எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 09, 2017

ஜிஎஸ்டி வரி விதிப்பு அக்கிரமம்! :)

GST யை பற்றி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் தவறான பரப்புரை செய்யப்பட்டு வருவதற்கும் மற்றும் சாமானியனின் மனதில் எழுந்த சில வினாக்களுக்கும் நான் அறிந்த வகையில் சில விளக்கங்கள்.

1. GST யால் டீ விலை ரூ.8 லிருந்து ரூ.10 ஆகவும் காபி ரூ.10 லிருந்து ரூ.12 ஆகவும் விலையேற்றப்பட்டுள்ளதே?
பால் - வரி விலக்கு
சர்க்கரை - 5% வரி. முன் 6%.
டீ, காபி தூள் - 5% வரி. முன் 6%.
ஆகையால் டீ, காபி விலையேற்றம் விற்பனையாளர்களின் தன்னிச்சையான முடிவு.

2. தங்க பிஸ்கட்டுக்கு 3% நாங்க திங்கிற பிஸ்கட்டுக்கு 18%?
GST யில் பிஸ்கட் 32 சதவீதத்திலுருந்து 18 ஆக குறைந்துள்ளது. இதை மறைத்துவிட்டு தங்கத்தோடு ஒப்பிடுவது முறையாகாது.


3.கடலை மிட்டாய்க்கு 18% , பீட்சாவுக்கு 5% இது என்ன நியாயம்?
கடலை மிட்டாய் குடிசை தொழிலாகவும், சிறு குறு நிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. GST பொறுத்த வகையில் 20 லட்சம் வரை turnover செய்பவர்கள் வரிகட்ட தேவையில்லை. அதற்கும் மேல் அதாவது 20-70 லட்சம் வரை turnover செய்பவர்கள் 2% வரி கட்டினால் போதும். ஆக பெரும்பான்மையான அனைத்து சிறு குறு தொழில்களும் 20இலட்சத்திற்கு உள்ளே தான் இருக்கும் ஆக இவர்கள் GST யில் வரி செலுத்த தேவையில்லை ஒரு வேலை அவர்களின் turnover 20-70 இலட்சம் இருந்தால் அவர்கள் 2% வரி செலுத்தினால் மட்டும் போதுமானது.


4. பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு
18% வரி போடுவதா?
பெரும்பாலும் சுய உதவி குழுக்கள்தான் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சிறு குறு தொழிலாகவும் செய்யப்படுகிறது. ஆக நான் மேற்க்குறிப்பிட்டதுபோல் 20 இலட்சம் வரை இதற்கு வரிவிலக்கு. 20-70 இலட்சம் வரை turnover இருந்தால் 2% வரி. ஒரு வேலை இதற்கு வரிவிலக்கு அளித்தால் இதை ப்ராண்டாக(brand) விற்பனை செய்யும் பெரு நிறுவனங்களிடம்(MNC) போட்டிபோட முடியாமல் இந்த சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர்.

5. ஹோட்டல்களில் அதிக வரி வசூலிக்கப்படுகிறதே?
GST க்கு முன்னால் உணவகங்களில் 14.5% VAT, 5.6% service tax, swach bharath ,krish kalyan tax என 20.5% வரை வரி செலுத்தினோம். அனால் தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

6. 28% வரி போடுவதா?
GST யில் 81 சதவீத பொருட்கள் 18% வரிக்குள் வந்துவிடும். அத்தியாவசியத்தை தாண்டி சொகுசு என்ற வரையறையின் எல்லையை நெருங்கும் போதுதான் 28% வரி வசூலிக்கப்படும். அதாவது நட்சித்திர விடுதியில் தங்க ஒரு நாளைக்கு ரூ.7500 மேல் முன்பதிவு செய்வது, make up idems ,வாசனை திரவியம், face creams, fridge போன்ற பொருட்கள் இந்த வரிக்குள் அடங்கும்.


7. எத தாண்டா வரி இல்லாம கொடுப்பிங்க?
அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பழங்கள்,காய்கறிகள், பால் போன்றவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக நடவடிக்கை எடுத்து வரி கட்ட சொன்ன போது எழுந்து நின்று கைதட்டி ஆதரித்த ஆரவாரம் செய்து இப்படி ஒரு ஆள் நிஜமாகவே ஆட்சி செய்தால் தான் இந்தியா உருப்படும் என்று ஆதங்கப்பட்டவர்களின் வாக்கை பெற்று தான் மோடி பிரதமர் ஆகி இந்தியாவை வல்லரசாக மாற்றி ஒரே வரி என்று சீர்திருத்தம் செய்கிறார்.
இந்த நேரத்தில் மோடியை மக்கள் புகழ்ந்து அவர் செல்வாக்கு மேலும் உயர்ந்து விடும் என்ற அச்சத்தில்   அவரை வெறுக்கும் கூட்டம் மக்களை குழப்பி பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடித்திட வியாபாரிகள் விலையேற்றம் செய்கிறார்கள். இந்த உண்மை தெரிந்தும் இந்த நேரத்தில் அரசியல் லாபம் அடைய அரசியல்வாதிகள் காய் நகர்த்தி வருகிறார்கள். பாஜக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தேசத்தின் வளர்ச்சியை விரும்பும் அனைவரும் இது போன்ற வதந்தியை முறியடிக்க கைகோர்த்து பாடுபட அழைக்கிறோம். வாருங்கள். உண்மையை உரக்கச் சொல்வோம்.

இந்த அநியாயத்தைப் பார்த்தீர்களா?

வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர் நேற்று காலை வந்தார். நாளை முதல் ஒரு கேனுக்கு 5 ரூபாய் அதிகம் இனிமேல் ஒரு கேன் 40 ரூபாய் என்றார் என் மனைவியிடம். பேப்பர் படித்துக்கொண்டிருந்த நான் தலையைக்கூட நிமிர்த்தவில்லை. அவர் சமாதானமாகவோ என்னவோ ’எல்லாம் இந்த மோடி பண்றது’ என்றார். நான் எதுவுமே சொல்லவில்லை. இந்த மனிதர் சுமார் பத்து வருடங்களாக இந்தத் தொழில் செய்துவருகிறார். என் வீட்டுக்குக் கடந்த 3 வருடங்களாக இவர்தான் தண்ணீர் சப்ளை. ஒருமுறைகூட தண்ணீருக்கு பில்லோ எதுவுமோ தந்ததில்லை. இது ஒரு முறைசாரா தொழில். முறையான பதிவு இப்போதுவரை இல்லை. ஒருவேளை இருந்தாலும் விற்கும் எல்லா கேனுக்கும் வரி கட்ட மாட்டார்கள். ஒரு பத்து சதவீத கேனுக்குத்தான் வரி கட்டுவார்கள். அப்புறம் ஏன் எல்லோருக்கும் விலை ஏற்றுகிறார்கள். ஜி.எஸ்.டியின் பெயர் சொல்லி பொருட்களின் விலையை ஏற்றி இருக்கும் வணிகர்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவர்கள்தான்.

இந்த நல்லபிள்ளைகள்தான் அறச்சீற்றம் கொண்டு அரசுகளை சாடிக்கொண்டிருக்கிறார்கள். ஊழல் ஒழிய வேண்டும் என்கிறார்கள்.
மோடி அவர்கள் எது செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் நபர்கள் மிகவும் அறிவாளிகள் போல் கேட்கும் கேள்வி பெட்ரோல்_டீசலுக்கு GST வரி ஏன் போடவில்லை? என்பது தான்....

இந்தியாவில் உள்ள மாநில அரசு நிதி அமைச்சர் அனைவரும் GST மசோதா தயாரிப்பு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக வற்புறுத்திய ஒரு  விசயம் இது தான். பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டியில் வரி கூடாது என்பதே! ஏன் தெரியுமா?

#பெட்ரோல்_டீசல் ஆகியவை ஏன் #GST ல் வரவில்லை ,
இதுதான் பல மாநிலங்களின் முக்கியமான + முதன்மை வருமானம்.
பெட்ரோல், டீசல், மது போன்ற பொருள்களுக்கு பல மாநிலங்களும் குறைந்தது  30% முதல் 80% வரை வரிவிதித்து வருகின்றன.
இதனால் பெட்ரோல் டீசல் மது இவற்றை GST வரி வரம்புக்குள் கொண்டு வந்ததால் மாநில அரசு வருமானம் படு மோசமாக ஆகிவிடும் என்று தான் மாநில அரசுகள் கடுமையாக எதிர்த்தனர். ஏனெனில்  காரணம் GSTல் உச்சகட்ட வரி என்பது 28% தான். இதனால் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கையெழுத்துப் போட மாநில நிதி அமைச்சர்கள் மறுத்து விட்டார்கள். இதன் பிறகு GSTல் பட்டியலில் இருந்து பெட்ரோல் டீசல் மது போன்ற பொருட்களை நீக்கிட மத்திய அரசு சம்பாதித்த பிறகே GST க்கு கையெழுத்து அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் போட்டு இப்ப GST அமலுக்கு வந்து உள்ளது.

பெட்ரோல் டீசலுக்கு மத்திய அரசு 9% மட்டுமே வரிவிதித்து உள்ளது. ஆனால்
தமிழ்நாடு அரசு பெட்ரோலுக்கு 38%, மதுவிற்கு சுமார் 60% வரிவிதிப்பில் இருந்து வருகிறது....

பெட்ரோல், மது போன்ற பொருள்களை GST ல் கொண்டு வந்தால், அதிகபட்சமாக 28% தான் வரிவிதிக்க முடியும். மாநிலங்களுக்கு நட்டம் ஏற்படும். அதனால் பெட்ரோல் மற்றும் மது போன்ற பொருள்களை #ஜிஎஸ்டி வரிவிதிப்பில் கொண்டு வரக்கூடாது என்று பெரும்பான்மையான மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் வாதிட்டன....அதனால் தான் பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இல்லை... மத்தியில் மோடி அவர்களின் அரசு விரும்பியபடி GST அமலுக்கு வந்து இருந்து இருந்தால் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கும் அப்போது , #பெட்ரோலிய பொருள்களின் விலை லிட்டருக்கு சுமார் ரூ 25ரூபாய் வரை குறைந்து இருக்கும்.


மேற்கண்ட செய்திகள் முகநூல் நண்பர் வேலுதாஸ் என்பவரால் எழுதப்பட்டு திரு ஓகை நடராஜன் அவர்களால் பகிரப்பட்டது!


பி.கு. எழுத்துப் பிழைகள் இருந்தால் அதன் காரணம் இது காப்பி, பேஸ்ட் செய்யப்பட்டது என அறியவும். நான் எழுதவில்லை. கூடியவரை திருத்தி இருக்கேன். :)

23 comments:

  1. நல்ல செய்திதான். பொதுவாக வியாபாரிகளுக்கு ஏதேனும் சாக்குவைத்து விலையேற்றம் செய்யவேண்டும். எப்படியும் பயனாளிகள் கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான். ஜி.எஸ்.டியை வைத்தாவது எல்லோரும் ரசீது கொடுக்க ஆரம்பித்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. அரிசி விலை ஏறவில்லை. நேற்று விசாரித்ததில்! மற்றப் பொருட்கள் இனிமேல் தான் பார்க்கணும்! :) 20 லட்சத்துக்கு உட்பட்டு வணிகம் செய்பவர்கள் ரசீது கொடுப்பதில்லை. ஆனால் அவர்கள் தான் விலை ஏற்றம் செய்கின்றனர். முக்கியமாய்ப் பால் பொருட்கள் விற்பவர்கள், தேநீர்க்கடைக்காரர்கள், சிறு மளிகை வியாபாரிகள் ஆகியோர்.

      Delete
  2. எது எப்படியோ இதிலும் சிலர் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. மனித மனம் தனக்கு என்ன ஆதாயம் என்று தானே எதிர்பார்க்கிறது! அதுவும் இலவசம் என்றால் மக்களுக்கு ஆசை அதிகம் தான்!

      Delete
  3. நல்ல பகிர்வு.

    அப்ப நான் மட்டும் தான் இன்னும் GST பற்றி எழுதவில்லை போலும்! :)

    எப்போதுமே லாபம் பார்ப்பதை மட்டுமே விரும்புகிறார்கள். இப்போதும் இப்படிச் சிலர்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஊரோட ஒத்து வாழ வேண்டாமா? ஆனால் இதிலே கடைசி இரு பத்திகள் தவிர்த்து நான் எதுவுமே எழுதலை! :)

      Delete
  4. ​நானும் முகநூலில் இதை படித்தேன். கண்ணன் wbk என்ற நண்பர் பகிர்ந்திருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நிறையப் பேர் பகிர்ந்திருந்தனர்.

      Delete
  5. ​​எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள டீக்கடைக்காரரும் டீ, வடை விலைகளை ஏற்றி விட்டார்!

    ReplyDelete
    Replies
    1. எல்லா டீக்கடைக்காரர்களும் விலை ஏற்றி விட்டனர். :(

      Delete
  6. Replies
    1. ம்ம்ம்ம் டெக்ஸ்டைல்ஸ் பத்தித் தெரியலை டிடி. அங்கேயும் கட்டாயம் விலை ஏற்றம் இருக்கும்னு நினைக்கிறேன்.

      Delete
  7. ஜிஎஸ்டி வரி நல்ல முறையில்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. மிகவும் அடிப்படைப் பொருட்களுக்கு வரி இல்லாமல் ஆடம்பரப் பொருட்களுக்கு வரி ஆனால் வியாபாரிகள் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்கிறார்கள். எல்லா வர்த்தகத்திற்கும் அக்கவுண்டபிளிட்டி வரணும். பில்லிங்க். நான் பில் கேட்டுப் பெறாமல் வருவதில்லை. நல்ல பதிவு அக்கா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஜிஎஸ்டி நரசிம்மராவ் பிரதமராக இருந்தப்போ இருந்து ஆலோசனையில் இருந்து மன்மோகன் சிங் பிரதமராக இருந்தப்போக் கொண்டு வரத் திட்டங்கள் போட்டு பலத்த எதிர்ப்பினால் அவர்கள் கைவிட்டார்கள் என நினைக்கிறேன். இப்போதைய அரசு மாநிலங்கள் கேட்டுக்கொண்டதற்குச் சம்மதம் தெரிவித்து எல்லா மாநிலங்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகே ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கொண்டு வந்திருக்கிறது. இதற்கே அவசர கதி என்று சொல்பவர்கள் உண்டு. பில் கேட்காமல் நாங்களும் எதுவும் வாங்குவதில்லை என்றாலும் சில்லறை வியாபாரிகள் கொடுப்பதில்லை என்பதே நிதரிசனம். அவர்களும் கணக்குக் காட்டியே ஆகவேண்டும் என்று கட்டாயம் வராதவரை விலை ஏற்றம் இருந்து கொண்டு தான் இருக்கும்.

      Delete
    2. ஆமாம் சில்லறை வியாபாரிகள் என்றில்லை அக்கா வீட்டுப் பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சிக் கடைகள் பலவும் பில்லிங்க் வைத்துக் கொள்வதில்லை. சும்மா பேப்பரில் எழுதிக் கொடுப்பார்கள் கேட்டால் அது எப்படி அக்கவுண்டபிலிட்டி? ஆம் எல்லா வியாபாரிகளும் கட்டாயம் கணக்குக் காட்டியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரணும் நீங்கள் சொல்லுவது போல்

      கீதா

      Delete
    3. அவங்க மொத்தக் கொள்முதல் செய்கையில் ஜிஎஸ்டி கட்டினால் அதைக் காட்டிட்டு க்ரெடிட் எடுத்துக்கலாம். அந்த க்ரெடிட்டை வைச்சு விலையை வாடிக்கையாளரிடம் ஏற்றிக் கொடுத்துச் சரிக்கட்டலாம். ஆனால் அப்படி எல்லாம் செய்வதில்லை என்பதோடு ரசீதும் கொடுப்பதில்லை. நாம லிஸ்ட் எழுதிக் கொடுக்கும் பேப்பரிலேயே அவங்க விலையை எழுதி மொத்தம் கூட்டிப் போட்டுட்டுத் தராங்க! நாங்க 2 மாசமாக காவேரி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கறோம். ஜிஎஸ்டி போடறாங்க. சில பொருட்களுக்கு 5% சிலவற்றுக்கு 18% என மொத்தம் முன்னூறு ரூபாய்க்கு ஜிஎஸ்டி கொடுத்திருக்கோம். ஆனால் கடலைப்பருப்பை விடத் துவரம்பருப்பு விலை குறைவு. ஏ1 தரம் 75 ரூபாயும் அதைவிடத் தரம் உயர்ந்தது 85 ரூபாயும் விற்கிறது. கடலைப்பருப்பு 90, 100 ரூபாய். கடலை மாவு நாம் கடலைப்பருப்பு வாங்கி அரைத்தால் ஒரு கிலோவுக்கு 100ரூபாய்க்குள் ஆகிறது. ஆனால் விலைக்கு வாங்கினால் ஒரு கிலோ கடலைமாவு மட்டும் கடைகளில் 150 ரூபாயும், மாவு மெஷினில் 200 ரூபாயும் வாங்குகின்றனர். கடையில் வாங்கும் கடலைமாவுக்கு பில் உண்டு. மாவு மெஷினில் வாங்கும் கடலைமாவுக்கு பில் கிடையாது! :( ஒரு கிலோ கடலைப்பருப்பு வாங்கி அரைத்தால் ஒருகிலோவுக்குக் கொஞ்சம் கூடவே கடலைமாவு வரும்.

      Delete
  8. GST grand southern trunk இல்லையா?

    ReplyDelete
  9. நல்ல பதிவு மட்டுமல்ல, காலத்திற்கு ஏற்ற பதிவும் கூட. என்னவோ ஜி.எஸ்.டி.யால் தங்கள் வாழ்க்கைத் தரமே தாழ்ந்து விட்டது போல வெற்றுக் கூச்சல் போட்டு தினம் ஒரு மெஸ்சேஜ் வாட்ஸாப்பில் வருகிறது. உங்களின் இந்த பதிவை பகிரலாமா?

    ReplyDelete
    Replies
    1. தாராளமாய்ப் பகிரலாம். இதுவே நான் எழுதியது அல்ல. நான் புரிந்து கொண்டதை எழுதி வைத்திருக்கேன். ஆனால் அதை வெளியிடவில்லை. :) நீங்க சொல்வது போல் தான் எல்லோரும் ஜிஎஸ்டியால் வாழ்க்கையே அழிந்து விட்டாற்போல் பேசுகிறார்கள்.

      20 வருஷத்துக்கும் மேலாகக் கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இப்போது தான் எதிர்ப்புக் குரல் கிளம்பி வலுத்து வருகிறது! என்ன செய்ய முடியும்! மக்களாக மனம் மாறினால் தான் உண்டு.

      Delete
  10. இருபது லட்சத்துக்கு உட்பட்டு வணிகம் செய்கிறார்களா என்பதை வரிவசூல் செய்யும் அதிகாரிகள் தானே முடிவு செய்வார்கள் அதன் விளைவாக ஊழல் அதிகரிக்கலாம்தானே மே பி சின்ன அதிகாரிகள் மத்தியில் நல்லதொரு பொறுப்பு துறப்பு பதிவு

    ReplyDelete
    Replies
    1. வணிகம் செய்ய அனுமதி பெறும்போதே அதிகாரிகளிடம் தங்கள் வருட வியாபாரம், கணக்கு, வழக்கு போன்ற விபரங்களை உத்தேசமாக இவ்வளவு இருக்கும் என்று சொல்லித் தான் அனுமதி பெற முடியும். அப்போது அதிகாரிகளிடம் 20 லட்சம் டர்ன் ஓவர் என்று சொல்லி விட்டு அதற்குக் கூட இருந்தால் கட்டாயம் கணக்குக் காட்ட வேண்டும். காட்டவில்லை எனில் அது அந்த வணிகர்/அதிகாரி ஆகியோர் சம்பந்தப்பட்டது! :) நேர்மையான முறையில் வணிகம் நடைபெறத் தான் இம்மாதிரி வரிகள் எல்லாம் கொண்டு வருவதே! அதிலும் ஊழல் என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்? சாலையோரத் தேநீர்க்கடைகள் எல்லாமும் தேநீர் விலையை ஏற்றி விட்டார்கள்! அவங்க எல்லோரும் எந்த வரி கட்டறாங்க? :(

      Delete
    2. வருடத்திற்கு 20 லட்சம் விற்று வரவு உள்ள வியாபாரிகளுக்கு GST கிடையாது என்று சுலபமாக சொல்லி விட்டீர்கள். ஆனால் நிதர்சனம் என்பது வேறு, 20 லட்சம் மட்டும் விற்று வரவு உள்ளவர்கள் பிழைப்பு பாடுதான். எப்படி என்று பார்ப்போம்.

      20 லட்சம் என்பது ஒரு நாள் விற்று வரவு 6000 எனக்கொள்ளலாம். சிறு குறு வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பவர்கள். அவர்களது லாபம் என்பது சாதாரணமாக 10 சதவீதம் மட்டுமே. ஆக 6000த்தில் 10 சதவீதம் 600 ரூபாய் ஆகிறது.

      இந்த 600 ரூபாயில் கடை வாடகை, மின்சாரம் மற்றும் உபரி செலவுகள், ஒரு வேலையாள், பொருள் நஷ்டம், லஞ்சம் என்று பல செலவுகளைக் கவனிக்க வேண்டும்.

      ​ஆக ​சிறு குறு வியாபாரிகளும் GSTயில் இருந்து தப்பிக்க முடியாது. அதாவது அவர்களுக்கு கம்ப்யூட்டர் ரிட்டர்ன் போன்ற செலவுகள் கூடுகிறது. ஆக இவை எல்லாம் அவர்களது லாப விகிதத்தில் தான் ஏற்றவேண்டும். அப்போது விலைவாசி ஏறுவது என்பது தவிர்க்கமுடியாதது.

      --
      Jayakumar

      Delete
    3. உங்கள் கருத்துக்கு நன்றி ஜேகே அண்ணா!

      Delete