ரெண்டு பேருக்குத் தான் என்பதால் ஆளுக்கு ஐந்து கத்திரிக்காய் என்ற வீதாசாரப்படி பத்துக் கத்திரிக்காய் எடுத்துக் கொண்டேன்.

கத்திரிக்காய்க்குள் அடைக்கத் தேவையான பொருட்கள்

மிளகாய்ப் பொடி  இரண்டு டீஸ்பூன்

தனியா ஒன்றரை அல்லது இரண்டு டீஸ்பூன்(அவரவர் காரத்திற்கு ஏற்பக் கூட்டியோ குறைத்தோ எடுத்துக்கலாம்.)

மஞ்சள் பொடி   அரை டீஸ்பூன்

பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்

அம்சூர் பொடி(காய வைத்த மாங்காய்ப் பவுடர்) அரை டீஸ்பூன்(இது கட்டாயம் அல்ல)

கரம் மசாலாப் பொடி அரை டீஸ்பூன்

வறுத்த ஜீரகப் பொடி ஒரு டீஸ்பூன்

சோம்பு இரண்டு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மேலே சொல்லி இருப்பனவற்றை ஒரு பேசினில் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

கலந்த பொடி மேலே பேசினில் காணலாம். கத்திரிக்காய்களை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.கழுவிய கத்திரிக்காய்களை நான்காகப் பிளந்து கொண்டு உள்ளே கலந்து வைத்திருக்கும் பொடியை வைத்து எல்லாவற்றையும் நிரப்பவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். அதில் கத்திரிக்காய்களை மெதுவாக ஒவ்வொன்றாகப் போடவும்.தேவையானால் அடைத்தது போக மீதம் இருக்கும் பொடியை மேலே தூவலாம்.


சிறிது நேரம் ஒரு தட்டைப் போட்டு மூடி வைத்து குறைந்த வெப்பத்தில் கத்திரிக்காய்களை வதக்கவும். திருப்பி விடும்போது கத்திரிக்காய் உடையாமல் கவனமாகத் திருப்பி விடவும்.நல்ல கத்திரிக்காயாக இருந்தால் நன்கு குழைந்துவிடும். அரை மணி நேரத்துக்குள்ளாகத் தயார் செய்து விடலாம். இப்போது ஃபுல்கா, நான், சப்பாத்தி போன்றவற்றுடன் சூடாகப் பரிமாறவும். 


நம்ம ஊர்ப்பக்கம் கத்திரிக்காய்ப் பொடி அடைத்த கறி எனில் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, உபருப்பு மிளகு, தேங்காய்த் துருவல் வறுத்து மிக்சியில் அல்லது அம்மியில் பொடி செய்து அதை அடைத்துச் செய்வோம். அது சாப்பாட்டுக்கு நன்றாக இருக்கும். இது சப்பாத்தியோடு நன்றாக இருக்கும். 

31 comments:

 1. அடடே கத்தரிக்காய். எனக்குப் பிடிச்சுது. என்ன கஷ்டம்னா எங்க வீட்டுல எனக்கு மட்டும்தான் பிடிக்கும்!

  முழுசு முழுசா கத்தரிக்காயைப் பார்த்தாலே அழகா இருக்கு. பொடித்தூவிக்கறி செய்திருக்கோம். இது போலாகி செய்தாலும் நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டாவது முறைப்படி செய்திருக்கோம். ஆனால் இது சிம்பிள். செய்து பார்க்க ஆவாகவும் இருக்கிறது. செய்துடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், முன்னாடி எல்லாம் அப்படித் தான்! ரங்க்ஸுக்குக் கத்திரிக்காயே பிடிக்காது! ஆனால் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதால் பண்ணுவோம்! இப்போ இங்கே திருச்சி வந்ததிலே அவருக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டது! :)

   Delete
 2. அதான் என்னடா.. கத்தரி பொடி அடைச்ச கறி, சப்பாத்திக்கு எப்படி நல்லா இருக்கும்னு பார்த்தேன். எனக்கு பைங்கன் சப்ஜியே அவ்வளவாப் பிடிக்காது. இதுல காரம் வேற கம்மியாப் போட்டிருக்கீங்கன்னு சொல்றீங்க. சப்பாத்திக்கு எப்படி நல்லா இருக்கும்? இதுலவேற, காம்போடயே கத்திரிக்காயைப் போட்டிருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. ஹா! (இது அதிர்ச்சி கலந்த ஹா) கத்திரிக்காயே பிடிக்காதே! ஹூம், நாங்க விதவிதமாக் கத்திரிக்காயைச் சமைப்போமே! காரம் கம்மியாத் தான் போட்டிருந்தேன். ஆனால் வதக்கும்போது நம்ம ரங்க்ஸ் காரம் இருக்கட்டும்னு சொன்னதாலே மிச்சம் இருந்த பொடியை மேலே தூவினேன்! படத்திலே கூடத் தெரியும் பாருங்க! பொதுவாப் பொடி அடைச்ச கறிவகைகளுக்குக் காம்போடத் தான் கத்திரிக்காயைப் போடுவோம். வதக்கின பின்னர் அந்தக் காம்போடு கத்திரிக்காயைத் தூக்கிச் சாப்பிடும்போது! ஆஹா! என்ன சுவை! என்ன சுவை! கத்திரிக்காய் ரசவாங்கிக்கும் முழுசாத் தான் கத்திரிக்காய் போடுவேன்! :)

   Delete
  2. கத்தரிக்காய் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (கைக்கக்கூடாது). கத்தரி பொடி தூவி கரேமது, கத்தரி சாதா கரேமது, புளிவிட்ட கரேமது, கத்தரி பாசிப்பருப்பு கூட்டு/சாத்துமது,வெந்தய குழம்பு, கத்தரி புளிக்கூட்டு/மோர்க்குழம்பு, கத்தரி துகையல், கத்தரி பொரிச்ச குழம்பு போன்ற எல்லா தமிழக உணவும் பிடிக்கும். பிடிக்காதது, பைங்கன் சப்ஜி போன்ற கத்தரி கொண்டு, மசாலா போட்டுச் செய்யும் எல்லா வட இந்திய உணவும். வாங்கீபாத்தும் அவ்வளவு இஷ்டம் இல்லை. அரிசி உப்புமாவுக்குச் செய்யும் சுட்ட கத்தரி கொத்சு பிடிக்காது.

   காம்போடு, நாலா கத்தரியை நறுக்கும்போது பூச்சி இருக்கான்னு எப்படிப் பார்ப்பீங்க?

   Delete
  3. காம்போடு நறுக்கினாலும் பாவாடை வரை நறுக்குவோமே! அப்புறமா அதன் வாயைப் பிளந்து தானே உள்ளே பொடியை அடைக்கணும்! அப்போப் பார்த்துடலாம், பூச்சியா இல்லையானு! அதோடு கத்திரிக்காயைத் தூக்கும்போதே தெரிந்து விடும். மெத்தென்று இருந்தால் நல்ல கத்திரிக்காய். கல்லைப் போல் இருந்தால் சந்தேகம் தான்! கத்திரிக்காய்ப் பொடி அடைச்ச கறி சாப்பிட்டதில்லையா? எனக்கு அரிசி உப்புமாவோடு கத்திரிக்காய்ச் சுட்ட கொத்சு என்றால் உயிர். அதே போல் கத்திரிக்காய்ப் புளிவிட்ட கூட்டும், மோர்க்குழம்பும் சொர்க்கம்! எங்க வீட்டில் இதுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு! :))))

   Delete
  4. பொடி அடைச்ச கறி ரொம்பப் பிடிக்கும். நானே நிறையதடவை செய்திருக்கிறேன். (புளி ஜலம் விடுவேன். நீங்கள் எழுதினதைப் பார்த்தப்பறம் அம்சூர் பொடி அடுத்ததடவை முயற்சிக்கப்போகிறேன்). என் ஹஸ்பண்டு, நாலா திருத்தி பொடிதூவிச் செய்துடுவா. திருத்தினாத்தான் பூச்சி இருந்தா நல்லாத் தெரியும் என்பது அவள் நம்புவது.

   Delete
  5. பூச்சிக் கத்திரிக்காய் நறுக்கும்போதே தெரிந்து விடும்! :) அதோடு வாயைப் பிளப்போமே அப்போது உள்ளே பார்த்துக்கலாம்! இதே முறையில் குடைமிளகாய், வெண்டைக்காய், தக்காளி, புடலை போன்றவற்றையும் உள்ளே ஸ்டஃப் செய்து செய்யலாம். புடலையில் சுற்றி ஒரு நூல் கட்ட வேண்டி இருக்கும்! நம்ம வீட்டில் அதிகம் போணி ஆவது கத்திரிக்காய் தான். மற்றவை எனக்கு மட்டுமே பிடிக்கும்! :)

   Delete
 3. அது சரி. இது சப்பாத்தி, ரொட்டிக்கு தொட்டுக்க கொள்ளத்தானா? கறியமுதாய் சாப்பிட முடியாதா!

  ReplyDelete
  Replies
  1. உங்க மொழியை மாத்திட்டேனா ஸ்ரீராம்? (கறியமுது)

   Delete
  2. ஶ்ரீராம், மசாலாப் பொடி சேர்ப்பதால் என்னைப் பொறுத்தவரை சப்பாத்திக்குத் தான் சரியா இருக்கும்! மற்றபடி கரேமுதாய்ச் சாப்பிடலாமானு தெரியலை! (ஹிஹிஹி, கரேமுது சரியா நெ.த.?)

   Delete
 4. நல்லாத்தான் இருக்கும் போல... இனி நாமலும் சமையல் திறமையை இறக்கி விட வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. செய்து, சுவைத்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

   Delete
 5. கத்தரிக்கா்ய் புதுசா இருந்தால் அதன் பாவாடை அதான் காம்பைச் சுற்றி இருக்கும் பகுதியும் ருசியாக இருக்கும். காம்புடன் போட்டால் கத்தரிக்காய் பிரிந்துபோகாமல் முழுவதுமாக இருக்கும். ஸரியா? நமக்குப் பிடித்த காயை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். புளிப்பு ருசி சேர்த்தால் கத்தரிக்காய் நிறம் மாராது இருக்க உதவி செய்யும். கறி நன்றாகஇருக்கு.அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அம்மா, முக்கியமாய்க் கத்திரிக்காய் பிரிந்து போகாமல் இருக்கவே காம்போடு போடுவோம். புளிப்பு அவ்வளவா நான் சேர்க்கிறதில்லை என்றாலும் பொண்ணு போடச் சொன்னா என்பதால் அரை டீ ஸ்பூன் அம்சூர் பொடி! கறி என்னமோ நன்றாகத் தான் இருந்தது!

   Delete
 6. கத்தரிக்காய் இஸ் மை பேவரிட். பட் இதை செய்து பார்க்க வீட்ல யாருமே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. அம்மா வந்ததும் செய்து தரச் சொல்லிச் சாப்பிடுங்கள்! :)

   Delete
 7. தினம் தினம் திங்கற கிழமைதான் இருந்தாலும் அதைப்படம் பிடித்து பதிவில் இட திங்கக் கிழமை என்கிறாரோ ஸ்ரீராம் கத்தரிக்காய் எனக்குப் பிடிக்காத ஒன்று எப்போதாவது மனைவி செய்வாள்

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம் கத்திரிக்காய் பிடிக்காதவங்களும் உண்டுனு தெரியும்! என்றாலும் இங்கே அதன் சுவையே தனி!

   Delete
 8. திருச்சி போகும் போது அம்மாட்ட செய்ய சொல்லணும்...அங்க செய்ற கத்தரி சுவை இங்க வரது இல்ல..

  ReplyDelete
  Replies
  1. சரியாச் சொன்னீங்க! இங்கே நாட்டுக் கத்திரிக்காய்! போட்ட இரண்டு நிமிடத்திலேயே குழைந்து விடும்!

   Delete
 9. கத்தரிக்காய் குழம்பு என்றால் பிடிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. கத்தரிகாயும் கருவாடும் சேர்த்த குழம்பு எங்கள் வீட்டில் ஸ்பெஷல், இங்கே சுவிஸில் ஒரு கிலோ தங்கம் வாங்கி விடலாம், கருவாட்டின் விலை அதை விட ஜாஸ்தி. அதனால் அதிகம் ஆசைப்படுவதில்லை.

   Delete
  2. கத்தரிக்காய்ப் புளிக்குழம்பு அல்லது ரசவாங்கி போலச் செய்கையில் அதிலேயும் முழுக்கத்திரிக்காய் போடலாம்! நன்றாக இருக்கும். ஆனால் இதுக்குக் கொஞ்சம் சின்னக் கத்திரிக்காய் நன்றாக இருக்கும்.

   Delete
 10. கத்தரிக்காயில் எப்படிச்சமைத்தலௌம் பிடிக்கும், கத்தரிக்காய் பொரித்து வெங்காயம், மிளகாய் பொடியாக நறுக்கி செய்யும் சலாட் எங்கள் ஹோட்டல் ஸ்பெஷல், நீங்கள் செய்திருக்கும் இதே முறையில் இங்கே சுவிஸ் மெனுவில் தக்காளிப்பழத்திலும், கத்தரிக்காயிலும் பெரிய குடைமிளகாயிலும் செய்வோம், தக்காளியை உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மெதுவாக வெளியே எடுத்து விட்டு அதற்கென செய்யும் கறிப்பிரட்டலை உள்ளே வைத்து அவனில் வேக வைத்து எடுப்பதுண்டு, கத்தரிக்காய், குடைமிளகாய் என காரம் சேர்த்த கறிகள், உருளைக்கிழங்குக்கறிகளை வைத்து பொடிகள் சேர்த்தும் வேக வைப்போம், நீங்கள் செய்யும் முறையில் எண்ணெயில் வதக்காமல் அவனீல் வைத்து கிரில் மெதட்டில் வேக வைத்து எடுப்பேன். நல்லாத்தான் இருக்கும்,

  ReplyDelete
  Replies
  1. வங்காளத்தில் நாம் பஜ்ஜி செய்வது போல் கடலைமாவில் மசாலா சாமான்கள் எல்லாம் கலந்து கத்திரிக்காயை வட்டமாக நறுக்கி அந்த மாவில் போட்டுப் பிரட்டி தோசைக்கல்லில் போட்டு மூடி வைத்து வறுவல் போல் செய்வார்கள்! நானும் நீங்கள் சொன்னமாதிரி குடைமிளகாய், தக்காளி, புடலை போன்றவற்றிலும் முயன்றதுண்டு! தக்காளி மட்டும் கவனமாக இல்லைனால் காலை வாரி விடுகிறது! :))) பழக்கம் வேணுமே!

   Delete
 11. இங்கே ஒரே சைஸ் சின்னக் கத்தரிக்காய் கிடைப்பது கஷ்டம். நம்ம வீட்டில் கத்தரிக்காய் பாவாடை எல்லாம் ஒரே முள் :-)

  ReplyDelete
  Replies
  1. முள்ளுக் கத்திரிக்காய் பொதுவாக ருசியாக இருக்காது! அபூர்வமாக ருசியாக இருக்கும்!

   Delete
  2. இங்கே நாட்டுக் கத்திரிக்காய் தான்! ஒரே வயலட் நிறமாகக் கண்ணைப் பறிக்கிறாப்போல் இருக்காது! வெள்ளையும் வயலட்டும் கலந்து ரொம்பவே வெளுத்த நிறத்தில் இருக்கும். இல்லைனா பச்சைக் கத்திரிக்காய் அல்லது வெள்ளைக் கத்திரிக்காய்! இதிலே இந்த வயலட்+வெள்ளை கலந்த கத்திரிக்காயின் ருசி தான் நன்றாக இருக்கிறது. பச்சை, வெள்ளையில் சமயத்தில் உள்ளே விதையாக இருக்கும்.

   Delete
  3. கீதாக்கா வயலட்டும் வெள்ளையும் கலந்து வரி வரியா இருக்குமே அது பயோடெக் கத்தரிக்காய் இல்லையோ?

   கீதா

   Delete
 12. கத்தரிக்காய் ரொம்பப் பிடிக்கும்...அதில் நிறைய செய்யலாம்...கீதாக்கா இது சப்பாத்தி, நாண் க்கு நல்லாருக்கும். நான் கொஞ்சம் வயலட் கலர்ல ஒல்லியா நீளமா சின்னதா பிஞ்சு போல இருக்குமேஅதுல செய்வேன். இந்தக் குண்டும் அழகா இருக்கு ...இதுல சோம்பு இல்லாம கொப்பரை, எள்ளு, கொஞ்சம் நிலக்கடலை வறுத்தது எல்லாம் சேர்த்துப் பொடி பண்ணி கத்தரியில் அடைத்து ஆந்திரா டைப்...இது சாதத்துடன் சாப்பிட நல்லாருக்கும்...கத்தரிக்கை வைத்து நிறைய செய்யலாம் இல்லையாக்கா....

  நல்லாருக்கு ரெசிப்பி...

  கீதா

  ReplyDelete