கருவிலி சர்வாங்கசுந்தரி சமேத சற்குணேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதற்குப் பிரார்த்தித்து இருந்தோம். அதைப் பூர்த்தி செய்ய சென்ற வாரம் 30 ஆம் தேதி தான் முடிந்தது. அன்று காலை ஏழரைக்குள்ளாக வரும்படி குருக்கள் சொல்லி இருந்ததால் முதல்நாளே தேவையான பூக்கள், மாலைகள், அம்மனுக்கும் சற்குணேஸ்வரருக்கும் ஆன வஸ்திரங்களை வாங்கித் தயார் செய்து கொண்டு வியாழன் அன்று காலை நான்கு மணிக்கெல்லாம் ஸ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பிட்டோம். வழக்கம் போல் கையில் இட்லி, காஃபி எடுத்துக் கொண்டோம். மதியத்துக்குக் கோயிலில் தயிர் சாதம் பிரசாதம் கேட்டிருந்ததால் அங்கே வாங்கிச் சாப்பிட்டுக்கலாம் என்பது எண்ணம். கூடியவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் என்பதே முக்கியம். இப்போது கல்லணைப் பகுதியில் செல்ல முடியும் என்பதால் அந்த வழியிலேயே சென்றோம். சரியாக ஏழரைக்கெலலம் போய்ச் சேர்ந்துட்டோம். போனவுடன் கையில் கொண்டு போயிருந்த இட்லி, காஃபியைச் சாப்பிட்டு முடித்துக் கொண்டோம். அதற்குள்ளாக குருக்கள் அபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அபிஷேகம் ஆரம்பம் ஆகி ஸ்வாமி சந்நிதியில் முடிந்தது. அடுத்து அம்பாள் சந்நிதிக்குப் போவோம்.
புதூர் அருகே கொஞ்சம் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
கருவிலிக்கு அருகே சுத்தம் செய்யப்பட்டிருக்கும் பகுதியில் அரிசிலாறு
கூந்தலூரில் இருந்து கருவிலி செல்லும் வழியில் கடக்கும் பாலம். இதற்குக் கொஞ்சம் தள்ளி மூங்கில் பாலம் இருந்தது. முன்னால் எல்லாம் அந்தப் பாலத்தில் தான் கூந்தலூரில் இறங்கி நடந்து செல்வோம். இப்போ இந்தப் பாலம் கட்டி இருபது வருடங்களுக்குக் கொஞ்சம் மேலே இருக்கும்.
ராஜகோபுரம் பழைய படம். இந்த முறை கோபுரத்தை எடுக்கலை!
இந்தப் படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினமணி.காம் நான் எடுத்திருந்த பழைய படங்கள் சரியாக் கிடைக்கலை. இது ஒன்று மட்டும் கூகிளார் கொடுத்தது. மற்றக் கீழே உள்ள படங்கள் எல்லாம் இம்முறை எடுத்தவை!
சற்குணேஸ்வரர்! மிகப் பெரிய லிங்கம், மிகப் பெரிய அம்பாள்! கோபுரம் படம் இம்முறை எடுக்கலை. பல முறை போட்டிருப்பதால் வேண்டாம்னு விட்டுட்டேன்.
நம்ம ஆளு! சந்நிதியின் நுழைவாயிலில் வீற்றிருப்பார். பிராகாரத்தில் கோஷ்டத்தில் இடம் பெற்றிருக்கும் தெய்வங்களையும் இம்முறை எடுத்திருக்கேன். அவை அடுத்து வரும்.
அன்னை சர்வாங்க சுந்தரி உடனாகிய சற்குணேஸ்வரர் திருவடிகள் போற்றி.. போற்றி...
ReplyDeleteநன்றி துரை!
Deleteகருவிலி படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி. இன்னும் வரும். இம்முறை விடுவதாக இல்லை! :)
Deleteபடங்களுடன் படிப்படியாய் வித்தியாசமான பதிவு.
ReplyDelete@ஶ்ரீராம், இஃகி, இஃகி, தாங்கீஸ்ஸ்ஸ்
Deleteகோவில் படங்கள் சிறப்பு. கருவிலி செல்லத் தோன்றுகிறது.
ReplyDeleteபோயிட்டு வாங்க வெங்கட், உங்கள் கோணத்தில் இருந்து ஊரைப் பற்றிய தகவல்கள் படிக்கக்கிடைக்கும்.
Deleteரொம்ப அழகா இருக்கு அக்கா...ஊர். கோபுரம் அந்தப் பாதை அழகு என்றால், அரிசிலாற்றில் ரொம்ப முன்னாடி தண்ணி இல்லாம போட்டிருந்த நினைவு இப்ப அழகா தண்ணீ ஓடுகிறது அழகா சுற்றிலும் பச்சையா அழகா இருக்கு அக்கா...ஒவ்வொரு படமும் விளக்கமும் நன்றாக இருக்கிறது...
ReplyDeleteகீதா
வாங்க தி/கீதா, ஆமாம், சென்ற வருடங்களில் தண்ணீரே இல்லாமல் இருந்தது. இம்முறையும் ஆடி மாதம் ஜூலை 27 ஆம் தேதி நாங்க போனப்போத் தண்ணீரே இல்லை. அடுத்த வாரமே எங்க மைத்துனரும் ஓரகத்தியும் போனப்போ தண்ணீர் வந்து விட்டது! :) மாயவரம் காவிரி தான் பார்க்கக் கஷ்டமா இருக்கு!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதாங்கள் சிரமமின்றி கருவிலி சென்று சர்வாங்கசுந்தரி சமேத சற்குணேஸ்வரரை தரிசித்து வந்தமைக்கு மகிழ்ச்சி.தாங்கள் எடுத்த படங்கள் மிக அருமையாக உள்ளன. அரிசிலாறு இயற்கை வளங்கள், கோபுர தரிசனங்கள், ஈஸ்வர தரிசனம் விநாயகரின் அற்புத அழகு என பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. தங்களால் நானும் கருவிலிக்கு சென்று தரிசனம் செய்த உணர்வை பெற்றேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. காமிரா எடுத்துச் செல்லவில்லை. அலைபேசியில் எடுத்தது தான். ஏனெனில் பையர் தானும் பார்க்கணும்னு சொல்கிறார். அதுக்கு அலைபேசி தான் வசதி! பயந்துண்டே தான் எடுத்தேன். :)
Deleteஅடிக்கடி கருவிலிக்கு சென்று வருகிறீர்கள் நாங்கள் ஒரே ஒருமுறைதான் சென்றுவந்தோம்
ReplyDeleteவாங்க ஜிஎம்பி ஐயா, இங்கே தான் என் மாமனார், மாமியார் இருந்தாங்க! நிலங்கள், தென்னந்தோப்புகள் எல்லாமும் இங்கே தான் இருந்தன.நான் கல்யாணம் ஆகி வந்ததும் இந்த ஊர் தான். ஆகவே அடிக்கடி போறோம். ஒரு வகையில் இதுவும் பூர்விகம் தானே!
Deleteபடங்களுடன் விளக்கங்கள் அருமை அம்மா...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteஇதுக்கு பின்னூட்டம் போட்டேன். இணையப் பிரச்சனை போலிருக்கு.
ReplyDeleteநல்ல சமாளிப்ஸ்! கு.வி.மீ.ம.ஒ.
Deleteஅம்மன் குடி என்பதைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அது அமண்குடி இல்லையா? ராஜராஜசோழனின் அமைச்சர் அன்பில் அநிருத்த பிரம்மராயர் கட்டிய கோவில்தானே இது?
ReplyDeleteசென்ற முறை நீங்கள் கருவேலிக்கு சென்ற பொழுது, அரிசிலாறு சாக்கடையாகிவிட்டது என்று மிகவும் வருத்தப்பட்டு பதிவிட்டிருந்தீர்கள். இப்போது நல்ல நீர் ஓடிக் கொண்டிருப்பது பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDelete