ராமரை இம்முறை நீட்டுவாக்கில் எடுத்தேன். கீழே உள்ள உம்மாசிங்களும் சேர்ந்து வருதானு பார்த்தால் வருது. பழைய செல்லில் அப்படி எடுக்க வராது! இது அதை விடப் பெரிசோ? தெரியலை. எப்போவும் விழும் வெளிச்சம் கூட இம்முறையில் ஜாஸ்தி வரலை!
பிள்ளையார் மட்டும் தனியாவும் எடுத்திருக்கேன். குட்டிப் பிள்ளையார்கள் மறைஞ்சிருக்காங்க. வெள்ளை உலோகப் பிள்ளையாரும் உட்கார்ந்திருக்கார். அருகம்புல்க் கூட்டத்துக்குள் மறைஞ்சு இருக்காங்க எல்லோரும்.
*********************************************************************************
கொஞ்ச காலமாவே ஒரே ஓட்டமும், பிடியுமா இருக்கு! இதிலே குட்டிப் பட்டுக் குஞ்சுலுவுக்காகச் செய்து கொண்ட பிரார்த்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அந்த வரிசையில் இப்போப் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்குப் போக வேண்டி வந்தது. இந்தக் கோயில் பற்றி திரு&திருமதி கோமதி அரசு தம்பதியினர் சொல்லித் தான் அறிந்து கொண்டோம். 2016 ஆம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் கொடைக்கானல் போனப்போக் குழந்தை வேலப்பரைப் பார்த்து வேண்டிக் கொண்டு வந்தோம். அதுக்கப்புறமாக் குஞ்சுலு பிறந்து நாங்க அம்பேரிக்கா போய்த் திரும்பி வந்து மாமியாருக்கும் வருஷம் ஆகிப் பின்னர் ஒவ்வொன்றாகச் செய்கையில் குஞ்சுலு இந்தியா வந்தப்போ இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற நினைச்சு நேரப் பற்றாக்குறையால் போகலை. அவங்க வரச்சே வரபடி வரட்டும் நாம பிரார்த்தனையைச் செய்துடுவோம்னு ஆரம்பிச்சப்போ ஜூன்/ஜூலையில் என்னோட வயிற்றுக்கோளாறுகளால் எங்கேயும் போக முடியலை.
ஆகஸ்ட் மாசம் குஞ்சுலுவின் ஜன்ம நக்ஷத்திரம் வந்த அன்று போகலாம்னா பூம்பாறைக்கோயிலை அணுகும் விதம் தெரியலை. அதோடு எங்களுக்கும் இங்கே ஸ்ரீரங்கத்தில் முக்கியமான வேலை இருந்தது. அதன் பின்னர் முகநூல் மூலம் டிடியைக் கேட்டுப் பூம்பாறைக் கோயிலைத் தொடர்பு கொண்டு தேதி குறித்துக் கொண்டோம். இம்முறையும் குழந்தையின் பிறந்த தேதியான செப்டெம்பர் 11 ஆம் தேதி எங்க ஆவணி அவிட்டம் என்பதால் அன்று ஏற்பாடு செய்ய முடியலை. கடைசியில் ரொம்ப யோசித்து செப்டெம்பர் 14 ஆம் தேதியான நேற்று விசாக நக்ஷத்திரமும் சஷ்டி திதியும் சேர்ந்து வந்ததால் நேற்றைய தினத்துக்கு ஏற்பாடு பண்ணியாச்சு. ஆனால் முதல் நாள் நம்ம நண்பருக்குப் பண்டிகை! ஒரு நாள் முன்னாடியே கிளம்பிப் போனால் தான் அங்கே காலை சீக்கிரம் அபிஷேகத்துக்குப் போக முடியும். எப்படிடா எல்லாத்தையும் செய்துட்டுக் கிளம்பப் போறோம்னு கடைசி நிமிஷம் வரை ஒரே கவலை! என்றாலும் காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து சீக்கிரமா வீடு சுத்தம் செய்து கொண்டு கொழுக்கட்டை, வடை, அப்பம் போன்றவற்றுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டேன். முதல்நாள் மாலையே பச்சரிசி இட்லிக்கு அரைச்சு வைச்சாச்சு. காலை ஐந்தே முக்காலுக்கெல்லாம் குளித்து விட்டு வந்து ஆரம்பித்து ஒன்பது மணி அளவில் வடை, அதிரசம் தவிர்த்த எல்லாம் தயார் ஆனது. நம்ம ரங்ஸும் அதுக்குள்ளே பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு தயாராக இருந்தார்.
அவரைப் பூஜை செய்யச் சொல்லிவிட்டு வடை, அப்பம் செய்து முடித்துப் பூஜையும் முடிஞ்சு சாப்பிடும்போது மணி சரியாகப் 10-15. எல்லாம் முடிச்சுக் கொண்டு மிச்சம் இருக்கும் சாப்பாடு, கொழுக்கட்டை, இட்லி எல்லாவற்றையும் கையில் கொண்டு போகும் வண்ணம் பாக்கிங் செய்துவிட்டுப் பாத்திரங்கள் கழுவி வைத்துவிட்டுக் காஃபியும் போட்டு எடுத்துக் கொண்டு நான் தயார் ஆனப்போப் பதினொன்றரை ஆகிவிட்டது. உடனே ட்ராவல்ஸ்காரரிடம் தொலைபேசியில் உடனே வரச் சொல்லிவிட்டோம். பின்னே! மலை ஏறும்போது இருட்டி விட்டால் என்ன செய்யறது? அதோடு மழை வரும்னு வேறே வானிலை அறிக்கை மிரட்டல்! கடற்கரைப் பிரதேசங்களில் தான் என்றாலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களில் சொல்ல முடியாது. எப்போ வேணா மழை வரலாம். ஆகவே சரியாகப் பனிரண்டு மணிக்குக் கிளம்பினோம். வழியில் காஃபி மட்டும் நாங்களும் குடித்து ஓட்டுநருக்கும் கொடுத்தோம். நாலேகாலுக்கு அங்கே போய்ச் சேர்ந்தாச்சு. மிச்சம் பரவாக்கரைப் பதிவுகள் முடிந்ததும் வரும்.
பரவாக்கரை மீதிப்படங்களும் அந்தப் பயணத்தின் மற்ற விபரங்களும் அடுத்து வரும். அதுக்கப்புறமாத் தான் பூம்பாறை பயணம் பற்றி வரும். பின்னே! வரிசையா வர வேண்டாமோ! :))))
பயணம் சிறப்பாய் அமைந்தமை நன்று
ReplyDeleteபூம்பாறை படங்கள் வரட்டும்.
நன்றி கில்லர்ஜி, பூம்பாறைக் கோயிலில் படங்கள் எடுக்க முடியலை! :( ஆகவே கோயில் படங்கள் இருக்காது. உள்ளே எடுக்கவும் கூடாதுனு சொல்லிட்டாங்க!
Deleteமுறையான திட்டமிடல் என்றும் சிறக்கும் அம்மா...
ReplyDeleteநன்றி டிடி. ஆகஸ்ட் 27 வரை அபிஷேகத் தேதிகள் இல்லை என்று சொன்னதோடு அல்லாமல் நீங்கள் திரு மோகனின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து அனுப்பியதாலே திட்டமிட முடிந்தது. ஆகவே நன்றி உங்களுக்குத் தான் போய்ச் சேரணும்.
Deleteபூம்பாறை முருகனைப் பற்றி ஷஷ்டியில் வந்து விட்டது.எல்லாம் அவன் அருள்.
ReplyDeleteபரவாக்கரை அப்புறம் பூம்பாறை குழந்தை வேலப்பர் வருவதாய் சொன்னாலும் அவருக்கு உகந்த சஷ்டியில் இன்று இங்கு வந்து விட்டார்.
பிரார்த்தனை நல்லபடியாக நிறைவு பெற்று இருக்கும்.
குழந்தை வேலப்பர் குட்டி குஞ்சுலுக்கு நல்ல ஆசீர்வாதம் செய்து இருப்பார். நல்ல ஆரோக்கியத்தை அருள்வார்.
பிள்ளையார் சதுர்த்தி படங்கள் எல்லாம் அருமை.
வாங்க கோமதி அரசு! விபரங்கள் இனிமேல் தான் எழுதணும். ஆனாலும் அவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டி வந்தது சஷ்டியில் அமைஞ்சது! மிக்க நன்றி.
Deleteகாபிரைட்.... காபிரைட்... கொழுக்கட்டை தின வாழ்த்துகள் நான் சொல்றதாக்கும்..!
ReplyDeleteஇஃகி, இஃகி, ஸ்ரீராம், நீங்கல்லாம் என்னோட க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், Pஐயர் எல்லாத்தையும் பயன்படுத்தறீங்க! இன்னும் எனக்கு ராயல்டியே வந்து சேரலை! :))))
Deleteபிள்ளையார் பூஜை படங்கள் நல்லா வந்திருக்கு. புது செல்லா? என்ன கம்பெனி?
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், செல் மாத்தி எவ்வளவோ மாசங்கள் ஆகின்றனவே. பழைய செல்லைத் தூக்கிண்டு போனதுமே ஒரு வாரத்தில் புதுசு வாங்கியாச்சு! முக்கியமாக் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள வேணுமே! அந்த செல்லில் தான் கடந்த சில மாதங்களாகப் படங்கள் எடுக்கிறேன். நடுவில் காமிராவிலும் எடுப்பது உண்டு. ஆனால் பழைய மடிக்கணினியில் இந்த செல்லில் எடுக்கும்படங்களை அப்லோட் செய்வது எப்படினு புரியலை. ஆகவே புது மடிக்கணியிலேயே அப்லோட் செய்வதால் செல்லிலே எடுக்க வேண்டி வருது! :))))இஃகி, இஃகி, நிபுணி ஆயிட்டேனாக்கும். :))))) same shop, same samsung android! :))))
Deleteபூம்பாறை... கார்த்திக் படம் பெயர் போல இருக்கு!!! நல்லா இருக்கே.. காத்திருக்கிறேன்.
ReplyDeleteஇஃகி, இஃகி,கார்த்திக் நடிப்பு எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் எல்லாமும் பிடிக்காது! :)
Deleteபூம்பாறை விஜயம்.... மகிழ்ச்சி.
ReplyDeleteவிஷயங்கள் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
வாங்க வெங்கட், மெதுவா வரும்!
Deleteஅழகான பயணங்கள். திட்டமிடல்,மற்றும் மனத்திடம் இருந்தால் எங்கும் சென்று வரலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சாட்சி கீதாமா.
ReplyDeleteஎன்னவொரு அழகான பெயர் பூம்பாறை. இங்கே செல்லும்படி செய்த கோமதி அரசுவுக்கும், திண்டுக்கல தனபாலனுக்கும் நன்றிகள் பல். இந்தப் பதிவைக் காணக் காத்திருக்கிறேன்.
வாங்க ரேவதி, மூணு மாசமாப் போகணும்னு நினைச்சுக் கடைசியிலே குழந்தை வேலப்பர் இப்போத் தான் அழைத்தார். நல்ல தரிசனம். உண்மையில் அலங்காரத்திலும் அபிஷேகத்திலும் அவரைப் பார்க்கையில் எங்க குஞ்சுலு நிற்கிறாப்போலவே இருந்தது. படங்கள் எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க! வெளியில் எடுக்கலாம்னா எனக்கு ரொம்ப முடியலை! காரில் ஏறிக்கொண்டு திரும்பினால் போதும்னு ஆயிடுச்சு! :)))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்தி விழா குறித்த படங்கள் செய்திகள் நன்றாக இருக்கிறது. பிள்ளையார் அலங்காரம் மிக அழகு. அவருக்கு படைத்த பிரசாதங்கள் நானும் இரண்டு எடுத்துக்கொண்டேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி
தாங்கள் விடுமுறை விண்ணப்பம் பார்த்ததுமே ஏதோ வெளியூர் பிரயாணம் என அனுமானித்துக் கொண்டேன். தங்கள் பேத்திக்காக பூம்பாறை வேலவரை காணச் சென்று விட்டு திரும்பியது குறித்து மிக்க மகிழ்ச்சி.. எங்கு உள்ளதோ? ஊரின் பெயர் வித்தியாசமாக அழகாக உள்ளது. பயணமும் மிக ஆனந்தமாக அமைந்திருக்குமென நினைக்கிறேன். பூம்பாறை முருகனைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா , கொஞ்ச நாட்கள்/மாதங்கள் எங்கேயும் போக வேண்டி இருக்காது என நினைக்கிறோம்! என் தம்பி பிள்ளைக்குக் கல்யாணம் என்றால் சென்னை போகணும். அது என்னமோ தள்ளிப் போயிண்டே இருக்கு! குழந்தை வேலப்பர் தான் அருள் செய்யணும்! உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteஅது சரி, குத்துவிளக்குகளை பைஸா நகரத்து சாயும்கோபுரங்களாக எப்படி மாற்றினீர்கள்!
ReplyDeleteஇஃகி, இஃகி, ஏகாந்தன், இப்போ நீங்க சொன்னதும் தான் பார்த்தேன். சைடிலே நின்னுண்டு எடுத்ததாலே தானே அப்படி வந்திருக்குனு நினைக்கிறேன்! யாரானும் பார்த்தால் நிபுணினு நினைச்சுக்கட்டுமே! :)))))
Deleteஎன்னா ஒரு துல்லியம்!.. திட்டமிடல்!..
ReplyDeleteநல்லபடியாக பயணம் அமைந்தது கேட்டு மகிழ்ச்சி..
இருந்தாலும் -
ஹலோ.. இங்கே இன்னும் கொழுக்கட்டை பார்சல் வரலை!?..
வாழ்க நலம்...
ஹாஹாஹா, தாமதமாய் வந்தால் கொழுக்கட்டை எப்படிக் கிடைக்கும்? நன்றி, நன்றி. நன்றியோ நன்றி.
Deleteபடங்கள் அருமை. நல்லாத் திட்டமிட்டிருக்கீங்க (இப்போவும், அதாவது கொஞ்சம் முடியாத சமயத்திலும்).
ReplyDeleteசதுர்த்தி பிரசாதங்கள் அருமை. ஆமாம் உப்புக் கொழுக்கட்டையோடு, அதன் பூரணத்தையும் தனியாகப் பிடித்து அந்தப் பாத்திரத்திலேயே வைத்துவிட்டீர்களோ? வடை மாதிரியே தெரியலையே? மற்றபடி இரண்டு கொழுக்கட்டைகளும் அட்டஹாசமாய் வந்திருக்கு.
வாங்க நெ.த. லேட்டு? பூரணம் மிஞ்சிப் போச்சு! என்ன செய்யறது? அதான் பிடிச்சு அதையும் கொழுக்கட்டையோடு வேக வைச்சு வைச்சேன். வடை வடை மாதிரித்தான் இருக்கும்! வேறே எப்படி வரும். ஒருகால் மேலே அப்பமும் சேர்ந்து தெரியுதோ? பார்க்கிறேன். :)))) எல்லாமே சூப்பரா வந்தது. அன்னிக்கு நம்ம ஆளு தன் காரியத்தை எல்லாம் தானே நன்றாக நடத்திக் கொண்டார்.
Delete//(இப்போவும், அதாவது கொஞ்சம் முடியாத சமயத்திலும்).//
Deleteஎன்னாது கீசாக்காவால முடியாத தருணம் எனவும் ஒன்று இருக்கோ?:) அதை எல்லாம் நம்பாதீங்க நெ தமிழன்:)) அது ச்சும்மாஆஆ சிம்பதி கலக்ட் பண்ணுவதற்காக அவ எடுத்து விடுவா அப்பூடி:) ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா.
//வாங்க நெ.த. லேட்டு?//
Deleteஆஆஆஆஆஆஅ ஏதோ தான் மட்டும் ஒழுங்கா எல்லா இடமும் ரைமுக்கு போவவ மாதிரியே ஒரு பொல்டப்பூ:) அதிரா வந்திட்டனெல்லோ:) இனி ஆரும் தப்ப முடியாதூஊஊஊஊஊ:).
அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்கு சிம்பதி கலக்ட் பண்ணுவதெல்லாம் பிடிக்காதாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))) உண்மையாகவே யாரானும் பாவம்னு சொன்னா எனக்கு என்னமோ தளர்ச்சி வந்துட்டாப்போல் தெரியும்! :)
Deleteஅட, அதிரடி, நான் வந்தால் பழைய பதிவுகளைக் கூட விடாமல் படிச்சுக் கருத்துச் சொல்லிடுவேன். உங்களாட்டமா இல்லையாக்கும்!
Deleteவிநாயக சதுர்த்தி அன்றும் 'ஸ்ரீராமஜெயம்' கோலமா? பலே பலே
ReplyDeleteநெ.த. நினைவு தெரிஞ்சு கோலம் போட ஆரம்பிச்சதிலே இருந்து ஸ்ரீராமஜயம் (ஜெயம் இல்லை!) கோலத்தில் கட்டாயம் இடம் பெறும். அப்புறமா ஒரு மாமி சொல்லி சங்குச் சக்கரமும் விஷ்ணு பாதங்கள், லக்ஷ்மி பாதங்களும் கீழே போட்டுட்டு வரேன். அதுவும் சுமார் 40 வருடங்களாக!
Deleteபூம்பாவாய்ய் ஆம்பல் ஆம்பல்.. தான் நினைவுக்கு வருது.
ReplyDeleteகொழுக்கட்டை அவிச்ச்சு சாப்பிட்டு மயங்கி நித்திரையாகி எழும்பி வந்து எங்களுக்குப் படம் போட்டுக் காட்டுறீங்க கர்ர்ர்ர்ர்:))...
அதிரடி, யாரு தூங்கினா? ஜிஎம்பி சார் பாலக்காட்டில் கல்பாக்கத்தில் தூங்கலைனு சொன்னாப்போல் நான் கொடைக்கானலில் தூங்கலையாக்கும்! :)
Deleteகீதாக்கா பாலக்காட்டில் கல்பாக்கமா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கல்பாத்தினு இருக்கும்...அதுதான் பாரம்பரிய கிராமம் ஹெரிட்டேஜ் கிராமம் என்ற பெயர்...
Deleteகீதா
இஃகி, இஃகி, எல்லாம் இந்தத் தொலைக்காட்சியில் கல்பாக்கம்னு சொல்லிட்டு இருந்தாங்களா? அதையே தட்டச்சி இருக்கேன். கல்பாத்தி, கல்பாத்தி, கல்பாத்தி, கல்பாத்தி! இஃகி, இஃகி, போதுமா?
Deleteஅவ்ளோ பெரிய ராமர் படமா வச்சிருக்கிறீங்க? அதுசரி மற்றப்படங்கள் எல்லாம் குட்டியா இருக்கே? ராமரைத்தான் மெயினா வச்சு வணங்குகிறீங்களோ?.. பிள்ளையார் அவரின் பிரதர்.. பேரன்ஸ்.. அங்கிள்.. ஆன்ரி இப்படி ஆரையும் பிரேம் போட்டு வச்ச்சிருக்கவில்லையோ?:)
ReplyDeleteஅட அதிரடி, நீங்க என்னத்தைப்பார்க்கிறீங்க, படிக்கிறீங்க போங்க! இந்த ராமர் சுமார் பனிரண்டு ஆண்டுகளாக முக்கியப் பண்டிகைகளில் என்னோட பதிவுகளிலே வருவாரே! அவ்வளவு அழகாப் பார்த்திருக்கீங்க போல! அது சரி, கிருஷ்ணன் பிறப்புக்குச் சீடை, முறுக்கு சாப்பிட வந்திருந்தா ஒருவேளை தெரிஞ்சிருக்கும். பிள்ளையாரோட ப்ரதர், பேரன்ட்ஸ், அங்கிள், ஆன்ரி எல்லோரும் இருக்காங்க! அவரோட அங்கிளோட இரு ஆன்ரிகளும் இருக்காங்க. ஒரு நாள் தனியா எடுத்துப் போடறேன்.
Deleteஇந்த ராமர் படம் தஞ்சாவூர் வண்ணக் கலையைச் சார்ந்த மிகப் பழைய படம். சுமார் ஐநூறு ஆண்டுகளுக்குக் குறையாதது. என் மாமனாரின் முன்னோர்களில் யாரோ ஒருத்தருக்கு அவர் சங்கீதத்தை மெச்சிப் பரிசாக இந்தப் படத்தையும் இன்னும் சில பொருட்களையும் சரஃபோஜி காலத்தில்/அல்லது அவருடைய வாரிசு காலத்தில் கொடுத்ததாய்ச் சொல்வாங்க. இது குறித்த தகவல்கள் எல்லாம் ஓலைச்சுவடிகளில் என் பெரிய மாமனாரிடம் இருந்திருக்கு! ஆனால் கவனக்குறைவாக விட்டதால் எல்லாம் அழிந்து விட்டன. தூள் தூளான சுவடிக்குப்பைகளே எனக்குக் கிடைத்தன. அது போல் மிகப் பழைய சுருதிப் பெட்டி ஒன்றும் இருந்தது. அதுவும் இப்போ இல்லை. யாருக்கோ கொடுத்துட்டாங்களாம்! :( சாளகிராமம் எல்லாமும் வைச்சு வணங்க ஆள் இல்லாமல் கோயிலுக்குக் கொடுத்திருக்காங்க. இந்த ராமர் என் மாமனாருக்கு அவருடைய பங்காக வந்து சேர்ந்தார். இவரோடு இணைந்திருந்த நவநீத கிருஷ்ணன், இந்த மஹாகணபதி, ஶ்ரீதேவி, பூதேவி சமேதப் பெருமாள், ரிஷப வாஹனர்(அர்த்தநாரீசுவரர் இல்லை. எங்கே இருக்கார்னு தெரியலை. புதுசா வாங்கி வைக்கத் தேடறோம். கிடைக்கலை) எல்லோரும் இருந்திருக்காங்க. பஞ்சாயதன பூஜை பண்ணி வந்திருக்காங்க. என் மாமனார் காலத்துக்குப் பின்னர் ராமர் எங்க மாமனாருக்கும் மற்ற விக்ரஹங்கள் பெரிய மாமனாருக்கும் போய்விட்டன. பின்னர் இப்போ 2010 ஆம் ஆண்டில் தான் என் பெரிய மாமியார் விக்ரஹங்களை எங்களிடம் ஒப்படைத்தார்! அவங்களுக்குப் பிள்ளை இல்லை. பெண் வீட்டில் இதெல்லாம் அங்கே வைக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க! ஆகவே சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஶ்ரீராமர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு நம்ம வீட்டில் குடித்தனம் இருந்து வருகிறார்.
Deleteநவரத்தின மோதிரம் ஒன்றும் ராஜாகாலத்தது இருந்தது என என் மாமனார் சொல்லுவார்.
Deleteகாலில் சக்கரம்தான் போங்க
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், இப்போச் சக்கரத்தைக் கழட்டி வைச்சிருக்கேன். ஆனாலும் இன்னும் ஒரு மாதத்துக்கு ஓட்டம், பிடிதான்.
Deleteபூம்பாறை கேட்டதுண்டு ஆனால் சென்றதில்லை. (துளசி)
ReplyDeleteபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. உங்க பிரார்த்தனைகளெல்லாம் நல்ல படியாக முடிந்திருக்கும். குழந்தை பட்டுக் குஞ்சுலு வாழ்வாங்கு வாழ பிரார்த்தனைகள்! வாழ்த்துகள்.
உங்களோடு நாங்களும் பூம்பாறை வருகிறோம்...
துளசிதரன், கீதா
வாங்க தி/கீதா, நாங்க கோமதியும் அவர் கணவரும் சொல்லித் தான் தெரிந்து கொண்டோம். கொடைக்கானலுக்கே போனதில்லை! இஃகி, இஃகி, ஆனாலும் குறிஞ்சி ஆண்டவர் கோயில் இருக்குனு தெரியும். முதல்லே அதானோனு நினைச்சால் அப்புறமா கோமதி போகர் வடித்த நவபாஷாண முருகர்கள் சிலைகளில் இவர் முதலாவது என்றார். உடனேயே பார்க்கும் ஆவல் வந்து விட்டது. எப்படியும் அந்த வருஷம் கொடைக்கானல் பயணம்னு வைச்சிருந்தோம். இவங்க சொன்னதும் உடனே கிளம்பிப் போனோம், 2016 ஆம் ஆண்டில்.
Deleteகீதாக்கா கொழுக்கட்டை குட்டியா அழகா இருக்கே...
ReplyDeleteகீதா
ஆமாம், கீதா, சொல்லப் போனால் ஒரு நாளிலேயே 108 கொழுக்கட்டைகள் எல்லாம் செய்தது உண்டு. இனிப்பு மட்டும் 108 உளுந்து தனி! நினைச்சால் கொழுக்கட்டை செய்வேன். இப்போத் தான் குறைஞ்சிருக்கு. முறுக்கும் அநேகமா மாசம் ஒருதரமாவது சுத்திட்டு இருந்தேன். இப்போக் கை பிரச்னை, கால் பிரச்னை, சுத்தினால் எங்கேயோ ஆஃப்ரிகா, அம்பேரிக்கானு சுத்துப் போகுது! :))))) ஆனால் என்னைப் பார்ப்பவங்க எல்லாம் நீ வேலை எல்லாம் தனியாச் செய்துடுவியானு தான் கேட்பாங்க. நம்ம மூஞ்சியிலே வேலையே செய்ய மாட்டானு எழுதி இருக்குப் போலனு நினைச்சுப்பேன். :)))))))
Delete