வந்துட்டேன். இரண்டு நாட்கள் கோயில் பிரார்த்தனைகள் நிறைவேற்றம். நேத்திக்கு மத்தியானமே வந்தாச்சு. என்றாலும் உடனடியாகப் பதிவு போட முடியவில்லை. அதோடு இம்முறை இரண்டு நாட்களும் கோயில் பிரசாதமே சாப்பாடாக ஆகி விட்டது. ஆகவே வயிறும் கெடவில்லை. பிரசாதம் சாப்பிடும்போது நெல்லைத் தமிழரைத் தான் நினைச்சுண்டேன். அதுக்காக மத்தவங்க நினைப்பு இல்லைனு எல்லாம் இல்லை. பிரசாதம்னு ஆவலோடு கேட்பவர் அவர் ஒருத்தர் தானே! அதான்! நாளைக்குக் கிச்சாப்பயலுக்குப் பிறந்த நாள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கணும். ஆகவே இரண்டு நாட்களும் வேலை மும்முரம். திங்கள், செவ்வாய் கொஞ்சம் வருவேன். அப்புறமா உறவினர் வருகை! அதுக்கப்புறமாக் கொஞ்சம் ஓய்வு. அப்புறமா ஆவணி அவிட்டம், நம்ம நண்பரோட பிறந்த நாள்னு வரிசையா வருது. ஆகவே கொஞ்ச நாட்கள் ஒரே ஓட்டம், பிடியாகத் தான் இருக்கும்.
நடுவில் இரண்டு புத்தகம் படித்தேன்.இஃகி, இஃகி, புதுசெல்லாம் இல்லைங்க! ஏற்கெனவே படிச்சது தான். மீள் வாசிப்பு. சித்தப்பாவின் பதினெட்டாவது அக்ஷக்கோடும், தேவனின் சிஐடி சந்துருவும். நடுவில் கிடைக்கும் நேரத்தில் எடுத்த படங்களையும் போயிட்டு வந்த விபரங்களையும் பகிர்கிறேன். இப்போ டாட்டா!
நடுவில் இரண்டு புத்தகம் படித்தேன்.இஃகி, இஃகி, புதுசெல்லாம் இல்லைங்க! ஏற்கெனவே படிச்சது தான். மீள் வாசிப்பு. சித்தப்பாவின் பதினெட்டாவது அக்ஷக்கோடும், தேவனின் சிஐடி சந்துருவும். நடுவில் கிடைக்கும் நேரத்தில் எடுத்த படங்களையும் போயிட்டு வந்த விபரங்களையும் பகிர்கிறேன். இப்போ டாட்டா!
//அதுக்காக மத்தவங்க நினைப்பு இல்லைனு எல்லாம் இல்லை.//
ReplyDeletegrrrrrrrrr.....
வாங்க ஶ்ரீராம், பிரசாதம்னாலே நெ.த. தான் நினைவில் வரார்! ஹிஹிஹி!
Deleteஅதேதான் சொல்ல வந்தேன் ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
Deleteஅப்படினா கீதாக்கா என் கருத்தை சரியா படிக்கலை இம்பொஸிஷன் கொடுத்துட வேண்டியதுதான்....நானும் எந்தக் கோயிலுக்குப்போனாலும் முதல்ல வேவு பார்ப்பது கோயில்ல பிரசாதம் உண்டானுதான் ஹா ஹா ஹா இதை எபி ல சொன்ன நினைவும் உண்டு....
கீதா
பிரசாதம்னா பெருமாள் கோயில்களில் மட்டுமே கொடுப்பாங்க எனக்குத் தெரிந்தவரை! மற்றக் கோயில்களில் பிரசாத ஸ்டால்களில் தான் வாங்கணும். அதெல்லாம் மடப்பள்ளியில் இருந்து வருபவை அல்ல. டென்டர் கொடுத்து கான்ட்ராக்ட் தேர்வு செய்து செய்யச் சொல்லிக் கொண்டு வந்து விற்பவை! அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவது. பிரசாதமே வேறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
Deleteசி ஐ டி சந்துரு ஓவியம் கோபுலுதானே? எப்போ........தோ வாசித்தது.. ம்ம்... தேடவேண்டும்!
ReplyDeleteஆமாம், கோபுலு தான்! நானும் முதல் முதல்லே அந்தக் காலத்து பைன்டிங் தான் சித்தப்பா வீட்டில் படிச்சேன். படிக்கும்போது என்னோட முகபாவங்களைப் பார்த்துச் சித்தப்பா ரசிப்பார்! :)))
Deleteதேவனின் சிஐடி சந்துருவும்// நானும் வாசித்ததுண்டு எப்போ...தோ (ஸ்ராரமின் ஸ்டைலில்!!!) துப்பறியும் சாம்புவும் வாசித்ததுண்டு...கொஞ்சம்..
Deleteகீதா
கணக்கே தெரியாது, எத்தனை முறை வாசிப்பு என்பது! முதல்லே சிஐடி சந்துரு படிச்சது அறுபதுகளிலே. அதன் பின்னர் பல முறை வாசிச்சிருக்கேன். அநேகமா வருஷத்துக்கு ரெண்டு முறைனு (குறைந்த பட்சம்) வைச்சுக்கலாம்.
Deleteபண்டிகைக்காலங்கள்... ம்ம்ம்... மெல்ல வாங்க.
ReplyDeleteஆமாம், விழாக்காலம்!
Deleteஓ.. இப்போ ஶ்ரீஜெயந்திக்கான வேலைகளை ஆரம்பிக்கணைமே... அதைத் தொடர்ந்து சீடை, சீயன் போன்ற இடுகைகள் வருமோ?
ReplyDeleteகோவில் டிரிப் போயிருந்தீர்களா?
வாங்க நெ.த. கோவில் ட்ரிப்பெல்லாம் இல்லை. ஏற்கெனவே போன எங்க ஊர்க் கோயில்கள் தான். ஒவ்வொரு கோயிலாப் பிரார்த்தனை நிறைவேத்திண்டு வரோம்.
Deleteஅடடே இடையிடையே ட்ரெயிலர் ஸூப்பர்.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, நீங்களும் இடையிடையே ட்ரெயிலர் காட்டினாப்போல் நாங்களுக் காட்டினோமுல்ல! :)
Deleteபிறந்தநாளை அசத்துங்க அம்மா...
ReplyDeleteவாங்க டிடி, அநேகமா எல்லாம் பண்ணி முடிச்சாச்சு! சாயந்திரம் பால் வந்ததும் நிவேதனம் தான்! ராத்திரியெல்லாம் முழிச்சுக்கறதில்லை! :)
Deleteஉங்களால் வராமல் இருக்க முடியுமா
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, அதிகம் வேலை இருந்தால் வர முடியாது! வராமலும் இருந்திருக்கேனே!
Deleteபண்டிகைகள், விருந்தினர் வருகை - எஞ்சாய். முடிந்த போது பதிவுலகம் பக்கம் வாங்க.
ReplyDeleteவாங்க வெங்கட், அடாது விருந்தினர் வந்தாலும் விடாது எப்படியேனும் இடைவெளியில் எட்டிப் பார்ப்போமுல்ல! :)
Deleteஎங்களுக்கும் பிரசாதம் பிடிக்குமாக்கும்
ReplyDeleteஅட ராஜி, பிரசாதம் பிடிக்காதவங்க யாரு! :)
Deleteமெதுவா மெது வடையோடு, மெது நடையோடு வாங்க...இஸ்கி இஸ்கி ..
ReplyDeleteவாங்க அனுராதா, மெதுவடை தான் இன்னிக்கு! இனிமேல் தான் பண்ணணும். மத்ததெல்லாம் முடிச்சுட்டுக் கோலமும் போட்டு வைச்சுட்டேன்.
Deleteஅது இஸ்கி, இஸ்கி இல்லையாக்கும். இஃகி, இஃகி! நண்பர் ஒருத்தர் தனித்தமிழ் ஆர்வலர். ஹிஹிஹினு போடமாட்டாராம். இஃகி, இஃகினு போடுவார். அவரைக் கேலி செய்யப் போட ஆரம்பிச்சது! இப்போ என்னோட மடிக்கணினி புதுசிலே சில சமயம் சுரதா மூலம் தட்டச்சினால் "ஹி" சரியா வராது. அப்போ இஃகி, இஃகி போடுவேன்.!:)))))
வணக்கம் சகோதரி
ReplyDeleteவாங்க.. ஊருக்கு சென்று திரும்பியாகி விட்டதா? கிச்சா பயலுக்கு என்றவுடன் யாரோ சொந்தம் என நினைத்து விட்டேன். அந்த பயலுக்கு இன்று நாங்கள் கொண்டாடிய பின் நாளை உங்கள இல்லம் வருவான் என பிறகு புரிந்தது. ஆடி முழுக்க விஷேடங்கள்தான். எல்லாவற்றையும் நன்றாக முடித்து விட்டு வாருங்கள். நடுநடுவில் இப்படி சந்திக்கலாம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா! ஹாஹாஹா! கிச்சாப்பயல் எல்லோருக்கும் சொந்தமாச்சே! எங்களுக்கும் இன்னிக்குத் தான் கொண்டாட்டம். இது நேத்துப் போட்ட பதிவு. நீங்க இன்னிக்குத் தான் பார்க்கிறதாலே எங்களுக்கு நாளைக்குனு நினைச்சுட்டீங்க! :))))
Deleteஇவ்வளவு வேலைப்பளுவிலும் எங்களை(ப்ளாக்)யும் எட்டிப்பார்க்கும் உங்கள் பாசத்திற்கு வணக்கம். ஶ்ரீ ஜெயந்தி ஸ்பெஷல் என்ன?
ReplyDeleteவாங்க பானுமதி, முன்னெல்லாம் கிருஷ்ணன் பிறப்புக்குத் திரட்டுப் பால், கர்ச்சிக்காய்(இது பொட்டுக்கடலை போட்டுச் செய்யும் சோமாசி இல்லை, உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். அரிசி மாவில் கொழுக்கட்டை மாவு போல் கிளறிக் கொட்டிக் கொண்டு பூரணத்தை உள்ளே வைச்சுப் பொரிப்பது!) எல்லாம் பண்ணுவேன் . இப்போப் பேருக்கு வெல்லச் சீடையும், பாயசமும் மட்டும் தான். அப்பம் எல்லாம் கூடப் பண்ணுவதில்லை! வடை உண்டு! தித்திப்பு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்குக் குறைக்க வேண்டி இருக்கு! :(
Delete