எப்போவும் அவசரம் அவசரமாகப் போய் தரிசனம் செய்தேன்னு பெயர் பண்ணிக்கொண்டு வருவோம். மாவிளக்குப் போடுவது ஒன்றே முக்கியமாக இருக்கும். சாவகாசமாப் பார்த்தே எத்தனையோ வருஷங்கள். இம்முறை ரொம்பவே நிதானமாப் பார்க்க முடிஞ்சது. அவசரம் இல்லாமல் ஒவ்வொரு சந்நிதியும் ரசிச்சு ரசிச்சுப் பார்த்தேன்.
பிள்ளையாரிடம் இருந்து திரும்பினோமானால் பிரகாரத்தின் மதில் சுவரில் தூண்களுக்கு இடையே சிற்ப அற்புதங்கள் காணலாம். இவர் அர்த்தநாரீசுவரர்! இந்தக் கோயில் ராஜ ராஜ சோழன் காலத்துக்கு முந்தையது எனச் சொல்கின்றனர். அப்போதைய வழக்கப்படி கருவறைக்கு மேல் விமானமே பெரிதாக வெளியே பார்த்தால் தெரியும்படி கட்டி இருந்திருக்கின்றனர். இப்போதைய ராஜகோபுரம் கட்டிப் பதினைந்து வருடங்களுக்குள் தான் ஆகிறது. பிற்காலச் சோழர் காலத்திலும், பிற்காலப் பாண்டிய, விஜயநகர, நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்ட கோயில்களில் தான் ராஜகோபுரம் மிகப் பெரிதாக அமைக்கப்படும் முறை தோன்றி இருப்பதாகத் தெரிய வருகிறது. தென்காசி சிவன் கோயில் ராஜகோபுரம் அப்படிப் பாண்டியனால் கட்டப்பட்ட ஒரு கோயில் ஆகும். மதுரை மீனாக்ஷி கோயில் நாயக்கர் காலத்தில் சீரமைக்கப்பட்டது! கருவறை விமானத்தை விட ராஜ கோபுரம் பெரியதாகக் காணப்படும்.
நம்ம ஆள் ஒருத்தர் இங்கேயும் உட்கார்ந்திருக்கார். அவரை விடுவோமா! பிடிச்சு வைச்சாச்சு!
தக்ஷிணாமூர்த்தி! என்ன அழகான கலைவடிவுடன் கூடிய சிற்பம்! இப்போதைய சிற்பங்களில் இத்தகைய அழகு காணமுடியாத ஒன்று.
இவரை எல்லோரும் நிறையத் தரம் பார்த்திருப்பீங்க! நம்ம ரங்க்ஸோட விளையாட்டுத் தோழர். சின்ன வயசில் பள்ளிக்குப் போகும் முன்னர் இவருக்கு எண்ணை முழுக்காட்டிவிட்டுப் பக்கத்திலே இருந்த வீட்டுத் தோட்டத்திலே இருந்து பூக்கள் பறித்து வந்து இவருக்குச் சூட்டிவிட்டுக் கற்பூராதிகள் காட்டிவிட்டு விளக்கும் ஏற்றி வைத்துவிட்டுப் போவாராம். இப்போவும் யாரோ அதைத் தொடர்ந்து செய்வதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷம் அடைந்தார்.
சொல்லவே வேண்டாம், கோஷ்டத்தில் சிவன் சந்நிதிக்குப் பின்னால் விஷ்ணுவும் பிரம்மாவும் இருப்பார்கள் என்னும் நியதிக்கு ஏற்ப இருவரும் இருக்கின்றனர்.
துர்கை அம்மன், எதிரே சண்டேஸ்வரர்
சண்டேஸ்வரர்
சர்வாங்க சுந்தரி! அம்பாள் மிக உயரமானவள். இவளுக்கு ஒன்பது கஜம் புடைவை கூடச் சில சமயங்களில் பத்தாது. அபிஷேகத்துக்கு முன்னர் எடுத்த படம். உள்ளே அர்த்த மண்டபத்தில் என்னால் ஏற முடியவில்லை. அம்பாள் உயரமான இடத்தில் இருக்கிறாள். அவளை விட ஈசன் சந்நிதி கொஞ்சம் தாழ்வாகவே இருக்கும். முன்னெல்லாம் கோயில் பாழடைந்து கிடந்ததுக்கு இதுவும் ஒரு காரணம் என்பார்கள். இப்போவும் ஈசன் சந்நிதி கொஞ்சம் தாழ்வாகத் தான் இருக்கிறது. அதே மாதிரி! அம்பாள் சந்நிதிக்குக் கொஞ்சம் படிகள் ஏறித்தான் மேலே போகணும்! ஒரு வேளை இந்தக் கோயில் பின்னால் வந்திருக்கலாமோ என்று ஒரு சந்தேகம்.
பக்கத்தில் அம்மன்குடி என்னும் ஊர் இருக்கிறது. அங்கே இருந்து தான் அம்பாள் ஈசனைத் திருமணம் செய்து கொள்ளும் முன்னர் சர்வாங்கமும் அலங்கரித்துக் கொண்டு சர்வாங்க சுந்தரியாக இங்கே வந்தாள் எனவும் மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதால் உயரமான இடத்தில் அனைவரும் பார்க்கும்படி காணப்படுகிறாள் என்றும் சொல்கின்றனர். இது குறித்த மேலதிகத் தகவல்களைப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
அபிஷேகம், அலங்காரம் ஆகி தீபாராதனைக்கு முன்னர் அம்பிகை! கொஞ்சம் சரியா வரலை தான். பின்னால் விளக்கு ஒளி என்பதோடு அர்த்த மண்டபத்திற்குள் என்னால் ஏறிப் போய்ப் படம் எடுக்க முடியலை! அதோடு அர்த்த மண்டபத்துக்குள் எடுப்பதைத் தடையும் செய்திருக்கின்றனர். இது எடுத்ததே பெரிய விஷயம்!குருக்கள் ஏதேனும் சொல்வாரோ என பயமாகவே இருந்தது.
இங்கிருந்து அடுத்து பரவாக்கரை சென்றோம். அங்கே முதலிலேயே பெருமாள் கோயிலை அடைந்தோம். நாங்க ஏற்கெனவே அபிஷேகம் பூர்த்தி செய்துவிட்டதால் அபிஷேகம் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் அங்கே அபிஷேகம்!
இம்முறை தலைப்பை மாற்றி இருக்கேன் கொஞ்சமா! ஆகவே படித்த பதிவுனு நினைக்க வேண்டாம். :)
படங்களும் விளக்கங்களும் அருமை.
ReplyDeleteவாழ்க நலம்
வாங்க கில்லர்ஜி, நன்றி.
Deleteமுதன் முதலா 1995 வாக்கில் இந்தக் கோயிலைப் பற்றி மங்கையர் மலரில் படித்தேன்..
ReplyDeleteரொம்பவும் விஸ்தாரமா எழுதியிருந்தாங்க... அதுவும் கூட
அந்த ஊரில் உள்ள ஆஞ்சநேயர் மூலமாகத் தான் இந்தக் கோயில் வெளிப்பட்டது என்றார்கள்..
ஆஞ்சநேயர் கோயில் திருப்பணிக்கு நிதி கேட்க
அதைக் கொடுத்தார் - அந்த இறையன்பர்...
அதற்கு மேல் தகவல் வராததால்
திருப்பணி எவ்வளவு தூரம் நடந்துள்ளது என்பதை அறிந்து வருவதற்காக
சென்னையிலிருந்து ஒருவரை அனுப்பினார்..
அவர் அங்கிருந்து கருவிலி கிராமத்துக்கு வந்து
ஆஞ்சநேயரையும் மற்றதையும் சுற்றிப் பார்த்துவிட்டு
பெரிய சிவன் கோயில் ஒன்று பாழடைந்து கிடப்பதைப் பற்றிச்
சென்னைக்குப் போய்ச் சொல்ல நல்ல காலம் பிறந்தது..
- என்பதாக எழுதியிருந்தார்கள்...
அடுத்த முறை போகும் போது
அந்த ஆஞ்சநேயரையும் பிடித்துக் கொண்டு வந்து போடுங்கள்...
ஆனாலும் பாருங்கள்...
கருவிலி திருக்கோயிலைத் தரிசிக்க ஆசையிருந்தும்
இன்னும் அதற்கான அடி எடுத்து வைக்கவில்லை...
வாங்க துரை, இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. நான் கல்யாணம் ஆகி வந்ததில் இருந்தே இந்தக் கோயிலில் ஒரு வேளை வழிபாடும் நிவேதனமும் பரம்பரை குருக்களால் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கோயில் மதில் சுவர்கள் எல்லாம் இடிய ஆரம்பித்திருந்தன. கோயிலில் வௌவால்கள் வாசம் செய்து கொண்டிருந்தன. கோயில் பக்கத்திலும் பின்னாலும் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. அந்த நிலத்தைக் குத்தகை எடுத்து என் மாமனார் சில வருடங்கள் காய்கறிகள் போட்டு வந்ததாக என் கணவர் சொல்லி இருக்கார். பின்னால் அவர் படிப்புக்கு வெளியூர் போகவும் கவனிக்க ஆள் இல்லாமல் தொடரவில்லையாம். ஆனால் நான் கல்யாணம் ஆகி வந்ததில் இருந்து கருவிலியில் இருக்கும் நாட்களில் எல்லாம் சிவன் கோயிலுக்குப் போய் வந்திருக்கேன். குடிநீர் அங்குள்ள கிணற்றில் இருந்து தான் எடுத்து வருவோம்.
Deleteஊருக்குள் நுழையும் இடத்தில் ஆஞ்சநேயர். அவர் பின்னால் வந்தவர் என்றே நினைக்கிறேன். திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முதலில் அந்த ஆஞ்சநேயருக்குத் தான் கும்பாபிஷேகம் செய்வித்தார். அதன் பின்னரே சிவன் கோயில் திருப்பணிகளை அவரால் தொடர முடிந்தது. அவருக்குச் சொன்னவர்கள் முதலில் ஆஞ்சநேயருக்கு முடிச்சுட்டுப் பின்னர் சிவன் கோயிலுக்குத் திருப்பணியைத் தொடரச் சொன்னதாகச் சொல்கின்றனர். கோயில் ஆஞ்சநேயரால் வெளிப்படவில்லை. ஏனெனில் கல்கி குழுமத்துக்குச் சேர்மனாக இருந்து வந்த திரு வைத்தியநாதன் திரு விகே எனப்படும் கிருஷ்ணமூர்த்தியின் சொந்த அண்ணா. ஆகவே அவருக்குத் தெரியாதது இல்லை! கோயிலுக்குத் திருப்பணி செய்கையில் முதலில் ஆஞ்சநேயருக்குச் செய்துட்டுப் பின்னர் ஆரம்பித்தனர்.
Deleteகருவிலி கொட்டிட்டை என்பது தேவார திருவாக்கு...
ReplyDeleteஇங்கே வந்து தரிசனம் செய்தவர் கரு இலி ஆகிவிடுவர் என்பது ஐதீகம்..
அதாவது மறுபடியும் கருவில் உருவாக மாட்டார் - என்பது பொருள்...
இதைத் தான் அபிராமி பட்டரும் சொல்கின்றார்...
ஆமாம் துரை. கொட்டிடைத் தாளம் பற்றி ஏற்கெனவே ஒரு சில பதிவுகள் போட்டிருக்கேன். நீங்க சொல்வது சரிதான். இந்த ஊரில் தரிசனம் செய்தவர்களுக்குப் பிறவி இல்லை என்பார்கள். அப்பர் பெருமான் பதிகம் உள்ளது. அடுத்த பதிவில் பகிர்கிறேன்.
Delete>>> கருவிலிக்குச் சென்ற விபரங்கள் 2 இது புதுசுங்க!...<<<
ReplyDeleteஎப்படியெல்லாம் ஏவாரம் பண்ண வேண்டியிருக்கு!..
பேசாம -
புதுசு கண்ணா புதுசு!... - ந்னு பேர் வெச்சிருக்கலாம்...
கெக் கெக் கெக் கே...
Deleteதுரை, எல்லாம் இந்த நெ.த.வா. வந்தது. அவர் தான் இதெல்லாம் பழைய பதிவுனு நினைச்சுக்கறார். எங்கள் ப்ளாகில் பதிவு வெளியானதும் கீழே எத்தனை மணி நேரம் ஆகுது பதிவு வெளியாகினு போட்டிருக்கும். அதைப் பார்க்கவே மாட்டார் போல! :)))) எல்லாப் பதிவையும் பழசுனு நினைச்சால் என்ன செய்யறதாம்?
Deleteகில்லர்ஜி, இதுவும் நல்லாத் தான் இருக்கு.
Deleteஇஸ்கி இஸ்கி இஸ்கி:)
Deleteஅது இஸ்கி எல்லாம் இல்லை. இஃகி, இஃகி, இஃகி! (தமிழ்ச் சிரிப்பு)
Deleteஆஹா என் பிரெண்ட்ஸ் எல்லோருமே அழகழகா உடுப்புப் போட்டு வெளிக்கிட்டு நிற்பதைப் பார்க்கவே ஆசையா இருக்கு...
ReplyDeleteநம் சின்ன வயதுக் கோயில்கள் பார்த்தால் சொல்ல முடியாத மகிழ்ச்சிதான்.
அண்ணன் வந்திருந்தார் இப்போ, அவர் எங்கட சின்ன வயசில் கும்பிட்ட வைரவ கோயில் படம் காட்டினார்.. பார்க்க நெஞ்சுக்குள் என்னமோ செய்தது.
அப்போ ஒரு ரொயிலெட் சைஸ்லயே கட்டிடம் அதில் வைரவர் சூலம்.. அதுதான் கோயில்...
இப்போ கொஞ்டம் பெரிசாக்கி மண்டபம் கட்டியிருக்கினம்.
ஆமாம், அதிரடி, இது மிகப் பழமையான கோயில்! பார்க்கப் பார்க்க நல்லா இருக்கும்.
Delete///
ReplyDeleteஇம்முறை தலைப்பை மாற்றி இருக்கேன் கொஞ்சமா! ஆகவே படித்த பதிவுனு நினைக்க வேண்டாம். :)
///
நீங்க என்னதான் தலை கீழாக நின்று தலைப்பை மாத்தினாலும் நெ தமிழன்.. பழைய போஸ்ட் எனத்தானே நினைச்சார்ர்... இஸ்கி இஸ்கி:)
குருவே...
Deleteநீங்க வந்துட்டீங்களா!..
கிக் கிக் கிக் கீ!...
@அதிரா ஞானி - 11ம் தேதிதான் ஸ்கூல் திறக்கிறது. இப்பவே ஹாஸ்டலுக்கு யார் வருவது?
Deleteஹா ஹா ஹா ஹா பூஸாரே நெ த அப்படித்தான் சும்மா படத்தைப் பார்த்துட்டு சொல்லிப்புட்டார்...அக்கா பாவம் எவ்வளவு ரசித்து ஒவ்வொரு படமும் நம்ம ஃப்ரென்ட்ஸ் எல்லாம் எடுத்து போட்டுருக்காங்க...!!! இப்படிச் சொல்லலாமா....இஃகும் இஃகும்...!!!!!
Deleteகீதா
அதிரடி, நெல்லைக்கு ஒண்ணுமே தெரியலை! கொஞ்சம் பாடம் எடுக்கணும்! :))))
Deleteஆஹா, துரை, ஞானி உங்க குருவா? தெரியவே தெரியாதே! ஙே!!!!!!!!
Deleteஆஆவ்வ்வ்வ் மீ இப்போ குருவாகிட்டேன்ன்ன்:)..
Deleteநெ தமிழன் புரொபிஸரே இங்கு ஸ்கூல் யுனி எல்லாமே ஆரம்பமாச்சூஊ அதனாலதான் என்னால முடியுதில்ல... கொஞ்டம் லைவ் ஸ்டைலை மாத்தவேண்டிக்கிடக்கூஉ:)
கீத்ஸ்... அந்த அக்கன்னா எங்க இருக்கு என அடிக்கடி மறந்திடுறேன்:) மொபைலில் காணல்ல:) அதனாலதான் சிரிப்பு மாறிப்போட்ச்ச்ச்ச்:) இஸ்கி இஸ்கி... ஹா ஹா ஹா
ஞானி, கீதா சொல்லி இருப்பதும் தப்பு! இஃகும் இஃகும் இல்லையாக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒருத்தருமே ஒழுங்காப் படிக்கிறதில்லை!
Deleteகீதா சாம்பசிவம் மேடம் - பிடிங்க என் பாராட்டை. இந்தத் தடவை எல்லாப் படங்களும் நல்லா எடுத்திருக்கீங்க. அந்த சின்னப் பிள்ளையார் சிலையை (தூணில்) பார்த்த உடனேயே உங்கள் கணவர் சிறு வயதில் வழிபட்ட பிள்ளையார்போல் இருக்கிறதே என நினைத்தேன். நீங்கள் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteசர்வாங்கசுந்தரி - பிரம்மாண்டமான சிலை. நல்ல தரிசனம்.
ஹிஹிஹி, நன்றி நெ.த.
Deleteகீசாக்கா அது வஞ்சகப் புகழ்ச்சி:) அது தெரியாமல்:), மதுரைக் காரங்க விபரமானவங்க என்பதையும் தாண்டி உப்பூடிச் சிரிக்கலாமோ:)...
Deleteநான் வந்திட்டேனெல்லோ இனி உங்களுக்கெல்லாம் சிரிப்பதும் கஸ்டமாகப் போகுதூஊஊஉ ஹா ஹா ஹா
ஞானி, போனால் போகட்டும்! அவர் வஞ்சப்புகழ்ச்சிக்குச் சொன்னாலும் மதுரைக்காரங்க விபரமானவங்க தான்! :))))
Deleteபொதுவா, என் கருத்து, பழைமையை மாற்றாமல் புதுசு படுத்தணும். சும்மா கோவில் கோபுரங்களின் சிலைக்கு பெயிண்ட் அடிப்பது, புதுசா இருக்கிற அமைப்பை மாற்றி கோபுரம் வைப்பது (உடைந்து அல்லது சிதைந்து போயிருந்தால் தவிர) என்பதெல்லாம் எனக்கு உடன்பாடல்ல. ஒன்றை மாற்றும்போது நாம் வரலாற்றை மாற்ற முனைவதாகத்தான் அர்த்தம். (உதாரணமா ஸ்ரீரங்கம் கோவிலில் பெரியவாச்சான் போன்றோர் அமர்ந்திருந்து ப்ரபந்த காலக்ஷேபத்தைக் கேட்ட இடத்தில் இப்போது பெரியதாக நாமம் பெயிண்ட் பண்ணப்பட்டிருக்கிறது என்று ஒரு இடுகையில்-சுஜாதா தேசிகன் - படித்தேன். தேசிகனுக்கு, இதுதான் அந்த இடம் என்பது ஒரு பெரியவர் அங்கு சென்று அந்த இடத்தைத் தொட்டு வணங்கியதால்தான் தெரியவந்ததாம்)
ReplyDeleteஆமாம் நெ.த. இந்தக் கோயிலில் அப்படித் தான் புதுசு பண்ணி இருக்காங்க! அதே பரவாக்கரை பெருமாள் கோயிலில் கல்வெட்டுகள் எல்லாம் பெயர்த்து எடுத்து விட்டார்கள்! :( நாங்க கிட்டே இருந்து சொன்னோம். அப்படியும் தடுக்க முடியலை! ஶ்ரீரங்கம் கோயிலில் பல மாற்றங்கள்! :(
Deleteஅர்த்த மண்டபத்துக்குள் புகைப்படம் எடுப்பதைத் தடை செய்தது சரியான நோக்கத்தில்தான். இல்லைனா எல்லாரும் மொபைலில் காணொளி, புகைப்படம் எடுப்பதிலேயே குறியாக இருப்பார்கள், மற்றவர்கள் பக்தி செய்ய இடைஞ்சலாக இருக்கும். த்வஜஸ்தம்பம் தாண்டிவிட்டால் நம்ம எண்ணம் முழுவதும் மூலவரிடம்தான் இருக்கணும் என்பது நல்ல நோக்கம்தானே.
ReplyDeleteஆமாம், அதனால் தான் நான் அபிஷேஹம் ஆரம்பிக்கும் முன்னரும் எல்லாம் முடிந்ததும் எடுத்தேன்.
Deleteஇம்முறை ரொம்பவே நிதானமாப் பார்க்க முடிஞ்சது. அவசரம் இல்லாமல் ஒவ்வொரு சந்நிதியும் ரசிச்சு ரசிச்சுப் பார்த்தேன். //
ReplyDeleteஅதான் படங்களும் அழகா அழகா ஒவ்வொன்றும் வந்திருக்கு போல!
ரொம்ப அழகான படங்கள். விஷயமும் தெரிந்து கொண்டோம் அக்கா
கீதா
வாங்க தி.கீதா, மாமாவோடு போனா எப்போவும் காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்டு போகணும்! அவருக்கு அவசரம் அவசரமா எல்லாத்தையும் முடிச்சுட்டு மத்தியானமே வீட்டுக்கு வந்து தூங்கணும். மத்தியானப் பொழுது வீணாகக் கூடாதுனா தூங்கினாத் தான்! அப்படி ஒரு கொ"ல்"கை! :))))) நிறையச் சண்டை போட்டுப்போம் இதுக்காகவே! :)))
Deleteஅது அமண்குடி இல்லையோ? அப்படித்தானே பாலகுமாரன் உடையார் நாவலில் எழுதியிருப்பார். (கருவூர்த் தேவர்?). அந்த ஊர்தானே
ReplyDeleteநெ.த. அம்மன்குடி பத்தி ஏற்கெனவே எழுதின நினைவு. சோழ அரசன் ஒருவனின் படைத்தளபதியால் கட்டப்பட்ட கோயில்! அம்மன் அங்கே துர்கையாக அருள் பாலிக்கிறாள். போரில் வெற்றி கிடைத்ததற்காகக் கட்டிய கோயில்னு நினைக்கிறேன். எதுக்கும் சரி பார்த்துட்டுச் சொல்றேன்.
Deleteநான் பாலகுமாரன் எழுத்தைப் படிச்சே எத்தனையோ வருடங்கள்! அதிலும் உடையார்! வாய்ப்பே இல்லை! எனக்கெல்லாம் அவ்வளவு பொறுமை கிடையாது!
Deleteநேற்றைய பதிவும் பார்த்டுவிட்டேன் இன்றைய பதிவும் பார்த்துவிட்டேன். தொடர்ச்சி என்பதால். படங்கள் அருமை. இந்த இடம் எல்லாம் சென்றதில்லை. பெயருமே உங்கள் பதிவில் தான் அறிகிறேன். நேற்றைய பதிவில் ஆறு அழகாக இருக்கிறது. இன்றைய படங்களும் அம்மனும் வெகு சிறப்பு. உங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் நல்லபடியாக நிறைவேறிட பிரார்த்தனைகல் சகோதரி
ReplyDeleteதுளசிதரன்
நன்றி துளசிதரன்.
Deleteகீதாக்கா அந்த தூண் பிள்ளையார் ரொம்பவே அழகு செம!!!
ReplyDeleteகீதா
ஆமாம்,குட்டியா இருப்பார்!
Deleteகருவிலி - இம்முறை படங்கள் நின்று நிதானமாக எடுத்திருப்பது போலத் தெரிகிறது!
ReplyDeleteகுளம் அழகாக இருக்கிறது. கோவில் பற்றிய விவரங்களும் நன்று.
நன்றி வெங்கட், படிகள் எல்லாம் பின்னாட்களில் எழுப்பப்பட்டவை! நாங்க குளிக்கும்போதெல்லாம் கரை தான்! அதில் இறங்கித் தான் குளிச்சிருக்கோம்.
Deleteஅன்பு கீதா மா. படங்களில் பிரம்மாவின் அழகு விஷ்ணுவுக்கு இல்லை. ஒவ்வொரு
ReplyDeleteபடமும் நிதானமாக எடுத்து அழகாகப் போட்டிருக்கிறீர்கள்.
கருவிலி என்பதற்கு இதுதான் அர்த்தமா.
குளத்தில் நீர் நிறைந்து பார்க்க வளமாக இருக்கிறது.
வருடத்திற்கு இரு முறை கருவிலி செல்வீர்களோ.
உங்கள் பிரார்த்தனைகளில் பின் வரும் சந்ததி வாழ்கிறது. மனம் நிறை வாழ்த்துகள்.
வாங்க வல்லி, விஷ்ணுவின் முகம் கொஞ்சம் தழும்புகளாய் ஆகி இருக்கு! வருடத்திற்கு இருமுறை போனதெல்லாம் சென்னை அம்பத்தூரில் இருக்கும்போது! :))) இப்போ அநேகமா மாசா மாசம்போறாப்போல ஆயிடுது! :)
Deleteஎங்களையும் அழைத்து சென்று விட்டர்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteநன்றி டிடி. உங்களுக்குத் தகவல் கொடுத்திருக்கேன். முடிஞ்சப்போப் பார்க்கவும்.
Deleteராஜராஜன் காலத்துக்கும் முந்தையதா? அடேங்கப்பா... எவ்ளோ பழசு!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், சஷ்டிஅப்தபூர்த்தி எல்லாம் முடிஞ்சதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லவே இல்லை! :)))) ஆமாம், ராஜராஜன் காலத்துக்கு முந்தையது இந்தக் கோயில். பக்கத்து ஊரான கோனேரிராஜபுரம், (பொன்னியின் செல்வனில் திருநல்லம் என்னும் பெயரில் வரும்) செம்பியன் மாதேவி காலத்தில் கற்றளிக்கோயிலாக மாறியது. அந்த ஊர் நடராஜர் உண்மையாகவே நகங்கள், கன்னத்து மரு எல்லாவற்றுடனும் சிவகாமசுந்தரி சமேதராகக் காட்சி அளிப்பார்.
Deleteகருவறை விமான அளவு, கோபுர அளவு விவரங்கள் நுணுக்கமானவை. நினைவில் இருக்கவேண்டும்!
ReplyDeleteஶ்ரீராம், ஒரு சில பயணக் கட்டுரைகளில் அதெல்லாம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன். சிலருக்குப் பிடிக்கலை. நிறுத்திட்டேன்.
Deleteஎம தீர்த்தக் குளத்தில் நீர் நிறைந்திருப்பதே கண்கொள்ளாக் காட்சி. படங்கள் இதை முறை நிறையவே பகிர்ந்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஅந்தக் குளம் நீரோடு நான் பல முறை பார்த்திருக்கேன். அதன் பின்னரே சமீபகாலங்களில் நீரில்லாமல் போனது. இன்னும் பரவாக்கரைப் படங்கள் இருக்கின்றன. அடுத்து வரும்! :)
Deleteஆஸ்தான பிள்ளையார் மாமாவைப் பார்த்ததும் புன்னகைத்தாரா?
ReplyDeleteஇன்றைக்கு ஏன் பூ கொண்டுவரலைனு அவர்ட்ட கேட்பதுபோல் எனக்குத் தோன்றியது.
Deleteஶ்ரீராம், நெ.த. மாமாவைப்பார்த்துப் பிள்ளையார் புன்னகைத்தாரோ இல்லையோ அவருக்கு சந்தோஷம். ஓரிரு முறை பூ வைக்கப்படாமல் இருந்தபோது அங்கிருந்த பூச்செடியிலிருந்து பறிச்சு வைச்சிருக்கார். இப்போதெல்லாம் யாரோ அவருக்கு வழிபாடு செய்துடறாங்க!அலங்காரத்துடன் இருக்கார்.
Deleteஇப்போவும் யாரோ அதைத் தொடர்ந்து செய்வதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷம் அடைந்தார். // கேட்கவே சந்தோஷமா இருக்கு
ReplyDeleteஆஹா கருவிலினதும் இவர்தான் முதலில் நினைவுக்கு வருவார் உங்க பதிவில் எனக்கு .
.கடைசிக்கு முந்தின படத்தில் பிம்பம் தரையிலும் ஜெக ஜோதியா தெரியுது .
ஆமாம், ஏஞ்சல், உண்மையாவே சந்தோஷமாத் தான் இருந்தது. கடைசிப் படத்திலும் தரையில் பிம்பம் விழுந்திருக்கே. நான் எடுத்ததுமே போட்டுப் பார்த்தேன்! எனக்கே ஆச்சரியமா இருந்தது எடுத்தது நானானு! :))))
Deleteஹா ஹா !! ஆமாக்கா :) சாமி படங்களை மட்டும் உத்து கவனிச்சதில் இயற்கையை சரியா கவனிக்கலை .செம அழகு
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅழகான படங்கள்.சர்வாங்க சுந்தரி அம்பாள் உயரமாக மிகவும் அழகாக இருக்கிறார். அவரை பற்றிய விபரங்களுடன் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். குளக்கரை, தூண் பிள்ளையார், அம்பாள், துர்க்கை சண்டிகேஸ்வரர் என அனைத்துப் படங்களும் அழகாக உள்ளன. இந்தக் கோவிலை தரிசித்தால் மறுபிறவி இல்லாமல் போகும் என்றதும் தரிசிக்கும் ஆசை வருகிறது. அதற்கு அந்த ஈசன் துணையை வேண்டுகிறேன். தங்களுடன் நானும் தரிசித்த உணர்வை ஏற்படுத்திய தங்கள் பதிவுக்கு நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.