மோகன் ஜியின் "பொன் வீதி"க்கும் முன்னாடி, வெங்கட்டின் "பஞ்ச துவாரகா" மின்னூலுக்கும் முன்னாடி எனக்காக வந்து காத்திருந்தது கடுகு சாரின் "கமலாவும் நானும்" புத்தகம்! நான் அம்பேரிக்காவில் இருக்கும்போதே அது இங்கே ஶ்ரீரங்கத்துக்கு வந்தாச்சு. நானும் இங்கே இருக்கும் செக்யூரிடியிடம் சொல்லிப் புத்தகம் வந்ததும் வாசல் கதவு வழியாக உள்ளே போடச் சொல்லி இருந்தேன். போட்டிருந்தாங்க. வந்ததும் படித்தது அந்தப் புத்தகம் தான். ஆனால் விமரிசனம் செய்ய வழக்கம் போல் தயக்கம். கடுகு சார் எவ்வளவு பெரிய மனிதர்! இந்த இணையத்தில் எழுத ஆரம்பித்ததின் நற்பலன்களில் ஒன்று இம்மாதிரிப் பிரபலங்களின் நட்புக் கிடைத்தது தான். ரொம்ப வருஷமாகவே அவரோட வலைப்பக்கம் பத்தித் தெரியும். அடிக்கடி போய் வருவேன். ஆனாலும் கருத்துச் சொல்ல தைரியம் வராது.
அவரோட டில்லி தொடர் கட்டுரைகளைப் படித்தாலே நமக்குள் ஓர் பிரமிப்பு ஏற்படும். மனுஷன் எப்படிப்பட்ட பிரபலங்களோடெல்லாம் சர்வ சகஜமாகப் பழகி இருக்கார்! ஆனால் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கார். வயதும் எண்பதைத் தொட்டு விட்டது என்று அவரே சொல்லி இருக்கார். கடவுள் அருளால் மூட்டு வலி இல்லைனும் சொல்லி இருக்கார். அப்படியே இருக்கப் பிரார்த்தனைகள். "கமலாவும் நானும்" புத்தகத்தில் அவருடைய தீராத தேடல் தாகமும், தொடர்ந்து தகவல்களைத் தேடித் தேடிப் பெற்று அதைப் பகிரும் பொறுமையும் பற்றி எழுதி இருக்கார். இவ்வளவு தகுதியும் அவ்வளவு சுலபமாகக் கிடைப்பதில்லை. இது கடவுள் அவருக்கு அளித்த பரிசு!
ஆரம்பத்தில் தபால் துறையில் வேலையில் இருந்தவர் டெல்லிக்கு டெபுடேஷனில் போக அங்கே இருந்து கொண்டே பிரபலங்களுடன் ஏற்பட்ட பழக்கங்கள், மத்திய மந்திரிகள் முதல் நம் தமிழ்நாட்டுப் பிரபலங்கள் வரை அனைவருடனும் ஏற்பட்ட பழக்கம், அனைவருக்கும் செய்த உதவிகள் என அனைத்தையும் கட்டுரைகளாகத் தன் "கடுகு தாளிப்பு" வலைப்பக்கத்தில் எழுதி இருக்கிறார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளைத் தொகுத்து "கமலாவும் நானும்" புத்தகமாக 2011 ஆம் ஆண்டில் முதல் பதிப்புக் கண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் கல்கி, எஸ்.ஏ.பி, சாவி, தேவன், ராஜாஜி, இயக்குநர் ஶ்ரீதர்(கடுகு சாரின் ஊர்க்காரர்) சித்ராலயா கோபு (இவரும்) மூவரும் பாலிய நண்பர்களும் கூட. அதைத் தவிரவும் கே.பாலசந்தர், விமரிசகர் சுப்புடு, சிவாஜி, எம்.எஸ்.அம்மா, சோ அவர்களின் தந்தை, பாரதிராஜா, சுஜாதா போன்ற அனைவரிடமும் தனக்கு உள்ள நட்பைக் குறித்து எழுதி உள்ளார்.
மேலும் இவர் தபால் துறை வேலையை விட்டு விலகி விளம்பரக் கம்பெனியில் சேர்ந்ததன் பலன் கணினி வல்லுநராகவும் ஆகி இருக்கிறார். கேட்பவர்களுக்கு எழுத்துருக்களைச் செய்து தருகிறார். விளம்பரங்களின் மேல் அளவு கடந்த ஆர்வம். கணினியில் பெற்ற தேர்ச்சியின் மூலம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைத் தன் மனைவி கமலாவுடன் சேர்ந்து அழகிய முறையில் பதம் பிரித்து வெளியிட்டிருக்கிறார். இன்னமும் ஆர்வத்துடன் பல ஓவியங்களைக் கணினி உதவியுடன் வரைந்து தன் வலைப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கிராஃபிக்ஸில் சமீபத்தில் இவர் வரைந்திருப்பது ஹிஹிஹி ஜிவாஜியோட படம்!
கமலாவும் நானும் என புத்தகத்தின் பெயர் இருப்பதால் இவர் மனைவியுடனான நிகழ்வுகளாக நகைச்சுவையுடன் சில சம்பவங்களை எழுதிக் கலக்கி இருக்கார். அதிலே கமலாவும் கத்திரிக்காய்க் கூட்டும் என்ற கதையில் நடப்பது எங்க வீட்டில் அப்படியே தலைகீழாக நடப்பதைச் சித்திரிப்பது போல் இருக்கும். "கமலாவுக்கு ஒரு காதல் கடிதம்" என்னும் கட்டுரையிலோ காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக உப்புப் பொடியைப் போட்டதைக் கூட நாசுக்காகச் சுட்டிக் காட்டி இருக்கும் திறமை! இது எங்க வீட்டிலேயே நடந்திருக்கு! என் மாமியார் ஒரு முறை நிஜம்மாகவே உப்புப் பொடியைப் போட்டுட்டாங்க. அதை முதலில் குடித்த நான் குடிக்காதீங்க, உப்பு இருக்குனு சொல்லியும் கேட்காமல் அவங்களும் வாயில் விட்டுப் பார்த்துட்டே அப்புறமாக் கீழே கொட்டினாங்க! :)
அந்த உப்புப் போட்ட காப்பியைக் குடித்த மனோநிலையிலும் மனைவியை என் மனோரஞ்சித மலரே என வர்ணிக்க இவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. இந்தக் கட்டுரை வீட்டுப் பரணைக் காலி செய்தப்போ கிடைத்த பழைய ஏட்டுச் சுவடினும் குறிப்பிட்டிருக்கார் கடைசியிலே. இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் இருக்கின்றனவோ! இப்போதும் தொடர்ந்து
கடுகு தாளிப்பு
இந்தத் தளத்தில் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். அகஸ்தியன் என்ற பெயரில் எழுதுபவர்/எழுதியவரும் இவரே! பி.எஸ்.ஆர் என்னும் பி.எஸ்.ரங்கநாதன் என்பவரும் இவரே. கடுகு என்னும் பெயரில் எழுதுபவரும் இவரே! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதே போல் இவருக்கு வயதானாலும் இவரின் நகைச்சுவை உணர்வு அதே இளமையுடன் இருக்கிறது. தொடர்ந்து இவ்வாறே இருக்கப் பிரார்த்தனைகள்.
அந்த உப்புப் போட்ட காப்பியைக் குடித்த மனோநிலையிலும் மனைவியை என் மனோரஞ்சித மலரே என வர்ணிக்க இவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. இந்தக் கட்டுரை வீட்டுப் பரணைக் காலி செய்தப்போ கிடைத்த பழைய ஏட்டுச் சுவடினும் குறிப்பிட்டிருக்கார் கடைசியிலே. இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் இருக்கின்றனவோ! இப்போதும் தொடர்ந்து
கடுகு தாளிப்பு
இந்தத் தளத்தில் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். அகஸ்தியன் என்ற பெயரில் எழுதுபவர்/எழுதியவரும் இவரே! பி.எஸ்.ஆர் என்னும் பி.எஸ்.ரங்கநாதன் என்பவரும் இவரே. கடுகு என்னும் பெயரில் எழுதுபவரும் இவரே! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதே போல் இவருக்கு வயதானாலும் இவரின் நகைச்சுவை உணர்வு அதே இளமையுடன் இருக்கிறது. தொடர்ந்து இவ்வாறே இருக்கப் பிரார்த்தனைகள்.
கடுகு ஐயாவைப்பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் ஐயாவை நலம் வாழ!
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, நீங்கள் அங்கே போயும் அவர் பதிவுகளில் கருத்துத் தெரிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி.
Deleteநல்லதொரு பகிர்வு. கேஜிஜிக்குக் கூட அவர் ஒரு புத்தகம் அனுப்பி இருந்தார் என்று நினைவு.
ReplyDeleteஇருக்கலாம். பலருக்கும் அனுப்பி இருக்கார் என அறிகிறேன். நேற்றைய இந்தப் பதிவுக்குப் பார்வையாளர்கள் அதிகம் இருக்கும் அளவுக்குக் கருத்துக்கள் வரவில்லை! :( முக்கியமாய் நெ.த.வைக்காணோம். :)
Deleteவாழ்க வாழ்கவே...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteகடுகு சாரின் நகைச்சுவை மிளிரும் எழுத்துக்களை படித்திருக்கிறேன். அவர்பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி அக்கா!
ReplyDeleteநன்றி மோகன் ஜி!
Deleteகடுகு (ரங்கநாதன்.... அகஸ்தியன்) அவர்களின் நகைச்சுவையை நானும் ரசித்திருக்கிறேன்..கமலா தொச்சு முன்பு வாசித்திருக்கிறேன். கடுகு அவர்களின் எழுத்து எனக்கு தேவன் அவர்களை நினைவுபடுத்தும். அப்புறம் பார்த்தால் கடுகு அவர்களுக்கு தேவனும் மிகவும் பிடித்த எழுத்தாளர் என்பதையும் சொல்லியிருக்கிறார். மீண்டும் அவரது கதைகளை வாசிக்க வேண்டும்...தேவனின் கதைகளையும்...பகிர்விற்கு மிக்க நன்றி கீதாக்கா
ReplyDeleteகீதா
வாங்க தில்லையகத்து/கீதா, தொச்சு, கமலா, அங்கச்சி அடிக்கும் லூட்டிகள் எல்லாமே மறக்க முடியாதவை! அதை ரசிக்காதோர் இருக்க முடியாது!
Delete"கமலாவும் நானும்" புத்தக விமர்சனம் அருமை.
ReplyDeleteநானும் இடை இடையே படிப்பேன் அவர் பதிவுகளை.
நிறைய செய்திகள் அவரைப் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.
இது விமரிசனமெல்லாம் இல்லை , கோமதி அரசு! சும்மா ஓர் அறிமுகம்.
Deleteகடுகு என்ற புனைப்பெயர் என் வைத்துக் கொண்டாராம்?
ReplyDeleteஆரம்பத்தில் குமுதத்திற்காகத் துணுக்குச் செய்திகளை வழங்கி வந்திருக்கிறார். அவற்றைக் "கடுகு" செய்திகள் என்னும் தலைப்பில் வெளியிட்டிருப்பதாகச் சொல்கிறார். அதன் பிறகு அதையே புனைப்பெயராகவும் வைத்துக் கொண்டுள்ளார். எனக்குத் தெரிந்து ஒரு சில புத்தகங்களில் "கடுகு" பி.எஸ்.ஆர். என்னும் பெயரிலும் கூட அவரது எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்.
Deleteபி.எஸ்.ஆர் பார்த்த நினைவிருக்கிறது. அப்பல்லாம் சுஜாதா அல்லது பாக்கியம் ராமசாமி ரெண்டு எழுத்தைத் தவிர வாசித்ததே இல்லை.
Deleteஅவரது தளத்தில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நகைச்சுவை மிளிரும் எழுத்து... அவரது அனுபவங்கள் வாயிலாக படிக்கும் நமக்கும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு....
ReplyDeleteநன்றி வெங்கட்!
Deleteகடுகு சாரின் எழுத்துக்கள் எனக்கு ஆரம்ப காலத்திலிருந்து பிடிக்கும். அதுவும் பெரும்பாலும் தீபாவளி மலரிலோ அல்லது கல்கியிலோ 'கடுகு' கதைகள் வந்திருந்தால் முதல்ல அதனைப் படிப்பேன்.
ReplyDeleteஎனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் அவரது தளத்தையும் அவரது பல்வேறு அனுபவங்களையும், அனுபவக் கட்டுரைகளையும் படித்தபிறகுதான் அவரைப் பற்றி ஓரளவு அறிந்துகொண்டேன். அதற்கு அப்புறம் அவரது 'பெரிய எழுத்து நாலாயிரம்' புத்தகம் வாங்கிப்படித்தேன். அவரை இதுவரை நேரில் சந்தித்ததில்லை (என் மனைவி, மகன் ஆகியோருக்கு அந்தப் பாக்கியம் கிடைத்தது).
பொதுவா நாம நகைச்சுவை நடிகர்களையோ, எழுத்தாளர்களையோ, ரொம்ப ஈசியா எடுத்துக்குவோம். அவங்களுக்கு பரந்துபட்ட அறிவு இருக்கும் என்பது நம்ம மனசுல அவங்களோட பிம்பமாகப் பதியாது. ஆனால் நகைச்சுவையாக எழுதுவதற்கு மிகுந்த திறமை வேண்டும். அதுவும்தவிர, கடுகு சார் (பி.எஸ். ரங்கனாதன் அவர்கள்) பல்வேறு வகையான புத்தகங்களைத் தொடர்ந்து படிக்கும் இயல்பு உடையவர். அதனால்தான் குமுதம் ஆசிரியர் ஏ.எஸ்.பி. அவர்கள், அகஸ்தியன் (கடுகு) சாரை நிறையத் துணுக்குகள் அனுப்பச்சொல்லி அத்தனையையும் பிரசுரித்துவந்தார்.
அவரது 'கமலா/தொச்சு' கதைகள் கொஞ்சம் மேல் சாவனிசம் இருப்பதாகத் தோன்றினாலும் நல்ல சிரிப்புக்குக்கு கேரண்டி. பொதுவா அவர் கதைகளைப் படித்தபிறகு, எதேச்சயாக அவருடைய மனைவி பெயரும் 'கமலா' என்று இருப்பதால், அவர் சொந்த நிகழ்வுகளைக் கதையாக்கிவிட்டாரோ என்று தோன்றும். (சமயத்தில் அவர் வீட்டிற்கு வருபவர்கள், அவர் மனைவியை, பி.எஸ்.ஆரைப் படுத்துபவர் இவர்தானோ என்று எண்ணவும் நேர்ந்திருக்கும்).
அவர், தன் தளத்தை 30 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்திருந்தால் இன்னும் பல மடங்கு எழுதியிருப்பார். 80+ வயதிலும் அவர் நிறையப் படிக்கிறார், தான் ரசித்தவற்றைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் எளிமையாக இருக்கிறார்.
அவரது சமீபத்தைய இடுகையைப் படித்தபின்புதான், எப்படி இருவரும் (அவரும் அவர் மனைவியும்) ஓரளவு made for each other என்பதுபோல் இருக்கிறார்கள், அதற்கான முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இருவரின் கூட்டு முயற்சிதான் 'பெரிய எழுத்து நாலாயிர திவ்யப்ப்ரபந்தம்' உருவானதன் காரணம்.
உங்கள் இடுகையைப் படித்து என்னை கடுகு சாரைப் பற்றி நினைவுகூர வைத்ததற்கு நன்றி. அவர்கள் இருவரும் ஆரோக்கியத்தோடு இருக்கப் ப்ரார்த்திக்கிறேன்.
ஆமாம், நெ.த. உண்மையிலேயே அவர் செய்திருப்பது சாதனை என்பதோடு ஓரளவில்லாமல் முழுக்க முழுக்க அவரும் அவர் மனைவியும் ஒருவருக்கென ஒருவர் பிறந்தவர்களே! உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.
Delete"ஓரளவு made for each other" - இப்படி எழுதுவதற்குக் காரணம் கண்ணேறு படக்கூடாது என்பதால்தான்.
Deleteஅட, ஆமா இல்ல! எனக்கு அது புரியலை! உண்மை தான்!
Deleteஅதிகம் படித்ததில்லை.
ReplyDeleteஅன்புள்ள கீதா மாமிக்கு, நமஸ்காரம். மிக்க நன்றி. தனிப்பட்டமு றையில் எனக்கு ’ஷொட்டு’ கடிதங்கள் வந்துள்ளன. எல்லா பாராட்டுகளையுனம் என்னை இயக்கி வரும் ‘கல்கி- அவர்களின் பொன்னடிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் பதிவு மிகவும் பெரிய பாராட்டு. மிக்க நன்றி. மிக்க நன்றி.
பி எஸ் ஆர்
ஆஹா, வசிஷ்டரே நேரில் வந்து வாழ்த்திட்டாரே! உண்மையிலே நான் எதிர்பார்க்கவே இல்லை. நானும் ஓரளவுக்குப் பலருக்கும் தெரியும்படி இருக்கேன் என்பதிலும் சந்தோஷம்! ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கடுகு சார்! என்ன சொல்றதுனே தெரியலை! சந்தோஷத்தின் உச்சியில் இருக்கேன்.
Deleteகடுகு சாரைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை இப்போதுதான் வாசித்தேன்.
ReplyDeleteஅவரைப்பற்றிக்கேள்விப்பட்டுள்ளேன். கொஞ்சம் படித்துமிருக்கிறேன். ஒரு முறை டெல்லியில் அவர் வெஸ்பா ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்தபோது என் அண்ணா சொன்னது நினைவுக்கு வருது: ‘டேய் ! அதோ போறார் பாரு.. அவர்தான் கடுகு!’ . நான் டெல்லிக்குப்புதுசு. கடுகுபற்றி - கல்கி மூலமாக என்று நினைக்கிறேன் -கேள்விப்பட ஆரம்பித்த காலகட்டம்!
கடுகு இன்னமும் எழுதுகிறார் - தற்போது விகடன் இணைய இதழில் (மிஸ்டர் கழுகு). கல்கி பார்த்து ரொம்ப நாளாயிற்று. இங்கே நாங்கள் இருக்கும் பகுதியில் கல்கி கிடைப்பதில்லை.