நேத்திக்கு மருத்துவரிடம் போனதில் நேரம் ஆகிவிட முன் கூட்டியே பாரதியாருக்கான பதிவைத் தயார் செய்து ஷெட்யூல் பண்ண முடியலை. அவசரப் பதிவு!
இன்னிக்குக் குட்டிக் குஞ்சுலுவுக்கு 2 ஆம் பிறந்த நாள். அதோடு பாரதியாரின் நினைவுநாளும் சேர்ந்து கொள்ள அவர் பாடலையே இங்கே குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாளுக்கும் பகிர்ந்துள்ளேன். கீழே இருக்கும் கடைசிப் படம் குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாளுக்கானது.
இன்னிக்குக் குட்டிக் குஞ்சுலுவுக்கு 2 ஆம் பிறந்த நாள். அதோடு பாரதியாரின் நினைவுநாளும் சேர்ந்து கொள்ள அவர் பாடலையே இங்கே குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாளுக்கும் பகிர்ந்துள்ளேன். கீழே இருக்கும் கடைசிப் படம் குட்டிக் குஞ்சுலுவின் பிறந்த நாளுக்கானது.
முன்பு ஒருமுறை நானும் போட்டிருக்கிறேன் பாரதியார் பதிவு இந்நாளில்...!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், முன்னாடியே எழுதி வைக்க நினைச்சு முடியலை! நேத்து ராத்திரியில் இருந்து மின்சாரம் விளையாட்டு! ராத்திரி பனிரண்டு மணிக்கப்புறமாத் தான் மின்சாரமே வந்தது. இன்னிக்குக் காலம்பரவே போயிட்டு இப்போத் தான் அரை மனசாக் கொடுத்திருக்காங்க. அதிலும் இரு முறை திரும்பத் திரும்பப் போய் வந்திருக்கு! :( அதான் இம்முறை அவசரப் பதிவு!
Deleteஇந்நாளில் பிறந்த காரணத்தால் என் சகோதரருக்கு பாரதி என்று பெயர்.
ReplyDeleteம்ம்ம் நானும் நினைச்சுப்பேன், ஏன் பாரதி என! :)) இப்போக் காரணம் தெரிஞ்சது!
Deleteகுட்டிக்குஞ்சுலுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteசொல்லும் மழலையில் கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்... ஆஹா.... அருமை.
ReplyDeleteபடத்தைக்கொஞ்சம் பெரிசாக்கிதான் போட்டிருக்கக் கூடாதோ?
எங்கே! அதுக்கெல்லாம் நேரமே இல்லை. குஞ்சுலுவோட வாழ்த்துமடலை அனுப்பும் அவசரம் வேறே! நேத்திக்கு முழுசும் மருத்துவரிடம் போய் விட்டது! :( அப்புறமா வந்து வீட்டு வேலைகள், மின்சாரம் இல்லை! புலம்பல் இத்யாதி! :)))) ஆகவே கையில் கிடைத்ததை அவசரமாப் போட்டேன். மாமா வேறே ஐந்தரைக்குள் கிளம்பணும். :) காலங்கார்த்தாலே கணினியில் உட்கார முடியுமா வேலை இருக்கும்போது! :))))
Delete//எங்கே! அதுக்கெல்லாம் நேரமே இல்லை. ///
Deleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பெரிசாக்கத் தெரியல்ல எனத் தெளிவாச் சொல்லோணும் கீசாக்கா:)).. ஹையோ என்னை ஆராவது காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்:)).....
ஞானி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteகுட்டிக் குஞ்சுலுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ReplyDeleteஎங்கள் ஆசிகள். இறைவன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
கண்ணம்மா பாடல் பகிர்வு அருமை , பொருத்தமான பாடல்.
இன்பகதைகள் பேசி பாட்டி, தாத்தாவை மகிழ்விக்க வேண்டும்.
நன்றி கோமதி! குஞ்சுலுவை இன்னிக்குக் காலம்பரப் பார்க்க முடியாது. நாளைக்கு நம்ம காலையிலே/அவங்களுக்கு மாலை/இரவு காட்டலாம்! :) நேரம் இருக்கணும்.
Deleteகுஞ்சுலுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteகுட்டிக் குஞ்சுலுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteஉடல் நல செக்கப் தானே?
ReplyDeleteநலம்தானே?
ஆமாம் கோமதி, சாதாரண செக்கப் தான்! எனக்கு மிகக் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்துப் பாஸாயிட்டேன். அவரும் சராசரிக்கு வந்துட்டார்! :))
Deleteஅவசரமாக இருந்தால்கூட அருமையாக அமைந்துவிட்டது.
ReplyDeleteநன்றி முனைவர் ஐயா!
Deleteஉங்கள் பேத்தி பிறந்த தின வாழ்த்துகள். நலமுடன் அவளுடைய வாழ்க்கை அமையட்டும், அமையும்.
ReplyDeleteபாரதியைப் பற்றி இன்று, சாரு நிவேதிதாவின்'பழுப்பு நிறப் பக்கங்கள்' புத்தகத்தில் ஒரு வரி படித்தேன். திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லம், அவர் முழுவதும் உபயோகப்படுத்திய வீடு இல்லையாம். அந்த வீட்டின் கடைசி ஒரு அறையில் அவர் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்தாராம். நான் கூட, எப்படி இவ்வளவு பெரிய வீட்டில் இருந்திருக்கிறார் என்று அங்கு சென்றிருந்தபோது நினைத்தேன்.
பாரதி பாடலில், 'வெற்றி எட்டுத் திக்கும் என்று கொட்டு முரசே', 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்' பாடலும் எனக்குப் பிடித்தவை.
வாங்க நெ.த. பாரதி இருந்த அறையையும் பார்த்திருக்கலாமே! வீட்டை அரசு வாங்கி நினைவிடமாக மாற்றி உள்ளது. நானும் சில முறை போயிருக்கேன்.
Deleteகுட்டி குஞ்சுலுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
ReplyDelete/சொல்லும் மழலையில் கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்///கடைசியா போட்டிருப்பது மிக பொருத்தம் பட்டுக்குட்டிக்கு :)
ஸ்கைப்பிலேயே உங்களை மயக்கும் குட்டியாச்சே .
நன்றி ஏஞ்சல்! இன்னிக்குப் பார்க்கலாமோனு நினைச்சேன். அவங்களுக்குப் பதினோராம் தேதி தானே! ஆனால் முடியலை! ஃபோனிலேயே சொல்லிட்டோம். வாழ்த்தும் அனுப்பினோம். பார்த்ததா என்னனு தெரியலை. பார்த்தாலும் இந்த வயசில் புரியப் போறதில்லை! :)
Deleteபாரதியின் பல பாடல்கள் எனக்கு அவருக்குக் கிடைக்காதவற்றுக்கு ஏங்கி [பாடியது போல் தோன்றும் பாரதியின்ந் ஆசை முகம் மறந்துபோச்சே பாடலுடன் ஒரு பதிவு எழுதி இருந்தேன் பாரதிக்கு கேள்விகள் அதில்இருக்கும்
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, படிச்ச நினைவு இருக்கு!
Deleteபாரதி பதிவின் சுட்டி /http://gmbat1649.blogspot.com/2014/09/blog-post_10.html
ReplyDeleteசுட்டிக்கு நன்றி.
Deleteஎன்றென்றும் நலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க...
ReplyDeleteகுட்டி குஞ்சுலுவுக்கு அன்பின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நன்றி துரை. அனைவரின் வாழ்த்துகளும் ஆசிகளும் குழந்தைக்குத் தேவை!
Deleteபாரதியை நினைவு கூர்ந்து இன்னும் உங்களைப் போல சிலர் பதிவு எழுதி வெளியிடுகிறார்கள் ஆனால் மற்றவர்களுக்கு பாரதியை விட பிக்பாஸ்தான் முக்கியமாக இருக்கிறது
ReplyDeleteகுட்டி குஞ்சுலுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எனக்கு இந்த பிக் பாஸ் பத்தி உண்மையாகவே எதுவும் தெரியாது. ஒரு நாள் கூடப் பார்த்ததில்லை. பார்க்கணும்னு நினைவும் வரதில்லை! :))))
Deleteஉங்களுக்கு நினைவுக்கு வந்தாலும் பிரயோசனமில்லை. அது இரவு 9 மணிக்கு. என்னைப்போல் 8.30க்கு உறங்கச் செல்லுபவர் அல்லவா நீங்கள். பகலில் 9.30க்கு முந்தைய நாள் நிகழ்ச்சி வருது. அதுக்கு உங்களுக்கு எங்க நேரம்....
Deleteசில சமயம் நாம் அவசர அவசரமாக செய்யும் சமையல் பிரமாதமாக அமைந்து விடும். அப்படி உங்களின் இந்த அவசர பதிவும் நன்றக இருக்கிறது.
ReplyDeleteபாரதியை மிகவும் பிடிக்கும் என்றாலும் பாரதியைப் பற்றி இதுவரை நான் பதிவு அதுவும் போட்டதில்லை.
இப்போது திருநெல்வேலி சென்ற பொது கூட கடையம் சென்ற பார்க்க முடியுமா? என்று கேட்டேன். அது பயண திட்டத்தில் வராது என்று கூறி விட்டார்கள்.
வாங்க பானுமதி, நாங்களும் கடையம் போக நினைத்து நேரப் பற்றாக்குறை! பார்க்கவேண்டிய பட்டியல் பெரிசு. ஆனால் நேரம் இல்லாமையால் சில இடங்கள் பார்க்கவில்லை. டிக்கெட்டை வாங்கிட்டோம்! அப்போல்லாம் தேதியைத் தள்ளிப் போடும் வசதி இருக்கவில்லை! :) இப்போன்னா தேதியைத் தள்ளிப் போட்டுட்டுப் பார்த்துட்டு வந்திருக்கலாம்.
Deleteபேத்திக்கு நட்சத்திர பிறந்த நாளா? தேதியா? எதுவாக இருந்தாலும் ஆயுள், ஆரோக்கிய ப்ரார்த்திரஸ்து என்று வாழ்த்துகிறேன்.
ReplyDeleteபானுமதி, நக்ஷத்திரம் ஆகஸ்டிலேயே இந்த வருஷம் வந்து விட்டது. அது கொண்டாடியாச்சு! இது பிறந்த ஆங்கிலத் தேதி! உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபாரதியின் நினைவுநாளுக்கு இனிய பதிவு. அவசரமாக தயாரித்து வெளி வந்திருப்பினும் மிக அழகான பதிவு.
தங்கள் பேத்தி குட்டி குஞ்சுலுவுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்ல நலன்களும் பெற்று,பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். பேத்திக்கான பாரதி பாட்டும் அருமை. மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, அவசரம்னா உண்மையான அவசரம்! என்றாலும் எல்லோரும் குறைகளைப் பொருட்படுத்தாமல் வாழ்த்திட்டாங்க! :) உங்களுக்கும் நன்றி.
Delete///இன்னிக்குக் குட்டிக் குஞ்சுலுவுக்கு 2 ஆம் பிறந்த நாள்.///
ReplyDeleteஅப்போ குட்டி கொஞ்சம் வளர்ந்திட்டாவோ... பல் கலையும் பெற்றுப் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்...
இங்கு ஒரு சுவீட் 16 ல அதிரா எனும் குட்டி அக்கா இருக்கிறா எனவும் சொல்லி வையுங்கோ கீசாக்கா குட்டிக் குஞ்சுலுவிடம்:)) சரி சரி இதுக்கெல்லாம் முறைக்கக்கூடா:)) கர்ர்ர்ர்ர்ர்:))
ஹாஹாஹா, அதிரடி, அதிரடி அதிரானு ஒரு பாட்டி இருக்கிறதைச் சொல்லி இருக்கேனே! அது யாரு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வீட் 16? :)))))
Deleteஇருப்பினும் கீசாக்கா எப்பவுமே பழசையே திரும்பத்திரும்ப நினைவு கூருவதோடு.. புதுசா வருவதையும் கொஞ்சம் கொண்டாடி விமர்சிக்கலாமெல்லோ:)).. அந்தக் குறும்படத்துக்குப் பிறகு.. எந்த விமர்சனத்தையும் கொண்டு வாறீங்க இல்ல:).. சண்டைப்பிடிக்க முடியாத போஸ்ட்டாகவே போட்டுத் தப்பிடுறீங்க:)) ஹா ஹா ஹா..
ReplyDeleteஎந்தக் குறும்படம் ஞானி? விமரிசிக்கும்படி இப்போ எதுவும் படிக்கலை, சினிமாக்கள், தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்னு பார்க்கலையே! நீங்க சண்டை போடறதுக்குப் போஸ்ட் வேணுமா என்ன? அப்படி இல்லைனே சண்டை போடலாமே! :))))
Deleteஉங்கள் குட்டிக் குஞ்சுலுவுக்கு எங்கள் இருவரின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
ReplyDeleteநன்றி துளசிதரன்.
Deleteஅதற்குள் குட்டிக் குஞ்சுலுவுக்கு இரண்டாம் பிறந்த நாள் வந்துவிட்டது!!! நான் வளர்கிறேன் மம்மினு !!! குழந்தை நன்றாக வளர்ந்து நல்ல மனுஷியாக பல்லாண்டுகள் வாழ்ந்திட பிரார்த்தனைகள்!!!
ReplyDeleteகீதா
பாரதியின் நினைவுநாள் பதிவு ஷார்ட் அண்ட் ஸ்வீட்..
ReplyDeleteகீதா
நன்றி கீதா!
Deleteஅசோ...என் கமெண்ட் காணோமே..
ReplyDeleteபாரதியின் புகழ் வாழ்க...
குட்டிமாக்கு எனது வாழ்த்துக்களும்...
நன்றி அனுராதா. ஸ்பாமில் கூடத் தேடிட்டேன். வேறே ஏதும் இல்லை. ஸ்ரீராமும் இப்படித் தான் சொன்னார். ஆனால் இப்போ எல்லாக் கமென்ட்ஸும் மெயில் பாக்ஸுக்கு வருது! ஆகவே அங்கேயே பார்த்துடறேன். இங்கேயும் தேடிட்டேன். கிடைக்கலை!
DeleteLeave for two days. Will come on Friday evening. Thanks to all.
ReplyDeleteபாரதி பிறந்த நாள் சிறப்பு பகிர்வு... மகிழ்ச்சி.
ReplyDeleteரெண்டு நாள் லீவா... எஞ்சாய்.
குட்டிக்குஞ்சுலுவுக்கு வாழ்த்துகள். பாரதியும் ஸ்லாகித்திருக்கிறாரே!
ReplyDeleteஎன்னுயிரே கண்ணம்மா.,பட்டுக் குஞ்சுலுவுக்கும் அன்று பிறந்த நாளா.
ReplyDeleteநன்றாக ,நல்ல ஆரோக்கியமாக இருக்கணும்.
இந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் பாதுகாப்பாக அவளைக் காக்கும்.