எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 19, 2018

மைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை! மீள் பதிவில் சில சேர்க்கைகள்!

எங்கள் ஊரான பரவாக்கரையின் பெருமாள் கோயில் பற்றிய பதிவுகள் போட்டிருக்கின்றேன். அந்தக் கோயில் எப்போது கட்டியது என்று சொல்ல முடியவில்லை என்றாலும் 300-ல் இருந்து 500 வருடங்களுக்கு முற்பட்டதாய் இருக்கலாம். ஆனால் அந்தக் கோயிலின் கட்டுமானத்திற்கு உட்பட்ட கற்களில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப் பட்டன. அவற்றைக் கல்வெட்டுப் படிப்பவர் மூலம் ஆராய வேண்டி ஒருவரை அனுப்புமாறு நண்பர் மரபூர் சந்திரசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கு நேரம் இப்போது தான் வந்தது.புதுசாய்ப் படிக்கிறவங்களுக்காக அந்தக் கோயில் பற்றிய விபரங்கள்
 இங்கே மற்றும்
 இங்கே பார்க்கலாம். அந்தக் கோயிலைத் திருப்பணி செய்து மீண்டும் நித்தியப் படி வழிபாடுகள் நடக்கச் செய்து வந்த முயற்சிகள் ஓரளவு பலனை அளித்து வருகின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். கோயிலில் இருக்கும் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப் பட்ட கற்களில் உள்ள எழுத்துக்களை ஆராயR.E.A.C.H. Foundation உறுப்பினர் ஆன சந்திரசேகரன், அதன் அமைப்பாளர் ஆன சத்திய மூர்த்தியிடம் சொல்லி ஆவன செய்ததின் மூலம் சென்ற ஞாயிறு அன்று திரு சத்தியமூர்த்தி அவர்கள், தகுந்த வல்லுனர்களோடு கூடிய குழுவை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் ரீச் ஃபவுண்டேஷன் உறுப்பினர் ஆன திரு லட்சுமிநாராயணன் மூலம் பரவாக்கரை சென்று மேற்சொன்ன கோயிலைப் பார்வை இட்டிருக்கின்றார். கல்வெட்டுக்களின் வார்த்தைகள் தமிழே என்றாலும் அது பல்லவர் காலத்துக்கு முந்தைய எழுத்தாய் இருக்கலாமோ என ஒரு கருத்து திரு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. அது பற்றி மேலும் ஆய்வு நடப்பதால் பின்னர் அது பற்றித் தெளிவான கருத்து வரும். பின்னர் அது குறித்துத் தெரியவில்லை. இதை எழுதியது 2008 ஆம் ஆண்டில். அதன் பின்னர் பெருமாள் கோயில் கட்டிக் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டில் செய்விக்கப்பட்டது.

இப்போது தெரியவேண்டிய முக்கியமான விஷயம் அந்தக் கோயில் கட்டக் கொண்டு வரப்பட்ட கற்கள் அனைத்தும், பெருமாள் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் முன்னொரு காலத்தில் இருந்ததாய்ச் சொல்லப் படும் ஈசனின் மாடக்கோயிலின் கற்கள் என்றும் சொல்லப் படுகின்றது. அந்த மாடக் கோயில் இன்று இல்லை. எனினும் இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் மறைந்த திரு செளந்தரராஜன் அவர்கள் (ஓய்வு), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ், பங்களூரு, சொல்லுவது, அந்த மாடக் கோயில், கோச்செங்கணான் காலத்திற்கும் முன்னால் திருமூல நாயனாரால் கட்டப் பட்டது என்று சொல்கின்றார். திருமூலரைப் பின்பற்றி, சைவ யோக மரபைப் பின்பற்றிய கோச்செங்கணான் பின்னர் எழுபது மாடக் கோயில்களைக் கட்டி இருக்கின்றான் என்றும் சொல்லுகின்றார். திருமூலர் தான் இந்தப் பரவாக்கரையில் மாடக் கோயில்கள் இரண்டை ஈசனுக்கு எழுப்பி இருக்கின்றார் என்றும் சொல்லுகின்றார். ஒன்று அருள்மிகு மரகதவல்லி உடனுறை மரகத மாணிக்கேஸ்வரர் கோயில் (சிதிலமாகிப் போன இந்தக் கோயில் 4,5 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பணி எடுக்கப் பட்டு, கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்த பழைய விக்கிரஹங்கள் கிடைக்கவில்லை. புதியதாகவே வைக்கப் பட்டுள்ளது.) இதைத் தவிர, இந்தப் பெருமாள் கோயிலின் மூலவர் ஆன வேங்கடநாதனையும் திருமூலர் பாடி இருப்பதாய்ச் சொல்லும் திரு செளந்தரராஜன், அடுத்துச் சொல்லுவது, பெருமாள் கோயிலின் கிழக்கே இருந்த இந்த மாடக் கோயிலின் கற்களைக் கொண்டே பெருமாள் கோயிலும், மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வு.


பெருமாள் கோயில் நுழைவாயில் கும்பாபிஷேஹத்தன்று. ஜூன் 2011 /17,18 தேதிகளில்!



பெருமாள் கோயில் விமானம்!



அஷ்டபந்தனம் இடிக்கையில். நான் முதல்லேயே இடிச்சுட்டேன். அப்புறமாப் படம் எடுக்க முடியாதே! :)



இந்த ஆஞ்சிக்குத் தான் கொஞ்ச நாட்கள் முன்னர் வடைமாலை சார்த்தினோம்.



அஷ்டபந்தனம் சார்த்திய பின்னர் பெருமாளைப்  புனர் பிரதிஷ்டை செய்ததும் பட்டாசாரியார் அனுமதியுடன் எடுத்த படம்!

அந்தக் கற்களே பெருமாள் கோயில் திரும்பப் புனருத்தாரணம் செய்யப்படும்போது பயன்பட்டனவா என்பது தெரியவில்லை. கல்வெட்டுக்கள் எல்லாம் புதிய பூச்சில் அழிந்து விட்டன. நாங்கள் அப்போ இருந்தது சென்னையில். ஆகையால் அடிக்கடி போய்ப் பார்க்க முடியவில்லை. இதை எல்லாம் சொல்லியும் ஊர் மக்களுக்கு இதன் அருமை தெரியவில்லை. போகட்டும். லிங்கத்தடி பற்றி இப்போது பார்க்கப் போகிறோம். இந்த லிங்கத்தடிக் கோயில் மிகப் பழமையானதாக இருக்கவேண்டும் என்கின்றார் மறைந்த திரு சௌந்தரராஜன் அவர்கள்.  இப்போ முக்கியமாச் சொல்ல வேண்டியது கட்டிக் கொண்டிருக்கும் சிவன் கோயில் பற்றிய புராதனத் தகவல்கள்! இந்தப் பதிவை அதற்காக ஆரம்பித்துவிட்டுப் படங்களைப் பார்த்ததும் நினைவுகள் மீண்டும் மலர்ந்தன!

 திரு செளந்தரராஜன் அவர்கள் மண்ணில் புதையுண்டு  மறைந்து போன இந்த  ஞானானந்தேஸ்வரர் ஆலயத்தின், மிக மிகப் பழமையான மரகத லிங்கத்தை ஆய்வு செய்து, அந்த லிங்கம் திருமூலரால் அன்றி வேறு யாராலும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்க முடியாது என்றும் சொல்லுகின்றார். இந்தப் பரவாக்கரையே திருமூலரால் வண்தில்லை என அழைக்கப் பட்டதாயும், இந்த வண்தில்லையின் இரு சிவபதிகளும் திருமூலரால் கட்டப் பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றார். ஞானானந்தேஸ்வரர் ஆலயம் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இன்று இல்லை. அங்கே இப்போது நெல் வயல்களே காணப் படுகின்றன. ஆனால் மிக மிகப் பழமை வாய்ந்த அந்த லிங்கம் இருக்கும் இடத்தை "லிங்கத்தடி" என உள்ளூர் மக்கள் அழைப்பதோடு, ஊரில் மழை பெய்யவில்லை என்றாலோ, அல்லது வேறு ஏதும் வேண்டுகோளை முன் வைத்தோ, லிங்கத்தடி லிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்துவது உண்டு என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் இன்று வரையில் அந்த மரகதலிங்கனார் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கிக் கொண்டும் இருக்கின்றார்.


படம் இணையத்தில் இருந்து!

இவருடன் உடனுறை அம்மையைக் காணவில்லை. ஆனால் துர்கை கிடைத்திருக்கின்றாள். சாஸ்தா, பிரம்மா, மற்றும் சப்த கன்னியரில் ஒருவர், மேலும் அதி முக்கியமாய் ஜேஷ்டா தேவி கிடைத்திருக்கின்றாள். இந்த ஜேஷ்டா தேவியின் சிலை மிக, மிக அழகு வாய்ந்ததாய் இருக்கின்றது. இங்கே உள்ள படத்தில் காணப்படும் விசலூர் ஜேஷ்டா தேவியைப் பெருமளவு ஒத்து இருக்கும் இந்தச் சிலையும், கூட இருக்கும் மற்றச் சிலைகளுமே பல்லவர் காலத்துக்கு முந்தி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகின்றது. ஜேஷ்டா தேவி வழிபாடு ராஜராஜ சோழன் காலம் வரைக்கும் இருந்து வந்ததாயும், பின்னர் முற்றிலும் அழிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. பலரும் நினைக்கும் வண்ணம், ஜேஷ்டா தேவி என்பவள், மூதேவி இல்லை என்றும் இந்த மூதேவி என்ற வார்த்தையே பின்னர் வந்தது என்றும் திரு செளந்தரராஜன் சொல்லுகின்றார். இந்த ஜேஷ்டா தேவியின் தாத்பரியத்தை அவர் எங்களுக்கு விளக்கினார். இப்போது வேங்கடநாதனுக்குக் கோயில் கட்டிக் கொள்ளத் தன் கோயிலின் கற்களைக் கொடுத்து உதவிய ஈசனுக்கும் புதியதாய்க் கோயில் எழுப்பப் பெரு முயற்சிகள் செய்து வருகின்றார் திரு செளந்தரராஜன் அவர்கள். அப்போதே 84 வயதான அவர் பெரும் ஆவலுடன் இந்தக் கோயிலுக்கான அஸ்திவாரம் எழுப்பப் படும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இது பற்றிய விபரமான தகவல்கள் இன்னும் பல இருக்கின்றன். ஒரே பதிவில் போட முடியாது. கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவரும்.

இப்போதைய படம். நேற்றைய பதிவில் இருந்து!





ஜேஷ்டா தேவி பற்றி சமீபத்தில் கூடப் படிச்சேன். இவளை மூதேவி என அனைவரும் சொல்வது தவறு என்கின்றனர். மூத்த தேவி என்பதே மூதேவி என மருவி அது ஓர் வசைச்சொல்லாக ஆகி இருக்குமோ என்பது என் அனுமானம்.


39 comments:

  1. இது தொடர் பதிவுபோல் இருக்கிறதே.... கோவில் மூலவர் அருமை. நிறைய பழைய கோவில்களை நாம் தொலைத்துவிட்டோம் இல்லை சரியாகப் பராமரிக்கவில்லை.

    லிங்கம் மிகப் பெரியதாக இருக்கு.

    நீங்கள் வடை சார்த்தின ஆஞ்சநேயர் ரொம்ப சிறிய உருவமா இருக்கு. 108 வடை செய்தீர்களா இல்லை 28தானா?

    அஷ்டபந்தனத்துக்கு நீங்களும் இடித்தீர்களா? நல் வாய்ப்பு.

    ReplyDelete
    Replies
    1. பரவாக்கரை புதிய சிவன் கோயில் குறித்த தொடர்பதிவுக்குத் தான் சில பத்திகளைப் பழைய பதிவிலிருந்து எடுத்து இணைத்திருக்கிறேன் நெ.த. அதான் மீள் பதிவுனு போட்டேன். நீங்க படிச்சிருக்க முடியாது! :))) லிங்கம் நல்ல பெரிதாகத் தான் இருக்கிறது. ஆஞ்சிக்கு 108 வடை மாலை சார்த்தினேன்னு அன்னிக்கே சொல்லி இருந்தேனே! அஷ்டபந்தனத்துக்குப் பெண்களைத் தான் இடிக்கச் சொல்வார்கள். நான் அம்பத்தூரில் கூட சில, பல கோயில்களில் அஷ்டபந்தனத்துக்கு இடித்திருக்கேன். கொடுத்து வைக்கணுமே!

      Delete
    2. பெருமாள் கோயில் மூலவரும் சரி, தேவியரும் சரி அழகாக இருப்பார்கள். அலங்காரமும் அதன் பரம்பரை பட்டாசாரியார் மிக அழகாய்ச் செய்வார். அவர் இப்போ பிசி! ஆகையால் அவருடைய உதவிக்கரங்கள் இப்போது செய்து வருகின்றனர்.

      Delete
    3. இப்போதான் லிங்கம் படத்தை ஒழுங்காகப் பார்த்தேன். இடுகைக்குச் சம்பந்தமில்லாதது. வேறு புராதான லிங்கம் படம் இல்லையா? இது ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஸ்தாபித்த வெள்ளியங்கிரி லிங்கமாச்சே

      Delete
  2. இதைப் படிக்கும்போது கல்வெட்டுகள் பற்றி யாரும் அறுதி யிட்டுச் சொல்ல வில்லை இருந்தாலும்முயற்சி நல்லதே பதிவில் தெரியப்படுத்துவது பாராட்டுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, தொடர்ந்து கல்வெட்டு ஆய்வுகளைச் செய்ய முடியாமல் அவை மறைக்கப்பட்டு விட்டன. அல்லது கல்வெட்டுகள் அகற்றப்பட்டு விட்டன! எதுனு தெரியலை! கேட்டால் யாருக்கும் சொல்லத் தெரியலை! :(

      Delete
  3. அஷ்ட பந்தனம் எனக்கு சரியாகத் தெரியாது விளக்கம்ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. இயன்றவரை சொல்லுகிறேன் ஐயா!

      Delete
    2. https://materialdesigns-wordpress-com.cdn.ampproject.org/v/s/materialdesigns.wordpress.com/2010/07/07/ashtabandham-the-divine-adhesive/amp/?amp_js_v=a2&amp_gsa=1&usqp=mq331AQECAFYAQ%3D%3D#referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fmaterialdesigns.wordpress.com%2F2010%2F07%2F07%2Fashtabandham-the-divine-adhesive%2F

      Delete
    3. https://tinyurl.com/y7zgcnbk உங்களோட நீளமான சுட்டியைச் சிறியதாக்கிக் கொடுத்திருக்கேன் ஜேகே.அண்ணா. ஜிஎம்பிசார், உங்களுக்கு இந்தச் சுட்டி உதவலாம்.

      Delete
  4. ஆய்வும் தகவல்களும் அருமை... தொடரட்டும்...

    தங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. ஆய்வுகள் தொடர்ந்தால் இன்னும் நல்லது!

      Delete
  5. புராண வரலாற்றை இயன்றவரை வெளியிடுங்கள் இதுவே நாளைய சந்ததிகளுக்கு ஆதாரமாகவும் இருக்கலாம் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி. நான் இணையத்தில் எழுத ஆரம்பித்ததின் காரணமே இது தான்! ஆரம்பத்தில் கொஞ்சம் மொக்கையாகத் தான் எழுத ஆரம்பித்தேன். நடு நடுவில் இம்மாதிரிக்கதைகளைச் சொல்லி மக்கள் விரும்புகிறார்களா எனப் பார்த்துக் கொண்டேன். வாசகர் வட்டம் ஸ்திரம் ஆனதும் வேலையை ஆரம்பித்தேன்.

      Delete
  6. மாடக் கோவில் எல்லாம் கோச்செங்கணான் தான் கட்டினான் என்பார்கள். அதற்கு கதையும் உண்டு யானைக்கு பயந்து மாடக்கோயில் அமைத்தான் என்று. முன் ஜென்ம கதை திருவானைக்கா கோயிலில் கதையை விளக்கும் சிலை இருக்குமே!
    திருமூலரும் கட்டி இருக்கிறாரா? ஆய்வுகளில் புது தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது.
    இணையத்திலிருந்து ஈசா கோயில் சிவலிங்கம் ஏன் போட்டு இருக்கிறீர்கள்.?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோமதி, எனக்கும் அப்படித் தான் தெரியும். ஆனால் இவர் இப்படிச் சொன்னது அப்போதே விபரம் தெரிந்தவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றே கேள்விப் பட்டேன். என்றாலும் இந்தக் கோயில் பழமையானது என்பது சப்தகன்னியர் சிலைகள் மூலமும் ஜ்யேஷ்டா தேவி மூலமும் அறிய முடிகிறது. ஆகவே இப்படியும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.

      Delete
    2. ஓ, அது ஈஷா கோயில் சிவலிங்கமா? இஃகி, இஃகி, எனக்குத் தெரியாது. நன்றாக இருந்ததால் எடுத்தேன். எங்கே இருந்து என்பதைப் பார்க்கவில்லை!

      Delete
  7. நானும் மாயவரத்தில் நிறைய கோவிலுக்கு மருந்து இடித்து இருக்கிறேன்.
    மருந்து சாத்துவது என்று சொல்வார்கள் எட்டுவித மருந்து கலவை சேர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அஷ்டபந்தனம் என்றாலே அதானே அர்த்தம்!

      Delete
  8. மைத்துனன் உதவி இருந்தால் மலையேறி பிழைக்கலாம் என்பது இதுதானோ?
    மைத்துனர் மாப்பிள்ளைக்கு வீடு கட்டி கொடுத்த கதை சுவாரசியம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த ஊரைப் பற்றி இன்னும் சில பழைய கதைகள் எங்க மாமனார் குடும்ப புரோகிதர் சொல்லி இருக்கார். நினைவுகளில் தேடணும்!

      Delete
  9. இணையப்படம் த்யானலிங்கேஸ்வரரோ. புகழ்பெற்ற வாசுதேவ்ஜி கோவில்.

    நீங்கள் கொடுத்திருக்கும் உங்க ஊர் லிங்கம் நல்ல அழகு. முயற்சிகள் நல்ல படி நடக்கட்டும்.

    அஷ்ட ஞ்தனத்துக்கு நவரத்னக் கற்களும் வைப்பார்கள்
    என்று எனக்குத் தெரிந்தவர் சொன்னார். சில மூலிகைகளும் சேர்க்கப்படும்
    என்றும் சொன்னார்.
    நல்ல காரியங்களில் நீங்கள் சேர்ந்து கொள்வது
    பரம்பரைக்கே நல்லது செய்யும். வாழ்த்துகள் கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. தெரியலை ரேவதி, கிடைச்சது போட்டேன்! :)))) நவரத்னக் கற்களும், தங்கம், வெள்ளி போன்றவையும் போட்டார்கள்.

      Delete
  10. கோபுரத்தை விமானம் என்றும் சொல்வார்களோ?

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, கருவறைக்கு மேலே இருப்பது விமானம். நுழைவாயிலில் பெரிதாக இருந்தால் கோபுரம். அந்தக் காலத்துச் சோழ நாட்டுக் கோயில்களில் ராஜகோபுரங்கள் இருந்ததில்லை. பெரும்பாலும் கருவறைக்கு மேலுள்ள விமானத்தையே அப்படிப் பெரிதாகக் கட்டி விடுவார்கள். தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்றவை போல! க்ருவறை விமானங்களே அங்கே எல்லாம் கோபுரங்கள் போல் தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் வந்த ராஜாக்கள் அதன் பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், நாயக்க அரசர்கள் ஆகியோர் தான் ராஜகோபுரம் கட்டாயமாய்க் கட்டும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் தெற்கே ராஜ கோபுரம் கிடையாது என்Pஅதுகள் வரை. பாதி கோபுரம் தான் இருக்கும். ராயகோபுரம் என்றும் மொட்டை கோபுரம் என்றும் சொல்வார்கள். பின்னர் எண்பதுகளில் தான் இப்போ இருக்கும் தெர்கு கோபுரம் கட்டிக் கும்பாபிஷேகம் ஆனது. மதுரையில் புது மண்டபத்துக்குப் பின்னால் ஒரு ராய கோபுரம் இருந்தது. இப்போவும் இருக்கும்னு நினைக்கிறேன். அந்தப் பக்கம் கூட்டம் அதிகமாக இருப்பதால் போகவே இல்லை.

      Delete
  11. நான் அவசரப்பட்டு நினைச்சுட்டேன் இடிப்பது கீசாக்கா.. இவ்ளோ மெல்லிசா இருந்திருக்கிறாவே முன்பு என கர்ர்ர்ர்:)

    ReplyDelete
    Replies
    1. இஃகி, இஃகி, அதிரடி, நான் மெலிசா இருக்கும் படத்தை என்னோட பழைய பதிவுகளில் பார்க்கலாம். தேடிப் பார்த்துக்குங்க! :))))))

      Delete
  12. ஆஆஆ மை சிவலிங்கம்...

    கீசாக்காவை இனி கோயில் பிரசங்கராக நியமிச்சிடலாம்:)

    ReplyDelete
    Replies
    1. இஃகி, இஃகி, அதிரடி, அந்தப் பட்டம் எல்லாம் வந்து எத்தனையோ வருஷம் ஆச்சு! :)

      Delete
  13. நான் சொந்த கதைன்னு நினைச்சேன். நமக்கு சொந்தமானவங்க கதையால்ல இருக்கு. நல்லதொரு வாய்ப்பும்மா உங்களுக்கு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி! இவங்களும் சொந்தம் தானே!

      Delete
  14. கல்வெட்டுகள் பற்றி செய்தி சுவாரஸ்யம். திருமூலரால் பிரதிஷ்டை செய்யப்பட மரகத லிங்கமா? சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், கருத்துக்கு நன்றி.

      Delete
  15. தகவல்கள் சிறப்பு. கோவில் கல்வெட்டுகள் படிக்க சரியான ஆட்கள் குறைந்து விட்டார்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கிரந்த எழுத்துக்கள் இருந்தால் ஒரு மாதிரிப் படிப்பேன். ஆனால் இந்த வட்டெழுத்துக்கள் கொஞ்சம் குழப்பும். மின் தமிழ்க் குழுமத்தில் துரை.சுந்தரம் என்பவர் சொல்லிக் கொடுத்து வந்தார். ஆனால் என்னால் எல்லாவற்றையும் பார்த்துக் கற்க முடியவில்லை. :(

      Delete
    2. எனக்குத் தெரிந்து ஒரே கல்வெட்டைத் திரு நாகசாமி ஒரு மாதிரியாகவும் திரு ஐராவதம் மகாதேவன் ஒரு மாதிரியாகவும் படித்துப் பொருள் சொல்லி இருக்கின்றனர். இதில் எதை எடுத்துப்பது? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  16. வணக்கம் சகோதரி

    ஒரளவு விரிவாக பரவாக்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டியிலும் சென்று படித்தேன். அந்த சிவன் கோவிலும் நல்லபடியாக கட்டி கும்பாபிஷேகம் முடித்தால் நன்றாக இருக்கும். தங்கள் அனைவரின் முயற்சிகளும் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். படங்கள் நன்றாக உள்ளன. வயல் வெளியில் சிவன் சிலை கிடைத்த போது கூடவே அம்பாளின் சிலையும் கிடைக்கவில்லையோ? ஜ்யேஷ்டா தேவி பற்றிய விளக்கங்கள் சிறப்பு. கோவில்கள் பற்றிய ஆர்வங்கள் தங்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. அதுவும் ஆண்டவன் அனுக்கிரகந்தான்.புராதன கல்வெட்டு செய்திகளும், அஸ்டபந்தனம் முறைகளும் படிக்க மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.தங்கள் பதிவுகளே படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது அடுத்ததையும் படிக்க ஆர்வமாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா! சிவலிங்கம் மட்டுமே கிடைத்துள்ளது. அம்பிகை கிடைக்கவில்லை. சப்தகன்னியர், ஜ்யேஷ்டா தேவி இருந்தால் நவகிரஹ சந்நிதி இருக்காது என்கின்றனர் சிலர். சிலர் முன் காலத்திய சிவன் கோயில் எதிலுமே நவகிரஹ சந்நிதி கிடையாது எனவும் எட்டு, பத்தாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே நவகிரஹ சந்நிதியுடன் கூடிய சிவன் கோயில் அமைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். இது பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். தகவல்கள் கிடைத்தால் பகிர்கிறேன். நன்றி. அநேகமாய் சிவன் கோயில் கார்த்திகை மாதம் கும்பாபிஷேஹம் செய்யப்படலாம்! இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.

      Delete
  17. படங்கள் அழகாக இருக்கு கீதாக்கா. தகவல்களும் அறிந்துகொண்டோம். ப்ரவாக்கரை பற்றியும். திருமூலர் ப்ரதிஷ்டை செய்த லிங்கம்!!! எவ்வளவு பழமை வாய்ந்தது இல்லையா. கண்டுபிடிக்கப்பட்டதே. இப்படி எத்தனை மறைந்துவிட்டதோ. கல்வெட்டு பழைய தமிழ் க்ரந்த எழுத்துகள் படிப்பது சிரமம் இல்லையா...

    இதோ உங்க அடுத்த பதிவுக்கு ஓடிங்க்

    கீதா

    ReplyDelete