பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1.
14:
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.
ஆய்ப்பாடிக்கொண்டாட்டம்
மேற்கண்ட சுட்டியில் ஆய்ப்பாடியில் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றிய விபரங்களை விரும்பியவர் படிக்கலாம்.
இன்று நம்ம கிச்சாப்பயல், கண்ணனின் பிறந்த நாள். ஒரே நாளைக்கு பக்ஷணங்கள் பண்ண முடியாதுனு நேத்திக்குக் கொஞ்சம் இன்னிக்குக் கொஞ்சம்னு பண்ண நினைச்சுக் காலையிலேயே அரிசியை ஊற வைச்சு எட்டு மணி அளவில் நீரை வடித்து அரிசியை உலர வைத்து இருந்தேன். ஆனால் நேத்திக்குனு பார்த்து இங்கே மின்வெட்டு! ஶ்ரீரங்கம் முழுவதும் மின்வெட்டாம். நல்லவேளையா நம்ம பகுதி வேறே இணைப்பு என்பதால் நம்ம வீட்டிலே மின்சாரம் இருந்தது. நாளை திங்களன்று மின் வெட்டாம் நம்ம பகுதிக்கு! அதை நாளைக்குப் பார்த்துக்கலாம்.
மின்வெட்டு இருந்த பகுதியில் தான் எல்லா மாவு அரைக்கும் மிஷின்களும் உள்ளன. அங்கே போனால் மிஷினே திறக்கலை! அங்கே இருந்து ரங்க்ஸ் தொலைபேசிக் கேட்டார், என்ன செய்யலாம்னு. ஊறிய அரிசியைத் தூக்கிண்டு எங்கே போறது! திரும்ப எடுத்துட்டு வாங்கனு சொல்லிட்டேன். சரி, இந்த வருஷம் கிச்சாப்பயல் தன்னோட வேலையைக் காட்டறான். நீ இங்கே வந்தப்புறமா ஒவ்வொரு வருஷமும் மிஷினில் மாவு அரைச்சுத் தானே பண்ணறே! இந்த வருஷம் பழைய மாதிரி மிக்சியில் அரைச்சே பண்ணுனு சொல்லாம சொல்லிட்டான். நல்லவேளையா நம்ம குடியிருப்பிலேயானும் மின்சாரம் இருக்கேனு நினைச்சேன். சமையலை முடிச்சுட்டு மிக்சியில் பெரிய ஜாரில் போட்டு அரிசியைப் பொடித்துச் சல்லடையில் சலிச்சு மாவாக்கி எடுத்தேன். ஒரு கிலோ அரிசியும் அரைச்சாச்சு. மிக்சி சூடு தணிய நடு நடுவே பத்து நிமிஷம் இடைவெளி! பின்னர் வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டு மதியம் ஒன்றரை மணிக்கு முன்னேயே ஆரம்பிச்சுட்டேன்.
முதல்லே முறுக்கு! பிள்ளையார் பிடிச்சு வைச்சுட்டு ஆரம்பிச்சேன். முறுக்கு சுத்திட்டுப் பின்னர் தட்டை பண்ணி முடிச்சுட்டு எல்லாத்தையும் சுத்தம் செய்துட்டு சமையலறையை விட்டு வரச்சே நாலரை ஆயிடுச்சு! மிச்சம் நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். இன்னிக்கு மத்தியானம் சரியா ஒன்றரைக்கு ஆரம்பிச்சேன். வெல்லச்சீடைக்குப் பாகு வைச்சு மாவில் கலந்து வைச்சுட்டு, வெண்ணைச் சீடை, சீப்பி, கோளோடை, உப்புச் சீடை போன்றவை முடிச்சுக் கொண்டு கடைசியில் வெல்லச் சீடையைப் போட்டேன். முதல்லே வெல்லச்சீடை கொஞ்சம் முகத்தைச் சுணுக்கிக் கொண்டாலும் பின்னர் வந்து விட்டது. அப்புறமாக் கோலத்தைப் போட்டு முடிச்சுட்டுத் திரும்ப வந்து பாயசத்தை முடிச்சேன். வடைக்கு அரைச்சு வைச்சேன். பின்னர் வடையை சூடாப் போட்டுக்கலாம்னு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு கணினிக்கு வந்து உட்கார்ந்தேன். சாயங்காலமா ஏழு மணி போல் நிவேதனம் செய்யணும். படம் எடுத்துப் போடறேன்.
கீழ்த்தட்டு உம்மாச்சிங்களும் பார்த்துண்டு இருக்காங்க! எங்களுக்கு எதுவும் இல்லையானு!
கிச்சாப்பயலுக்குப் பசும்பால், பசு வெண்ணெய், பசுந்தயிர், அவல், வெல்லம், முறுக்கு, தட்டை, உப்புச் சீடை, வெண்ணைச் சீடை, சீப்பி, கோளோடை, வெல்லச் சீடை, வடை, பாயசம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நாவல் பழம்! (ஒரு நாவல் பழம் ஒரு ரூபாயாம்! நாங்க சாப்பிட முடியாது!)கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி!
பலகாயிலே கிச்சாப்பயல்! இன்னிக்குக் குளிச்சான். மல்லிகைப்பூ நான் உதிரி வாங்கித் தொடுத்தேன். துளசி எல்லாம் நேத்தே வாங்கி வைச்சாச்சு. இன்னிக்குக் கிச்சாவுக்குச் சார்த்தியாச்சு. பெரிய கிச்சா பக்கத்திலே புஷ்கரிலே வாங்கின தொட்டில் கிச்சா. சின்னக் கிச்சாவும் உண்டு. இந்தப் பெரிய கிச்சாவுக்கு நடுவிலே இருக்கிறதாலே உத்துப் பார்த்தாத் தான் தெரியும். எல்லா பக்ஷணங்களுமே நல்லா வந்திருக்கு! முறுக்கு தான் சுத்தும்போது முடியாமக் கொஞ்சம் கோணல்! பரவாயில்லைனு விட்டுட்டேன்.
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1.
14:
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.
ஆய்ப்பாடிக்கொண்டாட்டம்
மேற்கண்ட சுட்டியில் ஆய்ப்பாடியில் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றிய விபரங்களை விரும்பியவர் படிக்கலாம்.
இன்று நம்ம கிச்சாப்பயல், கண்ணனின் பிறந்த நாள். ஒரே நாளைக்கு பக்ஷணங்கள் பண்ண முடியாதுனு நேத்திக்குக் கொஞ்சம் இன்னிக்குக் கொஞ்சம்னு பண்ண நினைச்சுக் காலையிலேயே அரிசியை ஊற வைச்சு எட்டு மணி அளவில் நீரை வடித்து அரிசியை உலர வைத்து இருந்தேன். ஆனால் நேத்திக்குனு பார்த்து இங்கே மின்வெட்டு! ஶ்ரீரங்கம் முழுவதும் மின்வெட்டாம். நல்லவேளையா நம்ம பகுதி வேறே இணைப்பு என்பதால் நம்ம வீட்டிலே மின்சாரம் இருந்தது. நாளை திங்களன்று மின் வெட்டாம் நம்ம பகுதிக்கு! அதை நாளைக்குப் பார்த்துக்கலாம்.
மின்வெட்டு இருந்த பகுதியில் தான் எல்லா மாவு அரைக்கும் மிஷின்களும் உள்ளன. அங்கே போனால் மிஷினே திறக்கலை! அங்கே இருந்து ரங்க்ஸ் தொலைபேசிக் கேட்டார், என்ன செய்யலாம்னு. ஊறிய அரிசியைத் தூக்கிண்டு எங்கே போறது! திரும்ப எடுத்துட்டு வாங்கனு சொல்லிட்டேன். சரி, இந்த வருஷம் கிச்சாப்பயல் தன்னோட வேலையைக் காட்டறான். நீ இங்கே வந்தப்புறமா ஒவ்வொரு வருஷமும் மிஷினில் மாவு அரைச்சுத் தானே பண்ணறே! இந்த வருஷம் பழைய மாதிரி மிக்சியில் அரைச்சே பண்ணுனு சொல்லாம சொல்லிட்டான். நல்லவேளையா நம்ம குடியிருப்பிலேயானும் மின்சாரம் இருக்கேனு நினைச்சேன். சமையலை முடிச்சுட்டு மிக்சியில் பெரிய ஜாரில் போட்டு அரிசியைப் பொடித்துச் சல்லடையில் சலிச்சு மாவாக்கி எடுத்தேன். ஒரு கிலோ அரிசியும் அரைச்சாச்சு. மிக்சி சூடு தணிய நடு நடுவே பத்து நிமிஷம் இடைவெளி! பின்னர் வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டு மதியம் ஒன்றரை மணிக்கு முன்னேயே ஆரம்பிச்சுட்டேன்.
முதல்லே முறுக்கு! பிள்ளையார் பிடிச்சு வைச்சுட்டு ஆரம்பிச்சேன். முறுக்கு சுத்திட்டுப் பின்னர் தட்டை பண்ணி முடிச்சுட்டு எல்லாத்தையும் சுத்தம் செய்துட்டு சமையலறையை விட்டு வரச்சே நாலரை ஆயிடுச்சு! மிச்சம் நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். இன்னிக்கு மத்தியானம் சரியா ஒன்றரைக்கு ஆரம்பிச்சேன். வெல்லச்சீடைக்குப் பாகு வைச்சு மாவில் கலந்து வைச்சுட்டு, வெண்ணைச் சீடை, சீப்பி, கோளோடை, உப்புச் சீடை போன்றவை முடிச்சுக் கொண்டு கடைசியில் வெல்லச் சீடையைப் போட்டேன். முதல்லே வெல்லச்சீடை கொஞ்சம் முகத்தைச் சுணுக்கிக் கொண்டாலும் பின்னர் வந்து விட்டது. அப்புறமாக் கோலத்தைப் போட்டு முடிச்சுட்டுத் திரும்ப வந்து பாயசத்தை முடிச்சேன். வடைக்கு அரைச்சு வைச்சேன். பின்னர் வடையை சூடாப் போட்டுக்கலாம்னு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு கணினிக்கு வந்து உட்கார்ந்தேன். சாயங்காலமா ஏழு மணி போல் நிவேதனம் செய்யணும். படம் எடுத்துப் போடறேன்.
நம்ம வீட்டு ராமர் எல்லாத்தையும் பார்த்துட்டு என்னோட பிறந்த நாள் வந்தால் நீர் மோர், பானகம், வடைப்பருப்பு, பாயசம் தான்! வடை கூட எல்லோரும் பண்ணறதில்லை. இது என்ன அநியாயம்! னு நினைச்சுண்டு இருந்தார்.
பலகாயிலே கிச்சாப்பயல்! இன்னிக்குக் குளிச்சான். மல்லிகைப்பூ நான் உதிரி வாங்கித் தொடுத்தேன். துளசி எல்லாம் நேத்தே வாங்கி வைச்சாச்சு. இன்னிக்குக் கிச்சாவுக்குச் சார்த்தியாச்சு. பெரிய கிச்சா பக்கத்திலே புஷ்கரிலே வாங்கின தொட்டில் கிச்சா. சின்னக் கிச்சாவும் உண்டு. இந்தப் பெரிய கிச்சாவுக்கு நடுவிலே இருக்கிறதாலே உத்துப் பார்த்தாத் தான் தெரியும். எல்லா பக்ஷணங்களுமே நல்லா வந்திருக்கு! முறுக்கு தான் சுத்தும்போது முடியாமக் கொஞ்சம் கோணல்! பரவாயில்லைனு விட்டுட்டேன்.
ஆஹா... கிருஷ்ணர் வந்தாச்சு.... படங்கள் பார்த்து ரசித்தேன். இன்னும் சீடை, முறுக்கு இங்கே வந்து சேரவில்லை!
ReplyDeleteகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
வாங்க வெங்கட், மத்தவங்க எல்லாம் பண்டிகை கொண்டாடுவதால் தாமதமாய் வராங்க போல! நீங்க முதல்லே வந்துட்டதாலே வடையைச் சூடா எடுத்துக்கலாம். :)
Deleteகண்ணன் வந்து அத்தனையும் சாப்பிட்டு களித்து இருப்பான்.
ReplyDeleteஎல்லாம் நல்ல ருசி. முறுக்கு கோணலாய் வந்தால் என்ன? ருசிதான் முக்கியம் என்று சொல்லி இருப்பான் கண்ணன்.
படங்கள் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
வாங்க கோமதி, பாராட்டுகள், வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteகஷ்டப்பட்டு கமெண்ட்ஸ் போட்டுட்டு படுக்கப்போனேன். இப்படி காணாம அடிச்சுட்டீங்களே...!!
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர், ஶ்ரீராம், தூக்கக் கலக்கத்திலே பப்ளிஷ் கொடுத்திருக்க மாட்டீங்க! ஸ்பாமிலே கூடத் தேடிட்டேன். குலுக்கிப் பார்த்தாச்சு! எதுவும் இல்லை.
Deleteஇந்த கூகிளார் மூஞ்சியை மாத்தினப்புறமாக் கமென்டை எல்லாம் அனுப்பி வைக்கட்டானு கேட்டு நானும் சரினு சொல்லி இப்போப் பழைய மாதிரிக் கமென்ட் எல்லாம் மெயில் இன் பாக்ஸுக்கு வருது! அதிலே உங்க கமென்ட் எதுவும் வரலை! :(
Deleteமின்சாரம் இருந்தால் என்ன, இல்லைன்னா என்ன? அந்தக் காலத்தில் மின்சாரத்தை நம்பியா பட்சணம் செய்தார்கள்? நம் கடன் பட்சணம் செய்து கிடப்பதே!!! (பாவம் மாமா.. கரண்ட் இல்லாத நேரத்தில் அலைய விட்டுடீங்களே...)
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன ஜிங்க் சக்க சப்தம் ஓவரா இருக்கு! ஸ்ரீராம், நான் கல்யாணம் ஆன வருஷத்திலே இருந்து சுமார் 10,15 வருஷங்கள் மாவு கல்லுரலில் இடிச்சுத் தான் தீபாவளி பட்சணம் கூடச் செய்திருக்கேன். பைல்ஸ் முத்திப் போய் உட்காரமுடியாமல் போய் ஆபரேஷன் ஆனப்புறமாத் தான் என் தம்பி வாங்கிக் கொடுத்த மிக்சியையே பயன்படுத்த ஆரம்பிச்சோம். அப்போக்கூட அம்மியில் அரைப்பதெல்லாம் மிக்சியில் அரைக்கக்கூடாது! :)))) நான் அலைய விடலை மாமாவை! எப்படி இருந்தாலும் அவர் தான் மாவு மில்லுக்குப் போயாகணும். தெற்கு வாசலில் இருக்கு மாவு மில்! நான் போயிட்டு வரதுனா ஒரு மணி நேரம் ஆயிடும்! :)))))
Deleteஇந்த முறை எதிர்பாராமல் படங்கள் சேர்த்து விட்டீர்கள் போல!
ReplyDelete@ஸ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ! ஒவ்வொரு வருஷமும் போட்டுட்டு இருக்கேன்! நீங்க உங்க வீட்டு பக்ஷணம் சாப்பிடும் மும்முரத்தில் சரியாக் கவனிக்கறதில்லை!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகிருஷ்ண ஜெயந்தி நல்லபடியாக நடந்ததா? அழகான படங்கள். கிச்சா பயல் முறுக்கு சீடை தட்டை அனைத்தையும் உண்டு களித்தானா? எல்லாம் மிகவும் நன்றாக உள்ளதென கூறினானா? பூஜையறையும் நன்றாக உள்ளது. நான்தான் அது நேற்றைய பதிவு என பார்க்காமல் இன்றுதான் தங்கள் வீட்டிற்கு கிச்சா பயல் வருகிறான் என நினைத்து விட்டேன். ஹா ஹா ஹா ஆனால் நேற்று எங்கள் வீட்டிற்கு கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தான்.வரும் சமயம் தாங்கள் செய்த பலகாரங்களை கையோடு கொஞ்சம் வரும் வழியில் கொரிக்க எடுத்து வந்திருப்பதாக கூறி, எனக்கும் தந்தான். அனைத்தும் மிக நன்றாக இருந்தது. ஹா ஹா ஹா அடுத்த வாரம் கணபதி வருகையில் ஆரவாரம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க வாங்க கமலா, கிச்சா அவசரமா ஓடும்போதே நினைச்சேன். எங்கே போறானோனு! உங்க வீடு தானா? உங்க வீட்டிலும் கிருஷ்ண ஜயந்தி நல்லா நடந்திருக்கும்னு நினைக்கிறேன். பிள்ளையார் நம்ம ஆளாச்சே. முன்னெல்லாம் ஒரு வாரம் முன்னாடியே பதிவிட ஆரம்பிப்பேன். இப்போல்லாம் முடியறதில்லை. :(
Deleteநேற்று முழுவதும் பிஸி. மாலை 7மணிக்கு வந்தபிறகு மனைவி தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்து (பட்சண வேலைதான்), சிறிது உதவி செய்தேன். அப்புறம், பெரியாழ்வார் பிரபந்தம் கொஞ்சம் வாசிங்கோன்னு உத்தரவு. (அவள் சொன்னது வண்ணமாடங்கள்). முடித்து பிரசாதம் சிறிது உண்டேன். இப்போதான் பதிவு பார்க்கிறேன். மீண்டும் வருகிறேன்.
ReplyDeleteவாங்க நெ.த. பக்ஷண வேலைலே பிசியாக்கும்னு நினைச்சேன். :) நம்ம வீட்டிலே அவர் நல்லாக் குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருந்தார்! :)))) வந்தாலும் எதுவும் செய்யத் தெரியாது! ம்ம்ம்ம் வண்ணமாடங்கள் பத்தி நான் மேலே சுட்டி கொடுத்திருக்கும் பதிவிலும் பார்க்கலாம். கண்ணன் தொடர் எழுதும்போது அதை எழுதினேன்.சுமார் பத்து வருஷங்கள் (?) முன்னால்! யாருமே அந்தச் சுட்டிக்குப் போய்ப் படிக்கலை! :))))
Delete@நெ.த, நீங்க கேட்ட குலசேகர ஆழ்வார் பாசுரங்கள் பதிவையும் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். :)
Deleteஅங்க நல்லா எழுதியிருக்கீங்க (ஆனால் நான் சொன்ன பாடல்களை, அந்தப் பத்தில் உள்ளதை உபயோகப்படுத்தலை, அதற்கு வாய்ப்பு மிகவும் கம்மி, ஏனென்றால் அது பொதுவா நிறையபேருக்குத் தெரியாது). ஒரு நாள் நேரம் கிடைக்கும்போது அந்தப் பதிவுகளை முழுவதும் படித்துப்பார்க்கிறேன்.
Deleteஅந்தப் பதிவுக்குத் தேவையானவற்றை மட்டும் பயன்படுத்திக் கொண்டேன். அதோடு நீங்க அங்கே இரு பாகங்கள் மட்டும் படிக்கலாம். மற்ற ஐந்து பாகங்களும் வேறு வலைப்பதிவில் எழுதி முடித்தேன். இதிலே தொடர்ந்து எழுதினால் மற்ற விஷயங்கள் எழுத முடியலைனு அதைத் தனியாக மாற்றினேன். http://kannanvaruvan.blogspot.com 2010 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து 2017 மார்ச் வரை உள்ளவற்றை எழுதினேன். முடிக்கலை! ஏனெனில் தொடர்பு கிடைக்கலை. கொஞ்சம் தேடுதல் நடத்திப் பார்க்கணும். எல்லோரும் முடிக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க. திரு முன்ஷி அதை ஆரம்பித்துவிட்டு முடிக்கும் முன்னர் இறந்துட்டார். அவரைப் போலவே அதைத் தொடரணும்! அதான் யோசனையில் நாட்கள் கடக்கின்றன.
Deleteநீங்க 'மாணிக்கம் கட்டி' இடுகையையா சொல்றீங்க?
Deleteநான் சொல்வது,
ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை
நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே
என்று தொடங்கும் பத்துப் பாடல்கள் (708ல் இருந்து). தன் வாய் திருப்தி அடையும்படி கண்ணனைத் தாலாட்டுகின்ற பாக்கியத்தைப் பெற்றிலேனே என்று தேவகி புலம்புவது போன்ற பாடல்கள்.
அதுவும் தவிர, நீங்கள் இவ்வளவு எழுதியிருப்பதே (அந்த ஒரு இடுகையை மட்டும் படித்தேன்.. மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி என்ற பாடல் உள்ள இடுகை), மிகச் சிறப்பு. நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.
Deleteநான் எழுதியது கொஞ்சம் குறைவுதான்னு தெரியும். ஆனால் "கிருஷ்ணாவதாரம்" தொடருக்கு அது மட்டுமே போதுமானது என்பதால் நீளமாகச் சொல்லலை! ஏழு பாகங்கள், முதல் பாகமான இதிலேயே ஆயிரம் பக்கங்களுக்கு மேலே வந்திருக்கு! :( புத்தகமாய்ப் போட ஆசைப்பட்டு முடியலை! எல்லாவற்றையும் திரட்டி மின்னூலாகப் போடுவதற்கானும் வித்யாபவனிடம் அனுமதி வாங்கிட்டுச் செய்யலாமானு யோசனை! முதல்லே எல்லாத்தையும் ஒன்று சேர்க்கணும்! பெரிய வேலை! கண்ணன் காரியம் அவன் தான் கவனிச்சுக்கணும்.
Deleteபட்சணங்கள் பார்க்க மிக அழகு. நாங்கள் (மனைவி) நேற்று தவலடையும் செய்தாள். ஶ்ரீஜெயந்தியின்போது சொல்லாமல் கொள்ளாமல் வந்தால் ஏகப்பட்ட பட்சணம் உங்கள் வீட்டில் கிடைக்கும் போலிருக்கிறதே
ReplyDeleteநெ.த. முன்னெல்லாம் அடிக்கடி முறுக்கு சுத்துவேன். இப்போக் குறைஞ்சு போச்சு! என்றாலும் அவ்வப்போது பக்ஷணங்கள் ஏதேனும் சாப்பிடப் பண்ணி வைச்சுடுவேன். கடையில் வாங்கறது எப்போவானும்! பறவைகளுக்குப் போடனு வாங்கறோம். வீட்டில் பண்ணும் தட்டை, ஓமப்பொடி, தேங்குழல் எல்லாம் அதுங்களுக்குப் பிடிக்கலை! :)))
Delete//பட்சணங்கள் பார்க்க மிக அழகு. // @நெ.த. சாப்பிடவும் நல்லாத் தான் இருக்காக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteநீங்க ஏன், எ.அ.கு.இ. என்று சொல்றீங்க? இப்போ நிஜமாகவே எனக்கு சந்தேகம் வந்துடுத்து. என் அனுபவத்துல, ஒரு முறை செய்தமாதிரி இன்னொரு முறை வருவதில்லை (பொதுவா). அதுவும் தவிர ஏதாவது தவறும் நேர்ந்திடும். சீயனில் மேல் மாவுக்கு அரிசி மாவு சேர்க்க மறந்திருக்கேன். காசி அல்வா செய்தபோது ஒரு தடவை, பிழிந்த பூசணி ஜலத்தையும் சேர்த்துப் பார்த்திருக்கேன், அது அல்வா பதத்துக்கு வருவதற்கு ரொம்ப ரொம்ப நேரம் எடுத்தது, அதனால் அல்வா பதத்துக்கு முன்னமே இறக்கிவிட்டேன்.
Deleteசரி ஸ்ரீஜெயந்தியைத்தான் விட்டோம், தீபாவளியைப் பிடித்திடுவோம் என்றால், தீபாவளிக்கு ஓரிரு பட்சணங்களுக்குமேல் பண்ணமாட்டீர்கள் என்று சொல்லிட்டீங்க.
பழகினவங்களுக்குத் தவறுகள் குறைவாக வரும், அல்லது வரவே வராது. என் அனுபவத்தில் எனக்கு உப்புச்சீடை வெடித்ததே இல்லை. கல்யாணம் ஆன முதல் வருஷமே செய்ய ஆரம்பிச்சது! வெடிச்சது இல்லை. ஒரே ஒரு வருஷம் உதவிக்கு வரேனு வலிய வந்த ஒருத்தர் செய்த தவறால் அந்த வருஷம் ஒரே வாண வேடிக்கை! பின்னர் சரி செய்தேன். நீங்கல்லாம் எப்போவோ செய்யறதாலே மறக்கறீங்க! எனக்குப் பதின்மூன்று வயதில் இருந்து சமையல் பழக்கம்! பள்ளிக்குச் செல்லும்போதே சமைச்சுட்டுத் தான் போகணும். ஆகவே பொதுவாக நீங்க சொன்ன தவறுகள் நேராது. இப்போல்லாம் சில சமயங்கள் உப்புப் போட மறந்துடும். ஆனால் அப்போ பார்த்து ஏதேனும் தொலைபேசி அழைப்பு அல்லது வாசலில் யாரேனும் கூப்பிட்டிருப்பாங்க இப்படி இருக்கும். திரும்பி சமையலுக்கு வரச்சே உப்புச் சேர்த்தோமா இல்லையானு நினைவில் வராது. அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டுடுவேன். நிவேதனம் ஆனப்புறமா உப்புப் பார்த்துச் சேர்த்திருக்கேன். சில சமயம் அதுவும் இல்லாமல் சாப்பிடும்போது பார்த்துட்டும் சேர்த்திருக்கேன்.
Deleteஆகா... அருமை.. அருமை...
ReplyDeleteபிரசாதங்களுடன் ஸ்ரீ க்ருஷ்ண தரிசனம் ஆயிற்று...
வாழ்க நலம்!...
வாங்க துரை! நீங்க தான் பாமாலை புனைந்து கொண்டாடி விட்டீர்களே! அதை விட என்ன! வரவுக்கு நன்றி.
Deleteஅருமை...
ReplyDeleteகண்ணன் பதார்த்தங்களை பார்த்தே ஓடி வந்திருப்பான்...
வாங்க அனுராதா! கண்ணன் எல்லோருடைய வீடுகளுக்கும் வருவானே!
Deleteசாயங்கால வேளை பார்த்ததும் பசிக்குது. அது என்ன கோளோடை. அப்புறம் அந்த முறுக்கு நெளிச்சா என்ன. நம்ம செஞ்சதாக்கும். எல்லாத்துலயும் கொஞ்சம் பார்சல் அனுப்புங்க அட்ரஸ் போடட்டா. இல்லாட்டி சொல்லுங்க வெந்து பசுந்தயிர் வெண்ணெய் எல்லத்தையும் ஒரு கை பார்க்கணும்போல அசுரப் பசி. :)
ReplyDeleteவாங்க தேனம்மை. இப்படி எப்போவானும் புயல் போல வந்து எட்டிப் பார்க்கிறீங்க. போகட்டும். பக்ஷணம் எப்போ வேணாச் சாப்பிடலாம். நாங்க போயிட்டுப் போயிட்டு வந்து வாயிலே ஒன்றிரண்டு போட்டுப்போம். மொத்தமா வைச்சுச் சாப்பிட முடியறதில்லை! :)
Deleteஎங்க வீட்டில் கோகுலாஷ்டமி கொண்டாடுவதில்லை. அதனால் பட்சணத்தில் ரெவ்வெண்டை ஆரணிக்கு பார்சல் செய்யவும்
ReplyDeleteஏன் கோகுலாஷ்டமி இல்லை? கண்ணன் அனைவருக்கும் பிரியமானவனே. பழங்கள் மட்டும் வைத்தும் கொண்டாடலாம். ரெவ்வெண்டு எதுக்கு? எல்லாத்திலேயும் வேணுங்கறதை எடுத்துக்கோங்க! :)
Deleteஅழகான கொண்டாட்டம். உழைப்பை வாங்கிக் கொண்டு ருசித்து ரசித்துவிட்டுப் போயிருப்பான் கண்ணன்.
ReplyDeleteஅழகான படங்கள். அடுத்த ஸ்ரீஜயந்திக்குக் கண்டிப்பா வந்து உதவி செய்கிறேன்.
இதே உத்சாகமும் உடல் நலமும் எப்பவும் உங்களுடன் இருக்க்க் கண்ணன் அருளட்டும். எங்கள் வீட்டில் இங்கே சீடை, தட்டை, வெல்லச் சீடை ,அப்பம், சுகியன் எல்லாம் செய்தாள் பெண்.
மேல்வேலைக்கு நான்.
நாகப்பழம் நன்றாகப் பெரிதாகக் கிடைத்தது. நன்றி கீதா.
வாங்க ரேவதி, கஷ்டம்னு நினைச்சுக்கறதில்லை. போன வருஷம் பண்டிகை இல்லையா, ஒரு மாதிரியா இருந்தது. சாயந்திரமா மனசு கேட்காமப் பாயசம், வடை மட்டும் பண்ணினேன். குழந்தை பிறப்பு ஆச்சே! :))) சிய்யம் எல்லாம் இப்போச் செய்யறதில்லை. அப்பமும் விட்டாச்சு. பிள்ளையார் சதுர்த்திக்கும் சரஸ்வதி பூஜைக்கும் மட்டும் விடாமல் செய்யறேன்.
Deleteநன்னாளில் அருமையான தரிசனம். தாமதமாக வந்துவிட்டேன்.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா, தாமதமாய் வந்தால் என்ன? இந்த பக்ஷணங்கள் வீணாகாது. எப்போ வேணாச் சாப்பிடலாம்.
Deleteதுளசிதரன் : பலகாரங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது சகோதரி. ஆனால் எங்கள் வீடுகளில் இது போன்று செய்வதில்லை. வீட்டில் பலகாரங்கள்/ஸ்னாக்ஸ் செய்வதுm இல்லை. கடைகளில் இருந்துதான் வாங்குவது வழக்கம்.
ReplyDeleteகீதா: அக்கா செமையா இருக்கே! லேட்டா வந்தாலும் எல்லாம் இருக்கே எடுத்துக் கொண்டாச்சு. சூப்பரா இருக்கு...கிச்சாப்பயல் பதிவும் அருமை
வாங்க துளசிதரன், பலரும் இப்போக் கடைகளில் வாங்கித் தான் மணையில் வைக்கின்றனர். வட மாநிலம் போன புதுசில் அவங்க கடைகளில் வாங்கும் இனிப்பு, காரங்களைக் கோயில்களிலும் வீடுகளிலும் இறைவனுக்குப் படைப்பதை விசித்திரமாகப் பார்ப்போம். இப்போ இங்கே தமிழ்நாட்டிலேயே அந்த வழக்கம் வந்தாச்சு. கொழுக்கட்டைகள் கூட விற்கின்றனர்.
Deleteவாங்க கீதா, தே.எ.யில் செய்தது ஒரு மாசம் வீணாகாது! எடுத்துக்கலாம். :)
Delete