இன்னமும் மருந்துகள் எடுத்துக்கொள்வதால் அவற்றின் தாக்கத்தில் காலை எழுந்துக்கவே ஐந்து, ஐந்தரை ஆகி விடுகிறது.ஐப்பசி பிறந்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்னமும் இந்த வருஷம் துலாக்காவிரி அபிஷேகத்துக்குத் தங்கக்குடத்தில் நீர் எடுத்துச் செல்லும் ஆண்டாள் யானையைப் போய்ப் பார்க்கவே முடியவில்லை. நான் எழுந்து கொண்டு வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு இருக்கும்போதே ஆறுமணிக்கெல்லாம் யானை திரும்பிக் கோயிலுக்குப் போய் விடுகிறது. ஒவ்வொரு நாளும் நாளைக்கு, நாளைக்கு எனத் தள்ளிப் போகிறது.
இது ஒரு பிள்ளையார் சதுர்த்திக்கு எடுத்த படம். அதிரடி அரிசி மாவில் கொழுக்கட்டை வராது, விரிந்து விடும் என்று சொன்னதால் படம் எடுத்துப் போட்டிருக்கேன். அரிசி மாவை நான் தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைப்பேன். அரிசியைக் களைந்து வடிகட்டி மிக்சியில் மாவாகத் திரிப்பதில்லை. அரிசியைக் காலையே நன்கு களைந்து ஊற வைத்துவிடுவேன். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு நைசாக அரைத்து விடுவேன். வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் ஜலம் விட்டுக்கலாம். மிக்சி ஜாரை அலம்பி விடும் நீரே போதும். இந்த மாவைத் தான் உருளியில் கொஞ்சமாய் நீர் விட்டு லேசாக உப்புப் போட்டுக் கிளறி எடுத்துக் கொண்டால் மாவு உருளியில் ஒட்டாமல் வரும். உருளி இல்லை எனில் கடாய் அல்லது அடி கனமான எந்தப் பாத்திரத்திலும் கிளறலாம். பின்னர் சொப்புச் செய்து பூரணத்தை வைத்து மூடிவிட்டு இட்லித் தட்டில் வைத்து எடுத்தால் கொழுக்கட்டை ரெடி!
சாப்பிடலாம் வாங்க
இந்தச் சுட்டியில் போய்ப் பார்த்தால் கொழுக்கட்டை செய்யும் விதம் பத்தி எழுதி இருப்பேன். கோதுமை மாவில் அதுவும் அவித்த கோதுமை மாவில் இது வரை செய்தது இல்லை. இனி ஒரு முறை செய்து பார்க்கணும். மேலும் நான் மாவை அதாவது ஈர அரிசி மாவை உடனடியாகப் பட்சணம் செய்து தீர்த்து விடுவேன். ஆகவே குறைவாகவே மாவு தயார் செய்து கொள்வேன். ஈர அரிசி மாவைக் காய வைத்து அல்லது வறுத்துப் பயன்படுத்தினால் அது என்னமோ சரியா வரதில்லை எனக்கு! அவ்வப்போது தான் தயார் செய்து கொள்கிறேன். மற்றபல பயன்பாடுகளுக்கு அரிசி வாங்கி மாவு அரைத்து வைத்துக் கொள்கிறேன். இடியாப்பமாகச் செய்தால் பிடிக்கிறதில்லை. ஆகவே சேவை தான் அடிக்கடி! முந்தாநாள் கூடச் செய்தேன். அதுவும் அன்றே அரைத்து அன்றே செய்துடுவேன். மாவு மிஞ்சினால் அதில் உளுந்து அரைத்துப் போட்டு தோசை அல்லது சாப்பிட ஏதேனும் வேண்டி இருந்தால் தட்டை, முறுக்கு, தேன்குழல்னு பண்ணிடுவேன்.
இது ஒரு பிள்ளையார் சதுர்த்திக்கு எடுத்த படம். அதிரடி அரிசி மாவில் கொழுக்கட்டை வராது, விரிந்து விடும் என்று சொன்னதால் படம் எடுத்துப் போட்டிருக்கேன். அரிசி மாவை நான் தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைப்பேன். அரிசியைக் களைந்து வடிகட்டி மிக்சியில் மாவாகத் திரிப்பதில்லை. அரிசியைக் காலையே நன்கு களைந்து ஊற வைத்துவிடுவேன். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு நைசாக அரைத்து விடுவேன். வேண்டுமெனில் இன்னும் கொஞ்சம் ஜலம் விட்டுக்கலாம். மிக்சி ஜாரை அலம்பி விடும் நீரே போதும். இந்த மாவைத் தான் உருளியில் கொஞ்சமாய் நீர் விட்டு லேசாக உப்புப் போட்டுக் கிளறி எடுத்துக் கொண்டால் மாவு உருளியில் ஒட்டாமல் வரும். உருளி இல்லை எனில் கடாய் அல்லது அடி கனமான எந்தப் பாத்திரத்திலும் கிளறலாம். பின்னர் சொப்புச் செய்து பூரணத்தை வைத்து மூடிவிட்டு இட்லித் தட்டில் வைத்து எடுத்தால் கொழுக்கட்டை ரெடி!
சாப்பிடலாம் வாங்க
இந்தச் சுட்டியில் போய்ப் பார்த்தால் கொழுக்கட்டை செய்யும் விதம் பத்தி எழுதி இருப்பேன். கோதுமை மாவில் அதுவும் அவித்த கோதுமை மாவில் இது வரை செய்தது இல்லை. இனி ஒரு முறை செய்து பார்க்கணும். மேலும் நான் மாவை அதாவது ஈர அரிசி மாவை உடனடியாகப் பட்சணம் செய்து தீர்த்து விடுவேன். ஆகவே குறைவாகவே மாவு தயார் செய்து கொள்வேன். ஈர அரிசி மாவைக் காய வைத்து அல்லது வறுத்துப் பயன்படுத்தினால் அது என்னமோ சரியா வரதில்லை எனக்கு! அவ்வப்போது தான் தயார் செய்து கொள்கிறேன். மற்றபல பயன்பாடுகளுக்கு அரிசி வாங்கி மாவு அரைத்து வைத்துக் கொள்கிறேன். இடியாப்பமாகச் செய்தால் பிடிக்கிறதில்லை. ஆகவே சேவை தான் அடிக்கடி! முந்தாநாள் கூடச் செய்தேன். அதுவும் அன்றே அரைத்து அன்றே செய்துடுவேன். மாவு மிஞ்சினால் அதில் உளுந்து அரைத்துப் போட்டு தோசை அல்லது சாப்பிட ஏதேனும் வேண்டி இருந்தால் தட்டை, முறுக்கு, தேன்குழல்னு பண்ணிடுவேன்.
மொக்கை என்றாலும் பலாச்சக்கை போல இனிக்கிறதே...
ReplyDeleteவாங்க கில்லர்ஜி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நேத்திக்கு நம்ம நண்பருக்கு அபிஷேகத்துக்குக் கொடுத்திருந்ததால் அதற்கான வேலைகள் சரியா இருந்தது, இணையம் பக்கமே வர முடியலை. மத்தியானம் மின்சாரம் போயிடுச்சு! :(
Deleteஅட, மறந்துட்டேனே, பாராட்டுக்கு நன்றி.
Deleteஇன்று உங்களைக் காணவில்லையேனு எபியில் தேடினேன்...
ReplyDeleteஆமாம் ஏற்கனவே சொல்லிருந்தீங்களேக்கா மருந்து தூக்கம் வருதுனு....இன்னும் அது முடியலையோ..
அவித்த கோதுமை மாவில் செய்தால் நல்லாருக்கும் கீதாக்கா ஆவியிலேயே நல்ல மணம் வரும்....செஞ்சு பாருங்க...
போறேன் அந்தச் சுட்டிக்கு பின்ன திங்க நா போயிருவோம்ல...
நானும் சேவை (புழுங்கலரிசி) அடிக்கடி செய்வதுண்டு. அன்றே அரைத்து அன்றேதானே செய்வதுண்டு இல்லையோ அக்கா? நான் பெரும்பாலும் வேண்டிய அளவுதான் புழுங்கரிசி ஊற வைத்து அரைத்து செய்வதுண்டு.
இடியாப்பமும் செய்வேன். பச்சரிசி ஊறவைத்து உலறவைட்த்ஹு, திரித்து, ....அக்கா காய வைத்த அல்லது லைட்டாக வறுத்த அரிசி மாவில் (பதப்படுத்திய மாவு) வீட்டில் செய்ததுதான்...கொழுக்கட்டை நன்றாக வருகிறதுக்கா...இடியாப்பம் செய்யும் மாவில்...
கீதா
வாங்க கீதா, நடு முதுகில் விறுவிறுப்பும் வலியும் தாங்கலை. வலப்பக்கம் படுக்கவே முடியாமல் இருந்தது. இப்போ வலிக்கான மாத்திரைகள் சாப்பிடறேன். இன்னும் மூன்று நாளைக்கு இருக்கு. அதோடு முடிஞ்சால் நல்லது! இம்முறை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது! ஜாஸ்தி வெளிக்காட்டிக்கலை! சூழ்நிலை அப்படி! ஆனாலும் ரொம்பக் கஷ்டப்பட்டேன்! :)))))
Deleteஎங்க ரெண்டு பேருக்கு ஒரு ஆழாக்கு அதாவது அரைக்கால்படி, 200 கிராம் அரிசி போதும் சேவைக்கு. ஆனால் கிரைண்டரில் அதை அரைக்க முடியாது! இத்தனைக்கும் பெரிய கிரைண்டரெல்லாம் இல்லை. ஆனாலும் ஐந்து ஆழாக்குப் போடலாம். ஆகவே நான் குறைந்தது 2 ஆழாக்காவது போட்டுத் தான் அரைப்பேன். அதிலே கொஞ்சம் மாவு மிஞ்சத் தான் செய்யும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் புளி உப்புமா(அதிலேயே புளி கரைத்து ஊற்றி) அல்லது பட்சணம் ஏதேனும் அல்லது உளுந்து அரைத்துப் போட்டு தோசைனு செய்வேன்.
Deleteஒரு நாள் ஆண்டாளைப்பார்த்து படம் எடுத்து போட்டு விடுங்கள் நாங்களும் பார்க்க.
ReplyDeleteஅதிரா கொழுக்கட்டை பதிவு இன்று உங்களிடமிருந்து அழகான பதிவை தர வைத்து விட்டது.
படங்கள் அழகு.
விஷயம் ஒன்றும் இல்லை என்றால் தானே மொக்கை நல்ல விஷயங்களை பகிர்வைதையும் மொக்கை என்கிறீர்கள்.
வாங்க கோமதி, இன்னிக்குச் சீக்கிரம் எழுந்தாலும் போக முடியலை. சங்கும் நகராவும் சத்தம் கேட்டுத் தான் நினைவே வந்தது. நாளைக்கு எப்படியானும் போகணும். அதுக்குள்ளே துலா மாசமே முடிஞ்சுடும் போல! :( பாராட்டுக்கு நன்றி.
Deleteசொப்பு செய்து பூரணம் வைத்து மூடி விடுவது என்வேலை என்வீட்டில் ஆனால் சொப்பு செய்ய இப்போதெல்லாம் அச்சு வந்திருக்கிறதாமே
ReplyDeleteஎன் அம்மா வீட்டில் தம்பி கூடமாட சொப்பு செய்து உதவி செய்வான். இப்போ மனைவிக்கும் அப்படியே உதவி செய்கிறான். ஆனால் எங்க வீட்டில் ஆண்கள் சாப்பிடத் தான் சமையலறைக்கே வருவாங்க. இந்த விஷயத்தில் நம்ம ரங்க்ஸ் சாமான்கள் இருப்பைச் சரி பார்க்க அவ்வப்போது வருவார். காய் நறுக்குவார். எனக்கு முடியலைனா முன்னெல்லாம் சமைக்கவும் சமைத்திருக்கார். இப்போல்லாம் சமைக்க முடியறதில்லை. சாதம் மட்டும் வைத்துவிட்டு குழம்பு, ரசம், கறி, கூட்டு வாங்கி வந்துடுவார். காஃபி மட்டும் என்ன முடியலைனாலும் நான் தான் போடணும். அவர் போடுவதைக் குடிக்க அவருக்கே பிடிக்காது! :)))))
Deleteசேவையை நீங்கள் எப்படிச் செலவழிப்பீர்கள்? மோர்க்குழம்பு செய்தா இல்லை கலவை சேவை செய்தா?
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்திக்கு விளாம்பழம், பாயசம், வடை, இட்லி (அது வெறும் மாவை கொழுக்கட்டைபோல் இட்லி சைசுக்கு பண்ணியிருக்கிறீர்களோ?) உண்டா?
வாங்க நெ.த. சேவைக்கு என ஏற்பாடாக மோர்க்குழம்பு செய்வதும் அப்பளம் , வடாம் பொரிப்பதும் இல்லை. இருந்தால் தொட்டுப்போம். இல்லைனா அப்படியே சாப்பிடுவோம். நான் எப்போச் செய்தாலும் தேங்காய்ச் சேவை, எலுமிச்சை அல்லது புளி சேவை, தயிர் சேவை எனச் செய்வேன். முன்னெல்லாம் வெல்லச் சேவை கூடப் பண்ணினேன். இப்போல்லாம் பண்ணறது இல்லை. குழந்தைகள் இருந்தால் அவங்களுக்காக வெல்லச் சேவை, தக்காளி சேவை, வெஜிடபுள் சேவைனு பண்ணிக் கொடுப்பேன்.
Deleteநெ.த. இந்த இட்லியையே விளாம்பழம் சைஸுக்குனு சொன்னா என்னோட கல்யாண இட்லித்தட்டில் வார்க்கும் இட்லியைப் பார்த்தால் என்ன சொல்வீர்களோ! எல்லாம் இப்போதைய நாகரிக முறைப்படியான ப்ரீத் இட்லித்தட்டு மினி இட்லிகளைப் பார்ப்பதால் வரும் கோளாறு!
Deleteநான் இட்லியைச் சொல்லலை. நீங்கள் போட்டிருக்கும் படத்தில் நான் சொன்னது எல்லாம் இருக்கு. வலது கீழ்ப்பக்கம் இட்லிதானே அது?
Deleteஇப்போதுள்ள இட்லியை, நான் இவ்வளவு சாப்பிட்டேன் என்று சொல்லும்போதே வெட்கம் வரும்படியான சைசுக்குத்தான் இருக்கு.
இன்னொன்று, குக்கர் இட்லியில் சூடு ரொம்ப நேரத்துக்கு இருக்காது. எடுத்த உடனே ஆறிடும். துணி இட்லி ரொம்ப நேரம் சூட் தாங்கும்.....
நான் குக்கரிலோ ப்ரீத் பாத்திரத்திலோ இட்லி குக்கரிலோ இட்லி செய்வதில்லை. அம்பேரிக்கா போனால் வேறே வழி இல்லை. அக்கா, தம்பி ரெண்டு பேரிடமும் இட்லி குக்கர் தான்! அதிலும் துணி போட்டு வார்க்கலாம். ஆனால் நாம் இருக்கப் போற கொஞ்ச நாளுக்காக ஏன் மாத்தணும்னு விட்டுடுவேன். இங்கே கட்டாயம் துணி போட்டுத் தான். எங்க வீட்டில் இட்லி சாப்பிட்டவங்க அதை மறக்கவே மாட்டாங்க!
Deleteநானும் உங்களை மறக்காமலிருக்கணும்னுதான் பார்க்கிறேன். சந்தர்ப்பம் வரமாட்டேங்குது. ஹாஹா
Deleteமோதகத்துக்கும் கொழுக்கட்டைக்கு வித்தியாசம் என்ன? கோதுமை மாவில் செய்தால் மோதகமா?
ReplyDeleteஎன்னது இப்படியொரு கேள்வி!...
Deleteஅக்கா சொன்னமாதிரியே அரிசி மாவில் குழிவான கிண்ணம் போலச் செய்து உள்ளே பூரணத்தை வைத்து மேலே குடுமி முடிந்தால் - அதுதான் மோதகம்!...
இந்தக் கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, மைதா மாவு , கிழங்கு மாவு இன்னும் ஊரில் உள்ள மாவு எல்லாவற்றிலும் கொழுக்கட்டை செய்யலாம் என்பது -
ஆன்மீக பத்திரிக்கைகளைப் போல சமையல் பத்திரிக்கைகள் செய்யும் குழப்பியடிக்கிற வேலை!..
ஸ்ரீராம், பொதுவாக மோதகம் என்பது சம்ஸ்கிருத வார்த்தை! அதுக்குக் கொழுக்கட்டை என்றே அர்த்தம். ஆனால் நம்ம பக்கம் கடலைப்பருப்பு+தேங்காய்+வெல்லம் போட்டுச் செய்யும் பூரணத்தை வைத்துச் செய்யும் கொழுக்கட்டைகளையே மோதகம் என்பார்கள். முக்கியமாய் என் பிறந்த வீடுகளில்(தாத்தா, அத்தை, மாமா வீடுகள்) ஆனால் எங்க மாமியார் வீட்டில் இந்தக் கடலைப்பருப்புப் பூரணக் கொழுக்கட்டையே பண்ணறதில்லை. அதே போல் எங்க பிறந்த வீடுகளில் எள்+வெல்லம்+தேங்காய்ப் பூரணம் வைத்தும் கொழுக்கட்டை உண்டு. அதுவும் மாமியார் வீட்டில் கிடையாது! எள் கொழுக்கட்டை என்றாலே சிரிப்பாங்க! என் பிறந்த வீட்டுப்பக்கம் இந்தக் கடலைப்பருப்புக் கொழுக்கட்டையை மட்டும் மோதக வடிவில் தான் செய்வாங்க. மற்றத் தேங்காய், எள், உளுந்துப் பூரணம் வைக்கும் உப்புக் கொழுக்கட்டைகள் போன்றவற்றை எங்க பிறந்த வீடுகளில் நீள வாக்கில் தான் செய்வார்கள். ஆகவே மோதகம் என்பது பொதுவான பெயர் என்றே சொல்லலாம். அவரவர் வீட்டுப் பழக்கத்தின் படிச் செய்யும் எந்தக் கொழுக்கட்டையும் மோதகம் தான்.
Deleteகணபதி கோமம் மற்றும் ஒரு சில கோமங்களுக்கு நெய்க்கொழுக்கட்டை என்று கேட்பார்கள். அப்போ கோதுமை மாவிலோ அல்லது மைதாமாவிலோ மாவைச் சாப்பாத்தி மாவு போல் பிசைந்துச் சப்பாத்தியாக இட்டு வட்டமாகக் கத்திரித்துக் கொண்டு உள்ளே தேங்காய்ப் பூரணம் வைத்து அதை நெய் அல்லது எண்ணெயில் பொரிப்பார்கள். இதை நெய்க்கொழுக்கட்டை என்றே சொல்வார்கள். இது சுமார் ஒரு மாசம் வரை கெடாது.
Deleteதுரை சொல்வது போல் சமையல் பத்திரிகைகள் 30 நாள் 30 கொழுக்கட்டைகள்னு சொல்லி வியாபாரத்துக்காகக் குழப்பும் வேலையும் நடக்கிறது தான்!
Deleteநாங்க 'மோதகம்' என்ற வார்த்தை உபயோகப்படுத்துவதில்லை. பிள்ளையார் கொழுக்கட்டை என்றால் பூரணம் வைத்துச் செய்வது. வெறும் கொழுக்கட்டை என்பது பூரணமில்லாமல் கைகளால் பிடித்துச் செய்வது (இனிப்பு உப்பு இரண்டும். இதில் இன்னொரு வகை உப்புமா கொழுக்கட்டை).
Deleteகடலைப்பருப்புப் பூரணம் வைத்த கொழுக்கட்டைக்கு மட்டுமே நாங்க மோதகம்னு சொல்லுவோம். அதுவும் மதுரைப்பக்கம் தான் அது அதிகம் செய்யறாங்க. மத்ததைத் தேங்காய்க் கொழுக்கட்டை, உளுந்துக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை என்றே சொல்வோம். நேத்திக்குப் பிள்ளையாருக்குப் பண்ணினது இந்தப் பிடி கொழுக்கட்டை எனும் அரிசி மாவை வறுத்துக் கொண்டு வெல்லம், தேங்காய் சேர்த்துக் கிளறிக் கைகளால் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்தது. அதிலேயே உப்பும் பண்ணினேன். விநியோகம் நிறையவே! உப்புமாக் கொழுக்கட்டைக்கு இங்கே தடா! எப்போவானும் அபூர்வமாப் பண்ணுவேன். விதியேனு சாப்பிடுவார். அதுக்கு அரிசியை அரைச்சும் செய்யறது உண்டு.
Deleteமருந்துகள் இன்னும் எடுக்கறீங்களா ? பாடாய்படுத்தி எடுக்கும் ..ரெஸ்ட் எடுங்கக்கா .
ReplyDeleteஅந்த வாழைப்பழத்தட்டுக்கு கீழே வெள்ளையா நடுவில் குழியோட இருக்கே அது என்ன ?
நான் இடியாப்பமாவை லேசா வறுத்து கொழுக்கட்டை செய்வேன் .அரைச்சி செய்வது பால் கொழுக்கட்டை மட்டுமே .ஆனா ஒருமுறை பாத்திரி செய்யப்போய் இப்படி கொழுக்கட்டையா மாத்தியிருக்கேன் .
//தங்கக்குடத்தில் நீர் எடுத்துச் செல்லும் ஆண்டாள் //வாவ் நேரில் பார்க்க அழகா இருக்கும்ல ..
இப்படி கடவுளுக்கு சேவை செய்யும் ஜீவராசிகளுக்கு பூரண ஆரோக்கியம் இறைவன் தரணும் .
வாங்க ஏஞ்சல், மருந்துகள் எடுத்துக்கறேன். அதான் கொஞ்சம் முடியலை. இஃகி, இஃகி, வாழைப்பழத்துக்குக் கீழே நடுவில் குழியோடு இருப்பது இட்லி, இட்லி, இட்லியே தான்! இஃகி, இஃகி, இட்லி வெந்ததானு பார்க்க என் அம்மா கையால் குழி போட்டுப் பார்ப்பார். நான் சின்ன வயசில் அந்த மாதிரிக் குழி போட்ட இட்லிகளையே விரும்புவேன். குழி நிறைய எண்ணெய் விடணும்னு வேறே கண்டிஷன். அது பிடிக்கும் என்பதால் நான் பொதுவாகவே இட்லிகளுக்குக் குழி போட்டுடுவேன். சில சமயம் ரங்க்ஸுக்குப் பிடிக்காது. ஆகவே அவருக்குக் குழி இல்லாத இட்லிகள்! நான் குழி போட்டுப்பேன். :)))))
Delete///இன்னமும் மருந்துகள் எடுத்துக்கொள்வதால் அவற்றின் தாக்கத்தில் காலை எழுந்துக்கவே ஐந்து, ஐந்தரை ஆகி விடுகிறது//
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டா:)) எங்கட பக்க கொமெண்ட்ஸ்க்கு எக்ஸ்கியூஸ் தேடித்தான் இப்பூடி சிம்பதி கலக்ட் பண்ணுறா கீசாக்கா கர்ர்ர்ர்ர்:) மற்றும்படி பந்தி பந்தியா எழுதிப் போஸ்ட் போட மட்டும் உடம்பு இடம் கொடுக்குதாம் கர்ர்ர்ர்:)) ஹையோ கீசாக்கா கலைக்கிறா.. இது உங்கட உடம்புக்கு நல்லதில்லை ஜொன்னாக் கேழுங்கோ ஓடக்கூடாது மூச்சு வாங்கும் சொல்லிட்டேன்ன் ஹா ஹா ஹா:)..
அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்க ஜிம்பதி யாருக்கு வேணுமாம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))
Delete//அதிரடி அரிசி மாவில் கொழுக்கட்டை வராது, விரிந்து விடும் என்று சொன்னதால் படம் எடுத்துப் போட்டிருக்கேன்//
ReplyDeleteஓ வெள்ளை நிறத்தில் இருப்பது கொழுக்கட்டையோ.. பிடிக்கொழுக்கட்டிபோல இருக்கு என நினைச்சுட்டேன் ஹா ஹா ஹா... எல்லாம் கைப் பக்குவம்தான்.. பழகிட்டால் ஈசியாகிடும்..
//ஈர அரிசி மாவைக் காய வைத்து அல்லது வறுத்துப் பயன்படுத்தினால் அது என்னமோ சரியா வரதில்லை எனக்கு!//
நன்கு அரிச்சு எடுத்துத்தான் பின்பு மாவை வறுக்கோணும் கீசாக்கா.. அதுவும் வறுப்பது என்பது இலகுவான காரியம் அல்ல.. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட நேரம் எடுக்கும்.. அதாவது பச்சை மாவின் அளவிலிருந்து கிட்டத்தட்ட அரைவாசிக்கும் குறைவான அளவு வரும்வரை வறுக்கோணும்.. நான் இங்கு வறுத்தது கிடையாது, சின்ன வயதில் பதிந்த நினைவுகளே..
அதனாலேயே புட்டுக்கு அல்லது இடியப்பத்துக்கு.. வறுத்த அரிசிமா எனில் ஒரு கப் போதுமான அளவுக்கு.. அவித்த கோதுமை எனில் 2 கப் எடுக்கோணும்.. அதாவது வறுத்த அரிசிமா பொலியும் அவிக்கும்போது..
//நன்கு அரிச்சு எடுத்துத்தான் பின்பு மாவை வறுக்கோணும் கீசாக்கா.. அதுவும் வறுப்பது என்பது இலகுவான காரியம் அல்ல.. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட நேரம் எடுக்கும்.. அதாவது பச்சை மாவின் அளவிலிருந்து கிட்டத்தட்ட அரைவாசிக்கும் குறைவான அளவு வரும்வரை வறுக்கோணும்..//
Deleteமறுபடி க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பிடி கொழுக்கட்டை, காரடையான் நோன்பு கொழுக்கட்டை, புட்டு போன்றவற்றிற்கு நாங்களும் வறுப்போம். கோல மாவு பதம் என்று சொல்வோம். அது வரை வறுப்போம். நான் சொல்வது வறுத்த மாவில்பூரணம் வைச்சுச் செய்யும் கொழுக்கட்டை செய்வது சரியாய் வரலை என்பதே! இப்போ மனசிலாச்சா? தமிழில் எழுதறதே புரியலையாம். இதிலே தமிழில் "டி" எல்லோ எனப் பீத்தல் வேறே! :)))))))
தட்டில் விழாம்பழம் பார்க்க ஆசையாக இருக்கு.. இங்கு எப்பவாவதுதான் கிடைக்கும்..
ReplyDeleteவிளாம்பழப் பச்சடி எந்த வத்தக்குழம்போடும் ஒத்துப் போகும். அடிக்கடி கிடைக்கத் தான் இல்லை!
Deleteகீசாக்கா அந்த ஆனைப்பிள்ளையுடன் ஒரு செல்பி எடுத்துப் போடோணும் நீங்க.. கிட்டப்போய் எடுக்கோணும் ஹா ஹா ஹா.
ReplyDelete>>> கீசாக்கா அந்த ஆனைப் பிள்ளையுடன் ஒரு செல்பி எடுத்துப் போடோணும் நீங்க..
Deleteகிட்டப்போய் எடுக்கோணும் ஹா ஹா ஹா... <<<
என்னா ஒரு வில்லத்தனம்!?...
ஹூம்!..
பூஸார் கற்பனையில் மிதக்க வேண்டியது தான்!..
அந்த ஆண்டாள்( ஆனைப்பிள்ளை) கீதா அக்காவின் பேத்தி மாதிரி...
அது மட்டுமல்ல.... எல்லா மனிதர்களிடமும் செல்லம் கொஞ்சும்!..
தனித்துவமான ஆனைப் பிள்ளை அது!...
அதனால் ஒரு குவளை மோர் குடித்து விட்டு ஓய்வெடுக்கவும்!..
அந்த ஆனைப்பிள்ளை அதிரடி வந்தால் தான் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பேன்னு சொல்லிடுச்சு அதிரடி! :P :P :P :P
Delete@ துரை, அதானே! என்னாது? பேத்தியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுக்கு இருக்கும் ஐம்பது வயசு! ஐம்பது வயசுக்கு எனக்குப் பேத்தியா? ஙே!!!!!!!!!!!!!!!!!!! :))))
மொக்கைப் பதிவா?...
ReplyDeleteநிறையவே நல்ல விஷயங்களைச் சொல்லியிருக்கின்றீர்கள்...
மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..
@துரை, மொக்கை இல்லைனு எல்லோரும் சொன்னதுக்கும் நீங்க சொன்னதுக்கும் சேர்த்து இங்கே நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.
Delete