எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 04, 2018

பெண் சுதந்திரத்தின் வரம்பு எது? :(

பெண் சுதந்திரத்தின் எல்லை எதுனு தெரியலை! இப்போ அது கள்ளக் காதலனுடன் ஓடிப் போகப் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்வதில் கொண்டு விட்டிருக்கிறது! என்னவோ போங்க! எதுவுமே புரியலை! இந்தப் பெண்ணுக்கு சுதந்திரம் இல்லை என்பதால் இப்படிச் செய்தாராம். சொல்லிக்கிறாங்க! வர வர சுதந்திரத்தின் எல்லை எதுனே தெரியாமப் போச்சு! கணவனைப் பிடிக்கலைனா முறைப்படி விவாகரத்து கோரி குழந்தைகளைப் பார்த்துக்க முடியாதுனு சொல்லி விலகி வந்து காதலித்தவனைக் கைப்பிடித்திருக்கலாமே! வழியா இல்லை! அதை விட்டுட்டுக் கணவனோடும், குழந்தைகளோடும் கணவனின் பிறந்த நாள் கொண்டாட்டம் எல்லாம் கொண்டாடிட்டுப் பச்சைக் குழந்தைகளை விஷம் வைத்துக் கொல்ல எப்படி மனம் வந்ததுனு புரியலை! இதற்கு எல்லோரும் சொல்லும் காரணம் மனைவியைப் பிடிக்கலைனாக் கணவன் விவாகரத்து செய்துவிட்டுக் குழந்தைகளை அம்போவென விட்டுட்டு ஓடிப் போகலையா? அப்போ அந்தப் பெண்ணிற்கு யார் உதவினார்கள்! என்கின்றனர். இப்போ இந்தப் பெண்ணும் அப்படிச் செய்திருக்கலாமே என்பது தான் இங்கே சொல்லப்படுவதும்!

இன்னொரு இளம்பெண் கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரில் பயணம் செய்த விமானத்தில் பயணத்திலேயே மத்திய அரசுக்கு எதிராகக் கோஷம் போட்டிருக்கார். இதை அவர் தெருவிலேயே செய்திருக்கலாம். அல்லது விமான நிலைய வாயிலில் கூடச் செய்திருக்கலாம். மேடை போட்டுப் பேசி இருக்கலாம். தொலைக்காட்சிகளில் கூடச் சொல்லலாம்.  ஆனால் விமானப்பயணத்தில் இதெல்லாம் தவிர்க்க வேண்டியவை! அரசியல் கோஷங்கள் விமானத்துக்குள் பயணத்தில் செய்திருக்கக் கூடாதவை! ஆனால் வழக்கம்போல் நம்ம ஊர் அரசியல்வாதிகளும் ஊடகங்களும், மாணவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இந்தப் பெண்ணை ஏதோ புரட்சியாளராகக் கருதிக் கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதே தமிழக அரசியல்வாதிகள் எவரையேனும் இப்படி அந்தப் பெண் சொல்லி இருந்தால் அவர்களின் தொண்டர்கள் சும்மா இருந்திருப்பார்களா?

அந்தப் பெண்ணும் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார். எனினும் நீதிமன்றம் அறிவுரை சொல்லி ஜாமீன் வழங்கி உள்ளது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் தந்தை ஓர் மருத்துவர். இவரும் கனடா நாட்டில் ஆராய்ச்சிப் படிப்புப் படிக்கிறார். அங்கே செல்லும்போது பயணத்தில் இப்படிக் கூச்சல் போட்டிருக்க முடியுமா இந்தப் பெண்ணால்? சுதந்திரத்திற்கும் ஓர் எல்லை வகுத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது இத்தகைய செய்திகள்.
ஆச்சு, இனிமேல் இந்தப் பெண்ணின் விடுதலை கோரி மெரினாவில் கூட்டம் கூட வேண்டியது தான் பாக்கி!  அந்த அளவுக்கு ஆதரவுக்குரல்கள் எழும்புகின்றன. ஆதரவுக்குரல் கொடுப்போர்களில் எவரையானும் இப்படி எதிர்த்து விமானத்தில் கூட வேண்டாம், தெருவில் கோஷம் போட்டாலே தொண்டர்கள் சும்மா விடுவார்களா?

விமானப் பயணத்திற்கென சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதை முறைப்படி நாம் பின்பற்ற வேண்டும். நம்மாலும், நம் நடவடிக்கைகளாலும் கூடப் பயணம் செய்யும் மற்றப் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது அல்லவா? இந்த கோஷத்தைக் கேட்ட எவரேனும் உணர்ச்சிவசப்பட்டிருந்தால்? அது இன்னும் மோசமாகி விடுமே! அதனால் தான் விமானப்பயணங்களில் இத்தகைய பாதுகாப்புச் சட்டங்கள்! உலகிற்கே பொதுவானவை. நமக்கு மட்டும் அல்ல. பார்க்கப்போனால் இங்கே மென்மையாகக் கையாள்கின்றனர். இதுவே வெளிநாடாக இருந்திருந்தால் உடனடியாக அந்தப் பெண் இறங்கிய உடனே சிறைச்சாலைதான்! ஆனால் இங்கே கைது நடவடிக்கைக்கே எதிர்ப்பு!  இப்போது இந்தப் பெண் கைது செய்யப்பட்டிருப்பதும் அந்தப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதால் தான்! மற்றபடி மத்திய அரசை எதிர்த்து கோஷம் போட்டதால் அல்ல. அதுவும் இவர் தான் பயணம் செய்யப் போகும் விமானத்தில் பாஜக தலைவி வரப்போவதை அறிந்து கொண்டு தான் பிரச்னை செய்யப் போவதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். ஆகவே இது இவரால் முன்கூட்டித் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒரு சம்பவம். அதற்காகத் தான் கைது, நடவடிக்கை எல்லாம். இதை யாருமே சொல்லவில்லை. எல்லோரும் மத்திய அரசை எதிர்த்துக் கோஷமிட்டதால் கைது என்றே திரித்துப் பேசுகின்றனர். இதில் என்ன மகிழ்ச்சினு தெரியலை! :)))))))) 

36 comments:

  1. அபிராமி.. அவளை பத்தி நினைச்சாலே பாவம். உடல்தேவையும் அதனால் பாதை மாறியதையும்கூட ஏத்துக்க முடியுது. ஆனா, அதுக்காக கொலை, பெத்த பிள்ளைகளின் பிணத்தோடு ஒருநாள் முழுக்க எப்படி இருக்க முடிந்தது?! அத்தோடு கள்ளக்காதலனோடு உறவு வேற. பெண் இனத்துக்கே கரும்புள்ளி அவள்

    சோபியா ஆர்வக்கோளாறு

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, என்னவோ பார்க்கும் படிக்கும் செய்திகள் எதுவுமே மன மகிழ்ச்சி தருவதாக இல்லை.

      Delete
  2. சுதந்திரம் இருந்தால் மட்டும்போதாது அதை முறையாகக் கையாளவும்வேண்டும் எக்செப்ஷனல் கேஸெஸ் என்று விட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, அந்தக் குழந்தைகளின் உயிரைத் திரும்பக் கொண்டு வர முடியுமா?

      Delete
  3. பாரதி நினைத்த 'பெண் சுதந்திரம்' இதுவல்ல!

    கணவனுக்கு அடங்கி, குடும்பத்தையே அடக்கி வாழ்பவளே நல்ல குடும்ப பெண்.

    அதுவே அவள் பெற்றுக்கொண்ட, எடுத்துக்கொண்ட முழுமையான சுதந்திரம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இந்த அடங்கி என்பதைத் தவறாகப் புரிஞ்சுக்கறவங்களே அதிகம்! நான் என்ன அடிமையா என்று கேட்பார்கள்!

      Delete
  4. உலகத்துல இந்த மாதிரி நிகழ்வுகள் நடந்துடக்கூடாதே... உடனே இடுகை போட்டுடுவீங்களே....

    அந்தப் பெண் (அபிராமி) குழந்தைகள் படத்தைப் பார்த்தேன். பாவம். இத்தனைக்கும் ஒரு வாரம் முன்னால்தான் அவளுடைய அப்பா அவளை அடித்து உதைத்து வீட்டில் கொண்டுவந்துவிட்டிருக்கிறார். ரொம்பக் கொடுமையான சம்பவம், for no purpose. வாழ்க்கையே இனி வீண்.

    விமானத்தில் கூச்சல் போட்ட பெண்ணும் சுயநலத்துக்காகத்தான் அப்படிச் செய்திருக்கிறார். எதையாவது செய்து ஆட்சி பிடிக்க ஆசைப்படும் கட்சிகள் உடனே அவளுக்கு ஆதரவாக கருத்துமழை பொழிகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. ஏன் சொல்லக் கூடாதா? :) உண்மையை நடந்ததைச் சொல்வதில் என்ன தப்பு? என்னவோ போங்க நடப்பது எதுவும் நல்லா இல்லை.

      Delete
    2. விமானத்தில் கோஷம் போட்ட பெண்ணின் பாஸ்போர்ட்டும் காலாவதி ஆகி இருக்கு அல்லது காலாவதி ஆன பாஸ்போர்ட்டைக் கோர்ட்டில் கொடுத்திருக்காங்க! :(

      Delete
  5. சுதந்திரத்தை விடுதலையாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது...? பிரச்சனை தான்...

    ReplyDelete
  6. படிக்கவே கசப்பான செய்திகளாக அரங்கேறுகின்றன.

    ReplyDelete
  7. இதெல்லாம் படிக்கவே கஷ்டமாயிருக்கு!.. இம்மாதிரியெல்லாம் பெண்களின் மனோபாவம் இரக்கமில்லாம மாறிப் போகறதுக்கு, இதையெல்லாம் நியாயப்ப‌டுத்துவது போல் வரும் தொ.தொடர்கள் ஒரு முக்கியக் காரணம் என்பது என் கருத்து. முன்பெல்லாம் சினிமா, தொடர்கள், எத்தனை கஷ்டம் வந்தாலும் ஒழுக்கம் மிக முக்கியம் என்பதையே சித்தரித்தன. மீறி நடப்பவர் துன்பப்படுவர் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிய வண்ணம் இருந்தன. இப்போ??.திரும்பத் திரும்பக் காட்டப்படும் கள்ளக் காதல் விவகாரங்கள், 'இதெல்லாம் தப்பில்லை' மனோபாவத்துக்கு வழிவகுப்பதாகவே கருதுகிறேன்!..விமானத்தில் கூச்சல் போட்ட பெண்ணுக்கு கவன ஈர்ப்புத் தேவையாயிருந்தது.. கிடைத்து விட்டது.. இங்க தான் எல்லாத்துக்கும் கை காமிக்கவே ஒருத்தர் கிடைச்சிட்டாரில்ல... அப்ப இதுக்கும் அவர் தான் காரணம்!!.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, உடம்பு தேவலையா இப்போ? இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கவனமாகவே இருங்க. என்னதான் தொலைக்காட்சி சொன்னாலும் அதெல்லாம் பணத்துக்காக எடுக்கப்படுவதுனு புரிஞ்சுக்கலைனா என்ன செய்யறது! :(

      Delete
    2. இப்போ பரவாயில்லை அம்மா!.. மிக்க நன்றி!

      Delete
  8. உடல் தேவை எத்தனை நாளைக்கு கூடவரும்? பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த அந்தப் பெண்ணின் செயல் அதிர்ச்சிக்குரியது. அவள் அப்படித்தான் என்று முன்னரே அவர்களுக்குத் தெரிந்திருந்திருக்கிறது. கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். என்ன நம்பிக்கையில் இப்படி கவனிக்காமல் விட்டார்களோ...

    விமானப் பெண் விவகாரம்... வெறும்வாய்க்கு மெல்ல அவல் கிடைத்து விட்டது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், அந்தப் பெண் குழந்தைகளைக் கொன்று ஓடிப் போகும் அளவுக்கு இருப்பாள் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! :(

      விமானப் பயணியான பெண்ணிற்குத் தேவைக்கு மேலேயே விளம்பரம் கிடைத்து விட்டது!

      Delete

  9. படித்த பெண்கள் குடும்பத்தின் விளக்குகள் என்பது காணாமல் போயே போய்விட்டதோ என்னவோ.....இரண்டு பெண்களும் தங்கள் எல்லைகளை மீறிவிட்டார்களோ என்னவோ

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் இப்போதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு கொள்வதில்லையோ என்றே தோன்றுகிறது.

      குத்தூசி, உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. அபிராமி அதீத செல்லம் கொடுத்து வளர்க்ப்பட்டதால் கெட்டுப்போன ஒரு brat. அவளைப் போய் பெண்ணினத்தின் பிரதிநிதியாக நினைக்கக் கூடாது.
    சோஃபியாவிற்குப் பின்னால் ஒரு சாதிக் கூட்டம் இருக்கிறது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, கிருஷ்ண ஜயந்தி பக்ஷணம் சாப்பிட வரலை! இப்போவும் போய் எடுத்துக்கலாம். தே.எ. தான் ஆகவே நல்லாவே இருக்கும்! :))))

      அபிராமியைப் பெண் இனத்தின் பிரதிநிதி என யாரும் சொல்ல மாட்டாங்க!மோசமான பெண்ணுக்குப் பிரதிநிதி என்று கூடச் சொல்ல முடியாது! கணவனையும் கொல்ல இருந்ததாக வாக்குமூலம் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வந்தன!

      ம்ம்ம் சோஃபியா படிக்க மட்டும் ஜாதியைப் பயன்படுத்தியதாகச் சொல்கின்றனர்.

      Delete
  11. கொடுமை :( ...இவ்வளவு கொடூரமான பெண்மணியா ..பிடிக்கலைன்னா சொல்லிட்டு பிரிஞ்சி போற வெள்ளைக்காரங்க எவ்வளவோ தேவலாம் .இப்போ ஜெயிலில் சாகுமட்டும் குற்றஉணர்வில் நித்தம் மரணம் தான் இப்பெண்ணுக்கு ..

    விகடன் ஆன்லைனில் தலைப்பு பார்த்து மூடிட்டேன் ..விரிவா படிக்கும் தைரியமில்லை :(
    இந்த தாய் போன்ற ஜென்மங்களை படைச்சதுக்கு கடவுள் ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார் :(

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல்,குற்ற உணர்வு அந்தப் பெண்ணுக்குத் தோன்றுமா? சந்தேகம் தான்!கடவுள் ஒழுங்காத் தான் படைக்கிறார். நாம் தான் மாறுகிறோம். :(

      Delete
  12. அபிராமி - என்ன சொல்ல - இப்படியும் ஒரு பெண்.....

    மற்றது - அரசியல்! :( அசிங்கமான அரசியல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நீங்க சொல்வது சரியே!

      Delete
  13. கொடுமையான செயல்...


    எப்படி தான் மனம் வந்ததோ அந்த பெண்ணுக்கு...

    இனி வாழ்வே நரகம் தான்...சுயநல பேய்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, இனிமே அந்தப் பெண்ணால் ஒரு நிமிடமாவது சந்தோஷமா இருந்துட முடியுமா?

      Delete
  14. தாங்களாலும்
    தங்களது பதிவுக்குக் கருத்துரைத்தவர்களாலும் சொல்ல வேண்டியவை சொல்லப்பட்டு விட்டன..
    இனி ஒன்றும் சொல்வதற்கில்லை...

    நல்லொழுக்கத்திற்கான கல்வி சொல்லித் தரப்படவில்லையோ - என, ஐயம் எழுகின்றது...

    நல்லவர்கள் நலமாக வாழட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, என்ன சொல்லி, என்ன பேசி என்ன பயன்? குழந்தைகள் திரும்பி வரப் போவதில்லை. அந்தப் பெண் பயணி கோஷம் போட்டதை ஆதரிப்பவர்கள் ஆதரித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை யாரும் புரிஞ்சுக்கலை.

      Delete
  15. கீதாக்கா துளசியும் பலரது பதிவுகளுக்கு அனுப்பியிருந்தார். உங்கள் பதிவுகளுக்கும் அனுப்பியிருப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால் தலைப்பே இல்லாமல் வழக்கம் போல அனுப்பியிருந்தான் தங்கிலிஷில். தேடி எடுத்து போடுவதால் தாமதம். எனக்கும் இன்னும் பணிகள் தொடர்கிறது. அதான் அக்கா. ஸாரி க்கா எல்லா பதிவும் பார்த்துடறேன்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மெதுவா வாங்க கீதா. சும்மாவானும் கேலி செய்தேன் வரலைனு! :)

      Delete
  16. அபிராமி!! என் அழகான பெயர். எனக்கு நேற்றுத்தான் செய்தியே தெரியும் அதுவும் வாட்சப் குழுமத்தில் என்று நினைவு யாரோ அதைக் கவிதை வடிவில் எழுதி அது வைரலாக இருக்க்றது என்பதைப் பார்த்துத்தான் செய்தி என்ன என்று அறிய முனைந்தேன். ஆனால் பிடிக்கவில்லை எனவே தொடர்ந்து படிக்கவில்லைக்கா..கணவன் மனைவி கள்ளக் காதல் எல்லாத்தையும் விடுங்க....தாய்மை!! எத்தனை உயர்வான ஒன்று! எத்தனை பெண்கள் தாங்கள் தாய்மை அடைய முடியலையே என்று ஏக்கத்துடன் இருக்கிறார்கள்! தாய்மையை எவ்வளவு உயர்வாகச் சொல்லுகிறோம்...என்னவோ போங்க.... பிடிக்கலைனா விட்டுட்டுப் போக வேண்டியதுதானே...ம்ம்ம்

    ஸோஃபியாவும் வாட்சப்பில் கூக்குரல் கண்டுதான் என்ன என்று பார்த்தேன்...அது அடுத்த அரசியல் கூத்து...கொஞ்ச நாள் ஊடகங்களுக்கு நல்ல அவல்...செய்திகளே பிடிக்கலைக்கா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய! அபிராமி எனப் பெயர் வைச்சுண்டு அந்தப் பெண் பெற்ற குழந்தைகளைக்கொன்றிருக்கிறாள். அதுவும் ஒரு பிரியாணிக்காக!அப்படி என்ன அதில் இருக்குனு தெரியலை! :(

      Delete
  17. வணக்கம் சகோதரி

    நேற்று முழுவதும் நான் வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் தங்கள் பதிவுக்கு தாமதமாக வருகிறேன். மன்னிக்கவும்.

    தங்கள் பதிவில் காணப்பட்ட செய்திகளை நானும் படித்தேன். அந்த பெண்ணுக்கு எப்படித்தான் இந்த மாதிரி ஒரு அரக்க மனம் வந்ததோ என அதிர்ச்சியில் இருந்தேன். இந்த மாதிரி எத்தனையோ செய்திகள் கண்ணில் படுகின்றன. எனினும் நீங்களும் அதைக்குறித்து எழுதியது அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனையை அதிகமாக்கியது. அரக்க வம்சங்கள் எல்லாம் இந்த மாதிரி வடிவெடுத்து மறுபிறவியாக பிறக்கின்றனர் போலும்,! கொடூரம்.. வேறு என்ன சொல்ல..இரண்டாவது பெண்ணைப் பற்றி ஏதும் தெரியவில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, இரண்டுமே மோசமான செய்திகள் தான். அந்த அபிராமிக்கு இப்போத் தன் தவறு தெரிந்திருக்கும். என்ன தெரிந்து என்ன செய்வது! :( இந்த பிரியாணியில் மயங்கி ஓட்டுப் போடுகின்றனர், இன்னொருத்தரோடு தொடர்பு வைச்சுக்கறாங்க, குழந்தைங்களைக் கொல்லறாங்க! என்னதான் இருக்கோ அதிலே! :(

      Delete