சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 2
முதலில் தொடருவதற்கு முன்னால் ஒரு விஷயம் தெளிவாக்குகிறேன். இந்த லலிதாம்பாள் சோபனம் முழுவதையும் நான் எழுதி விளக்குவதென்றால் குறைந்த பக்ஷமாய் மூன்று மாதங்களாவது ஆகும். நான் எழுதுவதற்கும் விளக்கவும் அவ்வளவு நாட்கள் பிடிக்கும். முதலில் நான் புரிந்து கொண்டவை சரியா எனப் பார்த்துத் தப்பானவற்றைத் திருத்திக்கொள்ளவேண்டும். அதோடு நடு நடுவே வரும் புராணக் கதைகளை விளக்கும்படி இருக்கும். ஆகவே பல நாட்கள் ஆகும். நவராத்திரிக்குள் முடியாது என்பதால் தேவியின் புராணத்தைச் சுருக்கமாகவே தரப் போகிறேன்.
“ஆதியந்தம் பராசக்திக்கில்லை
ஆதாரமுஞ் ஜகத்துக்கிவள் தான்
ஜோதி ரூபியுடைய ரூபங்களை யெல்லாம்
சொல்ல முடியாதொருவராலே
ஆனாலும் தெரிந்த மட்டுக்குமிப்போ
அவளுடைய சில அவதாரஞ் சொல்வோம்
முன்னே பிரம்மாவின் தியானத்தில் ரக்ஷிக்க
முதல் வந்தாள் ஒரு ரூபம்- சோபனம் சோபனம்!
எப்போது தோன்றினாள் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பழையோள் ஆன பராசக்தியே இந்த ஜகத்துக்கு ஆதாரம். நாம் அனைவரும் அவளுடைய கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களே. அவளுடைய ரூபங்களையும் அவள் எடுத்திருக்கும் வடிவங்களையும் அவதாரங்களையும் சாமானிய மானுடர்களான நமக்கு எடுத்துச் சொல்ல முடியாது. இவளே மஹா மாயை, அதனால் பிரபஞ்சத்தின் இருப்பிற்குக் காரணமாகிறாள். இவளே ஸ்ரீஹரியின் யோக நித்திராதேவி. அதனாலேயே அவளால் இவ்வுலகம் மயக்கப் படுகிறது. சேதனமும் அவளே, அசேதனமும் அவளே! அவளே ஸ்ரீவித்யா, அவளே முக்திக்கு வித்து! என்றுமுள்ளவள்.
ஈஸ்வரர்களுக்கெல்லாம் ஈஸ்வரி அவளே! உலகே அவள் உருவான புவனேஸ்வரியும் அவளே. தேவர்களின் காரிய சித்திக்காக அவள் எப்போது ஆவிர்ப்பவிக்கின்றாளோ அப்போது அவள் இவ்வுலகில் உற்பவித்ததாய்ச் சொல்லப் படுகிறது. “சிதக்னி-குண்ட-ஸம்பூதா-தேவ காரிய –ஸமுத்யதா” என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமாவளி. அப்படி ஒரு கல்பமுடிவில் மஹாவிஷ்ணுவின் யோக நித்திரையில்போது தோன்றிய இரு அரக்கர்கள் மதுகைடபர்கள் என்ற பெயருள்ளவர்கள். உக்கிர வடிவோடு தோன்றிய அவ்விரு அசுரர்களும் பிரம்மாவையும் கொல்ல முயல, அவரோ உலகநாயகியான தேவியைத் துதித்தார்.
அழிவற்ற, நித்தியமான, ப்ரணவஸ்வரூபியான தேவியை, அம்ருத ரூபிணி, அவளே ஸ்வாஹா, அவளே ஸ்வதா, அவளே ஸந்தி, அவளே சாவித்ரி, அவளே காயத்ரி என்றெல்லாம் துதித்தார்.
திருப்பாற்கடல் தன்னில் ஸ்ரீஹரியும்
சேஷ சயனத்தில் பள்ளி கொண்டார்
மஹாவிஷ்ணுவின் கர்ணங்களிலிருந்து
மதுகைடபர் இருவர் உண்டானார்-சோபனம், சோபனம்
விழித்துப் பார்த்தங்கே பிரம்மாவை அவர்கள்
முஷ்டியுத்தம் பண்ண வந்தெதிர்த்தார்
அயனுங்கண்டு பயந்து கொண்டு ஸ்ரீ
ஹரியை வந்து நமஸ்கரித்தார்.
நினைவு தெரியாது விஷ்ணுவுமப்போ
நித்திரையின் வசப்பட்டிருந்தார்
அம்மா தேவி நித்திராமோஹினியே பொல்லா
அஸுராள் பயத்தால் ஹரியிடம் வந்தேன்
மோஹினியே ஜகன்மாதாவே மஹாவிஷ்ணுவை
விட்டு வெளியேறம்மா- சோபனம், சோபனம்
என்று லோக மோஹினி மஹிமைதனைச்
சொல்லி நான்கு முகவரும் ஸ்தோத்தரிக்க
பகவானுடைய சரீரத்தினை விட்டுப் (தேவி)
பிரத்யக்ஷமாக எதிரில் வந்து
வேண்டும் வரத்தைக் கொடுத்துப் பிரம்மாவுக்கு
விச்வமோஹினியும் மறைந்தாள்.-சோபனம், சோபனம்
மஹாவிஷ்ணு நித்திராதேவி தன்னை விட்டு அகன்றதும் கண் விழித்துப் பார்க்கவும் மதுகைடபர்களைக் கண்டு அவர்களோடு போர் புரிந்தார். பல்லாண்டுகள் போர் புரிந்தும் அவர்களை அவரால் கொல்ல முடியவில்லை. மதுகைடபர்கள், விஷ்ணுவிற்கு வரங்கள் அளிப்பதாயும், வேண்டும் வரங்களைக் கேட்குமாறும் கூற, அவரும் அவர்கள் இருவரும் தம்மால் கொல்லப்படவேண்டுமேயன்றி வேறு வரங்கள் தேவையில்லை என்றார். பிரளய மஹாகாலமான அந்தக் கால கட்டத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்க வேண்டிய வேளையில் இவர்கள் இருவரையும் ஒடுக்கவேண்டியே மஹாவிஷ்ணு பிரயத்தனப் பட்டார். எங்கும் நீர்ப்பிரவாகமாய் இருக்கக்கண்ட மதுகைடபர்கள் பூமியானது தண்ணீரில் முழுகாமல் இருக்கும் இடத்தில் தங்களைக் கொல்லுமாறு கூற, மஹாவிஷ்ணுவும் அவர்களைத் தம் தொடையில் இருத்திக்கொண்டு சக்கரத்தால் கொன்றார்.
இவ்வாறு பிரம்மாவால் துதிக்கப் பெற்ற யோக நித்திராதேவி தானாகவே தன்னைத் தோற்றுவித்துக் கொண்டு மஹாவிஷ்ணுவின் மூலம் மதுகைடபர்களை பிரளயத்தில் ஒடுங்கச் செய்தாள். ஆதி சக்தியானவள் தன்னிடமிருந்த முக்குணங்களின் மூலம், மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹாகாளி, ஆகிய மூன்று வடிவங்களைத் தோற்றுவிக்கிறாள். பிரம்மபத்தினியாகச் சொல்லப் படும் சரஸ்வதி வடிவத்திற்கும் இவளுக்கும் வேறுபாடு உண்டு. இவள் பராசக்தியின் வடிவினின்று வேறுபட்டவள் அல்ல. இந்த ஆதி மஹாசரஸ்வதியே ஆதி பராசக்தி, ஆதிலக்ஷ்மி ஆவாள். இதையே லலிதா சஹஸ்ரநாமாவளியும், ஸ்ருஷ்டிகர்த்தா, பிரஹ்மரூபி, கோப்த்ர்யை, கோவிந்த ரூபிண்யை, சம்ஹாரிண்யை, ருத்ரரூபாயை, திரோதான கர்யை, ஈஸ்வர்யை என்றெல்லாம் கூறுகிறது.
இந்த மதுகைடப வதத்திற்கு அடுத்து வரப்போவது மஹிஷாசுர வதம்.
நவராத்திரி இரண்டாம் நாளன்று அம்பிகையை திரிபுரா வாக வழிபட வேண்டும். சிலர் கௌமாரியாகவும் வழிபடுவார்கள்.
பெயர்கள் தான் வேறு, அம்பிகையின் ஸ்வரூபம் ஒன்றே. இன்றைய தினம் அம்பிகையை ராஜ ராஜேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும். மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுராவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் மஞ்சள், சிவப்பு மலர்கள் அம்பிகைக்கு ஏற்றது. கொன்றைப்பூக்கள் கிடைத்தால் விசேஷம். இன்று வழிபடவேண்டிய தேவி ப்ரஹ்மசாரிணி ஆவாள்.
ஆகையால் துளசி பத்ரம் கிடைத்தாலும் நன்று, மஞ்சள் வஸ்திரத்தைக் குழந்தைக்கு அணியத் தரலாம்.
அரிசி மாவு அல்லது கோதுமை மாவினால் கட்டங்கள் அல்லது பூக்கள் நிரம்பிய கோலம் போடலாம். மஞ்சள் நிறமுள்ள சாமந்திப் பூக்களும் மஞ்சள் நிறமுள்ள முல்லைப் பூக்களும் அர்ச்சனைக்கு உகந்தவை. இன்றைய நிவேதனம் காலையில் புளியோதரை. மாலையில் பயறுச் சுண்டல்.
எங்க வீட்டிலும் இந்த வருஷம் கொலு வைச்சாச்சு. படி கட்ட முடியவில்லை. வேறு சில வேலைகளில் மும்முரம். அதற்கான அலைச்சல் எனப் படி கட்ட நேரமும் இல்லை! படி கட்டப் பயன்படுத்தும் டேபிளைப் பெயின்ட் அடிச்சு வைச்சோம். காயலை! அதுவும் காரணம். கட்டிலைப் போட்டுத் துணியால் மூடி பொம்மைகளை வைச்சிருக்கேன். இன்று முதல்நாள் என்பதால் ஏதேனும் இனிப்புச் செய்ய எண்ணம். செய்ததும் நாளைக்குப் படம் போடலாம். நவராத்திரி சுண்டல் கலெக்ஷனுக்கு இரண்டு இடங்களில் இருந்து அழைப்பு வந்திருக்கு! :)

என்றைக்குமே தெரியாததை தெரிய வில்லை என்று சொல்வதிலெனக்கு வெட்கம் இல்லை சரி சோபனம் என்றால் என்ன என்று கூறு வீர்களா
ReplyDeleteசோபனம் என்பதற்கு பலப்பல அர்த்தங்கள் உண்டு. அழகு என்ற பொருளிலிலோ இல்லை வாழ்த்து என்ற பொருளிலோ பெரும்பாலும் பயன்படுத்தப்படும். இங்கு, வாழ்த்து என்ற பொருளில்தான் உபயோகப்படுத்தியிருக்காங்க.
Deleteசோபானே... சோபானே.. பரமத்யுதி... என ஆரம்பிக்கும் பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது.
சோபனம் என்பது சிலரால் முதலிரவு என்ற அர்த்தத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறது.
https://tinyurl.com/yc9s2h2l விக்கிபீடியா இங்கே விளக்கம் அளிக்கிறது. முடிந்தால் போய்ப் பார்க்கவும். சுப காரியங்களைச் சோபனம் என்பது உண்டு. வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கையில் யாரையானும் அழைக்கச் செல்லும்போது சோபனம் சொல்ல வந்திருக்கிறேன் என்பார்கள். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். அந்த வகையில் இங்கே ஸ்ரீலலிதைக்கு சோபனம் சொல்லி வாழ்த்துப் பாடி இருக்கிறார் சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்கள்.
Deleteஆகா...
ReplyDeleteதித்திக்கும் விருந்து...
அம்பிகையே சரணம்!..
நன்றி துரை. இதைக் காப்பி செய்திருந்தவர்களில் ஒருவரோடு நேற்று மாலை முழுவதும் வாதம் செய்து நிரூபித்துப் பின்னர் அவர் காப்பி செய்திருந்த என்னோட பதிவுகளை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். சிலர் தான் என்ன சொன்னாலும் காதில் விழாதது போல் இருக்கின்றனர். உங்கள் பதிவைக் காப்பி அடித்தவரிடம் நீங்களும் போய்க் கேட்டு நீக்கச் சொல்லுங்கள்.
Deleteசுண்டல் நீங்க தருவீங்கனு பார்த்தால் உங்களுக்கு இரண்டு இடத்திலிருந்து அழைப்பா ?
ReplyDeleteஇஃகி, இஃகி, கில்லர்ஜி. நேத்திக்குக் கேசரி செய்திருந்தேன். சுண்டல் பண்ணலை. நிவேதனம் செய்யறச்சே தொலைபேசி அழைப்புகள்! வெங்கட் தன் குடும்பத்தோடு வருவதாய்ச் சொன்னார். அதைத் தவிர்த்தும் சில அழைப்புகள். ஆகவே படமே எடுக்காமல் நிவேதனம் முடிச்சுட்டு மறந்தாச்சு! பின்னர் வெங்கட் மனைவி வந்து படம் எடுக்கும்போது தான் நினைவிலேயே வந்தது. இன்னிக்குச் சுண்டல் நினைவா எடுக்கணும். எங்க குழந்தைங்களுக்குக் கூடப் படம் எடுத்து இன்னும் அனுப்பலை! :))))
Deleteஅந்த சோகக் கதையைக் கேட்காதீங்க! நேத்து என்னமோ ஒரே வேலை மும்முரம். இரண்டு இடத்திற்கும் கலெக்ஷனுக்குப் போக முடியலை! நோ சுண்டல்! :))))
Deleteமீள் பதிவா இருந்தாலும் நிறைய உழைத்து இவைகளை எழுதியிருக்கீங்க. ஆச்சர்யப்படறேன். பாராட்டுகள்.
ReplyDeleteவாங்க நெல்லைத் தமிழன், நேற்றே எதிர்பார்த்தேன். முந்தைய பதிவுக்கு வரமுடியாமல் வேலை மும்முரம் போலும். இதற்காவது வந்து கருத்துச் சொன்னதற்கு நன்றி.
Deleteஅம்பிகையை சரண் அடைந்தால் அதிக நன்மை பெறலாம்.
ReplyDeleteஅம்பிகையே சரணம்.
பதிவு அருமை.
நன்றி கோமதி அரசு. 2010 ஆம் ஆண்டிலேயும் நீங்கள் கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
Deleteமீள் பதிவு மட்டும் ஒழுங்காப் போடத் தெரியுது ஆனா இதை விட முக்கியம், ஒரு விரதம் தொடங்கமுன், 3,4 நாட்களுக்கு முன்பாகவே.. இத்தனையாம் திகதி இன்ன விரதம் ஆரம்பமாகுது என ஆருமே சொல்லுறீங்கள் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ச்சும்மா சுவாமிப் போஸ்ட்டை மட்டும் போடாமல்.. இப்படியும் அலேர்ட் பண்ணினால் நல்லாயிருக்குமெல்லோ..
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி, நவராத்திரி தொடங்குவது தான் உலகம் முழுக்கச் சொல்லிட்டே இருக்குதே! இதிலே நான் வேறே தனியாச் சொல்லணுமாக்கும்? முதல்லே தமிழ் மாசங்களை மனப்பாடம் பண்ணிக்குங்க! :)))))
Deleteமுந்தின போஸ்ட் போட்டு ஒரு நாள் தானே ஆகுது! அதையும் படிச்சுட்டாத் தான் என்னவாம் குறைஞ்சு போகுது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Delete////கட்டிலைப் போட்டுத் துணியால் மூடி பொம்மைகளை வைச்சிருக்கேன்./////
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ கீசாக்கா தரையிலயோ ஸ்லீப்பிங் ஹா ஹா ஹா:)).. எங்கட வீட்டில பல கட்டில் இருக்கெனச் சொல்லிடாதீங்கோ கர்ர்ர்ர்ர்:))
அதிரடி, நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே எங்க வீட்டில் ஐந்து மரக்கட்டில்கள், ஒரு நாடாக் கட்டில் உண்டு. இன்னும் சில மடக்குக் கட்டில்கள் இருந்ததை 2 வருஷம் முன்னாடி தான் விற்றோம். இப்போ பொம்மை வைச்சிருக்கிறது கொஞ்சம் உயரக்குறைவான கட்டில். இதை "திவான்" என்போம். சிலவற்றில் கீழே அறைகள் இருக்கும் சாமான்கள் வைக்க. நாங்க அப்படி வேணாம்னு சொல்லிட்டோம். மற்றவை நாலு சிங்கிள் காட்! இந்த டபுள் காட்டெல்லாம் எனக்கு/எங்களுக்குச் சரிப்பட்டு வரதில்லை. எல்லைப் பிரச்னை தாங்காது! அதனால் தனித்தனிக்கட்டில் தான். ஓட்டல் அறைகளுக்குப் போனாலும் கூடியவரை தனிக்கட்டில் இருக்கும் அறையாத் தான் பார்த்துக் கேட்பேன். :)))) நாங்க வண்டியிலே போறச்சேயே எல்லைப் பிரச்னை தலை தூக்கி ஆடும்! :)))))))
Deleteபல கட்டில்கள் எங்க வீட்டில் இருக்குனு சொல்லிட்டேனே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? சவாலங்கிடி கிரிகிரி! சைதாப்பேட்டை வடகறி! :))))))
Deleteமுழுவதும் படித்தேன். சுவாரஸ்யம்.
ReplyDelete