எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 20, 2018

அதான் வந்துட்டோமுல்ல!

மூணு நாளா ரொம்பவே வேலை மும்முரம். அம்பத்தூர் வீட்டை விற்று விட்டதால் கிடைத்த பணத்தில் நாங்கள் இருக்கும் அதே அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இன்னொரு பக்கம் உள்ள ஒரு குடியிருப்பை வாங்கினோம். போன மாதம் தான் பத்திரப்பதிவுகள் முடிந்தன. அதில் சில, பல வேலைகள் செய்து, பெயின்டிங் செய்து நேற்று விஜயதசமிக்குப் பால்க் காய்ச்சிச் சாப்பிடவும் ஹோமங்கள் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தோம். திடீரென முடிவு செய்ததால் சொந்தக்காரங்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு வர முடியுமா, பேருந்து, ரயில் எல்லாவற்றிலும் கூட்டம் நெரியுமே என்னும் கவலை! ஆனாலும் அவங்களுக்குத் தகவல் தெரிவித்தோம்.  அதுக்குள்ளே எனக்குத் திடீரென உடல்நிலை சரியில்லை. மிக மோசமான தோல் பிரச்னை ஏற்பட்டு வலி, வீக்கம், அரிப்பு, எரிச்சல் என ஒரே கொண்டாட்டம்! சாதாரணமாச் சிவப்பு, காபி ப்ரவுன் நிறங்கள் தான் ஒத்துக்காது, ஆனால் இப்போ எந்த நிறமானாலும் கிட்டே கொண்டு வராதே என உடல்நிலை எச்சரிக்கை!

மருத்துவ ஆலோசனையின் பேரில் 3 மணி நேரத்துக்கு ஒரு மாத்திரை என ஒரு நாளைக்கு ஐந்து வேளைகள் மாத்திரை தொடர்ந்து ஒரு வாரம் போட்டுக்கணும்னு சொல்லிட்டாங்க. அரிப்புக்கு இரவு மட்டும் போட்டுக்க மாத்திரை! ஆனால் அதைப் போட்டுக் கொண்டாலும் ராத்திரி தூக்கம் வராது! காலங்கார்த்தாலே தூக்கம் சொக்கும்! கண் விழித்தால் பறக்கிறாப்போல் உணர்வு. இந்த ஆர்ப்பாட்டங்களோடு நவராத்திரியும் சேர்ந்து கொண்டது. என்ன செய்தேன், யார், யார் வீடுகளுக்குப் போனேன் என்பதெல்லாம் கூடச் சரியாச் சொல்ல முடியலை. ஆனால் அம்பிகையை வேண்டிக் கொண்டே லலிதாம்பாள் சோபனம் மீள் பதிவு போட ஆரம்பித்தேன். அதைத் தவிர்த்து வேறே எதிலும் கவனம் செலுத்தலை. திங்கட்கிழமையில் இருந்து(15 ஆம் தேதி) கொஞ்சம் கொஞ்சம் உடல்நிலையில் முன்னேற்றம். செவ்வாயோடு மருந்துகளும் முடிவுக்கு வந்தன. வேலைகளும் அதிகம். என்றாலும் பாத்திரங்கள் கழுவிக் கொடுக்க மட்டும் ஒரு பெண்ணைத் துணைக்குக் கூப்பிட்டுக் கொண்டேன். நவராத்திரி என்பதால் கூடுதல் பாத்திரங்கள்.

அதோடு கிரகப்ரவேசத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டும் இருந்தன. என்றாலும் புதன் கிழமை வரை என்னால் உட்கார முடியுமா என்னும் சந்தேகம் இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனாலும் வேலைகளை நிறுத்தவில்லை. புதன் கிழமையே பூக்கள், ஹோம சாமான்கள் எல்லாம் வாங்கி வந்தாச்சு. அதெல்லாம் சரி பண்ணி வைத்து நவராத்திரிக்கு அழைத்தவர்கள் வீடுகளுக்கும் போய், நம் வீட்டுக்கு வந்தவர்களையும் வரவேற்று என சரியாக இருந்தது. வெள்ளிக்கிழமை ஹோமத்துக்குப் போட வேண்டிய பிரசாதங்களை வேறே செய்ய வேண்டி இருந்தது. சமையலுக்கு ஒரு மாமியை ஏற்பாடு செய்திருந்தாலும் அவங்க சாயந்திரம் தான் வர முடியும்னு சொல்லிட்டாங்க. அவங்க வீட்டிலும் பூஜை உண்டே! ஆகவே வியாழன் அன்று காலை 3-30 க்கு எழுந்து ஆரம்பித்த வேலைகள் அன்று மதியம் 12-30 மணியோடு ஒரு மாதிரியா முடிஞ்சாலும் மற்ற வேலைகள் இருந்தன. இங்கே குடியிருக்கும் இன்னொரு மாமி புது வீட்டில் கோலங்கள் போட்டுக் கொடுத்துக் காலை சாமான்கள் தூக்கி வந்து உதவி செய்தாங்க! ஒரு வழியா நேற்றுக் காலையில் புது வீட்டில் பால் காய்ச்சிக் குடிச்சாச்சு!  ஆனாலும் நாங்க அங்கே|குடித்தனம் போகப் போவதில்லை. வாடகைக்குத் தான்! ஹோமம் எல்லாம் நன்றாக நடந்தது. என் தம்பியைத் தவிர்த்து மற்ற உறவுகள் யாராலும் கலந்துக்க முடியலை. அக்கம்பக்கம் துணை மற்றும் தெரிந்த உறவுக்காரப் பெண்ணின் துணையோடு நேற்றைய தினத்து வேலைகளைச் சமாளிச்சேன்.

விசேஷம் சிறப்பாக நடந்தாலும் அதன் பின்னால் எல்லாவற்றையும் சரி செய்து வீட்டை ஒழுங்குக்குக் கொண்டு வரும் வேலை இன்று முழுவதும் சரியாக இருந்தது. ஒரு வழியா முக்கியமானவற்றை ஒழுங்கு செய்து சமையலறையையும் சீரமைத்து விட்டேன். இனி மீண்டும் லலிதாம்பாள் சோபனம் மிச்சம் உள்ளது எல்லாம் நாளையில் இருந்து போட்டு முடிச்ச பின்னர் தான் மற்ற மொக்கைகள் தொடரும். ஒரு நாலு நாள் ஆள் இல்லைன்னதும் யாருமே கண்டுக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதிலும் இந்த போஸ்ட் போட ஆரம்பிச்சதும் அதிரடி எங்கேயோ போய் ஒளிஞ்சாச்சு! ஏஞ்சல் எ.பி.யில் குடியேறி விட்டார். ஜி.எம்.பி சார் பேரன் கல்யாணத்தில் மும்முரம். பானுமதி சும்மாவே நான் நாலு பதிவு போட்டால் ஒரு பதிவில் தான் தலை காட்டுவாங்க. கமலாவை ஆளையே காணோம். கோமதி அரசு, துரை ராஜ், கில்லர்ஜி ஆகியோர் தான் விடாமல் தொடர்வது. நெ.த. வும் வல்லியும்அவ்வப்போது தலை காட்டுகிறார்கள். சரஸ்வதி பூஜைப் பதிவில் ஸ்ரீராமையும் காணோம். சுண்டல் பண்ணுவதில் மும்முரமாய் இருந்திருக்கலாம். ஆனால் நேத்திக்கும் ஏன் வரலை? சரி, விடுங்க! இனி நாளையில் இருந்து சீரியஸ் பதிவுகள். இந்த மொக்கைக்கு அநேகமா ஆள் வரும்!

43 comments:

  1. "இந்த மொக்கைக்கு அனேகமாக ஆள் வரும்"

    ஆஹா நான்தான் முதலில் வந்து மாட்டினேன் போலயே...

    உடல் நலத்தை கவனித்து கொள்ளவும் வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! இஃகி, இஃகி, இது மொக்கை இல்லைனு ஸ்ரீராம் சொல்றார் பாருங்க!

      Delete
  2. இது மொக்கை என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புதிய குடியிருப்பு வாங்கியது சந்தோஷம், வாழ்த்துகள்.

    அலர்ஜி தொந்தரவு எதனால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்தீர்களா? அலர்ஜிக்கு மாத்திரை சாப்பிட்டாலே தூக்கம் சொக்குமே... இத்தனை கலைப்புகளுக்கும் நடுவில் அத்தனை கடமைகளையும் சிறப்பாக முடித்திருப்பது பெரிய விஷயம். உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், இந்த அலர்ஜி பத்தி எழுதறதுனா ராமாயணம் போல நீளும். பொதுவாகக் கோடைக்காலத்திலும், கோடை முடிந்து மழைக்காலத்திலும் ஜாஸ்தியா இருக்கும். இதைத் தவிர்த்து ஃபோட்டோ அலர்ஜியும் உண்டு. வெயில் காலத்தில் நம்ம நம்பெருமாள் மாதிரிப் பெரிய குடையா எடுத்துண்டு தான் வெளியே போகலாம். இல்லைனா வீட்டிலே இருந்துடுவேன். சிவப்புக்கலர்த் துணியைக் கண்டால் மாடுகள் மிரள்வது போல் நானும் மிரள்வேன். இப்போ காஃபி ப்ரவுனும் சேர்ந்திருக்கு!

      Delete
    2. @ஸ்ரீராம், அப்போத் தூங்காததைச் சேர்த்து வைச்சு இப்போ 2 நாளாத் தூக்கம்! :) இன்னிக்கு எழுந்துக்கும்போதே ஆறு மணி ஆயிடுச்சு! :)

      Delete
  3. அலர்ஜி சித்த மருந்துகள் சாப்பிடுவதாலும் வரலாம். மூட்டுவலி மற்றும் டயபடிஸ் சித்த மருந்துகளை ஓரிரு நாட்கள் நிறுத்தி பாருங்களேன்.
    Jayakumar​​

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, இதுக்கும் மருந்துகள் சாப்பிடுவதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்குச் சின்ன வயசில் இருந்தே இதெல்லாம் உண்டு. அலர்ஜி இல்லைனா வேனல் கட்டிகள் வரும்! கட்டிகள் நெறி கட்டிக்கொண்டு வலியும் எரிச்சலும் தாங்க முடியாது! ஏதோ ஒண்ணு உபாதை கொடுக்கும்.

      Delete
  4. Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இம்புட்டு சந்தோஷமா! :P :P :P :P

      Delete
  5. புது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு ம்னமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
    இத்தனை வேலைகளை வைத்துக்கொண்டால் உட‌ல் நலத்தை எப்படி கவனிப்பது? தகுந்த ஓய்வு எடுத்துக்கொண்டு முதலில் உடல்நலத்தை சீராக்குங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ,வேலைக்கு அழைத்திருந்த பெண் இன்னிக்கு வரலை! அதனால் கூடுதலாத் தான் வேலை! :) நானே செய்யும்போது சமையலறையில் பாத்திரங்கள் காத்திருக்காது! :)

      Delete
  6. //// ஏஞ்சல் எ.பி.யில் குடியேறி விட்டார்//

    அவ்வ்வ் :)) ஹாஹ்ஹா இப்போகூட அங்கே சைட் பாரில் பார்த்துதான் உங்க பக்கம் புது போஸ்ட்னு ஓடிவந்தேன் :)
    என் வீட்டை அதான் என் பிளாகையே எட்டியும் பார்க்கலை :)
    சரி சரி இனி அடிக்கடி வர பார்க்கிறேன் ..புது மனைக்கு வாழ்த்துக்கள்

    //இந்த மொக்கைக்கு அநேகமா ஆள் வரும்!// கர்ர்ர்ர் :)

    வந்திட்டேன் வந்திட்டேன் ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேலே அநேகமா தினம் தினம் போஸ்ட் போடறேனே!

      Delete
  7. இப்போ உடம்புக்கு பரவால்லையா ? உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க .
    அதென்ன சிவப்பு பிரவுன் நிறம் ?? உணவு வகையா ?
    ஓஹ் அந்த மாத்திரைகள் சிலருக்கு நாள் முழுக்க தூக்கம் மோடிலேயே வைக்கும் ஆனா அதே மாத்திரை சிலருக்கு நல்ல வேலை செய்யும் ..

    ReplyDelete
    Replies
    1. எந்த விதத்தில் அலர்ஜினு எப்படிச் சொல்றது. :) சில புடைவைகள், ப்ளவுஸ்கள் அவற்றின் நிறம் அல்லது அவற்றில் சாயம் ஏறக் கொடுக்கப்பட்டிருக்கும் ரசாயனம்? ஏதோ ஒண்ணு ஒத்துக்காது! எதுனு கண்டு பிடிக்கிறது கஷ்டமா இருக்கு! வாங்கும்போதே தெரிஞ்சால் எவ்வளவு நல்லா இருக்கும்! அதே போல் சில ஓட்டல் சாப்பாடுகளும் ஒத்துக்காது! அதனால் கூடியவரை ஓட்டல் சாப்பாட்டையும் தவிர்ப்பேன்.

      Delete
  8. புது குடியிருப்பை வாங்கியதில் மகிழ்ச்சி அம்மா...

    உடல்நலம் முக்கியம்...

    ReplyDelete
  9. இரண்டுநாள் பிஸின்னு நீங்கதானே சொல்லிட்டு லீவு போட்டீங்க (ஒரு வாரத்து ஒரு தடவை இப்படி காணாமல் போயிடறீங்க). எ்பில பின்னூட்டம் இல்லைனா உங்க ஞாபகம் வரும்.

    உங்களுக்கு பெயின்ட் வாசனை அலர்ஜி உண்டா? எனக்கு என்ன அலர்ஜின்னு தெரியலை, மூணு மாத்த்துக்கு ஒரு முறை வருது.

    இத்தனை வேலைகளையும் எப்படித்தான் சமாளித்தீர்களோ

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நினைவு வைச்சுக்கறதுக்கு ரொம்ப நன்றி. எனக்கு மத்தியானம் ரொம்ப நேரமெல்லாம் உட்கார முடியறதில்லை. பெயின்ட் வாசனை மட்டுமா அலர்ஜி! ஒரு பெரிய பட்டியலே இருக்கு!

      Delete
    2. அப்போ.. உங்களைப் பார்க்க வரவங்க என்ன நிறத்துல மட்டும் உடை உடுத்திக்கலாம்னு சொல்லுங்க... இல்லைனா வாசல் கதவைத் திறந்த உடனேயே, போய்ட்டுவாங்கன்னு சொல்லிடப்போறீங்க.

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், :P P :P :P

      Delete
  10. கிரஹப்ரவேசத்திற்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    உட‌ல் நலத்தை எப்படி கவனித்துக் கொள்ளவும்...
    நல்லபடியாக ஓய்வு எடுத்துக் கொள்ளவும்...

    ReplyDelete
  11. புது வீடு க்ரஹப்ரவேசத்திற்கு வாழ்த்துக்கள்! மொக்கை பதிவு என்று எழுதி விட்டீர்கள் எப்படி கமெண்ட் போடுவது?

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நன்றி. மொக்கைக் கமென்ட் தான் போடணும்! :)

      Delete
  12. உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  13. புதுமனை புகுவிழாவிற்கு வாழ்த்துக்கள்.
    அம்பத்தூர் வீடு இனி நினைவுகளில்.
    உடல் நலனை கவனித்து ஒய்வு எடுத்துக் கொண்டு பின் மற்ற கடமைகளை ஆற்றலாம்.

    ReplyDelete
  14. உடம்பை கவனித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  15. உங்கள் பதிவு எதுவானாலும் ஒரு தபா பார்த்துட்டுதான் போறது தினமும். ஆனால் கருத்துக்கள் எப்போதாவதுதான்
    புது வீட்டிற்கு வாழ்த்துக்கள்
    விஸ்வநாதன்

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை விஸ்வா, நானும் ரொம்பவே கமென்ட்கள் எதிர்பார்ப்பதில்லை. தினம் வரவங்க வரலைனா என்னனு பார்ப்பேன். மிக்க நன்றி.

      Delete
  16. அதுதான் வந்துட்டீங்க சரி.... பின்னூட்டத்து மறுமொழியைக் காணோமே

    ReplyDelete
  17. புதிய குடியிருப்பை வாங்கினதுக்கு வாழ்த்துகள்ம்மா

    ReplyDelete
  18. இந்த ஒரு வாரத்துல என்னவெல்லாம் நடந்திருக்கு. புது வீட்டுக் கிரஹப் பிரவேசத்துக்கு
    வாழ்த்துகள் வரவாளோட சௌக்கியத்துக்கும் ஆசிகள் கீதா.

    இப்படி உடம்பு படுத்தறதேம்மா. இந்த அலர்ஜியோட அடுப்புப் பக்கத்துல நிக்கவே முடியாதே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி! அதை ஏன் கேட்கறீங்க! மாத்திரைகளையும் போட்டுண்டு வேலைகளையும் விடமுடியாமல் ரொம்பவே சிரமம்! அப்போல்லாம் நல்லபடியா எல்லாம் நடக்கணுமேங்கற கவலையிலே தூக்கம் கூடச் சரியா வரலை! இப்போத் தான் 2 நாட்களாகத் தூங்க ஆரம்பிச்சிருக்கேன். :)))) உடம்பு ஜாஸ்தியாத் தான் படுத்தறது! :(

      Delete
  19. புதுவீட்டிற்கு வாழ்த்துக்கள். பால் காய்ச்சிச் சாப்பிட்டீர்களா! பின்னே? பச்சையாகச் சாப்பிட்டால் அவ்வளவு ருசிக்காதே!

    பெரும்பாலும் மொக்கையாகத்தான் பலர் போட்டுத்தள்ளுகிறார்கள். ஆனாலும் உண்மையில் ஜொலிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டுமே..!

    வீட்டுவேலைகளுக்கு ஒரு வேலைக்காரியைப்போட்டுவிடுங்கள். உங்களை ஓவர்-ஸ்ட்ரெச் செய்து கொள்ளாதீர்கள். உடம்பு ஒரேயடியாகக் கோபித்துக்கொள்ளும். காக்க.. காக்க.. உடல்நலம் காக்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், பால் காய்ச்சித் தான் குடிச்சோம். ஆனால் சர்க்கரை போட வேண்டி இருந்தது! :) நமக்குப் பாலில் சர்க்கரை சேர்த்தாலே பிடிக்காது! அன்னிக்கு வேறே வழி இல்லை!:)

      // பெரும்பாலும் மொக்கையாகத்தான் பலர் போட்டுத்தள்ளுகிறார்கள். ஆனாலும் உண்மையில் ஜொலிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டுமே..!//

      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வ.பு.அ?????? :P :P :P :P

      Delete
  20. ஹாஹாஹா என்னத்தேடவே இல்லை. ஆனா கடைசி வரியை ருசுப்படுத்த வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, நீங்களும் மொக்கைக்கே ஆதரவாளர் என்பதைத் தெரிஞ்சுண்டேன். :)

      Delete
  21. ஆஆஆ கீசாக்கா புது வீட்டுக்கு வாழ்த்துக்கள். “அதிரடி விலாஸ்” எனப் பெயர் வையுங்கோ:).. ஹா ஹா ஹா...

    இவ்ளோ பிரச்சனையை உடம்பில காவியபடி அதிரடிக்குக் கர்ர்ர்ர் சொல்வதை நிறுத்தேல்லை நீங்க:).. ஆனாலும் பாருங்கோ நான் மட்டும் உங்கள் போஸ்ட்டுக்கெல்லாம் ஒழுங்கா வந்த பிள்ளையாக்கும்:)..

    விரைவில் பூரண நலம்பெற கேதார கெளரி அம்மனை வேண்டிக் கொள்கிறேன் _()_

    ReplyDelete
    Replies
    1. அதிரடி விலாஸ் எனப் பெயர் வைக்கணுமா? ஆசை, தோசை, அப்பளம், வடை! உங்க பிரார்த்தனைக்கு நன்றியோ நன்றி.

      Delete