நம்ம ரங்க்ஸுக்குக் காய்கறி மார்க்கெட் போனால் தனி குஷி பிறக்கும்னு சொல்லி இருக்கேன் இல்லையா? அதன்படி முந்தாநாள் போனப்போ ஒன்றரைக் கிலோ தக்காளி 20 ரூபாய்க்குக் கொடுத்தாங்கனு சொல்லி வாங்கி வந்துட்டார். நான் கேட்டது என்னமோ அரைக்கிலோ தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! என்ன செய்யறது ஒன்றரைக் கிலோவையும்! தொக்குப் பண்ணி வைச்சுக்கோனு ஜிம்பிளாச் சொல்லிட்டுப் போயாச்சு! ஏற்கெனவே பண்ணின தொக்கே இன்னும் காலியாகலை! ஜாமோ அல்லது சாஸோ பண்ணினால் நான் மட்டுமே சாப்பிடணும். இல்லைனா பாட்டிலில் போட்டு விற்பனை செய்யணும்.யாரு வாங்குவாங்க? அதனால் தொக்கே கிளறலாம்னு முடிவு பண்ணினேன். மி.வத்தல் போதாது. முன்னெல்லாம் மி.வத்தல் வறுத்து, தக்காளியையும் நன்கு வதக்கிக் கொண்டு அரைத்துப் பின்னர் நல்லெண்ணெயில் கடுகு தாளித்துப் பெருங்காயம் பொரித்துக் கொண்டு தொக்குக் கிளறி வைப்பேன். ஆறு மாசம் ஆனாலும் கெடாது. இப்போ என் ஒருத்திக்கு இம்புட்டு வேணுமா? இப்போல்லாம் மி.வத்தல், தக்காளியை வறுக்காமல் பச்சையாவே அரைச்சுச் செய்துடறேன். அதுவும் நல்லாத் தான் இருக்கிறது! என்றாலும் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சாலும் பத்து நாளைக்குள் பயன்படுத்தலைனா மேலே கறுப்பாக ஆகிடுது!
இப்போவோ மி.வத்தலே இல்லை! என்ன செய்யறது! மி.பொடி தான் போட்டுக் கிளறணும். தக்காளியை நல்ல நைசாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொண்டு கொஞ்சம் கூடவே நல்லெண்ணெய் விட்டுக் கடுகு, பெருங்காயம் போட்டுக் கொண்டு தக்காளி விழுதைப் போட்டு விட்டு உப்பு, மஞ்சள் பொடி, மி.பொடி சேர்த்தேன். நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி எடுத்துட்டேன்.இத்தனை தொக்கை என்ன செய்யறது? யோசிச்சு யோசிச்சு மண்டை காயுது! நேத்திக்குச் சில, பல பழைய தாமதமாகி இருந்த வேலைகளை முடித்துக் கொண்டு குளித்துச் சமைக்க வரச்சே 11 மணி ஆகி விட்டது! சாதம் ஒரு பக்கம், ரசம் ஒரு பக்கம் வைச்சுட்டு காயை இன்னொரு அடுப்பில் போட்டேன். குழம்பு? மறுபடி ம/க. தக்காளித் தொக்கைச் சட்டியில் இருந்து எடுத்து வேறொரு பாத்திரத்தில் மாத்தினப்போ! ஒரு எண்ணம்! அட! உடனே உற்சாகம் வந்தாச்சு. தக்காளித் தொக்கை முழுசும் பாத்திரத்தில் மாத்தாமல் சட்டியில் கொஞ்சம் வைச்சேன். சாதம் ஆனதும் இரண்டு பேருக்குத் தேவையான சாதத்தை அதில் போட்டுக் கொஞ்சம் போல் உப்புச் சேர்த்துப் ( தொக்கில் உப்பு இருக்கும் என்பதால்) பெருங்காயப் பொடியும் போட்டு நல்லெண்ணெயும் ஊற்றினேன். சின்ன இரும்பு மொட்டைச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு மி.வத்தல் போட்டுக் கருக வைத்தேன். புளிக்காய்ச்சல், வத்தல் குழம்பு, இம்மாதிரித் தாளித்தால் மி.காரம் நாக்கில் போய் உறைப்புத் தெரியாது!
>>> இல்லை...னா பாட்டிலில் போட்டு விற்பனை செய்யணும்.. <<<
ReplyDeleteஇது வேறயா!...
வாங்க துரை, ஆமாம், மாப்பிள்ளை சொல்லிட்டே இருப்பார்/இருக்கார்! :)))
Deleteமீதான்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.. ஆமா ஆமாஆஆஆஆஆ இது திப்பிசம் இல்லை தக்காழிச் சட்னீஈஈஈஈஈஈ:))
ReplyDeleteஅதிரடி, அது தக்கா"ளி" தக்கா"ழி" இல்லை. சட்னி! சட்னீ இல்லை. இம்பொசிஷன் எழுதுங்க முதல்லே!
Deletehttp://www.somepets.com/wp-content/uploads/2013/06/cats-who-do-not-know-how-to-play-hide-and-seek-13.jpg
Delete>>> நல்லா ஊறினதும் சாதம் சாப்பிட நல்லா இருந்தது. பொதுவாகத் தொக்கு சாதம் எல்லோரும் பண்ணுவது தான் என்றாலும் நான் புளிக்காய்ச்சலுக்கு வறுத்துச் சேர்ப்பது போல் சேர்த்திருக்கேன்... <<<
ReplyDeleteசகலகலாவல்லி..ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க!...
இங்கே வரைக்கும் வாசம் அடிக்குது...ங்கோ!..
ஆமாம், துரை, நேத்திக்குச் சாப்பிடும்போதே பேச்சே இல்லைனா பார்த்துக்குங்க! :))))
Deleteஇரண்டு சமயத்துல சாப்பிடும்போது பேச்சே இருக்காது. சாப்பாடு அட்டஹாசமா இருந்தால்... இல்லைனா வாயில் போட்ட ஒருவாய் வாயைத் திறக்கமுடியாதபடி இருந்தால்.... அவர்ட்டதான் கேட்கணும்... நான் ஆண்டவனைச் சொன்னேன்...
Deleteஹூம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஜிங்க் சக்க சத்தம் பலம்மா இருக்கு போல! அவர் வாய் சும்மாவே இருக்காது! உப்பு ஜாஸ்தி, குறைச்சல், காரம் கம்மி, புளி கம்மினு ஏதேனும் ஒண்ணைக் கண்டு பிடிப்பார். வாயைத் திறக்கலைனா அன்னிக்கு அதிசயம் தான்! :))))
Deleteதுரை அண்ணா நானும் வாசம்
Deleteகீதாக்கா நாம சமைச்சா கண்டிப்பா நெல்லையின் வாயை அடைச்சுப் போட்டுடனும் தான் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....அதிரா கிவ் எ ஹேன்ட்!!
கீதா
//அதன்படி முந்தாநாள் போனப்போ ஒன்றரைக் கிலோ தக்காளி 20 ரூபாய்க்குக் கொடுத்தாங்கனு சொல்லி வாங்கி வந்துட்டார். //
ReplyDeleteஓ மை கடவுளே... நாங்கள் தக்காழியே வாங்குவதில்லை.. இருப்பினும் ஒரு ஆசையில மூன்றேஎ மூன்று பழங்கள் மூன்று கிழமைக்கு முன் வாங்கினேன், அதில் ஒன்றை மட்டுமே பாவித்தேன் இனி மிச்சத்தை என்ன பண்ணுவது?:)..
ஞானி, எங்க வீட்டிலே தக்காளி செலவாகும். நேத்திக்கு உ.கி. தக்காளிக் கூட்டு தான் சப்பாத்திக்கு!
Deleteநறுக்கிச் சேர்த்தால் அவ்வளவாப் பிடிக்கிறதில்லை என்பதால் மிக்சியில் அடிச்சுடுவேன். தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சாறை மட்டும் பயன்படுத்திப்பேன்.
Deleteஇதைச் சொல்ல மறந்துட்டேன்.... "வாங்க வாங்க"வில் கிலோ 10 ரூபாய்தான்... நான் ஒரு கிலோ வாங்கினேன்..
Deleteநெ.த. இங்கே நாட்டுத் தக்காளி. அதுவும் திண்டுக்கல் தக்காளி. இன்னிக்கு இன்னமும் விலை குறைச்சல்னு சொன்னார். நல்லவேளையா வாங்கலை! :)))) பெண்களூர்த் தக்காளி நாங்க வாங்கறதில்லை. இது ரசத்துக்கு (எங்க 2 பேருக்கு) அரைப்பழம் போட்டால் போதும்!
Deleteவாங்க வாங்க க்கு ஒரு தடவை வரோணும் போல இருக்கு..
Deleteஊ.கு:
நெல்லைத்தமிழனைப் பார்க்க அல்ல:).. ஓடி இளிச்சிடாதீங்க.. அதுசெரி:) நீங்க எத்தனை மணிக்கு டெய்லி அங்கு போவீங்கோ?:))
ஹையோ வெரி சொறி அது ஒளிச்சிடாதீங்க என வரும்:)
Deleteஅதுனால பரவாயில்லை அதிரா... 'வாங்க வாங்க'வும் நான் அடிக்கடி போகும் கடையில்லை. அங்க பை எடுத்துக்கிட்டுப் போகலைனா, 2 ரூபாய் பிளாஸ்டிக் பைக்கு எங்கிட்ட வாங்குவான். பழமுதிர்ச்சோலையில் அவனே பிளாஸ்டிக் பையில் கொடுப்பான். அதனால் வேறு வழியில்லாதபோதுதான் (சில காய்கறிகள் இவங்க கிட்ட மலிவு. குறிப்பா, இப்போ மாங்காய், பழமுதிர்ச்சோலைல 150 ரூபாய் 1 கிலோ, வாங்க வாங்கவில் 85 ரூபாய்.ஹாஹா) அங்க போவேன்...
Deleteஇங்கே மருந்துக்கடைகளில் கூட துணிப்பை தான் பல வருடங்களாக(நாங்க வந்ததில் இருந்து) ஆகவே நாங்களே பைகளை எடுத்துப் போவோம். ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் அந்தத் துணிப்பையில் காய்களை வைத்தால் வாடி விடுகிறது. அதற்கென சில ஜிப் லாக் பைகளை வைச்சிருக்கோம். அல்லது நல்ல ப்ளாஸ்டிக் பைகள் வைச்சிருக்கோம். அவற்றில் தான் போட்டு வைக்க வேண்டி இருக்கு! இங்கே மாங்காய் கிலோ ஐம்பது ரூபாய்! நல்ல ஆவக்காய் போடலாம் போல இருந்தது. செலவாகாது என்பதால் அதிகம் வாங்கலை!
Deleteகீதாக்கா கல்யாணம் விசேஷங்களில் ஒரு பை தராங்களே...(அது துணிப்பைனு சொல்லறாங்க ஆனால் ஃபுல் துணி இல்லை...நைலான்/ப்ளாஸ்டிக் கலந்த துணிப்பை போலத்தான் இருக்கு...) அந்தப் பைகளை நான் கலெக்ட் செய்து வைச்சுருக்கேன். அதில் காய்களை வைத்துவிடுவது வழக்கம். நல்லா இருக்கு அக்கா. அது போல சந்தைக்குப் போகும் போது இந்தச்சின்ன சின்ன பைகளை ஒரு பெரிய பையில் போட்டு எடுத்துக் கொண்டு போயிவிடுவேன். வாங்கும் போதே ஒவ்வொரு பையிலும் ஒரு காய் வாங்கிவைத்துக் கொண்டு விடுவேன். வீட்டுக்கு வந்ததும் அப்படியே அந்தப்பையை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் போதுமெ. பிரித்து எல்லாம் ஆகாது. இது கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றிற்கும். இந்த இரண்டை மட்டும், வீட்டுக்கு வந்து எவர்சில்வர் டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறேன். அப்படியே இருக்கும்...
Deleteகீதா
அதிரா நெல்லை வீட்டுக்கு அருகில் இருக்கும் என் கண்ணிலே கூட நெல்லை படலை உங்களுக்கா தென்படப் போறார். ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
கல்யாணங்களில் கொடுப்பதெல்லாம் அநேகமாய்ச் சணல் பைகள் தான்! அதைக் குளிர்சாதனப் பெட்டிக்குள் காய்கள் போட்டு வைக்க முடியாது! மும்பையில் காய்கள் வைக்கவென்றே தனிப்பைகள் விற்பாங்க! இங்கே தமிழ்நாட்டில் அப்படி விற்பதாய்த் தெரியலை!
Delete//இல்லைனா பாட்டிலில் போட்டு விற்பனை செய்யணும்.யாரு வாங்குவாங்க? //
ReplyDeleteநெல்லைத்தமிழன் வாங்குவாரோ?:))
நெல்லைத் தமிழருக்கு எல்லாம் விக்கிறதில்லை! :))))
Deleteஅப்பா... எவ்வளவு கோபம் வருது. நல்லவேளை கீசா மேடம் ஹோட்டல் ஆரம்பிக்கலை. ஆரம்பச்சிருந்தால் வாசல் போர்டில் "சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடுபவர்க் உள்ளே வரக்கூடாது" என்று எழுதியிருப்பார்... கர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஹை! உங்களுக்கு விற்க மாட்டேன்! போங்க! நான் ஓட்டல் ஆரம்பிச்சால் உங்களைத் தவிர்த்து எல்லோரையும் அழைத்து இலவசமாச் சாப்பாடு போடுவேன்! :)))))
Deleteசாதம் சூப்பரா இருக்கு பார்க்க.. ஆனா சுவையை மாமாவிடம்தான் கேட்கோணும்:)..
ReplyDeleteஏன் கீசாக்கா பச்சைச் சம்பல் போட்டுச் சாஅப்பிடுங்கோ 2 நாளைக்கு சூப்பரா இருக்கும்.. எங்களுக்கு அலர்ஜி என்பதால அடுத்து செய்ய மாட்டேன்.. இடைக்கிடை பாவித்தால் ஓகே.
அதிரடி, சாதம் நல்லாவே இருந்தது. அதான் கமென்ட் ஒண்ணும் வரலையாக்கும். இல்லைனா உப்புக் குறைவு, ஜாஸ்தி, புளிப்பு, காரம், வாசனைனு ஏதோ ஒரு குறை இருக்கும்! :))) பச்சைச் சம்பல் என்றால்? நான் நீங்க சொல்லும் சம்பல் என்னும் துவையல் அரைச்சாலும் தக்காளியைச் சாறு வரும்படி வதக்கிட்டே அரைப்பேன். ஆகவே அது பச்சைச் சம்பல் இல்லைனு நினைக்கறேன்.
Deleteஅதுசரி அது என்ன எப்பவுமே திங்களோடு போட்டி உங்களுக்கு?:) வாரத்தில ஆறு நாட்களையும் விட்டுப்போட்டு த்றீராமோடு என்ன போட்டி?:)) ஹா ஹா ஹா:)).. நானும் இனி ஒவ்வொரு டிங்களும் டமையல் குறிப்புப் போடப்போறேன்ன் ஹையோ இது நமக்குள் இருக்கட்டும் கீசாக்கா:).
ReplyDeleteஅதிரடி, இந்த ஞாயிற்றுக்கிழமைப் படமே கௌதமன் சார் தான் போட்டுட்டு இருந்தார். அப்போ அவரோடு சேர்ந்து நானும் போட்டிக்குப் படங்கள் போட்டேன். அப்புறமா அவர் சமையலை ஆரம்பிச்சார். அதைத் தொடர முடியாமல் ஶ்ரீராம் இப்போக் கையில் எடுத்துக் கொண்டு விட்டார்! பின்னே போட்டி இப்போ அவரோடு தானே போடணும்! :)))) நீங்களும் போடுங்க! ஶ்ரீராமுக்குச் சொல்ல மாட்டேன்! :))))
Deleteஹா.. ஹா.. ஹா.. நானும் சொல்லமாட்டேன்.
Deleteஇஃகி, இஃகி!
Delete//அதுவும் நல்லாத்தான்இருக்காத// இருக்கும் என்பதற்கு இருக்காது என்று தட்டச்சிருக்கீங்க.
ReplyDeleteஎங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதுபோல் தலைப்பு
படிச்சிட்டு வரேன்
ம்ம்ம்ம்நெ.த. இருக்கிறது என்பது இருக்காது என வந்திருக்கு! எ.பி. என்றால் கண்டு பிடிச்சிருப்பேன். தலைப்புக்கு என்ன குறைச்சல்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஇதுவும் நல்ல ஐடியாதான். தொட்டுக்க வடகம் நல்லாருக்கும்.
ReplyDeleteஒரே கல்லில் நான்கு மாங்காய் அடிச்சுட்டீங்களே
1. தொக்கை செலவழிக்கும் வழி
2. அருமையான புதிய செய்முறை
3. அவர் இனி தக்காளியை சும்மா தருகிறேன் என்றாலும் நான் வரலை விளையாட்டுக்கு என்று ஓட வைப்பது
4. ஒரு இடுகை cum ரங்ஸ்களுக்கு எச்சரிக்கை
நெல்லைத் தமிழரே, காயைச் செலவழிக்க முடியறதில்லை. அதனால் வடாம் எல்லாம் பொரிக்கலை! தொக்கைச் செலவழிக்கிறது ஒன்றே குறி! இஃகி, இஃகி! தக்காளி அடுத்த வாரமே கிலோ ஐந்து ரூபாய்க்குக் கொடுத்தான்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்துடுவார். கொத்துமல்லிக் கட்டு மட்டும் 2,3 வந்துடும். இப்போத் தான் கொஞ்ச நாளாக் காணோம். அதை நீங்க சம்பாரப் புளினு சொல்லும் கொத்துமல்லி மி.பொடி(எங்க வீட்டில் சொல்வது) பண்ணி வைச்சுட்டு அதைக் கஞ்சிக்கு, தோசைக்கு, சப்பாத்திக்குனு தொட்டுக்கணும்! :)))) நிறைய வாங்காதீங்கனு போர்க்கொடியே உயர்த்தியாச்சு! எங்கே!
Deleteஉண்மையா நான் காய்கறிப் பைத்தியம். நிறைய வாங்குவேன், அளவுக்கு அதிகமா.. அட அன்றைக்குள்ளதை மட்டும் வாங்கினால் போதாதா என ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ ரெஸ்டிரிக்ட் பண்ண முயல்கிறேன். தினமும் கொத்தமல்லி கட்டு வாங்கவும் ரொம்ப ஆசை... நம்மை மாதிரியும் ஆட்கள் இருக்காங்க என்பதில் சந்தோஷம்.
Deleteகொத்துமல்லி நிறைய வாங்கினால் கொத்துமல்லி மி.பொடி, பச்சைச் சட்னினு அரைச்சு வைச்சுப்பேன். கொ.ம.சாதம் பட்டாணி போட்டுப் பண்ணிடுவேன். அப்படியும் சில சமயம் செலவாகாமல் தூக்கிப் போடும்படி ஆயிடும்! :(
Deleteகீதாக்கா அண்ட் நெல்லை ஹையோ நானும் கொத்தமல்லி வாங்கிடுவேன்...அது போல கறிவேப்பிலை..கறிப்வேப்பிலை இல்லைனா எனக்கு சமையல் செய்வது ஏதோ போல இருக்கும்...செய்த திருப்தியே இருக்காது. அதனால நிறைய வாங்கிநா கீதாக்கா போல பொடி, கொத்தமல்லி சட்னி தொக்குனு செஞ்சு வைச்சுருவேன் கருவேப்பிலை தொக்கும் கூட..
Deleteகீதா
தி/கீதா, இப்படித் தான் பச்சை மிளகாய் வாங்கி வந்திருக்கார். இன்னும் முருங்கைக்காய் சாப்பிட ஆரம்பிக்கலை! ஆரம்பிச்சால் சும்மா பத்து முருங்கைக்காய் வரை வந்துடும்.கருகப்பிலையைக் காய வைத்துப் பொடி செய்து வைச்சுப்பேன். மிளகு குழம்பு பண்ணும்போது அதைக் கொஞ்சம் சேர்க்கலாம்.
Deleteஇது நல்ல ஐடியாவா இருக்கே.. மணம், குணம், காரத்துடன் சாதம் நன்றாய் இருந்திருக்கும்.
ReplyDeleteஆமாம், நல்லாத் தான் இருந்தது, நினைவாக மி.வத்தல் கொத்துமல்லி பெருங்காயம் எண்ணெயில் வறுத்துக் கொண்டு உங்க கிட்டே கடுகு, வெந்தயப்பொடி இல்லைனா அதை வெறும் சட்டியில் வறுத்துப் பொடித்துக் கொண்டு இதோடு சேர்த்து மீண்டும் பொடித்துச் சாதத்தில் சேர்க்கணும். சுவை கூடுவதற்காகவே இது! இன்னொரு நாள் வெங்காயம், பட்டாணி போட்டுச் செய்து பார்க்கணும். மஹாலயம், நவராத்திரி முடியட்டும்! :))))
Delete//இப்போல்லாம் மி.வத்தல், தக்காளியை வறுக்காமல் பச்சையாவே அரைச்சுச் செய்துடறேன். அதுவும் நல்லாத் தான் இருக்காது! என்றாலும் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சாலும் பத்து நாளைக்குள் பயன்படுத்தலைனா மேலே கறுப்பாக ஆகிடுது!//
ReplyDeleteஇந்த வரிகளில் ஏதோ சரி இல்லையோ... தக்காளியை வதக்கல் பச்சையாக எப்படி அரைத்து தொக்காக்கி வைக்க முடியும்?
ஶ்ரீராம், பொதுவாத் தக்காளித் தொக்குப் பண்ணினால் மி.வத்தல் தேவையானது, தக்காளி தேவையானது எடுத்துக் கொண்டு பெருங்காயம் பொரித்துத் தனியா வைச்சுட்டு மி.வத்தல், தக்காளியைத் தனித்தனியாக நன்கு வதக்குவேன். மி.வத்தல் கறுப்பாகாமல் வறுத்துக்கணும். இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அடிச்சுட்டுப் பின்னர் மறுபடி நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கிளறுவேன். உப்புச் சேர்த்துக் கொண்டு கடைசியில் கொஞ்சம் போல் வெல்லம் (தேவையானால்) சேர்ப்பேன். இது நீண்ட நாட்கள் வரும். இப்போ இரண்டையும் வதக்கவோ, வறுக்கவோ செய்யாமல் அப்படியே மிக்சியில் அரைச்சு நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கிளறி எடுத்துடறேன், இம்முறை மி.வத்தலும் இல்லை. தக்காளியை மட்டும் அரைச்சுக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம் மஞ்சள் பொடி போட்டுத் தாளித்து அரைத்த விழுதோடு மி.பொடி சேர்த்து அதில் போட்டுக் கிளறி உப்புச் சேர்த்து, வெல்லம் போட்டு இறக்கினேன். இன்னமும் கொஞ்சம் இருக்கு! சீக்கிரம் செலவு செய்யணும்! :)))) அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா! ஒரு கதையே எழுதியாச்சு!
Deleteஇன்னும் சொல்லவந்ததை முழுமையாச் சொல்லலையே.
Deleteஅப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா! ஒரு கதையே எழுதியாச்சு! இந்த நேரத்துல கிச்சன்ல இருந்திருந்தால், தோசை மாவுல தக்காளித் தொக்கைக் கலந்து, தக்காளி தோசை அவருக்கு வார்த்துக் கொடுத்திருப்பேன். தொட்டுக்க அந்தத் தக்காளித் தொக்கிலேயே கொஞ்சம் தேங்காயை அரைச்சுவிட்டு புதுவித சட்னி கொடுத்திருப்பேன்..
:P :P:P :P
Deleteநெல்லை மீ டூ நீங்க சொல்லிருக்கறமாதிரி எல்லாம் செய்வதுண்டு. ப்ரெட்டில் வைத்து டோஸ்ட் செய்து..தோசையின் நடுவில் தடவி மசாலா வைத்து, இந்தத் தொக்கையே வைத்து தக்காளிக் குழம்பாக்கி, இந்தத் தொக்கையே போட்டு பருப்பு சாம்பார் செய்து என்று இந்தத் தொக்கு படும் பாடு இருக்கே!!! டக்கென்று ரசம் கூடச் செய்துவிடலாம் ஹிஹிஹிஹி...ஹான் சூப் மறந்துட்டேனே....ஹிஹிஹி...இன்னும் உண்டு..போதும் ஏன்னா..உங்களுக்குப் பிடிக்காது அதனாலா கீதாக்கா சொல்லிருக்கற மாதிரி தடா!!!! நாங்க எல்லாரும் உக்காந்து வளைத்துக் கட்டிச் சாப்பிடுவோமே!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....
Deleteகீதா
சாம்பார், ரசமெல்லாம் பண்ணினதில்லை. சில சமயம் சப்பாத்திக் கூட்டுக்குச் சேர்ப்பேன். ப்ரெட் சான்ட்விச்சில் தடவுவேன்.
Deleteஇங்கும் சந்தையில் (வீட்டுக்கு அருகில் வெள்ளிக் கிழமை சந்தை)
ReplyDeleteஒன்றரைக் கிலோ தக்காளி 20 ரூபாய் தான்.
யோசனைகள் நன்றாக இருக்கிறது.
மிளகாய் வத்தல், கொத்துமல்லி, பெருங்காயம், வெந்தயம், கடுகு வறுத்து பொடித்து போட்டாலே வாசம், ருசி நன்றாக இருக்கும்.
வாங்க கோமதி அரசு, இன்னிக்கு இன்னமும் விலை குறைச்சலாம்!
Deleteஇங்கும் மேட்லி ரோட் மார்க்கெட்டில் ஒன்றரை கிலோ தக்காளி 20 ரூபாய்தான்.
Deleteகீதா
மிச்சமானால் கொஞ்சம் பார்சல் அனுப்பலாமே தேவகோட்டைக்கு...
ReplyDeleteஇஃகி, இஃகி, இங்கே வாங்க நேரிலே செய்து கொடுக்கிறேன்.
Deleteதங்களின் பல சாமார்த்யங்களில் இதுவும் ஒன்று... அருமை அம்மா...
ReplyDeleteவாங்க டிடி, பாராட்டுக்கு நன்றி.
Deleteதக்காளி சாதம் கலரே அழகா இருக்கு கீதா.
ReplyDeleteபிரமாத ஐடியா.
ஆழ்வார் பாடின மாதிரி இவர் காய் வாங்கப் போனால் உ.கி, பீன்ஸ், வெங்காயம்
இதுதான் வரும்.
மண்டை சைஸ் காலிஃப்ளவர்,டபிள்பீன்ஸ்,பட்டர் பீன்ஸ் இதெல்லாம்
இந்த சீசன் எல்லாம் இதுதான் வரும்.
வாங்கி வந்தபோது "அட என்ன எப்பப்பாத்தாலும்" என்று அலுத்துக்கொண்டிருந்தாலும் இந்தத் தனித்துவம் மறக்கமுடியாமல் மனதில் பதிந்துபோயிருக்கிறதில்லையா வல்லிம்மா.....
Deleteஎன் மனைவியும் என்ன எப்பப்பாத்தாலும் சேப்பங்கிழங்கு என்பாள்...
வாங்க வல்லி,இந்த இங்க்லிஷ் காய்கறிகள் எல்லாம் வாங்க மாட்டார். ஒரு காலிஃப்ளவர் வாங்கினாலே அது 3 நாளைக்கு வருது! :))) முட்டைக்கோஸ் சின்னதா வாங்கினால் 2 நாள் வந்துடும்! :)))
Deleteஇங்க தக்காளி கிலோ 8 ரூவா தான்..
ReplyDeleteதொக்கை விட அந்த சாதம் பிரமாதம்...உறுகாய் செஞ்ச பாத்திரம், நெய் காய்சின கிண்ணம் ன்னு அதிலெல்லாம் சாதம் போட்டு பிசஞ்சு சாப்பிட குடுத்தா அது என்னமோ அதுக்கு தனி சுவையே வந்துடுது மா..
வாங்க அனுராதா, கொஞ்ச நாட்களாக் காணோம்! வேலை மும்முரமோ? உங்க பதிவுக்கு எல்லாம் அடிக்கடி வர முடியலை, மன்னிச்சுக்குங்க! நீங்க எழுதி இருப்பதைப் பத்தி கோமதி அரசு(?) எழுதிப் பார்த்தேன். வரணும். எனக்கும் இந்தப் புளிக்காய்ச்சல் பண்ணின கல்சட்டியிலே சாதத்தைப் போட்டுப் பிரட்டிச் சாப்பிட்டால் பிடிக்கும். துகையல் வைச்ச பாத்திரம்னா அதிலே இட்லி, தோசையைப் போட்டுப் புரட்டிடுவேன். வத்தக்குழம்பு பண்ணினாலும் அப்படித் தான்!
Deleteகீதாக்கா ஹைஃபைவ்...மீ டூ இப்படிப் புரட்டிச் சாப்பிடுவது தனி சுவை..நீங்க சொன்ன அனைத்துமே...ஹையோ ..பாத்திரத்திலும் ஒட்டி வேஸ்ட் ஆகாது...
Deleteகீதா
இது தேர்வு நேரம் மா அதனால் phone ல படிச்சாலும் பதில் குடுக்க தாமதம் ஆகிடும்..
Deleteஆனாலும் உங்க சமையல் பதிவில் என் மறுமொழி கண்டிப்பா இருக்குமே..
நாங்க திருமலைக்கு நடந்து சென்ற படங்களை வைத்தும் ...இந்த புரட்டாசி சனிக்கிழமை காக வாரம் ஒரு பெருமாள் கோவில் எனவும் பதிவிடுகிறேன் ...
வாங்க நேரம் கிடைக்கும் போது என் தளத்திற்கும் ..பார்த்து உங்க கருத்துக்களையும் சொல்லுங்க
நிதானமா உங்க வேலைகளை முடித்துக்கொண்டே வாங்க! ஒண்ணும் அவசரம் இல்லை.
Deleteதக்காளி தொக்கு நல்லாவே இருக்கு பார்க்க!
ReplyDeleteவாங்க வெங்கட், லேட்டா வந்ததால் தொக்கு மட்டும் தான்! சாதம் தீர்ந்து போயிருக்கும்! :))))
Deleteத்தோடா! எழுத விஷயம் கிடைக்கவில்லையென்றால் அப்பாவி ரங்க்ஸ் மேல் பழியயைப் போட்டு இப்படி ஒரு பதிவா? நடத்துங்க.
ReplyDeleteஹாஹா, எழுத விஷயம் இல்லாமலா படம் முதற்கொண்டு எடுத்து வைச்சுப் போட்டேன்? இஃகி, இஃகி!
Deleteஆஹா கீதாக்கா தக்காளித் தொக்கு மிஸ்ட் இட் சூடா!!!! இது கெடாதுதான் ஆனா கமென்ட்ஸ் ஆறிப் போச்சே.....சரி பரவால்ல ஃப்ரிட்ஜுலதானே இருக்கு எடுத்துக்கறேன்.....அதிராவோடு போட்டி போட்டு கொடுக்க முடியாம...ஹூம்..
ReplyDeleteதொக்கு இதே தான் இதே மெத்தட் தான் அக்கா நானும் மி வ வாவை வறுத்து தக்காளி வதக்கு அரைத்து அப்புறம் தாளித்து வதக்கி...என்றுதான்...மற்ற மெத்தடும் செய்யறேன் அப்பப்ப மூடைப் பொருத்து....அப்புறம் தாளிக்கும் போது வெந்தயம் தாளித்து வதக்கினால் அது ஒரு சுவை...
அப்புறம் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்து அப்புறம் வெந்தயமும்வறுத்து பொடியாகவோ அல்லது அப்படியே தாளித்தோ செய்தால் தக்காளி ஊறுகாய் டேஸ்ட் என்று....
இதில் வெங்காயமும் சேர்த்து தொக்கும் செய்யலாம் ஊறுகாயும் செய்வதுண்டு. வதக்கி அரைத்தோ அல்லது பொடியாக நறுக்கி நன்றாக வதக்கியோ செய்வதுண்டு....
சூப்பர் தொக்கு கீதாக்கா நல்லா டேஸ்டியா இருந்தது...!!!! சாதம் செமையா இருக்கு..தீர்ந்து போயிருக்கும்..
கீதா
தொக்கு வீணாகாது. நல்லா வதக்கி வைச்சுட்டேன். புளி சேர்ப்பது இல்லை. என் அம்மா அவ்வப்போது சேர்ப்பார். எனக்கென்னமோ புளிப்பு ஜாஸ்தியாத் தெரியும். வெங்காயமெல்லாம் போட்டு வதக்கி ரொம்பநாள் வைச்சுக்கறதும் இல்லை. :)
Deleteசாதம் செய் முறையில் நீங்களே சொல்லிட்டீங்க அக்கா...நான் கருத்து போட்டது எல்லாம்...
ReplyDeleteஆமாம் அதே அதே...சபாபதே...செமையா இருக்கு உங்க சாதம்!! கீதாக்கா
கீதா
நன்றி தி/கீதா. இன்னொரு நாள் வேறே முறையில் செய்து பார்க்கணும்.
Delete