எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 13, 2017

ஜிஎஸ்டி தொடருமா? முடிஞ்சதா?

நல்லெண்ணெய் 140 ரூ, கடலை எண்ணெய் 80 ரூ இன்றைய விலை நிலவரம். இது நாங்கள் வழக்கமாக வாங்கும் ஆயில் மில்லின் விலை நிலவரம். இதயம், கோல்ட் வின்னர் போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட எண்ணெய்களின் விலை கூடி இருக்கலாம். நாங்க வாங்குவது அக்மார்க் எண்ணெய்! மளிகைப் பொருட்கள் விலை சிலது குறைந்தும், சில பொருட்கள் விலை கொஞ்சம் கூடியும் காண முடிகிறது. முக்கியமாய் ப்ரான்டட் பொருட்கள் விலை அதிகம் தான் என நினைக்கிறேன். காய்கறிகளைப் பார்த்தால் வரத்துக் குறைவு. இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் வாழைப் பழம், காய், இலை, பூ போன்றவற்றிற்குப் பெயர் போனது. ஆனால் இப்போது வாழை இலையே கிடைப்பதில்லை! வாழைக்காயும் சின்னதாக இரண்டு காய் ஐந்து ரூபாய் சொல்கின்றனர். வாழைப்பூ ஏழு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை விற்கிறது. மற்றக் காய்களில் பெரிய வெங்காயம் 15 ரூ, 20 ரூபாயிலும் சின்ன வெங்காயம் 60 ரூ, 80ரூபாயிலும் உருளைக்கிழங்கு 20,25 ரூபாய்க்குள்ளும் கிடைக்கிறது. தக்காளி 80 ரூபாய்! ஒரு தக்காளியை இரண்டு நாட்கள் வைச்சுச் சமைக்கிறேன். இது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும் இதற்கும் ஜிஎஸ்டியைக் காரணம் காட்டுவது தேவையற்றது.

சாலையோரத் தேநீர்க்கடைகள், பஜ்ஜி, போண்டாக்கள் விலையையும் தேநீர் விலையையும் ஏற்றி விட்டார்கள். காரணம் ஜிஎஸ்டி என்கின்றனர். ஆனால் அவர்கள் ஜிஎஸ்டி கட்டியதற்கான சான்று எதுவும் இல்லை! காட்டுவது இல்லை. நாம் வாங்கும் பொருட்களுக்கான ரசீதும் தருவதில்லை. கடலை மிட்டாய் காதி பண்டாரில் வாங்கினால் விலையும் குறைவு. ருசியும் நன்றாக இருக்கிறது. மளிகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் கடலை மிட்டாய் விலையும் அதிகம், ருசியும் குறைவு! ப்ரான்டட் சிறுதானியங்கள் விலையும் குறைந்துள்ளன. வரகு கிலோ 80 ரூபாய் தான்! சோளம்(வெள்ளைச் சோளம்)37 ரூபாய். சாமை அரிசி மட்டும் விலை அதிகமாகவே காணப்படுகிறது. கிலோ 93 ரூபாய். தினை அரிசி 56 ரூபாய் தான். எல்லாவற்றையும் விட விலை குறைவானது கம்பு, கிலோ 32 ரூபாய். குதிரை வாலி அரிசியும் விலை அதிகம் 95 ரூபாய். கடலை மிட்டாய் பாக்கெட் இந்த சூப்பர் மார்க்கெட்டில் 48 ரூபாய். ஆனால் காதியில் 42 ரூபாய் மட்டுமே!  பெருங்காயம் அசாத்திய விலை 100  கிராம் டிடி பெருங்காயம் 118 ரூ. ஆனால் இதையே நாங்க வழக்கமா வாங்கற இடத்தில் லூசாக வாங்கினால் கிலோ 70 ரூபாய் தான் ஆகிறது.  பாக்கு லூசாக வாங்கினால் பத்து ரூபாய்க்கு 25 பாக்கு வரைதான் கிடைக்கிறது. அதையே  கடையில் வாங்கினால் 100 கிராம் 43 ரூபாய் தான்.  ஆகச் சில பொருட்கள் லூசாக வாங்கினால் விலை குறைவாகவும் சில பொருட்கள் லூசாக வாங்கினால் விலை அதிகமாயும் இருக்கின்றன.

ஒரு சில மளிகைக் கடைகளிலே மட்டும் பில் தருகின்றனர். பல கடைகளிலும் மளிகைக்கடைகளிலும் பில் தருவதில்லை. ஆனாலும் அவர்களும் பொருட்களின் விலையை ஜிஎஸ்டியைக் காரணம் காட்டி ஏற்றுகின்றனர். அவர்கள் கட்டினதற்கான சான்றைக் காட்ட வேண்டும். அதற்கான க்ரெடிட் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி யாரும் செய்யறதில்லை; அல்லது அது குறித்த விழிப்புணர்வு இல்லை. நேற்று மாலை "பொதிகை" தொலைக்காட்சியில் இதைக் குறித்த ஓர் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில் கிடைத்தது. ஆனால் எத்தனை பேர் இதை எல்லாம் பார்க்கப் போகிறார்கள். மக்களுக்கு சூப்பர் சிங்கரும், பிக் பாஸும், சன் சிங்கரும் தராத மகிழ்ச்சியையா இவை தந்துவிடும்?  முக்கியமாய் இந்த ஜிஎஸ்டி வியாபாரிகளுக்கானது. அவர்கள் தாங்கள் சம்பாதித்த லாபத்துக்கு மட்டும் வரி கட்ட வேண்டும் என அரசு கூறுகிறது. அந்த லாபத்தை இதுவரை காட்டாதவர்கள் இப்போது காட்டியாக வேண்டும்.

வெண்ணெய் ஆவின் வெண்ணெய் 440 ரூபாய். ஆவின் பால் விலை லிட்டருக்கு 44 ரூபாய். தனியார் வெண்ணெய் 480 இல் இருந்து 500 வரை விற்கின்றனர். பாலும் கூட வைத்து விற்கலாம். நான் விசாரித்த வரை 40 ரூபாய், 45 ரூபாய், 38 ரூபாய் என மூன்று தரங்களில் பால் கொடுப்பதாகச் சொல்கின்றனர். அமெரிக்கா போகும் வரையும் இந்தப்பால்காரரிடம் தான் பால் வாங்கிக் கொண்டிருந்தோம். அப்போ 38 ரூபாய் கொடுத்து வந்தோம். இப்போ 40,45 கொடுத்தும் பால் தரமாக இல்லை! கேட்டால் தண்ணீர் ஊற்றாமலா கொடுக்க முடியும் என்கின்றனர். தன்ணீர் ஊற்றுவதிலும் ஓர் தராதரம் இருக்கணுமே! அது இல்லை. ஆகவே ஆவின் பாலுக்கு மாறி விட்டோம். விலையும் குறைவு. மாசம் 300 ரூபாய் வரை மிச்சமும் ஆகிறது. என்ன! பக்கத்திலே இருக்கும் பூத்துக்கு இரு வேளையும் பால் வருவதால் அவ்வப்போது போய் வாங்கி வரணும்! அதான் ஒரு பிரச்னை! 

16 comments:

  1. ஒரு ஆறுமாதம் போகட்டும். சில தெளிவுகள் பிறக்கலாம்.

    எங்கள் ஏரியா தண்ணீர்க் கேன் காரரும் விலை ஏற்றி விட்டார் என்று சொன்னார்கள். (நான் ஆர் ஓ ) முழு விலை விவரங்களும் தந்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றின் விலை ஒவ்வொரு மாதிரிதான். சென்னையில் தக்காளி 100 ரூபாய். அதுபோல வேறு சில பொருள்களும் விலை வேறுபடும். . கடைகளில் பொருள்கள் வாங்கும்போது நாம் யாரிடமும் ரசீது கேட்க மாட்டோம். பழகியவர்கள் என்று விட்டு விடுவோம். அப்புறம் என்ன சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. நாங்க அக்வா கார்ட் வாடகை வீட்டிலேயே போட்டிருந்தோம். அதை இங்கே கழற்றிக் கொண்டு வந்து மாட்டியாச்சு. அதனால் தண்ணீர்ப் பிரச்னை இல்லை! சில பொருட்கள் விலை ஏறி உள்ளது. சிலது விலை இறங்கி இருக்கு. முக்கியமாய்ப் பருப்பு வகைகள் நூறு ரூபாய்க்குள்ளாக இருக்கின்றன.

      Delete
  2. முதல் பத்தில போட்டிருக்கிற விலை எல்லாமே ரொம்பக் குறைச்சலா எனக்குத் தெரியுது. இந்த 140ரூக்கு அக்மார்க் நல்லெண்ணெய் எந்தப் புண்ணியவான் தரான்னு பார்க்கணும். இதுமாதிரித்தான் கீ.ர அவர்களும் 135 ரூக்கு நல்லெண்ணெய் என்று சொல்லியிருந்தார். பிராண்டட் நல்லெண்ணெயில் 30%தான் நல்லெண்ணெய், மீதி எந்த ஆயில்னு தெரியலை, ஆனா விலை 240 ரூபாய்னு நினைக்கறேன்.

    மற்றபடி, ஏதாவது சாக்குவைத்து விலை ஏற்றுபவர்களை ஒன்றும் செய்ய இயலாது.

    ReplyDelete
    Replies
    1. நாங்க வாங்கற நல்லெண்ணெய் நல்ல வாசம் வீசும்! கம்மென்று இருக்கும். மிளகாய்ப் பொடியோடு குழைத்துச் சாப்பிட்டாலோ, துகையல் சாதத்தில் கலந்து கொண்டாலோ நல்ல எள்ளின் மணம் வாயில் தெரியும். இங்கே இப்போதைக்கு இந்த விலைதான் விற்கிறது. சொல்லப் போனால் தேங்காய் எண்ணெய் கூட 150 ரூபாய்க்குள்ளாக இருந்தது இப்போது தேங்காய் கிடைக்காததால் 200 ரூபாய்க்குப் போய் விட்டது. தே. எண்ணெயில் தான் பக்ஷணங்கள் செய்வேன். கொஞ்சமாக வைத்துச் செய்வதால் அதிகம் செலவாகாது. (சுட்ட எண்ணெயை நான் பயன்படுத்துவதில்லை, என்பதால் சின்னச் சட்டியில் கொஞ்சமாக எண்ணெய் வைத்துக் கொஞ்சம் போல் தான் பண்ணுவேன். எண்ணெய் மிஞ்சினால் மறுநாளே தாளிதம் எதற்கானும் பயன்படுத்துவேன். தீர்த்துவிடுவேன்.)

      Delete
  3. எது எப்படி நடந்தாலும் சராசரி மனிதனுக்குத்தான் பிரச்சனைகள்

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சுக்கறவங்களுக்குப் பிரச்னை இல்லை.எல்லோருக்கும் புரியுதுனு சொல்லவும் முடியலை!

      Delete
  4. பயங்கரமான குழப்பநிலை எங்கும்...

    ReplyDelete
    Replies
    1. இங்கே அவ்வளவு தெரியவில்லை. என்றாலும் மக்களுக்குப் புரியத்தான் இல்லை.

      Delete
  5. இதனைக்குறித்து இன்னும் மக்களுக்கு (நானும் உள்படத்தான்) தெளிவான நிலை வரவில்லை எடுத்துச்சொல்லும் பொதிகையை யார் பார்க்கின்றார்கள் அதில் உலகநாயகன் சொன்னாலும் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நீங்கள் கிண்டலுக்குச் சொல்லி இருந்தாலும் இது போன்ற மக்களுக்குத் தேவையான விஷயங்களை பிரபல நடிகர்கள் மூலம் சொல்லிப் புரிய வைக்கலாம்.

      Delete
  6. நல்லதோர் தெளிவு வரவேண்டும். அரசாங்கமும் இந்த புதிய முறை பற்றிய விளம்பரங்கள் செய்து மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பார்க்கலாம் என்ன நடக்கிறது என.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இன்னமும் குழப்பங்கள் நீடிக்கின்றன. அரசு தலையிட வேண்டியவற்றில் உடனடியாகத் தலையிட வேண்டும்.

      Delete
  7. பொய்யும் புரட்டும் சேர்ந்ததே வணிகம் என்றாகி விட்டது..
    சம்சாரிகள் இருள் சூழ்ந்த மனோபாவத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள்..
    தேவைகளைக் குறைத்துக் கொள்வது நல்லதாகப்படுகின்றது..

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு. நீங்கள் சொல்வது சரியே! வியாபாரிகள் அதிகம் லாபத்திற்கு ஆசைப்படுகின்றனர்.

      Delete
  8. //ஆவின் பால் விலை லிட்டருக்கு 44 ரூபாய்.// தனியார் பால் நான் விசாரித்த வரை 40 ரூபாய், 45 ரூபாய், 38 ரூபாய.// ஆவின் பாலுக்கு மாறி விட்டோம். விலையும் குறைவு. மாசம் 300 ரூபாய் வரை மிச்சமும் ஆகிறது.//

    தனியார் பால் கூடிய விலை 45 ரூபாய் தான். ஆவின் 44 ரூபாய். வித்யாசம் 1 ரூபாய். ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் வாங்கினால் தான் தினம் 10 ரூபாய் வைத்து ஒரு மாசம் 300 ரூபாய் மிச்சம் பிடிக்கலாம்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. பால்காரரிடம் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் பால் வாங்குவேன். காலை ஒரு லிட்டர் 40 ரூ, மாலை அரை லிட்டர் 20 ரூ. 60X30= 1200 + 600= 1800 ரூபாய். இப்போ ஆவினில் கொழுப்புச் சத்து நிறைந்த 44 ரூபாய் பால் அரை லிட்டரும் (நிறையத் தண்ணீர் கலக்க முடியும்) சாதாரணப் பால் 20 ரூபாய் அரை லிட்டரும் வாங்குகிறேன். 22+20= 42 ரூ ஒரு நாளைக்கு 42X30 = 1260 ரூபாய் 1800--1260 = 540 இப்போது மிச்சம். தனியார் வெண்ணெய் 480 இல் இருந்து 500 வரை. ஆவின் வெண்ணெய் 440 ரூ, அதில் 40 ரூபாயில் இருந்து 60 வரை மிச்சம். விருந்தினர் வந்து அதிகப்படிப் பால் வாங்குவது தனி! அது எப்போவுமே எல்லோருக்கும் உள்ளது! 35 ரூபாய் எனத் தனியாரிடம் பால் வாங்கினாலும் 300 ரூ வரை மிச்சம் ஆகும்.

      Delete